காயம்பட்ட உள்ளம்

காகிதம் போல் கசக்கி சென்றாய் என் இதயத்தை

முடிந்தவரை மீட்டெடுத்தேன் மிச்சத்தை

ஆழமான முட்களுள்ள புதரினிலே

அழகான ரோஜவாய் நீ தெரிந்தாய்

வெளியழகை  கண்டவுடன் மயங்கி நின்றேன்

உன் பூவின் முள் பட்டவுடன் ஒதுங்கி நின்றேன்

பார்த்தவுடன் பரிக்க சென்றேன் அருகாமையில்

பட்டவுடன் தள்ளி நின்றேன் முன்பு செய்த அறியாமையில்

வெளுத்ததெல்லாம் பாலாகாது என அறிந்து கொண்டேன்

நான் நினைத்தது போல் நீ இல்லை என புரிந்து கொண்டேன்

நினைப்பதெல்லாம் உண்மையல்ல என அறியவைத்து சென்றுவிட்டாய்

இனி காயம்பட்ட என் உள்ளம் என்னாகுமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

================================

Vote............ Comment........ Share......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top