Part 43

பாகம் 43

*க்ரீச்* என்ற ஓசையுடன் காரை நிறுத்தினாள் ஹீனா. கார் கதவை சரியாக கூட மூடாமல் உள்ளே ஓடினாள். சங்கர் வரவேற்பறையில் இல்லாது போகவே, அவருடைய அறைக்குச் சென்றாள். அவரின் அறைக்குள் கால் வைக்கப் போனவள், சங்கர், ஒரு காலி நகை பெட்டியை வீசி எறிவதை பார்த்து திடுக்கிட்டாள்.

"என்ன ஆச்சி பா?"

"எல்லாத்தையும் அவ தொடச்சி எடுத்துக்கிட்டு போயிட்டா... 2 கோடி மதிப்புள்ள நகை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், எதுவுமே இங்க இல்ல. அவ என்ன செய்ய பிளான் பண்ணி இருக்கான்னு ஒன்னும் புரியல. அவ அர்ஜுனையோ, இந்துவையோ ஏதாவது செய்ய நினைச்சா, நிச்சயம் அவளை நான் கொன்னுடுவேன்" என்று சீறினார் சங்கர்.

"எல்லாத்துக்கும் மேல, எனக்கு அண்ணனை நெனச்சா தான் பயமா இருக்கு. அவரோட நம்பிக்கையை அடைஞ்சிட முடியும்னு நெனச்சேன். அம்மா அதுலயும் மண்ணைப் போட்டுட்டாங்க. அண்ணனுக்கு நம்ம என்ன பதில் சொல்றது...? அவர் நம்மளை நம்பவே போறதில்ல... அவரை ஏமாத்த,  நொண்டி சாக்கு சொல்றோம்னு நினைப்பாரு... "

"நிச்சயமா அவன் நம்மளை நம்ப மாட்டான். என்னை அவன் மன்னிக்க மாட்டான்னு எனக்கு தெரியும். உனக்காவது அவங்க கூட பழக ஒரு வாய்ப்பு கிடச்சுதேன்னு நான் சந்தோஷப்பட்டேன்... உங்க அம்மா அதையும் கெடுத்துட்டா... அவ நம்மளை நிம்மதியா இருக்க விடவேமாட்டா... நான் இன்னும் அவளால என்னென்ன அனுபவிக்கப் போறேனோ தெரியல..." அவருடைய கோபம், கண்ணீராய் உருவெடுத்தது. தொப்பென்று தரையில் அமர்ந்து, தன் தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பா, நமக்கு இன்னமும் கூட வாய்ப்பு இருக்கு"

"எப்படி? " என்றார் தன் தலையை நிமிர்த்திய படி.

"போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்..."

துள்ளி எழுந்தார் சங்கர்.

"இதை விட்டா வேற வழியே இல்ல. அம்மாவோட நகை போட்டோசை நம்ம போலீஸ்ல கொடுக்கலாம். அதை விக்க வர்றவங்களை போலீஸ் பிடிப்பாங்க... அந்த ஆள் மூலமா, நம்மால அம்மாவை பிடிக்க முடியும்"

"இது நல்ல ஐடியா. மாஷா அந்த நகைகளை போட்டிருக்குற போட்டோஸ் என் ஃபோன்ல இருக்கு..."

"என்கிட்டயும் சில போட்டோஸ் இருக்கு" என்றாள் ஹீனா.

"சரி"

"அம்மா தான் நகை எல்லாம் எடுத்துக்கிட்டு போனாங்கன்னு நம்ம போலீஸ்கிட்ட சொல்ல கூடாது. திருடு போயிடுச்சினு தான் சொல்லணும். பாஸ்போர்ட், ஆதார் கார்டு காணாமல் போனதாகவும் மென்ஷன் பண்ணுங்க.  போலீஸ், அதை எல்லாம் பிளாக் பண்ணிட்டுவாங்க. அம்மா அதை யூஸ் பண்ணும் போது மாட்டிக்குவாங்க"

"ஓகே "

"முதல்ல போலீசுக்கு ஃபோன் பண்ணுங்க. அம்மா தப்பிச்ச விஷயம், அண்ணனுக்கு தெரியறதுக்கு முன்னாடி, நம்ம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாகணும் "

தனது போனை எடுத்து 100-க்கு ஃபோன் செய்தார் சங்கர்.

