Part 17
பாகம் 17
இந்துவின் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்தாள் ரம்யா.
"என்ன ஆச்சு, ஏன் சோகமா இருக்கீங்க?"
"அம்மாவும் வீணாவும் இங்க வந்திருக்காங்க"
"அவங்க வந்துட்டாங்களா?"
"வந்துட்டாங்க"
"நீங்க தானே அவங்கள வர சொன்னிங்க...? அப்படின்னா நீங்க சந்தோஷமா தானே இருக்கணும்?"
"ஏன்னே தெரியல, ஏதோ தப்பு நடக்க போற மாதிரி மனசு சங்கடமா இருக்கு"
"ஏன் உங்களை நீங்களே குழப்பிகிறீங்க? ரிலாக்ஸா இருங்க. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் செய்யறேன்"
"அவகளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கணும்"
"சமையல் ஆயிடுச்சு. நானும், வேலன் அண்ணனும் பரிமாறுறோம்"
"நானும் வரேன்"
சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு, இந்து உணவு மேஜைக்கு சென்றாள். தனது நடையின் வேகத்தை குறைத்து விட்டு, வேலனிடம் ரகசியம் உரைத்தாள் ரம்யா.
"அண்ணா, நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க மேல நீங்களும் ஒரு கண் வையுங்க"
"நான் பாத்துக்குறேன் மா"
"அவங்க நடவடிக்கையில, ஏதாவது உங்களுக்கு வித்தியாசமா பட்டா, என்கிட்ட சொல்லுங்க"
"சொல்றேன்மா"
இந்துவை பின்தொடர்ந்து அவர்களும் உணவு மேசைக்கு வந்தார்கள். உணவை மேஜையின் மீது வைத்துவிட்டு, சற்று தூரத்தில் நின்று கொண்டாள் ரம்யா, அவர்கள் பேசுவது அவளுக்கு கேட்கும் வண்ணம்.
இந்து அவர்களுக்கு உணவைப் பரிமாறினாள்.
"நீ உண்மையிலேயே சந்தோஷமா தான் இருக்கியா?" என்றார் சாப்பிட்டுக்கொண்டே வித்யா.
"ஆமாம்மா. நான் சந்தோஷமா இருக்கேன்"
"நல்லதாப் போச்சு"
"நீங்களும் என் கூட இங்கேயே இருக்கலாம்மா"
ஒரு நிமிடம், வித்யாவின் புத்தி அதற்கு ஆசைப்பட்டது. வீணாவின் முகமோ சந்தோஷத்தில் ஒளிர்ந்தது. இங்கு தங்கினால், அர்ஜுனை வளைத்துப் போடும் வாய்ப்பு அவளுக்கு நிறைய கிடைக்கும் அல்லவா?அதை அவளால் செய்ய முடியாதா என்ன?
"இது என் மாப்பிள்ளை வீடு. இங்க தங்குறது அவ்வளவு சரியாக இருக்காது" -வித்யா.
"நீங்க மத்தவங்கள பத்தி எல்லாம் கவலைப் படவேண்டாம். நான் கேட்டா அவர் நிச்சயமா ஒத்துக்குவார்"
அவள் அர்ஜுன் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை, அவர்களுடைய பொறாமைத் தீயில் எண்ணெயை ஊற்றியது.
"நீ பேசுறத பாத்தா, உங்க தாம்பத்திய வாழ்க்கை, ஆரம்பம் ஆயிடுச்சு போல இருக்கே... " போட்டு வாங்கினார் வித்யா.
அவள் இல்லை என்று வெட்கத்துடன் தலை அசைக்க, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வீணா. நல்லவேளை, அவர்கள் இன்னும் திருமண வாழ்க்கையை துவங்கவில்லை. இனியும் துவங்க வாய்ப்பில்லை. அவர்கள் தான் ஏற்கனவே அர்ஜுனுடைய எண்ணத்தில், தீயை வார்த்து விட்டார்களே.
"நம்ம வீட்டை விக்கறதை பத்தி அவர்கிட்ட நீ பேசினியா?"
