Part 50
பாகம் 50
கிரியின் கடின உழைப்பை பூரணமாய் உணர்ந்தான் அர்ஜுன். ஏனென்றால், கல்யாண மாப்பிள்ளையை வேலை செய்ய விடக்கூடாது என்று, கிரியின் வேலைகள் அனைத்தையும் அர்ஜுன் செய்து கொண்டிருந்தான்.
எவ்வளவு சுலபமாய், இவ்வளவு நாள் கிரியிடம் கட்டளையிட்டு கொண்டிருந்தான் அர்ஜுன்...! அதை எவ்வளவு துரிதமாய் செய்து முடித்து கொண்டிருந்தான் கிரி...! அதையெல்லாம், செய்து பார்க்கும் பொழுது தான், அதன் கடினம் அர்ஜுனுக்கு புரிந்தது. கிரியை நினைத்து அசந்து போனான் அர்ஜுன்.
திருமண நாள் வந்தது... மண்டபத்தில் எல்லா வேலைகளும் சரிவர நடந்து கொண்டிருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தான் அர்ஜுன். தன் அறைக்குள் நுழைந்தவன், தனக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த வேட்டி சட்டையை பார்த்து,
"அய்யோ..." என்றான்.
அவனுக்கு சவால் விடக்கூடிய ஒரு பிரச்சனையை இந்து இப்பொழுது அவனுக்கு வழங்கியிருக்கிறாள். கலாச்சார உடையை அணிய வேண்டும் என்பது தான் அது. எப்பொழுதும் போல, அவன் கோட்டு சூட்டில் இருக்கக் கூடாது என்பது தான் அவள் கேட்டுக் கொண்டது. புலம்பியபடி குளியலறை சென்று, குளித்து விட்டு வந்தான். பெல்டால் வேட்டியை இருக்கமாய் கட்டி கொண்டான். இறுக்கமான கோட்டு சூட்டு அணிந்து பழக்கப்பட்ட அவனுக்கு, இடுப்பிற்கு கீழே ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது. அந்த வேட்டி காற்றில் பறந்து, அவனுக்கு மேலும் சங்கடத்தைத் தந்தது. அது அவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. என்றாலும், அவனுடைய *ஹோம் மினிஸ்டர்* ரிடம் *முடியாது* என்று கூற அவனால் முடியாது. முடியாது என்று கூறினால் அவள் வருத்தப்படுவாள்.
"டேம் திஸ் ட்ரெஸ்... இப்போ இந்த சட்டையோட கையை கூட என்னால மடிச்சி விட முடியாது... எப்படித் தான் இதை கட்டிக்கிட்டு வேலையெல்லாம் செய்யறாங்களோ தெரியல..." என்று புலம்பியபடி வெளியே வந்தவன், இந்துவை பார்த்து சிலையாகி போனான்.
கரும்பச்சை நிற புடவையில், சிவப்பு நிற பார்டரும், அதற்கேற்ற நிற ரவிக்கையும், நகைகளையும் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தாள் இந்து. அவள் சூடியிருந்த குண்டுமல்லி வாசம் கும்மென்று அர்ஜுனை தாக்கியது.
"நீங்க கிளம்புங்க அண்ணா. நாங்க உங்க பின்னாலேயே வந்துடுவோம்" என்று வேலனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
"சரி மா"
"நீங்களும் ஒரு சாவியை எடுத்துக்கிட்டுப் போங்க. திரும்பி வரும் போது யார் முதல்ல வரப்போறோம்னு தெரியல"
"சரி மா, எடுத்துகிட்டு போறேன்..." என்று அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
அர்ஜுன் அவளை நோக்கி வந்ததை கவனிக்காமல் திரும்பிய இந்து, அவன் மீது மோதிக்கொண்டு கீழே விழப்போனாள். அர்ஜுன் அவள் அருகில் இருக்கும் பொழுது அவள் விழுந்து விடுவாளா என்ன? அவள் கரத்தை பற்றி தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
"தேங்க்யூ, அஜ்ஜு..." என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவள் கையை இறுக்கமாய் பற்றினான்.
"என்ன அவ்வளவு அவசரம்...?" என்றான்.
"எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு"
"காலையில இருந்து, கொஞ்ச நேரம் கூட உட்காராம, வேலை செஞ்சுகிட்டு தான் இருக்க... உன்னோட புருஷனையே நீ மறந்துட்ட..."
"அதை யார் சொல்றது? நீங்க தான் உங்க ஃபிரெண்டு கல்யாணத்துக்காக பம்பரமா சுத்திக்கிட்டு இருக்கீங்க..."
"அப்படி இருந்தாலும், என் பொண்டாட்டிய நான் மறக்கல... என் கண்ணு அவ மேல தான் இருக்கு. இன்னைக்கு மத்தியானம், நான் தான் உனக்கு சாப்பாடு ஊட்டி விட்டேன் அதை மறந்துடாத"
"கரெக்ட்... கல்யாணம் முடியிற வரைக்கும் பொறுத்துக்கங்க. அதுக்கு அப்புறம் நான் உங்களுக்கு தான்..."