சீதாராணி இல்லம்

இந்துவை வீட்டில் இறக்கிவிட்டு, அப்படியே அலுவலகத்திற்கு சென்றான் அர்ஜுன். அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்ட ரம்யாவும், ரேவதியும் இந்துவை வரவேற்றார்கள்.

வெகு நாட்களுக்கு பிறகு தன் தோழிகளுடன் இருந்ததால் சந்தோஷமாக காணப்பட்டாள் இந்து. அதுமட்டுமல்லாது அவளுடைய திருமண வரவேற்பும் நெருங்கிவிட்டது அல்லவா...

அவள் திருமண வரவேற்பிற்கு அணிய போகும் லெஹங்காவை ஒரு பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து பேச்சிழந்து போனாள் இந்து, என்று சொல்வதைவிட, சொக்கிபோனாள் என்று தான் கூற வேண்டும். அந்த விலை உயர்ந்த லெஹங்காவை அவளுக்காக தேர்வு செய்தது அர்ஜுன் தான் என்பது அவளுக்கு தெரியும். அதை பார்த்து அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டாள் என்பதை அர்ஜுனிடம் கூற அவளால் முடியவில்லை. ஏனென்றால், அவன் வீட்டில் இல்லையே.

நாளை அவர்களுடைய திருமண வரவேற்பு. அதற்கான ஏற்பாடுகளை மிக பிரம்மாண்டமான முறையில் அர்ஜுன் செய்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். அர்ஜுனை விஷம் சாப்பிட விடாமல் அவள் தடுத்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள். அந்த இடத்தில் தான் அவர்களுடைய வரவேற்பு நடக்கப்போவதாக அர்ஜுன் அவளிடம் கூறி இருந்தான். அன்று,  சமுதாயத்தின் மிக உயர்ந்த மனிதர்கள் கூடியிருந்ததை அவள் பார்த்திருந்தாள். அவள் அணிய போகும் இந்த உடை, அவளை மிக அழகாய் காட்டப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அர்ஜூனின் அருகில் நிற்கும் பொழுது, அவள் அவனுக்கு இணையாக இருக்க முடியுமா? ஒருவேளை மக்கள் அவளை கிண்டல் செய்தால் என்ன செய்வது? என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

அவள் தோளைப் பிடித்து குலுக்கினாள் ரேவதி, ரம்யாவை பார்த்தபடி.

"என்ன ஆச்சு? நாங்க பேசுறதை கூட கேட்காம, என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றாள் ரேவதி.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

"எதுக்கு பயம்?" என்றாள் ரம்யா.

"அவர், பாக்க ராஜா மாதிரி இருக்காரு... அவர் பக்கத்துல நான் நல்லா இல்லன்னா...?" கவலையுடன் நகத்தை கடித்தாள்.

"அடக் கடவுளே, இந்த பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்றது...? நீ உன்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ அழகா இல்லயா?" என்றாள் ரேவதி.

"நீங்க அழகு இல்லன்னா, வேற யாரை அழகுன்னு சொல்லுவீங்க?" என்றாள் ரம்யா.

"போதும் என்னை கிண்டல் பண்றதை நிறுத்துங்க"

"உங்களை யாரு கிண்டல் செய்றது? நாங்க உண்மையா தான் சொல்றோம்... உங்களுக்கு சந்தேகமா இருந்தா, நீங்க அர்ஜுன் சாரையே கேளுங்க" என்றாள் ரம்யா.

"அவருக்கு நிறைய ஹை சொசைட்டி ஃபிரண்ட்ஸ்... என்னை மாதிரி சாதாரண பொண்ணால அதையெல்லாம் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது"

"நீங்க சாதாரண பொண்ணு இல்ல... மிஸஸ் அர்ஜுன்... அதை மறக்காதீங்க. அந்த *பேர்* செய்ய போற மேஜிக்கை, கூடிய சீக்கிரமே நீங்க பார்க்கத் தான் போறீங்க. நீங்க சொன்ன அதே ஹைகிளாஸ் ஜனங்க, உங்களுக்கு மரியாதை கொடுக்க போறாங்க" என்றாள் ரம்யா.

