Part 37

பாகம் 37

மாஷா, சங்கர் இல்லத்தில் தான் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, கோபத்தில் கொந்தளித்தான் கிரி. அவர் சிறையிலிருந்து தப்பிய நாள் முதற்கொண்டே, அவர் அங்கு தான் இருக்க வேண்டும் என்று சந்தேகித்தான் கிரி. அதனால், சங்கர், ஹீனா மற்றும் சங்கர் இல்லத்தின் லேன்ட்லைன் ஃபோன்களை ட்ராக் செய்வது என்று தீர்மானித்தான். அவன் எதிர்பார்த்தது போலவே, லேண்ட்லைன் ஃபோனிலிருந்து பேசினார் மாஷா. அவனுக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், அவர் அங்கு இருப்பது சங்கருக்கும் ஹீனாவுக்கும் தெரியுமா என்பது தான். ஒரு வேளை, அவனுடைய கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி விட்டு, ஹீனா தன்னை நல்ல பெண்ணாக காட்டிக் கொண்டு அவளுடைய அம்மாவிற்கு உதவுகிறாளோ? இது பற்றி அர்ஜுனுடன் பேச வேண்டும்.

ஆனால், அன்று அலுவலகத்திற்கு வர மாட்டேன் என்று கூறி இருந்தான் அர்ஜுன். திடீரென்று அவன் ஃபோன் செய்து,  ஒரு சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும் என்று கூறினான். எதற்காக என்று அவன் கூறவில்லை. ஒருவேளை இந்துவிற்கு உடல்நிலை சரியில்லையா? இப்போது அவனைத் தொல்லை படுத்தத் தான் வேண்டுமா? ஆனால், மாஷாவை பற்றி அவனிடம் கூறவில்லை என்றாலும் அவன் கோபப்படுவான். இப்போது என்ன செய்வது? இந்த நேரம், அவன் இதய சிகிச்சை நிபுணரை சந்தித்துவிட்டிருக்க வேண்டும். அவன் வீட்டிற்கு செல்லட்டும். ஒருவேளை அர்ஜுனே கூட அவனை அழைக்கலாம். அப்படி அர்ஜுன் அழைத்தால், அனைத்தையும் சொல்லி விடுவது என்று முடிவு செய்தான் கிரி.

ஆனால், அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை, இப்பொழுது எதைப் பற்றியும் சிந்திக்கும் நிலையில் அர்ஜுன் இல்லை என்பது. தான் செய்யவேண்டிய முக்கியமான விஷயத்தை நினைத்துக் கொண்டு, வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
 

சீதாராணி இல்லம்

ஃபோனில் அர்ஜுன் கூறியதைக் கேட்டு, ஒன்றும் புரியாமல் முகம் சுளித்தார் வேலன். அதே முகபாவத்துடன் தன் கையில் இருந்த ஃபோனை உற்றுப் பார்த்தார் அவர்.

"நான் இப்போ காலிங்பெல்லை அடிக்க போறேன்... நீங்க கதவை திறக்காதீங்க" என்றான் அர்ஜுன்.

"கதவை திறக்க வேண்டாமா?" என்றார், அவன் கூறியதை அவர் சரியாக கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தில்.

"கதவை இந்து திறக்கட்டும்..." என்றான்.

"சரிங்க, தம்பி" என்றார் வேலன்.

"இந்து எங்க இருக்கா?"

"உங்க ரூம்ல தான், தம்பி"

"நீங்க எங்க இருக்கீங்க?"

"சமையலறையில..."

"தோட்டத்துக்கு போங்க..
அங்கேயே இருங்க... வராதீங்க..."

"சரிங்க, தம்பி"

அழைப்பை துண்டித்தான் அர்ஜுன். வேலன் தோட்டத்தை நோக்கி ஓட, அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினான் அர்ஜுன்.

மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் இந்து, வேலணை அழைத்தபடி, அழைப்புமணி தொடர்ச்சியாய் அடித்துக் கொண்டே இருந்ததால்.

"வேலன் அண்ணா, எங்க இருக்கீங்க?"

வேலனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அவளே சென்று கதவை திறந்தாள். அர்ஜுன் நிற்பதைப் பார்த்து புன்னகைத்தாள். மடிக்கணினியின் பையைக் கையில் பிடித்துக்கொண்டு, கோட்டை தோளில் போட்டுக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.

"நீங்களா...? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களா?" என்றாள்.

புன்முறுவல் தவழ்ந்த அவன் முகத்தை பார்த்து, அவள் வித்யாசமாய் உணர்ந்தாள். அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டு அவன் நின்றிருந்தது, அவளை ஏதோ செய்தது. அவள் எதிர்பாராத ஒன்று, அவன் வாயிலிருந்து வந்தது.

"இந்த புடவைல நீ ரொம்ப மெரச்சுடா இருக்க" என்றான்.

