காதல் கவிதை
கல்யாணத்திற்கு முன் :
கவலைகள் மறந்து
சிறகுகள் விரித்து
வண்ணத்து பூச்சியாய்
விண்ணில் பறந்து
குறும்புகள் பல செய்து
குழந்தை போல் சேட்டைகள்
பல செய்தவள் உன்
ஓர் நொடி பார்வை பட்டு
என் பெண்மை உணர்ந்து
நானப்பூக்கள் உதிர்கின்றேன்!
என்னுள் புதைந்திருந்த
எண்ணமுடியா உணர்வுகளை
உன் ஒற்றை புன்னகை
கொண்டு மீட்டெடுத்தாய்
மொழியமுடிய காதலை
என் மௌனத்தாலே
அறிந்துகொண்டாய்
உயிரின் பாதியாக இருக்கும் நீ
என் பதியாக வருவாயா?
சின்ன சின்ன சண்டைகளிட்டு
செல்ல செல்ல கோபங்கள் பட
என் கன்னம் வருடி
கொஞ்சும் மொழிகள் மொழிவாயா?
தளர்ந்து முதிர்ந்த வயதினிலும்
என் விரல்கள் பிடித்து நடப்பாயா?
இனிமையான கனவுகளுடனும்
நினைவுகளுடனும் உன்
கைகோர்த்து வாழ்வில் பயணிக்க
காத்திருக்கும் உன்னவள்!!!
கல்யாணத்திற்கு பின் :
தவறுகள் பல செய்து
விளைவுகளை ஏற்றுநிற்க
தட்டிக்கொடுத்து தந்தையானாய்!
பெற்றவர்கள் யாருமின்றி
பாசத்திற்கு நான் ஏங்க
தலைகோதி தாயானாய்!
சோகத்தில் சோர்ந்த போது
தோள்தந்து தோழனானாய்!
பெண்மையை உணரவைத்து
மனம்பறித்து காதலனானாய்!
முழுமையற்று நின்றிருந்த
என் கரம்பிடித்து கணவனானாய்!
தாய்மை இழந்து என்
வாழ்வே வெறுமையாக
மடிசாய்ந்து என் சேய்யானாய்!
வறண்ட பாலைவனமான
என் வாழ்க்கையில்
குளிர்ந்த நீரூற்றாய் நீ தோன்றி
காலத்தால் ஏற்பட்ட காயங்களுக்கு
வலிதீர்க்கும் மருந்தானாய்!
பாதையில் உள்ள முட்கள் மேல்
என் பாதங்கள் பட்டுவிடாமல் உன்
கரங்களை தரையாக்கி காத்தவனே
உன்னை விட்டு பிரியும் நொடி
என் வாழ்வின் இறுதி நொடி!!!
💗💗💗💗
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top