என் தலையனை நன்பன்
என் தலையனை நன்பனே!!!
உயிரில்லா பொருள் என்று
உனை இவ்வுலகத்தோர் நினைத்தாலும்
என் உயிரோடு கலந்தவனாய்
நான் உனை என்றென்றும் நினைத்திடுவேன்
தோல்வி கண்டு துவழும்போதும்
மற்றவர் சொல் தீண்டும்போதும்
தோள் தந்து ஊக்குவிக்க
தாய் தந்தை இல்லை என்ற
என் தாகத்தை நீ தீர்த்தாய்
உன்னுள் நான் முகம்புதைத்து
என் விழிநீரை காட்டிய போது
பார்க்கடல் அமுதம் போல் அதை நீயும் பருகிவிட
அளவில்லா என் கடுந்துயரம் சிறு
கனபொழுதில் நின்றதன் காரணம் ஏனோ!!!
வெண்ணிலவு வெளிச்சமிட வண்டுகளின் ரீங்காரத்தில்
என் உள்ளம் திருடிய கள்வனோடு
நான் காதல் கனவில் களித்திருக்க
அவன் விழிபட்டு வெட்கத்தால்
சட்டென உன்னுள் தஞ்சமடைய நீ
என் தலை கோதி வருடுவது போல்
உன் ஸ்பரிசம் பட்டவுடன் நான் உணர்ந்தேன்
மனம் பறித்த என்னவனை பிரிந்து
பசலை நோயால் நான் வாட
எட்டி நின்று பாராமல்
என் இதயக் கூட்டிற்க்கு
இதம் தந்து காப்பவனே!!!
நீ தாயாக தந்தையாக நன்பனாக காதலனாக
என் நெஞ்சோடு பினைந்திருக்க
துயரமெனும் உயிர்க்கொள்ளி நான்
துயிலும் போதும் நெருங்காது!!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top