"கவலைப்படாதீங்க மா. அவர் நிச்சயமா கையெழுத்து போடுவார்"
"ரொம்ப சந்தோஷம்"
"அப்படின்னா கையெழுத்து போட சொல்லி கேளு" என்றாள் வீணா.
"இப்பவே கேக்குறேன்"
"இப்ப வேண்டாம். நாங்க இப்ப தானே வந்திருக்கோம்... கொஞ்ச நேரம் எங்க கூட இரு. அப்புறமா போய் கேட்கலாம்"
சரி என்று தலையசைத்தாள் இந்து.
.....
வேலன் கடைக்கு சென்றிருந்ததால், அர்ஜுனுக்காக பழச்சாறு கொண்டு சென்ற ரம்யாவை வழி மறித்தாள் வீணா.
"அதை என்கிட்ட குடு"
அர்ஜுனை வளைத்துப் போடுவதில் முழுமூச்சாய் இருந்தாள் அவள்.
"இது அர்ஜுன் சாருக்கு. உங்களுக்கு கிச்சன்ல இருக்கு. அதை நீங்க எடுத்துக்கோங்க"
"இதை, நான் அவருக்கு கொடுக்கிறேன்"
"ஆனா..." என்று இழுத்தாள் ரம்யா.
"நீ இந்த வீட்டு வேலைக்காரி. நான் சொல்றத கேக்குறது தான் உன் வேலை" என்றாள் வீணா திமிராக.
பெண்களின் மீது அர்ஜுனுக்கு இருந்த வெறுப்பை பற்றி கூறி, அவளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று எண்ணினாள் ரம்யா. ஆனால், அவளுடைய தலைகணத்தை பார்த்த பின் அமைதியாய் அந்த பழச்சாறை அவளிடம் கொடுத்துவிட்டாள் அவள். கர்மாவினால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருத்தியை யார் தான் காப்பாற்றி விட முடியும்? சிங்கத்தின் குகைக்குள் சென்று, அதன் கர்ஜனையை, நன்றாய் வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும் என்று எண்ணினாள் ரம்யா.
தனது அறையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனுக்கு எதுவுமே சரியாக படவில்லை. எதைப் பார்த்தாலும் அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தவன், வீணா உள்ளே நுழைவதை பார்த்து, முகம் சுளித்தான்.
"இது தான் உங்க ரூமா?" என்றாள் சகஜமாக.
அமைதியாய் இருந்தான் அர்ஜுன்.
"உங்களை மாதிரியே ரொம்ப அழகா இருக்கு" வழிந்தாள் அவள்.
அர்ஜுனுடைய முகம் திடமாய் மாறியது.
"நீ எதுக்கு இங்க வந்த?" என்றான்.
அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் பழச்சாறை அவன் முன் நீட்டினாள்.
"யார் உன்னை எடுத்துக்கிட்டு வரச் சொன்னது?"
டீப்பாயின் மீது அந்த பழச்சாற்றை வைத்துவிட்டு,
"யாரும் சொல்லல. நான் தான் உங்களை பார்க்க வந்தேன். ஐ அம் வீணா" என்று தன் கையை அவனை நோக்கி நீட்டினாள்.
கையை கட்டிக் கொண்டு, அவனுடைய இடது புருவத்தை உயர்த்தி,
"அதனால?" என்பது போல் பார்த்தான் அர்ஜுன். தன் கையை கீழே இறக்கி கொண்டாள் அவள்.
"முதன் முதலா உங்களை பார்த்தப்பவே நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். நீங்க இந்துவை கல்யாணம் பண்ணப்போ, என்னுடைய இதயமே உடைஞ்சு போச்சு. அவளை விட அழகாகவும், கிளாமராவும் இருக்கிற என்னை விட்டுட்டு, நீங்க ஏன் அவள கல்யாணம் பண்ணிங்கன்னு எனக்கு புரியவேயில்ல." அவள் வெட்கமே இல்லாமல் கூறியதை கேட்டு , தன் புருவத்தை சுருக்கினான் அர்ஜுன்.
"உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்கு தூக்கமே வரல தெரியுமா?"
