Part 38

பாகம் 38

கிரியினுடைய  கைபேசியை போலவே, அவனுடைய முகமும் ஒளிர்ந்தது, ஹீனாவின் பெயரை தன் கைபேசி திரையில் பார்த்த பொழுது. ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் அந்த அழைப்பை ஏற்றான் கிரி.

"ஹலோ..." என்றான் தன் ஆர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.

"உங்ககிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்" அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.

"சொல்லுங்க" என்றான் ஆர்வமாக.

"என்னோட அம்மா, எங்க வீட்ல தான் ஒளிஞ்சிருக்காங்க" என்றாள் மெல்லிய குரலில்.

"உங்க வீட்ல ஒளிஞ்சிருக்காங்களா?" என்றான் பொய்யான அதிர்ச்சியை காட்டி.

"ஆமாம்... ரஹிம் தாத்தா தான் எங்களுக்கு சொன்னாரு"

"எங்களுக்குன்னா? சங்கர் சாருக்கும் தெரியுமா?"

"ஆமாம். அவர் இதைப் பத்தி அண்ணனுக்கு தெரியபடுத்த சொன்னாரு"

"ஓ..."

"என்னால உங்களை நேர்ல சந்திக்க முடியல. ஏன்னா, அப்பா வீட்ல இல்ல. நானும் வெளியே வந்துட்டா, அவங்க என்ன செய்றாங்கன்னு எங்களால கவனிக்க முடியாது."

"உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி"

"இது சம்பந்தமா நான் எதாவது செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"அவங்களை வாட்ச் பண்ணுங்க. அவங்க எங்கேயாவது வெளியே போனா மட்டும் எனக்கு சொல்லுங்க"

"இல்ல.. நான் அவங்களை எங்கயும்  போக விடமாட்டேன்"

"இல்ல.  அவங்களை தடுக்காதீங்க. அவங்க ஏதோ ஒரு திட்டம் வச்சிருப்பாங்க. அவங்களை தடுத்தா, அதை நம்மால தெரிஞ்சுக்க முடியாது"

"அது என்னவா வேணும்னாலும் இருக்கட்டும்... அவங்க நினைக்கிறதை, இந்த தடவை நான் நடக்க விடமாட்டேன்"

"தயவு செஞ்சி நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. அவங்களை நாங்க பாத்துக்குறோம்"

"ஏன்???  அவங்களால தான் எல்லா பிரச்சனையுமே... இனிமே அவங்களால எதுவும் நடக்கக் கூடாது... நாங்க நடக்கவும் விடமாட்டோம்"

என்று கூறிவிட்டு, அவன் பேசுவதற்கு செவிசாய்க்காமல் அழைப்பை துண்டித்தாள் ஹீனா. தன் கைப்பேசியை பார்த்து, புன்னகைதான் கிரி. ஹீனா, மாஷாவை கவனிக்கிறாளோ இல்லையோ... அவனுடைய ஆட்கள், ஏற்கனவே சங்கர் இல்லத்தை சூழ்ந்து கொண்டு, கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அர்ஜுனுடைய மேலாளரின் திறமை என்னவென்று அந்தப் பெண்ணுக்கு எப்படி தெரியும்?

சீதாராணி இல்லம்

அர்ஜுனுடைய நடையின் வேகம் குறைந்தது, இந்துவின் கையில் இருந்த, பழைய புகைப்பட ஆல்பத்தை பார்த்த பொழுது. இந்து அதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏனெனில் அதில் அர்ஜுனுடைய சிறு வயது புகைப்படங்கள் இருந்தன.

"என்னங்க இங்க வந்து இதை பாருங்களேன்..." என்றாள் குதூகலமாக.

அவள் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன்.

"இது உனக்கு எங்க கிடைச்சது?" என்றான்.

"ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்தேன்"

"நீ எதுக்கு ஸ்டோர் ரூமுக்கு போனே?"

"பூஜை செய்றதுக்கு தாம்பாளத் தட்டு எடுக்க போனேன்"

"ஓ..."

அந்த ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களை பற்றி கேள்விகளை கேட்கத் தொடங்கினாள் இந்து. அவையெல்லாம், எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என்று அவளுக்கு விளக்கி கூறி வந்தான் அர்ஜுன். ஒரு புகைப்படத்தில், அர்ஜுன் அவனுடைய அம்மா சீதாராணியுடன் இருந்தான். அந்தப் புகைப்படம், ஏதோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த கோவிலின் சூழல்  பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது.

"இந்தக் கோவில் எங்கங்க இருக்கு?"

