Part 41
பாகம் 41
பாறைக் கோவில் என்று பெயர் பெற்ற அந்த கோவிலுக்கு பதினோரு படிகள் இருந்தன. அந்தக் கோவில், இந்துவை வெகுவாய் கவர்ந்தது. அந்த அமைதியான சூழ்நிலை அவள் மனதை ஆக்கிரமித்தது. கண்ணை மூடி, அம்மனை வணங்கினாள் இந்து. அவளை தொந்தரவு செய்யாமல் சாமி கும்பிடவிட்டான் அர்ஜுன்.
அவர்களைப் பார்த்த உடனேயே, அந்த இடத்திற்கு அவர்கள் புதியவர்கள் என்பதை புரிந்து கொண்டார் பண்டிதர்.
"நீங்க இந்த இடத்துக்கு புதுசா தெரியறீங்களே..." என்றார்.
"ஆமாம், நாங்க சென்னையில இருந்து வறோம்" என்றாள் இந்து.
"இங்க வர்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"
"இது என் மாமியார் வாழ்ந்த கிராமம்"
"யார் உங்க மாமியார்?"
"சீதாராணி"
"ரொம்ப சந்தோஷம்... சீதாம்மா, ஒவ்வொரு வருஷமும், அவங்க பையனுடைய பிறந்தநாளுக்கு இங்க வருவாங்க"
"அப்படிங்களா?" என்று தன் கண்ணை அர்ஜுனின் மீது ஓட விட்டாள் இந்து.
அவள் நினைத்தது போலவே அவன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டான். அவனுடைய அம்மாவைப் பற்றி பேசும்போதெல்லாம் அவன் எவ்வளவு கலகலத்து போகிறான்... இந்து அதை எண்ணி ஆச்சரியப்படாமல் இருந்ததில்லை.
"எங்க அம்மாவோட வீடு எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றான் அர்ஜுன்.
"தெரியும்... கிராம வாசிங்க எல்லாருக்கும் தெரியும். யாரைக் கேட்டாலும் உங்களை அழச்சிகிட்டு போய் விட்டுடுவாங்க"
"அப்படிங்களா?"
"இது ரொம்ப சின்ன கிராமம். ரொம்ப குறஞ்ச ஆட்கள் தான் இங்க வசிக்கிறாங்க. அதனால, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. கிராமத்துல அப்படித் தான். உங்க அம்மாவுடைய வீடு தான், இந்த கிராமத்துல இருக்கிற ஒரே ஒரு பழைய வீடு. உங்க பாட்டி, உங்க அம்மாவோட சித்தி மகளுக்கு அதை வித்துட்டு போய்ட்டாங்க. ரொம்ப நாளா, அவங்களும் அதை புதுப்பிக்க நினைச்சுகிட்டு இருக்காங்க... ஆனா, பணம் இல்லாததால, அதை அவங்களால செய்ய முடியல." என்றார் பண்டிதர்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் அர்ஜுன். அந்த வீட்டில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவனுடைய உணர்வு, நிச்சயம் தவறாகாது. இருந்த போதிலும், அந்த வீட்டின் உரிமையாளர்களை பற்றி அவன் தெரிந்து கொள்ள நினைத்தான். நாகுவும், கனகுவும் திடிரென்று அவன் வழியில் வந்து அறிமுகமானார்கள். அது தற்செயலாக நடந்ததாக இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களா என்பதை அவன் தெரிந்து கொள்ள எண்ணினான்.
"எங்க அம்மா வீட்டை நான் வாங்க போறேன்" என்றான் அர்ஜுன்.
"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, தம்பி. கடவுள் உங்களை நல்லா வைக்கட்டும்"
அவர்களிடம் பிரசாதத்தை வழங்கி விட்டு சென்றார் பண்டிதர்.
"நான், கொஞ்ச நேரம் இங்க உக்காரட்டுமா?" என்றாள் இந்து.
சரி என்று தலையசைத்துவிட்டு கிரிக்கு ஃபோன் செய்தான் அர்ஜுன்.
"ஹாய், அர்ஜுன்"
"இஸ் எவ்ரிதிங் ஃபைன்?"
"எஸ்... நம்ம ஆளுங்க சங்கர் இல்லத்தைச் சுத்தி வளைச்சிருக்காங்க. மாஷாவுடைய ஃபோனை நம்ம ஆளுங்க ட்ராக் பண்றாங்க."