அவன் அருகில் வந்து, அவனை தொட அவள் முயன்ற பொழுது, சோபாவை விட்டு எழுந்து நின்றான் அர்ஜுன்.
"அவுட்" என்ற வார்த்தையை கேட்டாள் வீணா.
"என்ன?"
"கெட் அவுவுட்ட்ட்ட்..." என்று கர்ஜித்தான்.
அதை கேட்டு திடுக்கிட்டு,
"நீங்க இந்துவை பத்தி கவலைப்பட வேண்டாம்..." என்றாள்.
அவள் கழுத்தைப் பிடித்து தள்ளினான் அர்ஜுன்.
"இன்னொரு தடவை என்னோட ரூமுக்குள்ள காலை வச்சா, உன்னை சாவடிச்சிடுவேன்"
"நான் சொல்றத கேளுங்க"
அவள் பழச்சாறை வைத்திருந்த டீபாயை கோபத்துடன் எட்டி உதைத்தான். அந்த பழச்சாறு டம்ளர், கீழே விழுந்து நொறுங்கியது. பேயரைந்ததை போல் ஆனாள் வீணா.
"வெளியே போ..." சீறினான்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறையைவிட்டு வெளியே ஓடிவந்தாள் வீணா. வரவேற்பறைக்கு வந்து, மூச்சு வாங்கி நின்றாள். அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. அவன் என்ன பைத்தியமா? அவளிடம் இப்படி நடந்து கொண்ட முதல் ஆண் அவன் தான். எதைப் பார்த்து இந்துவிடம் அவன் காதலில் விழுந்தான் என்று அவளுக்கு புரியவில்லை. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அனைத்தும் சீக்கிரமே முடிவுக்கு வரப்போகிறது. தன்னை அவமானப்படுத்தியதற்கு அவன் கூடிய சீக்கிரமே அனுபவிக்க போகிறான்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளிடம் வந்தாள் ரம்யா.
"தண்ணி வேணுமா?" என்றாள்.
அவளைப் பார்த்து முறைத்தாள் வீணா.
"ஓ... உங்களுக்கு ஜூஸ் வேணுமா?"
அர்ஜுனுடைய காட்டு கத்தலை கேட்டு, இந்துவும் அங்கு ஓடிவந்தாள்.
"எதுக்காக அவர் அப்படி கத்தினாரு?"
"என்ன ஆச்சுன்னா..." என்று ரம்யா ஆரம்பிக்க,
"அவருக்கு ஆரஞ்சு ஜூஸ் பிடிக்கலன்னு அப்படி கத்தினார்" என்றாள் வீணா.
"இல்லயே... அர்ஜுன் சாருக்கு ஆரஞ்சு ஜூஸ் ரொம்ப பிடிக்குமே" என்றாள் ரம்யா.
"ஏதோ கோபமா இருக்காரு போல" என்றாள் வீணா.
"கோவமா இருக்காரா...? நான் போய் பாக்குறேன்" என்றாள் இந்து.
"போகாதே இந்து. அவர் உன்னை அடிச்சிட போறாரு" வீணா
"அவர் பொண்ணுங்கள அடிக்க மாட்டாரு" என்றாள் இந்து நம்பிக்கையுடன்.
"அப்படியா?"
"அவரு ஏன் கோபமா இருக்காருன்னு நான் கேட்கிறேன்"
"சொன்னா கேளு, இந்து. இப்ப நீ அங்கே போகாதே. வா என் கூட" என்று அவளை தன்னுடன் இழுத்து சென்றாள் வீணா.
......
கிரிக்கு ஃபோன் செய்தாள் ரம்யா.
"சொல்லு, ரம்யா"
"விஷப்பாம்புங்க இங்க வந்திருக்கு"
"என்னது... பாம்பா?"
"இந்துவுடைய அம்மாவையும், தங்கையையும் தான் சொல்றேன்"
"அவங்க வந்துட்டாங்களா?"
"ஆமாம். வந்ததும், வராததுமா, அந்த வீணாப்போன வீணா, அர்ஜுனை மயக்க முயற்சி பண்றா."