"எக்ஸ்க்யூஸ் மீ மேடம்... இப்பவும் நீ எனக்குத் தான்..." என்றான்.
அவனைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டாள்.
"ஆமாம்பா... நான் எப்பவும் உங்களுக்குத் தான்... இப்போ என்னை போக விடுங்க"
"வெய்ய்ய்ட்ட்...."
"இப்போ என்ன?"
"என்ன பொண்டாட்டி நீ? நீ தகதகன்னு ஜொலிக்கிற... ஆனா, நின்னு நான் அதைப் பத்தி என்ன சொல்றேன்னு கேட்கணும்னு உனக்கு தோணல... எல்லாத்துக்கும் மேல, நான் என்ன டிரஸ் போட்டிருக்கேன்னு கூட நீ கவனிக்கல... அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல... இந்த வேட்டி, என்னை எவ்வளவு கடுப்பேத்துதுன்னு தெரியுமா உனக்கு?"
அவன் கன்னத்தை செல்லமாய் கிள்ளி,
"செம சூப்பரா இருக்கீங்க" என்றாள்.
கையைக் கட்டிக் கொண்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் அர்ஜுன்.
"சாரிங்க... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க..."
"என் ட்ரெசை நீ கவனிக்கல தானே?"
ஆமாம் என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு தலையசைத்தாள்.
"பரவாயில்ல விடு" அங்கிருந்து நடக்கத் துவங்கினான்.
அவன் முன்னால் வந்து, தன் கைகளை நீட்டி அவனைத் தடுத்தாள் இந்து.
"என் மேல கோவமா தானே இருக்கீங்க?"
"இல்லயே" என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
"என்னை பார்த்து சொல்லுங்க"
"மாட்டேன்"
"ஏன்?"
"உன்னை பார்த்தா, எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணும்" என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.
அவன் வயிற்றில் விளையாட்டாய் குத்திவிட்டு, அவனை அணைத்துக் கொண்டாள் இந்து புன்னகையுடன்.
"பொண்டாட்டின்னா இப்படித் தான் இருக்கணும்" என்றான்.
"எஸ் பாஸ்..." என்றாள் இந்து.
"சரி கிளம்பலாம்"
"நீங்க எதையும் மறக்கலயே...?"
"இல்ல... நான் எதையும் மறக்கல"
"என்னைப் பார்த்தா, உங்களுக்கு ஏதோ செய்யத் தோணும்னு சொன்னீங்களே..."
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல... அதுக்கப்புறம் நீதான் என்னை திட்டுவ"
"ஏன்?"
"ஏன்னா, நான் முத்தத்தோட நிறுத்துவேன்னு கேரன்டி கொடுக்க முடியாது..."
மீண்டும் அவன் வயிற்றில் குத்தினாள்.
"போகலாம்" என்று சிரித்தான்.
ஒரு அழகுக்கலை நிபுணர், ஹீனாவை தயார் படுத்திவிட்டார். அவளை அழைத்து வந்தாள் இந்து. சங்கரின் காலை தொட்டு, அவரிடம் ஆசி பெற்றாள் ஹீனா. அவள் அர்ஜுனின் காலை தொட முயன்ற பொழுது, ஒரே தாவாக பின்னோக்கி தாவினான் அர்ஜுன்.
"என்ன பண்ற நீ?" என்றான் பதட்டத்துடன்.
அவன் முகம் போன போக்கைப் பார்த்து, களுக்கென்று சிரித்தாள் இந்து.
"உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்குறா" என்றார் சங்கர் சிரித்தபடி.
"என்னோட ஆசீர்வாதம், உனக்கு எப்பவும் இருக்கு..." என்றான் அர்ஜுன்.
அது உண்மை தானே... அவள் மணக்க இருப்பது அர்ஜுனின் உயிர் நண்பன் கிரியை ஆயிற்றே...
"கிளம்பலாம்... நம்ம சீக்கிரம் போனா நல்லது" என்றார் சங்கர்.
அவர்கள் காரை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.
"நீங்க ஹீனாவை கூட்டிகிட்டு வாங்க. நானும் இந்துவும் கொஞ்சம் முன்னால போயி, மாப்பிள்ளையை வரவேற்கிறோம்" என்றான் அர்ஜுன்.
சரி என்று தலையசைத்தார் சங்கர். அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அமர்ந்தாள் ஹீனா. டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார் சங்கர். அர்ஜுன் கல்யாண மண்டபத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
இந்து சிரித்தபடியே இருந்ததை பார்த்தான் அர்ஜுன்.
"எதுக்காக சிரிச்சிகிட்டே இருக்க?"
"இந்த ட்ரஸ் கம்ஃபர்டபுலா இல்லன்னு யாரோ சொன்னாங்க... நான் அதை நம்பிட்டேன்..." என்று சிரித்தாள்.
"அஃப் கோர்ஸ்... அது உண்மை தான்"
"ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஹீனா உங்க காலை தொட வந்தப்போ, இதே டிரஸ்ல நீங்க லாங் ஜம்ப் தாண்டினீங்களே..." என்று மேலும் சிரித்தாள். அர்ஜுன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"இது வரைக்கும் யாருமே, எங்கிட்ட ஆசிர்வாதம் வாங்குனது இல்ல. ஃபர்ஸ்ட் டைம் அவ அப்படி செஞ்சா, அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்..."