"அவங்க சொல்றது சரி தான். நீ அர்ஜுன் அண்ணனை பத்தி மட்டும் யோசி. மத்தவங்களைப் பத்தியெல்லாம் யோசிச்சி, மனசை போட்டு குழப்பிக்க வேண்டிய அவசியமில்ல"  என்றாள் ரேவதி.

"நமக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. இப்போ இதையெல்லாம் யோசிக்காதீங்க" என்றாள் ரம்யா.

"ஆமாம், வா நான் உனக்கு மெஹந்தி போட்டு விடுறேன்" என்றாள் ரேவதி.

"முதல்ல ஃபேசியல் பண்ணிடலாம்" என்றாள் ரம்யா.

அவர்கள் கூறிய வேலைகளைச் செய்யத் துவங்கினார்கள்.

எஸ் ஆர் கம்பெனி

மாஷா தப்பிவிட்ட விஷயத்தை கேட்டு அர்ஜுனின் ரத்தம் கொதித்தது. அந்த பெண்... இல்லை, இல்லை அவள் பெண்ணே இல்லை... தன்னுடைய சுயநலத்திற்காக அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் யாரும் பெண்ணாக இருக்க முடியாது. அர்ஜுனின் முன்னால் பதட்டத்துடன் நின்றிருந்தான் கிரி.

"இது எப்படி நடந்தது?" என்று நெருப்பை உமிழ்ந்தான். 

"நம்ப ஆளுங்க இப்படி ஏமாறுறது இது தான் முதல் தடவை. அவங்க, மாஷா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லன்னு அடிச்சி சொல்றாங்க. அவ எப்படி தப்பிச்சு போனான்னு ஒண்ணுமே புரியல"

"அந்த ஆளும், ஹீனாவும் ஹெல்ப் பண்ணி இருப்பாங்களா?"

"இல்ல, அதுக்கு வாய்ப்பில்லை"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"

"அவங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க"

"நம்மள டைவர்ட் பண்ண கூட அவங்க அதை செஞ்சிருக்கலாம்"

"அப்படி செஞ்சா, அது அவங்களை பிரச்சனைல மாட்டிவிடும்னு தெரியாத அளவுக்கு அவங்க முட்டாள் இல்ல. அதுவும் உன்னைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்க நிச்சயம் அதை செய்ய மாட்டாங்க... "

"வீடு, ரிசப்ஷன் ஹால் எல்லா இடத்திலேயும் செக்யூரிட்டியை டைட் பண்ணு. ரிசப்ஷன் ஹால் ஃபுல்லா சிசிடிவி கேமராவை ஃபிக்ஸ் பண்ணு. மேனேஜ்மென்டகிட்ட சொல்லி ஹாலை லாக் பண்ண சொல்லு. அதுக்கு ஆகுற வாடகையை நானே பே பண்ணிடுறேன். அங்க இருக்கிற அத்தனை கேமராவையும் நம்ம சிஸ்டத்தோட கனெக்ட் பண்ணு. அதை வாட்ச் பண்ண, எஃபீஷியன்டான ஆளுங்களை போடு"

"எல்லாத்தையும் செஞ்சுடுறேன்"

"இப்பவே செய்"

"சரி"

"நான் வீட்டுக்கு போறேன்"

சரி என்று தலை அசைத்தான் கிரி. இந்துவை தனியாக விட அர்ஜுனுக்கு மனமில்லை. மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டிற்கு சென்றான். அதே மன உளைச்சலுடன் தன் அறைக்குள் நுழைந்தான். அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு, முகப்பூச்சுடன் படுத்திருந்த இந்து, கட்டிலில்  எழுந்து அமர்ந்தாள். அப்பொழுது அவள் கண்களின் மீது வைத்திருந்த வெள்ளரிக்காய் வில்லைகள் கீழே விழுந்தன. அவளை முகபூச்சுடன் பார்த்து, தன் கவலையை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் அர்ஜுன். அவன் அப்படி சிரிப்பதைப் பார்த்து சினுங்கினாள் இந்து.