"பாவம் அவ" என்று விழுந்து விழுந்து சிரித்தான் கிரி.
"நான் ஒன்னும் ஜோக் சொல்லல..."
"அது ஜோக் தான். இந்த உலகத்தில இருக்கிற எந்த பொம்பளையாலயும் அர்ஜுனை வளைச்சு போடவே முடியாது. அதுவும் இந்து அவனோட வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல" என்று மீண்டும் சிரித்தான்.
"அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா கோவிலுக்கு போனாங்க தெரியுமா? இந்த பொம்பளைங்க வந்ததுக்கு அப்புறம் அவங்க முகமே வாடி போச்சு" என்றாள் சோகமாக.
"சொல்றத கவனமா கேளு. அவங்கள பத்தி எதையும் அர்ஜுன்கிட்ட சொல்லாத"
"ஆனா ஏன்? நான் எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லணும்னு தானே சொன்னாரு?"
"அவன் இந்துவை பத்தி மட்டும் தான் கேட்டான்"
"ஏன் அவங்கள பத்தி சொல்ல கூடாது?"
"இந்த விஷயத்தில இந்து எப்படி நடந்துகுறாங்கன்னு நம்ம பார்க்கணும். அவங்க எப்படி இந்த விஷயத்தை ஹேண்டில் பண்றாங்கன்னு நமக்கு தெரிஞ்சாகணும்"
அவன் கூறியது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவர்களை பற்றி அர்ஜுனிடம் கூறினால், அவன் அவர்களை வீட்டைவிட்டு தூக்கி எறிந்து விட மாட்டானா? ஏன் எதையும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறான் கிரி?
"இந்து வறாங்க. நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள் ரம்யா வெறுப்புடன்.
பின் மாலை நேரம்
வேலன் காபி போடுவதை பார்த்த வீணா,
"இந்த காபி யாருக்கு?" என்றாள்.
"அர்ஜுன் தம்பிக்கு"
"இந்த நேரத்துலயா?"
"அவர் கேட்டார்..."
"தலைவலியா இருக்கு. கொஞ்சம் தைலம் தரீங்களா?"
"அது ஹால்ல, டேபில்ல இருக்கு"
"கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து வரவேற்பறைக்கு சென்றார் வேலன். தான் தயாராக வைத்திருந்த தூக்க மாத்திரை பொடியை அந்த காபியில் கலந்தாள் வீணா. வேலன் வரும் போது, தண்ணீர் குடிப்பது போல் பாசாங்கு செய்தாள். அவளிடம் தைலத்தை கொடுத்தார் வேலன்.
"தேங்க்ஸ்" என்று கூறி விட்டு சமையல் அறையை விட்டு சென்றாள்.
அவர்களுடைய திட்டத்தின் முக்கியமான பாகம், வேலனால் நிறைவேற்றப்பட போகிறது. காபி குவளையுடன், அர்ஜுனின் அறைக்கு வேலன் செல்வதை பார்த்தாள் வீணா. நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் அவள். இன்னும் சிறிது நேரத்தில், அர்ஜுன் உறங்கி விடுவான். அதற்கு முன், அவர்களுடைய திட்டத்தின் மீதியை அவள் செயல்படுத்தியாக வேண்டும். அவள் விருந்தினர் அறையை நோக்கி ஓடினாள்.
அங்கு, இந்து வித்யாவுடன் இருந்தாள். வித்யாவும், வீணாவும் வந்த பிறகு, அர்ஜுனுடைய அறையின் கதவு சாத்தப்படடே இருந்ததை கவனித்தாள் இந்து. அவன் மதிய உணவிற்கு கூட வெளியே வரவில்லை. அவளாலும் அவனை சென்று பார்க்க முடியவில்லை. வித்யாவும், வீணாவும், தங்களுடனே அவள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள் இந்து. அப்பொழுது அங்கு வீணா வந்து, வீட்டு பத்திரத்தை அவளிடம் கொடுத்தாள்.
"நீ இப்போ அவர் கிட்ட கையெழுத்து வாங்கினா சரியா இருக்கும்" என்றாள்.