"இதையெல்லாம் நீங்க பழகிக்கணும். நம்ம பசங்களை தினமும் செய்ய வைக்க போறேன்..."
"என்னது, தினமுமா? நம்ம பசங்களை சாமியார் ஆக்கிடாதம்மா..."
"என்னது..? சாமியாரா? அதுவும் உங்க பசங்களா...?" என்று சிரித்தாள்.
"ஏன்?" என்று முகத்தை சுருக்கினான்.
"எப்ப பாத்தாலும் பொண்டாட்டியே கதின்னு கிடக்குறீங்க நீங்க... பசங்க, அம்மா அப்பாவைப் பார்த்து தான் வளருவாங்கன்னு சொல்லுவாங்க. உங்களைப் பார்த்து வளர்ற பசங்க, உங்களை மாதிரி தான் இருப்பாங்க. எப்படி சாமியாரா போவாங்க?' என்றாள்.
"அப்படின்னா அவங்களும் என்னை மாதிரியே சந்தோஷமா இருப்பாங்க" என்றான் புன்னகையுடன்.
அதற்குள் அவர்கள் திருமண மண்டபம் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது கிரி காரை விட்டு இறங்குவதை அவர்கள் பார்த்தார்கள். காரிலிருந்து இறங்கி, அவனை நோக்கி பரபரவென ஓடினாள் இந்து. ரம்யா, ஆலம் கரைத்த தட்டுடன் நின்றிருந்ததைப் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டாள் இந்து.
"தேங்க்யூ ரம்யா..."
"ஆல்வேஸ்..." என்று ஆலத்தட்டை அவளிடம் கொடுத்தாள் ரம்யா.
தனக்கு இந்து ஆலம் சுற்றிய போது சங்கடமாய் போனதுக்கு கிரிக்கு. போதாத குறைக்கு, அர்ஜுன், அவனைப் பார்த்து கிண்டலாய் சிரித்ததில் அவன் மேலும் சங்கடப்பட்டான்.
"வேட்டி சட்டையில ஹண்ட்ஸமா இருக்க, அர்ஜுன்" என்றான் கிரி.
"ஷ்ஷ்... சத்தமா பேசாத... நீ சொல்றதை இந்து கேட்டா, அடிக்கடி என்னை வேட்டி கட்ட சொல்லுவா." என்றான் அர்ஜுன்.
"நான் கேட்டுட்டேன்" என்றாள் இந்து.
தன் கண்களை சுழற்றினான் அர்ஜுன்.
"நீங்க சூப்பரா இருக்கீங்கன்னு மத்தவங்க சொல்லி தான் எனக்கு தெரியணும்னு எந்த அவசியமும் இல்ல. அது எனக்கே தெரியும்" என்றாள் இந்து.
"அப்போ நான் கோட்டு சூட்ல ஹண்ட்ஸமா இல்லயா?"
"நான் இல்லன்னு சொல்லலியே... இந்த ட்ரேஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க..."
அப்பொழுது ஹீனா சங்கருடன் வந்து சேர்ந்தாள். அவளை நோக்கி சென்றாள் இந்து.
"நீ இந்துகிட்ட இருந்து தப்பிக்க முடியாது போல இருக்கே, அர்ஜுன்..." என்றான் கிரி கிண்டலாக.
"என்ன செய்யறது... என்னை எப்படி மடக்குறதுன்னு அவ தெரிஞ்சு வச்சிருக்கா... " என்றான் அர்ஜுன்.
"அவங்க மிஸஸ் அர்ஜுன் ஆச்சே..."
"ரொம்ப பறக்காத... கல்யாணத்துக்கு அப்புறம், உனக்கும் என் நிலைமை தான்"
"எனக்கு வேட்டி கட்டுறதுல எந்த கஷ்டமும் இல்ல" என்று சிரித்தான் கிரி.
"வாயை மூடு டா... இதை கேட்டா, நீங்களும் கிரி அண்ணன் மாதிரி வேட்டி கட்டி பழகுங்கன்னு சொல்லுவா"
"நீ எப்படி இருந்தாலும் தப்பிக்க முடியாது... அதனால இந்து சொல்றதை கேட்டுட்டு போயிடு..."
"இப்ப மட்டும் நான் வேற என்ன செய்றேன்னு நினைக்கிற?" என்று சிரித்தான் அர்ஜுன்.
"அர்ஜுனை இப்படி பார்க்க நல்லா இருக்கு" என்றான் கிரி
"எது...? நான் அடங்கி போறதை பாக்கவா?"
அவனுக்கு பதில் சொல்லாமல் சிரித்தான் கிரி.
கிரி, ஹீனாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அர்ஜுன், கிரிக்கு முறைப்படி மைத்துனன் ஆனான். இருந்த போதிலும் அவர்களுக்கிடையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களுடைய நட்பு, உறவுகளுக்கு அப்பற்பட்டது... அல்லவா...?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top