"இது எங்க அம்மாவுடைய குலதெய்வ கோவில். அவங்க பிறந்த கிராமத்தில் இருக்கு"

"உங்க அம்மாவுடைய கிராமமா? அது எங்க இருக்கு?"

"இங்க இருந்து... 70 கிலோ மீட்டர் இருக்கும்..."

"அங்க தான் உங்க அம்மா பிறந்தாங்களா?"

"ஆமாம். நான் இந்தியாவில் இருந்த வரைக்கும், ஒவ்வொரு வருஷமும் அங்க போவோம்"

"நம்மளும் அங்க போகலாமா?" என்றாள் ஆவலாக.

"சரி, நம்ம நாளைக்கு போகலாம்"

"நாளைக்கா?" என்றாள் ஆழ்ந்த சிந்தனையோடு.

"நீ கேக்கறதை பாத்தா, நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை பத்தி நீ கவலைப் படுற மாதிரி தெரியுதே..." என்றான் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல்.

"இல்ல... நான்... வந்து..." என்று தடுமாறினாள் இந்து. 

"கவலைப்படாதே ... இந்த ட்ரிப், நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை நிச்சயம் பாதிக்காது. எது எப்படி இருந்தாலும், நாளைக்கு நம்ம ஃபஸ்ட் நைட் நடந்தே தீரும்" என்று ரகசியமாகக் கூறினான்.

"எனக்கு வேலை இருக்கு" என்று கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல அவள் எண்ணிய பொழுது,

"இந்து..." என்ற அவனுடைய அதிகாரக் குரல், அவளை திடுக்கிட செய்தது. அவள் மெல்ல அவனை நோக்கி திரும்பினாள்.

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி கேட்கணும்னு நினைச்சேன்" என்றான் தீர்க்கமான குரலில்.

"என்னது?"

"நீ புடவை கட்டுறதை பத்தி எதோ சொன்னியே... அதை நான் மறந்துட்டேன். நீ என்ன சொன்ன?"

"நான் ரொம்ப சின்ன பெண்ணா இருக்கேன்னு சொன்னிங்க..."

"அதில்ல... நான், நீ சொன்னதை பத்தி கேட்கிறேன்"

"என்னதுங்க?"

"உன்னை பெரிய பொண்ணா காட்டிக்க தான் புடவை கட்டுறேன்னு சொன்ன இல்ல... " என்றான், இதழ்களில் விஷமப் புன்னகை தவழ, அவளுடைய மெல்லிய இடையில் கண்களை ஓட்டி. அவன் பார்வையின் வேகம் கண்டு, திரும்பி நின்று கொண்டாள் இந்து.

தன் கையை நீட்டி, அவளை தன்னிடம் வருமாறு அழைத்தான். மெல்ல அவன் கை மேல் தன் கையை வைத்தாள் இந்து. அவளைத் தன்னை நோக்கி இழுத்தான் அர்ஜுன். அவன் அருகில் அமரப் போனவளை அள்ளி, தன் மடியில் அமர்த்திக் கொண்டான். இந்துவின் இதயம், எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தில் ஓடியது. தலைகுனிந்தபடி, தன் சேலை முந்தானையில், முடிச்சிட்டு கொண்டிருந்தாள் இந்து. தன் ஆள்காட்டி விரலால் அவள் காதை வருடினான் அர்ஜுன். அது அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்தியதால் தன் தலையை சாய்த்தாள் இந்து.

"ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கே? ஜூனியர் வேண்டாமா உனக்கு?" என்றான் அவள் காதை தன் இதழ்களால் வருடியபடி.

"சின்ன அர்ஜுனை பெத்துகிறதுன்னா, சாம்பார் வைக்கிற மாதிரி, சாதாரணமானதுன்னு நெனச்சியா?" என்று அவன் கேட்டதில் எகத்தாளம் தெரிந்தது.

அவனை கட்டிலின் மேல் தள்ளிவிட்டு, அவன் மடியிலிருந்து கீழே இறங்கினாள் இந்து. அங்கிருந்து அவள் செல்ல நினைத்த பொழுது, பின்னோக்கி இழுக்கப்பட்டாள். அவளுடைய சேலை தலைப்பை தன் கையில் பற்றி கொண்டிருந்தான் அர்ஜுன். தன் இட புருவத்தை உயர்த்தி சிரித்தான். அவளது முந்தானையை பற்றி இழுக்க, அவன் மீது வந்து விழுந்தாள் இந்து. அவளை கட்டிலில் கிடத்தி, அவள் கைகளை பற்றிக்கொண்டான்.

"எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல. நான் பாட்டுக்கு தேமேன்னு இருந்தப்போ, சின்ன அர்ஜுன் வேணுமுன்னு கேட்டு, நீ என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்த... ஆனா இப்போ, நான் அதுக்கு ஆர்வம் காட்டும் போது, நீ பதட்டமா இருக்க... ஏன்?"

"நீங்க எதுக்காக இப்படி எல்லாம் நடந்துக்குறீகங்ன்னு எனக்கு தெரியல" என்று சினிங்கினாள்.

"எப்படி நடந்துக்குறேன்?"

"எனக்கு ரொம்ப அதிர்ச்சி கொடுக்குறீங்க... சங்கட படுத்துறீங்க. நீங்க இப்படி எல்லாம் நடந்துவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றாள் பாவமாக.

"இதையெல்லாம் நீ பழக்கப்படுத்திக்கிட்டு தான் ஆகணும். புருஷன் பொண்டாட்டிகுள்ள இப்படித் தான் பேசிக்குவாங்க... சொல்லப் போனா இன்னும் கூட ஒப்பனா பேசுவாங்க..."

"அப்படி ஓபனா பேசுறது அவசியமா?" 

"பின்ன இல்லயா? நேரடியா கட்டிலுக்கு போயிட்டா, அதுல காதல் எங்கிருந்து வரும்? அதுல எந்த சுவாரசியமும் கிடையாது... கட்டிலுக்கு போனமா... மேட்டரை முடிச்சமான்னு என்னால இருக்க முடியாது" என்று அவன் கூற, அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தது.

"இப்படி எல்லாம் பேசுறது தான், தம்பதிகளை நெருக்கமாக உணர வைக்கும்... அது உனக்குத் தெரியாதா?"

"எனக்குத் தெரியாது"

"உனக்கு சொல்லிக் கொடுக்கத் தான் நான் இருக்கேனே"

"நீங்க எனக்கு அப்புறமா சொல்லிக் கொடுக்கலாம்"

"இப்போ என்ன ஆச்சு?"

"என்னோட ஃபிரண்டை கூட்டிக்கிட்டு வர, கார் அனுப்புறேன்னு சொன்னீங்ல்ல...?"

"நாளன்னைக்கு காலையில நம்ம டிரைவர், உன் ஃபிரண்டை கூட்டிகிட்டு வர பாண்டிச்சேரி போவார்"

"முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கூட அவங்க அம்மா அவளை அனுப்ப மாட்டாங்க"

"ஏன்?"

"கிராமத்துல இருக்கிறவங்க எல்லாம் அப்படித் தான்"

"சரி, ரம்யாவையும் அனுப்பி வைக்கலாம்"

"ம்ம்ம்"

"உன்னோட பிரச்சனையை நான் தீத்துடேன். அதுக்காக இப்ப நீ எனக்கு ஏதாவது கொடுக்கணும்"

"என்னது?"

"ஏதாவது கொடு" என்றான் தன் கன்னத்தை காட்டியபடி.

அவன் கண்ணத்தில் விளையாட்டாய் அறைந்தாள் இந்து. அதை எதிர் பார்க்காத அவன், அவளைக் கோபப் பார்வை பார்க்க, அவனுடைய கோபம், புஸ் என்று போனது, அவள் அவன் முகத்தை பற்றிய போது. அவன் உருகியது வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது. அவனை அப்படியே புரட்டிப்போட்டு, அவனுடைய இதழோரம் தன் இதழ்களைப் பதித்தாள் இந்து, மேலும் அவனை உருகி ஓட செய்து.

"இப்போதைக்கு இதை வச்சுக்கோங்க. மிச்சத்தை எல்லாம் நாளைக்கு ராத்திரி வாங்கிக்கோங்க" என்று ரகசியமாய் கூறிவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியே ஓடினாள்.

அவள் முத்தமிடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அது அவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அவனுக்கு தோன்றவில்லை. எதிர்பாராத பலவற்றை நடத்தி காட்டி, அர்ஜுனை கலகலக்க செய்வதில் கை தேர்ந்தவள் அல்லவா இந்து...? படுத்தபடியே, தன் கண்களை மூடினான் அர்ஜுன். ஆழமாய் மூச்சை இழுத்து, அந்த எதிர்பாராத முத்த உணர்வில் இருந்து வெளிவர முயன்றான்.  அது அவ்வளவு சுலபத்தில் முடிவதாய் தோன்றவில்லை அவனுக்கு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top