இதயத்தின் புலம்பல்
கைகளால் அரைந்திருந்தால்
கன்னத்தில் ஏற்றிருப்பேன்
வார்த்தையால் நீ அரைந்தாய்
என் உள்ளத்தை நோகடித்தாய்
காயத்தை உள் மறைத்து
மனமின்றி நான் சிரித்தேன்
நீ கண் கலங்க கூடாதென்று
மற்றவரோடு ஒப்பிட்டாய்
என் தோற்றத்தை ஏசினாய்
ஆனாலும் பொறுத்துக் கொண்டேன்
நீ என்றாவது ஒரு நாள் மாறுவாய் என்று
மாற்றம் ஏற்பட்டது.......
ஆனால் அது உன்னில் அல்ல என்னில்
இளகிய என் நெஞ்சத்தை இரும்பாக மாற்றிக் கொண்டேன்
உன் சொற்க்களிடம் இருந்து தப்பிக்க
ஆனால் நான் அறியவில்லை
நெருப்பாகிய உன் சொற்கள் அந்த இரும்பையும் உருக்குமென்று
சில நேரம் சிரிக்க வைத்தாய், பல நேரம் அழுகவைத்தாய்
அந்த சிலநேர சிரிப்பையே மனதின் மருந்தாக்கி உயிர் வாழ்கிறேன்
பொய்யான கனவுகளை எதிர்பார்த்து சுவாசிக்கிறேன்
உண்மையை வெறுத்து அல்ல பயந்து
இன்னும் எதை கொடுக்க போகிறாய் விதியே...........
எடுத்தெறிந்து பேசுகிறாய் என்று எனை நீயும் ஏசினாய்
ஆனால் அது என் வலிதாங்காத இதயத்தின் புலம்பல்கள் என நீ அறிந்திருக்கவில்லை....................................
================================
Vote...... Comment....... Share.............
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top