அர்ஜுனை எப்படி பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த இந்து, உடனடியாக ஒப்புக் கொண்டாள்.
"நான் உனக்காக காத்திருப்பேன். ரொம்ப நேரம் எடுத்துக்காத. அவர் கையெழுத்து போட்ட உடனே, வெளிய வந்துடு" வீணா.
சரி என்று தலையசைத்துவிட்டு அர்ஜுனின் அறையை நோக்கி சென்றாள் இந்து.
வீணாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. கையெழுத்துப் போட்ட சிறிது நேரத்திலேயே அர்ஜுன் உறங்கி விடுவான். ஒரு வேளை, இந்துவுடன் நெருக்கமாய் இருக்க அவன் நினைத்திருந்தால், அந்த சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்காது. நாளை முதல், இந்துவை தொட வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு தோன்றாது. ஏனென்றால், அவர்களுடைய திட்டத்தை மாஷா செயல்படுத்தி விடுவார். வீணாவை அவமான படுத்தியதற்கு இது தான் சரியான தண்டனை, என்று பூரித்தாள் வீணா.
காலியான காபி கப்புடன் வெளியில் வந்த வேலனை பார்த்து, சந்தோஷ பெருமூச்சுவிட்டாள் வீணா. அந்தக் காப்பியை குடித்து விட்டான் அர்ஜுன். அதே நேரம், அவன் அறைக்குள் நுழைந்தாள் இந்து. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் வீணா. இன்னும் சிறிது நேரத்தில், அவனிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டு வந்துவிடுவாள் இந்து.
தன் அறைக்கு வந்த இந்துவை ஆச்சரியமாய் பார்த்தான் அர்ஜுன். அவனுடைய அறைக்கு இந்து வந்திருக்கிறாளா? அவள் கையிலிருந்த பத்திரத்தை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்து போனது, ஏன் அவள் இங்கு வந்திருக்கிறாள் என்று. அப்படி என்றால், இது தான் அவளை பரிட்சித்து பார்க்க சரியான சந்தர்ப்பம். அடுத்த நொடி அவனுடைய இதழ்கள் ஒரு கேலி புன்னகையை உதிர்த்தன. கைகளை கட்டிக் கொண்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
"நீ இங்க வந்திருக்கிறதை பாத்தா ஆச்சரியமா இருக்கே..."
அவன் குரலில் இருந்த வித்தியாசம் எளிதில் உணரக் கூடியதாய் இருந்தது இந்துவுக்கு .
"உங்ககிட்ட இருந்து எனக்கு ஒன்னு வேணும்" என்று திக்கினாள்.
"அதானே பார்த்தேன்... ஏதாவது வேணும்னா தான் என்னோட ஞாபகம் உனக்கு வருது இல்ல..."
அவனுடைய அந்த வார்த்தைகள், முள்ளால் தைப்பது போல் இருந்தது இந்துவுக்கு. அவன் திடீரென்று ஏன் இப்படி எல்லாம் பேசுகிறான்?
"அம்மாவோடையும், வீணாவோடையும் இருந்தேன்"
"தெரியும்... சொல்லு, உனக்கு என்ன வேணும்?"
தன் கையிலிருந்த பத்திரத்தைக் காட்டி,
"இதுல நீங்க கையெழுத்துப் போடணும். அப்ப தான், எங்க வீட்டை அம்மாவால விற்க முடியும்... வீணாவுக்கு கல்யாணம் பண்ண முடியும்."
"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அர்ஜுனுடைய கையெழுத்து கடையில விக்கிற கத்திரிக்காய்னு நினைச்சியா? அவ்வளவு சுலபமா வாங்க...?" என்றான் கிண்டலாக.
என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து போனாள் இந்து. சமாளித்துக்கொண்டு,
"நான் அர்ஜுனோட கையெழுத்தை கேக்கல... என்னோட புருஷனோட கையெழுத்தை தான் கேட்டேன். அதை கேட்க எனக்கு உரிமை இருக்கு"
அவள் உரிமையைப் பற்றி பேசியதால், துளைக்கும் பார்வையுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
"ப்ளீஸ், கையெழுத்து போடுங்க. உங்க கையெழுத்து இல்லாம, அம்மாவால வீட்டை விற்க முடியாது. உங்களுக்கும் அது தெரியும்."
