ஊமைக் குரல்
பல உயிர் பரிசளித்து அன்றோ அடைந்தோம் சுதந்திரம்!
சில உயிர் செழித்து வாழ இன்றோ ஆனோம் மனித இயந்திரம்!
எட்டி எட்டி தொட நினைத்த நட்சத்திரத்தை கூட
இன்று எட்டே நொடியில் தொட்டுவிடலாம் போல!
ஆனால் இந்த எட்டடி கொடியின் பொருளை
உணர்ந்தும் வாழ்கின்றோம் வாயில்லா அடிமையாக!
வாரி வாரி வழங்கி வாழ்ந்தனர் வள்ளல்கள் அன்று!
வரிகட்டியே வயதானோம் இளைஞர்கள் இன்று!!
ஓடி ஓடி உழைக்கும் மக்கள் அனைவரும்
இன்று ஆள்பவர் மத்தியில் கால்பந்தாக
தடைகளை உடைத்து தலை தூக்கும் சிலரும்
மணல் சிற்பங்களாய் செதுக்கும் போதே உடைந்துவிட!
செலுத்தும் திசை நோக்கி செல்லும் செயற்கை சக்கரமானோம்
இம்மண்ணின் மைந்தர் அனைவரும்!!
இப்படிக்கு,
உயிரை பறித்து
வெற்றுடலை கொடியாய்
நெஞ்சில் தைத்து
ஒலி எழுப்ப உரிமையின்றி
உலவும் ஊமைக் குரல்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top