உன்னை சேர்வேன்
இதயத்தின் ஒரு பாதி நீயடி
எனை மறக்க நினைப்பது ஏனடி
பஞ்சவர்ண கிளி போல் என் மனதடி
தினமும் உன் பெயரையே கூறுதடி
பச்சை புழுவில் இருந்து தோன்றிய வண்ணத்து பூச்சு போல்
என் கண்முன் உன் முகம் தோன்றுதடி
மின்மினிப்பூச்சை ஈர்க்கும் வெளிச்சம் போல்
உன் விழியும் என்னை ஈர்த்ததடி
நான் உன் காதலன் என்று கூறடி
என் இதயம் துடிப்பது உனக்காக தானடி
பாறையில் முளைத்த மலர் போல
இறுகிய என் இதயத்தில் காதல் முளைத்ததடி
இறுதி மூச்சு வரை உனை சேராமல் போனால்
மறுபிறவி எடுத்தேனும் உன் அடி சேர்வேனடி!!!!!!!"!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top