காதல் காவியம்
கதிரவனின் மோகப் பார்வை பட்டு
அலையரசியின் முகம் வெட்கத்தில்
பொன்னிறமாக மாறிக் கொண்டிருக்க
தங்கத் துகள்களாய் மின்னும்
பீச் மனலில்
உன் மடியை தலையணையாக்கி
நான் வீற்றிருக்க
மான் போன்ற உன் விழிகள்
எனை உன் மாய வலையில் ஈர்க்க
நான் தப்பிக்க மனமின்றி உன்
விழியின் அழகில் மயங்கிக் கிடக்க
அங்கே அலைகள் தன் கரத்தை நீட்டி
தன்னவனை தொட முயற்சிக்க
கதிரவனோ தன் காதலியின்
கரங்களை பற்ற
கீழிறங்கி கொண்டிருந்தான்
நம் இரு இதயங்கள் இடம்மாறி
ஒன்றோடு ஒன்று இனைந்து
புதியதோர் காதல் காவியம்
படைத்து கொண்டிருக்க
கதிரவனோ தன் காதலியின்
இதயக் கூட்டில் இடம்புகுந்தான்!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top