இந்துவின் கண்கள் விரிவடைய அந்த வார்த்தைகள் போதாதா? நேற்று வரை நீ சின்னப் பெண் என்று கூறிய அவன், இன்று திடீரென்று அப்படி கூற காரணம் என்ன? ஒருவேளை, அவன் கூறியது போல், புடவையில் அவள் பள்ளிக்கூட பிள்ளை போல் இருப்பதாக கிண்டல் செய்கிறானோ...?

அடுத்த நொடி, மேலும் அவளுக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம், அவள் இடையை சுற்றி வளைத்து, அவளை தன் பக்கம் இழுத்தான் அர்ஜுன்.

"நான் என்ன சொன்னேன்னு உனக்கு புரிஞ்சுதா?" என்றான் தன் மூச்சுக்காற்று அவள் காதில் உரசும் வண்ணம்.

தங்களை யாராவது பார்க்கிறார்களா என்று, இங்குமங்கும் பதற்றதுடன் பார்த்தாள் இந்து.

"நீ இந்த புடவையில ரொம்ப செக்ஸியா இருக்கே" என்றான்.

இந்துவின் கை, அனிச்சையாய் அவளுடைய புடவையை இழுத்து விட்டுக்கொண்டது. அது அர்ஜுனின் புன்னகையை மேலும் விரிவடைய செய்தது.

"எனக்கு காபி கொண்டு வர மாட்டியா?" என்றான், தன் மூக்கை அவள் கண்ணத்தில் உரசியபடி.

"ஆங்..." என்று, திணறியபடி அவன் கையில் இருந்து வெளியே வர அவள் நினைத்த போது, அதை அவளால் செய்ய இயலவில்லை. தன்னை சுற்றி வளைத்திருந்த அவனுடைய கரங்களை எடுக்க முயன்ற படி, அவனை பார்த்து மெல்ல கண் இமைத்தாள். அர்ஜுன் அவளை ஆளை மயக்கும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னங்க... "

"ம்ம்ம்?"

"நீங்க காபி கேட்டீங்க..."

"ம்ம்ம்"

"என்...னை... என்னை விடுங்க..."

"எனக்கு வேற சாய்ஸ் இல்லயா?"

"சாய்ஸா?"

"நீ, என் கூடவே இருக்கnணும்... எப்பவும்..."

"நான்... நான் சீக்கிரம் வரேன்..."

"நெஜமாத் தான் சொல்றியா?" என்றான் குழைவாக

"ம்ம்ம் "

"சரி, உன்னை நான் கொண்டு போய் கிச்சன்ல விடுறேன்..."

அவளுக்கு சமையலறைக்கு வழி தெரியாதா என்ன?

"கிச்சன்ல விடுறீங்களா?" என்றாள் குழப்பமாக.

அவளை அர்ஜுன் தன் கையில் அள்ளிக் கொண்ட பொழுது, அவள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது. சமையலறையை நோக்கி நடந்தான் அர்ஜுன். அர்ஜுனுடைய தலைகீழ் மாற்றத்தால், தனது இதயத்துடிப்பை கேட்டாள் இந்து.

அவளை சமையலறையில் மேடையின் மீது அமர வைத்துவிட்டு,

"நான் காபி போடுறேன்" என்றான்.

"நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க. நான் காபி போட்டு கொண்டு வரேன்" என்றாள் இந்து.

அவள் முகத்தை தன் கையில் ஏந்தி தன்னைக் நெற்றியால் அவள் நெற்றியைத் தொட்டு,

"சீக்கிரமா வா" என்று மன்றாடினான்.

அங்கிருந்து புன்னகை மாறாமல் சென்றான் அர்ஜுன். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை இந்துவிற்கு. அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மந்திரித்து விட்டவள் போல சமையலறை மேடையில் இருந்து கீழே இறங்கினாள். என்ன ஆகிவிட்டது அர்ஜுனுக்கு? நேற்று இரவு, அவளைத் தன் அருகில் நெருங்க விடாமல் இருக்க, அவர்களின் அறையில் இருந்து அவன் ஓடி போகவில்லையா? இப்பொழுது எதற்காக அவன் இப்படி விசித்திரமாய் நடந்து கொள்கிறான்...? அவனுடைய குழைவான குரலும்... அவளை தின்னும் பார்வையும்... காதல் ரசம் சொட்டும் நடத்தையும்... கடவுளே...! அவள் செக்ஸியாக வா இருக்கிறாள்? மென்று முழுங்கியபடி தன்னைத் தானே பார்த்துக்கொண்டாள் இந்து.

தயங்கித் தயங்கி, காபியுடன் மெல்லத் தங்கள் அறைக்குள் வந்தாள் இந்து. புன்னகையுடன் அதை அவள் கையில் இருந்து வாங்கி கொண்டான் அர்ஜுன். இரண்டடி பின்னால் நகர்ந்து, அவனுடைய கண்களை, அவள் மீது உச்சி முதல் பாதம் வரை ஓடவிட்டான், அவளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி. அவனுடைய நடவடிக்கைகள் அனைத்துமே புதிதாக இருந்தது. அவனுடைய கண்கள், நிறைய கதைகளை பேசின. அவனுடைய கண்கள், அவனுடைய உள்ள கிளர்சியை வெளிப்படுத்த எப்போதும் தவறியதில்லை. ஆனால், இப்பொழுது அவன் கண்கள் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டியது.

தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிகொண்டாள் இந்து. அலமாரிக்கு சென்று, எதையோ தேடுவது போல் பாசாங்கு செய்தாள். மெல்ல பின்னால் திரும்பி பார்த்தவளுக்கு, அர்ஜுன் அவளை தின்று விடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து சட்டென்று திரும்பிக் கொண்டாள்.

காப்பியைக் குடித்து முடித்து, டீப்பாயின் மீது கப்பை வைத்தான் அர்ஜுன். அங்கு வந்து, இந்து அதை எடுக்க முனைந்த பொழுது, அர்ஜுன் அவளை அழைத்தான்.

"இந்து..."

"ஆங்..."

"நீ தான் என் கண்ணைப் படிக்கிறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே..."

அவன் என்ன கூற போகிறானோ என்று எண்ணிய படி நின்றிருந்தாள்.

"இப்போ, நீ என் கண்ணுல என்ன பாக்குறேன்னு சொல்லு" என்று, தன் பார்வையை, மெல்ல மெல்ல அவள் தலையிலிருந்து பாதம் வரை இறக்கினான். தன்னுடைய ரத்த நாளங்களில் நடுக்கத்தை உணர்ந்தாள் இந்து. அவன் முகத்தை பார்க்க முடியாமல், தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிகொண்டாள்.

"என்னை பாரு" என்றான். அவன் கூறியது கட்டளையே என்றாலும், மென்மையாய் ஒலித்தது.

மூச்சை பிடித்துக் கொண்டு நின்றாள் இந்து.

"என் கண்கள்... இல்ல, இல்ல... பேசும் கண்களை பத்தி சொல்லு... இப்போ நீ அதுல என்ன பாக்குற?"

"நான்... அதுல... புதுசா..."

"புதுசா...?"

"புதுசா பாக்குறேன்..."

"அந்த புதுசுக்கு பேர் இல்லயா?"

"ரொ..."

"சரியா கேட்கல..."

"ரொமாண்டிக் லுக்..."

"வாவ்...  நீ என் கண்ணைப் படிக்கிறதுல உண்மையிலேயே எக்ஸ்பர்ட் தான்"

அசட்டு சிரிப்பு சிரித்தாள் இந்து.

"இன்னைக்கு நான் யாரைப் பார்த்தேன்னு உனக்கு தெரியுமா?"

"யாரு?"

"ஒரு பெஸ்ட் கார்டியாலஜிஸ்டை பார்த்தேன்."

"எதுக்கு?"

"முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்க..."

"எதைப் பத்தி?"

அவளருகில் வந்தான்.

"உன்னைத் தொடுறது பத்தி"

"தொ... டுறதா...?"

"அவர் என்ன சொன்னாருன்னு தெரியுமா?"

"என்ன?"

அவளை தன்னருகில் இழுத்து,

"நம்ம என்ன வேணா செய்யலாமாம்...  என்ன வேணாலும்னா..."  என்று நிறுத்திவிட்டு, அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தான், அவள் கழுத்தில் கோடு வரைந்தபடி.

அவனுடைய இந்த திடீர் நெருக்கத்தால் அவள் திணறித்தான் போனாள்.

"நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன்னு உனக்கு தெரியாது. நீ என்கிட்ட வரும் போதெல்லாம் என்னை கட்டுபடுத்த நான் படாதபாடு பட்டேன். இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? சந்தோஷத்துல உன் கன்னத்தை கடிக்கணும்னு தோணுது எனக்கு"

"க... கடிக்கப் போறீங்களா...?" என்றாள் திக்கியபடி.

"நம்ம ஃபஸ்ட் நைட்டை எப்ப வச்சுக்கலாம்?"

விழி விரிய அவனைப் பார்த்தாள் இந்து.

"இன்னைக்கு இராத்திரி ஓகேவா?"

"இன்னைக்கா...?"

"உன் முட்டைக் கண்ணை பாத்தா, உனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு எனக்கு தோணுது. அப்படின்னா நம்ம நாளைக்கு வச்சுக்கலாம்."

அதற்கு அவள் எந்த பதிலும் கூறவில்லை. அவளுடைய பதில் அவனுக்கு தேவையும் இல்லை.

"நாளைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட். ஓகே?" அவள் நெற்றியை தன் நெற்றியால் முட்டினான்.

"நீ இந்த ஸாரியில ரொம்ப ஹாடா இருக்க" என்று அவள் கழுத்தை தன் மூக்கால் உரசினான்...

காதல் ரசம் சொட்டும் இந்த அர்ஜுனை விட, கோபக்கார அர்ஜுனை சமாளித்து விடுவது சுலபம் போல தோன்றியது இந்துவுக்கு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top