"சந்தேகப்படுற மாதிரி ஏதாவது கிடச்சுதா?"
"கிளியராவே கிடைச்சது... மாஷாவுடையை கவனம், உன்னோட ரிசப்ஷன் மேல தான் இருக்கு.... இந்துவை கொல்ல பிளான் பண்ணி இருக்கா"
"வாட் த ஹெல்..." என்றான் பல்லைக் கடித்தபடி.
"அவங்க ஆளுங்க நம்ம கண்காணிப்பில் தான் இருக்காங்க"
"அவங்க ஒரு அடி கூட நகர கூடாது. பீ கேர் ஃபுல். இது, இந்துவை பத்தின விஷயம்... மறந்துடாத" கத்திவிடாமல் இருக்க, அவன் படாத பாடுபட்டான்.
"அவங்களை நான் பாத்துக்குறேன். ஆனா, மாஷாவை என்ன செய்யறது?"
"எல்லாமே அவளோட பிளான் படி நடக்குறதா அவ நினைக்கட்டும். அந்த வீட்ல இருந்து அவ வெளியில வந்த உடனே நம்ம இடத்துக்கு கொண்டு வந்துடு"
"ஓகே, டன்... அப்பறம்..."
"சொல்லு"
"நம்ம ஆளுங்க அங்க இருக்காங்க"
"அதான் சொன்னியே..."
"நான், உங்க அம்மாவுடைய கிராமத்தை பத்தி பேசுறேன்"
"என்ன சொல்ற நீ?"
"உங்க பாதுகாப்புக்காக, நான் நம்ம ஆளுங்களை அனுப்பியிருக்கேன். அவங்க உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க"
"என்னனனது...?"
"அதைச் செய்றது என்னோட டூட்டி"
"என்னோட கார் டயர் பஞ்சர் ஆனப்போ அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணவே இல்லயே..."
"அவங்க எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க. நான் தான் உனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்..."
"லூசாடா நீ?"
"அவங்க உனக்கு ஹெல்ப் பண்ணா, அவங்க நம்ம ஆளுங்கன்னு தெரிஞ்சுடாதா....? அதுக்கும் மேல, வாழ்க்கையில எல்லா கட்டத்தையும் அனுபவிக்கணும். இப்போ பாரு, எதிர்பாராம ரெண்டு பேர் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணாங்க. அவங்க, உன்னை உன்னோட அம்மா வீட்டுக்கும் கூட்டிக்கிட்டு போனாங்க. அவங்களை ஹெல்ப் பண்ண வேண்டாம்ன்னு நான் சொன்னதுக்காக நீ எனக்கு நன்றி தான் சொல்லணும்"
"இந்தியா வந்ததுக்கு அப்புறம் நீ பைத்தியமயிட்ட"
"உன்னை விட அதிகமா ஒன்னுமில்ல..."
அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் அர்ஜுன்.
"நாளைக்கு காலையில வில்லேஜ்க்கு வந்துடு"
"உங்க அம்மா வீட்டை ரெஜிஸ்டர் செய்ய தானே?"
"அசத்துற டா நீ"
"காலையில வந்துடறேன். ஒரு ஏர் கூலரையும், மேட்ரஸையும் அனுப்பி இருக்கேன். இன்னைக்கு ராத்திரி, உனக்கு அங்க தேவைப்படும்." என்று கிரி சொல்ல,
புன்னகைத்தபடி ஓரக்கண்ணால் இந்துவை பார்த்தான் அர்ஜுன்.
"எப்போ அனுப்பினே?"
"நீ தங்கி இருக்கிறது உங்க அம்மாவோட வீடுன்னு தெரிஞ்சப்போ"
"நீ ரொம்ப ஸ்மார்ட்..."
"ஹாஹா... தேங்க்யூ, டூட்..."
அவர்கள் சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தார்கள். மேலே இருந்து கீழே பார்த்தான் அர்ஜுன். அங்கு சில பேர் காருக்குள் அமர்ந்து கோவிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் கண்களை சுழற்றி விட்டு, இந்துவின் அருகில் அமர்ந்தான் அர்ஜுன்.
"இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு. சென்னையில இப்படிப்பட்ட இடத்தையெல்லாம் பார்க்கவே முடியல"
"உனக்கு இந்த இடம் பிடிச்சிருந்தா, நம்ம நாளைக்கு வரலாம். இப்ப கிளம்பலாம்"
"நாளைக்கா...? நாளைக்கு கூட என்னை சென்னையிலிருந்து இங்க கூட்டிகிட்டு வர போறீங்களா?" என்றாள் ஆச்சரியமாக.
"சென்னையிலிருந்து இல்ல... எங்க அம்மா வீட்ல இருந்து"
"நீங்க என்ன சொல்றீங்க?"
"நாம, இன்னிக்கு இங்க தான் தங்கப் போறோம். நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சுட்டு நம்ம கிளம்பலாம்"
"ம்ம்ம்" என்றாள் யோசித்தவாறே. அவனுடைய அம்மா வீட்டை பார்த்தவுடன், தங்களுடைய முதலிரவைப் பற்றி அர்ஜுன் மறந்து விட்டான் போலிருக்கிறது என்று நினைத்தாள் இந்து.
"கிளம்பலாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு"
சரி என்று தலையசைத்துவிட்டு அவனுடன் நடந்தாள் இந்து.
அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது, அவர்களுக்காக அங்கு இருவர் காத்திருந்தார்கள். அங்கு ஒரு ஏர்கூலர் மற்றும் மெத்தை வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து குழப்பத்துடன் அர்ஜுனை பார்த்தாள் இந்து.
கதவை திறந்துவிட்டு,
"இதையெல்லாம் உள்ளே வச்சிடுங்க" என்றான்.
அவர்கள் சரி என்று சொல்லிவிட்டு, அவற்றை உள்ளே கொண்டு சென்று வைத்தார்கள்.
"கிரி சார் இதையும் கொடுக்கச் சொன்னார்" என்று ஒரு பையை கொடுத்துவிட்டு சென்றார்கள்.
அதைத் திறந்து பார்த்த இந்து,
"நமக்கு டின்னர் கொடுத்து அனுப்பி இருக்காரு" என்றாள்.
"வேற எதுவும் கொடுத்து அனுப்பலயா?"
"ஸ்வீட்ஸும், பழங்களும் இருக்கு... நீங்க நைட்ல ஸ்வீட் சாப்பிட மாட்டீங்களே..."
"நீ சாப்பிடுவல்ல..." என்றான் விஷமப் புன்னகையுடன்.
"சரி, வாங்க நாம சாப்பிடலாம்..."
எதையோ யோசித்தவள்,
"எப்போ, இதையெல்லாம் நீங்க கிரி அண்ணாகிட்ட கேட்டீங்க?"
"இதையெல்லாம் நான் கேட்கல"
"அவராவேவா இதையெல்லாம் அனுப்பி வச்சாரு?"
ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.
"ஆனா, நம்ம இங்க தான் தங்க போறோம்னு அவருக்கு எப்படி தெரியும்?"
அவளுக்கு பதில் கூறாமல் சிரித்தான், அர்ஜுன்.
மெத்தையின் மேல் விரிப்பை விரித்து, ஏர் கூலரை ஆன் செய்தவனை பார்த்துக்கொண்டிருந்தாள் இந்து.
"சில சமயங்கள்ல நீங்க புரிஞ்சிக்க முடியாத தூரத்துக்கு போயிடுறிங்க..." என்றாள்.
இரண்டே எட்டில் அவளை அடைந்து,
"யார் சொன்னது? நான் எப்பவுமே உன் பக்கத்துல தான் இருக்கேன்" என்று அவள் இடையைச் சுற்றி வளைத்தான்.
"என்ன்...னனங்க..."
"ம்ம்ம்?"
"அது... வந்து..."
"நீ மறந்துட்டியா...? இன்னைக்கு நமக்கு ஃபஸ்ட் நைட்" என்றான் மெத்தையின் மீது கண்களை ஓட்டி.
அதைக் கேட்டு திடுக்கிட்டாள் இந்து. அப்படி என்றால் அவன் அதை மறக்கவில்லை.
"என்னோட அதிர்ஷ்டத்தை பார்த்தியா... எங்க அம்மா வீட்டுல... நம்ம ஃபஸ்ட் நைட் நடக்கப் போகுது..."
"நீங்க நிஜமா தான்..."
"நிஜமா நடக்கத் தான் போகுது..." என்றான்.
"முதல்ல சாப்பிடுங்க" என்று பையை எடுக்க குனிந்தவளின் கையை பிடித்தான்.