"இந்து... இந்து... நீ எங்க இருக்க?" என்று இங்கும் அங்கும் தேடுவது போல் பாசாங்கு செய்தான்.

கட்டிலை விட்டு கீழே இறங்கிய இந்து,

"போதும்.. கிண்டல் பண்றத நிறுத்துங்க" என்று அவன் தோளில் தட்டினாள்.

"நீ இங்க தான் இருக்கியா?" என்று கிண்டலாய் கேட்ட அவன் வயிற்றில் குத்தினாள் இந்து.

"எதுக்காக எது பின்னாடியோ ஒளிஞ்சிகிட்டு இருக்க?"

"இது ஃபேஸ் பேக்... ரேவதி போட்டுவிட்டா"

"எதுக்கு இதை போட்டிருக்க?"

"நாளைக்கு நான் அழகா இருக்கணும்ல..."

"நீ ஏற்கனவே ரொம்ப அழகா தான் இருக்க"

"போங்க... நீங்க எப்ப பார்த்தாலும் இப்படித் தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க... நீங்க சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்"

"ஏன்? என் வார்த்தைல நம்பிக்கை இல்லயா உனக்கு?"

"இல்ல... ஏன்னா நீங்க ஒரு பைத்தியக்காரன்"

"என்னது?"

"நீங்க பைத்தியக்காரத்தனமா என்னை காதலிக்கிறீங்க... அதனால நான் உங்க கண்ணுக்கு அழகா தான் தெரிவேன்... "

"அப்புறம் என்ன?"

"யாராவது நான் அழகா இல்லன்னு எகத்தாளம் பண்ணா என்ன செய்றது?"

"அப்படி பேசுற தைரியம் இங்கே எவனுக்கும் இல்ல"

"உங்க முன்னாடி பேசற தைரியம் இல்லாம இருக்கலாம் "

"நமக்கு பின்னாடி, யார், என்ன பேசுறாங்கன்னு எனக்கு எந்த கவலையும் இல்ல. நீயும் அதைப் பத்தியெல்லாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்ல. புரிஞ்சுதா?"

சரி என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

அவள் உதடுகளை இரண்டு பக்கமும் இழுத்து, அவளை சிரிக்க செய்தான்.

"இப்ப, நீ ரொம்ப அழகா இருக்க. உன்னை அழகா காட்டுறது எதுன்னு தெரிஞ்சுக்கோ... நீ சிரிச்சா அழகா இருப்ப. அதனால, சிரி... சிரிக்க வை..."

சரி என்று புன்னகையுடன் தலையசைத்தாள்.

"உன் முகத்தை கழுவ எவ்வளவு நேரம் ஆகும்? " என்றான்

"டைம் ஆயிடுச்சு கழுவ போறேன்"

"நல்லதா போச்சி..."

"ஏன்?"

"அர்ஜெண்டா உனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோனுது" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தான்.

"அப்படின்னா நான் முகத்தை கழுவ மாட்டேன்..."

"நான் செய்யணும்னு நினைச்சா, அது எப்படி இருந்தாலும் செய்வேன்..." அவளை நோக்கி முத்தமிட குனிந்தான்.

அவனைப் பிடித்து கட்டிலில் தள்ளி விட்டு, குளியலறையை நோக்கி ஓடினாள் இந்து.

அப்பொழுது கிரியிடமிருந்து அர்ஜுனுக்கு அழைப்பு வந்தது.

"சொல்லு கிரி"

"சிசிடிவி கேமராஸ் எல்லாத்தையும் நம்ம சிஸ்டத்தோட கனெக்ட் பண்ணிட்டேன்"

"அதைக் கேர் ஃபுல்லா வாட்ச் பண்ண சொல்லு... எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்"

"ஓகே அர்ஜுன்"

பெருமூச்சு விட்டபடி அந்த அழைப்பை துண்டித்தான். நாளை, எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும் வரை, அவனுக்குள் இருக்கும் பதட்டம் குறையப் போவதில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top