"எனக்கு சாப்பிடுற மூட் இல்ல"
"ஏன்?"
"ஏன்னு, என் கண்ணை பார்த்தா உனக்கு தெரியலயா?"
அன்று அவனுடைய கண்களைப் பார்க்கவே அவளுக்கு தைரியம் வரவில்லை. அவனுடைய கண்கள், அவன் எடுத்து வைத்திருக்கும் அடியிலிருந்து, அவன் பின்வாங்க வாய்ப்பே இல்லை என்று கூறியது.
இந்துவைப் பொறுத்தவரை, அர்ஜுனின் கண்கள், அவளை தொடாமலேயே, திக்கு முக்காடச் செய்யும் திறன் படைத்த பேராயுதங்கள்... அதன் ஊடுருவும் திறன், அவள் வயிற்றை கலக்க தான் செய்கிறது. அவனை விட்டு விலகிச் சென்று, மெத்தைக்கு அருகில் இருந்த தூணை அணைத்து கொண்டு நின்றாள் இந்து.
அர்ஜுன் தனக்கு பின்னால் வந்து நிற்பதை உணர்ந்தாள் அவள். அவனுடைய சூடான மூச்சு காற்று அவள் கழுத்தில் விழுந்து, அவன் இருப்பை உணர்த்தியது. சட்டென்று அவள் கழுத்தில் சில்லென்ற உணர்வு ஏற்பட்டது, அர்ஜுன் தன் ஈர இதழ்களை பதித்த போது.
அதற்கு மேல் காலம் தாழ்த்த விரும்பாமல், இந்துவைக் மெத்தைக்கு அழைத்துச் சென்று தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான். உண்மையிலேயே தங்களுக்கு முதலிரவு நடக்கப் போவதை உணர்ந்தாள் இந்து.
அவள் நினைத்தது சரி என்பதை உணர்த்தும் வண்ணம், அவள் இதழில் தன் இதழை பதித்தான் அர்ஜுன். இதழ் பதித்த அவன் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தான். அப்பொழுது இந்துவின் கன்னத்தில் ஒரு துளி நீர் விழுந்தது. அது அர்ஜூனின் கண்களில் இருந்து விழுந்தது என்பதை உணர்ந்த பொழுது அவள் பதட்டம் அடைந்தாள். அது, அடையாததை அடைந்ததால் ஏற்பட்ட களிப்பு. அவன் கண்ணீரை துடைத்து, அவன் நெற்றியில் முத்தமிட்டாள் இந்து.
பெண்களிடம் நெருங்க என்றுமே அர்ஜுன் நினைத்ததில்லை. சில பெண்கள் அவனை மயக்க முயன்ற போது கூட, அவன் ஒரு வித அருவருப்பை தான் அவர்களிடத்தில் உணர்ந்தான். ஆனால், இந்து ஒரு தெய்வீகப் பெண். அவனுக்குள் இருந்த உணர்வுகளை உணர வைத்தவள்... அவன் என்றும் உணர்ந்திராத உணர்வுகளை உணர வைத்தவள்... இன்று, அவளிடத்தில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வும் அப்படிப்பட்டது தான். அதை மறுபடி மறுபடி உணரவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அவள் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் அவனை வெகு சிறப்பாவனாய் உணர வைத்தவள். இன்றும் அப்படித் தான், தன்னை முழுதாய் அர்ப்பணித்து, அர்ஜுன் தனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று அவனை உணர வைத்தாள். தங்களுக்கிடையில் இருந்த தயக்கங்களை வென்று, அவர்கள் இல்லறத்தில் நுழைந்தார்கள்.
"உன்கிட்ட ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு தெரியுமா...?"
தெரியாது என்று தலையசைத்தாள் இந்து.
"யாராலயும் சாதிக்க முடியாத விஷயத்தை நீ சாதித்திருக்க... அர்ஜுனை உனக்கு அடிமையாக்கிட்ட" என்றான் காந்த புன்னகையுடன்.
"அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?" என்றாள் இந்து அழகாய் வெட்கப்பட்டு.
"அவன் ஒரு ராட்சசன்..." என்று சிரித்தான்.
"அழகான ராட்சசன்" என்று அவள் கூற, அவள் கன்னத்தில் முத்தமிட்டான் அர்ஜுன், சிரித்தபடி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top