பத்திரத்தை அவனை நோக்கி நீட்டினாள்.
"உங்க அம்மா வீட்டை விப்பாங்க, உன் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கும். ஆனா, கையெழுத்து போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?"
இதை எதிர்பார்க்காத அவள் அதிர்ச்சி அடைந்தாள்.
"இது என்ன வியாபாரமா?"
"நிச்சயமா இல்ல. நீ உன்னுடைய உரிமையைப் பத்தி பேசின. அதே மாதிரி எனக்கும் உன்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு. நான் சொல்றது சரி தானே?"
"நீங்க என்கிட்ட என்ன வேணா கேட்கலாம்" என்றாள் பணிவாக.
"ரியலி?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"எனக்கு என்ன வேணும்னு உனக்கே தெரியும்" என்று அவன் கூறிய பொழுது அவன் கண்கள் அங்கிருந்த கட்டிலை பார்த்தன.
மென்று முழுங்கினாள் இந்து.
"நான் வேற என்ன கேட்கப் போறேன்? என் கூட தூங்கு... என்ன சொல்ற?"
காலையில் அவளிடம் பேசிய அர்ஜுனுக்கு, நேர் எதிராய் இருந்த அவனை, புரியாமல் பார்த்தாள் இந்து. சந்தர்ப்பம் அவனை தேடி வந்த பொழுது, அவளை முத்தமிடாமல் சென்ற அவன், இப்பொழுது இப்படி பேசுவது ஏதோ ஒரு காரணத்தினால் என்று புரிந்தது அவளுக்கு. என்ன ஆனது அவனுக்கு? வித்யா, வீணாவின் வருகை அவனுக்கு ஒரு பதற்றத்தை அளித்திருக்கலாம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவனுடன் இருக்க வேண்டும்... தன் கணவனுடன் இருப்பதில் என்ன தவறு?
"சரி" என்றாள் திடமாக.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தான் அர்ஜுன். ஏனென்றால், அவள் இவ்வளவு சுலபத்தில் சம்மதிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை அவன். அதனால் மறுபடியும் கேட்டான்.
"எனக்கு சரியா கேட்கல"
"எனக்கு சம்மதம்"
அதைக் கேட்டு அவன் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.
"நான் உன்கிட்ட என்ன கேட்கிறேன்னு உனக்கு புரியுதா?"
புரிகிறது என்று தலை குனிந்தபடி தலையசைத்தாள்.
"நெஜமா தான் சொல்றியா?"
"ஆமாம்"
அவள் பதட்டமின்றி இருப்பதைப் பார்த்து பதட்டமானான் அர்ஜுன். அவளைக் சந்தேகிப்பது தவறோ...? அவளைப் படுக்கையில் கொள்ள வேண்டும் என்பது அவனுடைய நோக்கம் அல்ல. இது அவளுக்கு அவன் வைக்கும் சோதனை. அதில் அவள் தேர்ச்சி பெற்று விட்டாள் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று முழுவதும், அவள் அவன் வசம் இருக்கப் போவதை தவிர, வேறு எதுவும் நினைக்கத் தோன்றவில்லை அவனுக்கு.
அவளிடமிருந்து பத்திரத்தை வாங்கி, அதில் கையெழுத்திட்டான். அதை செய்யும் பொழுது, அவளுடைய முகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை... பத்திரத்தை பார்க்கக்கூட இல்லை அவன்...!
பெருமூச்சு விட்டு, அவன் கையில் இருந்து அதை பெற அவள் முயன்ற பொழுது, தன் கையை பின்னால் இழுத்தான் அர்ஜுன்.
"உன்னோட டாக்குமெண்ட் ரெடி. நான் கேட்டது எனக்கு கிடைச்ச பிறகு தான் நான் அதை உனக்கு கொடுப்பேன்"
அவனுடைய மடிக்கணினிக்கு அடியில் அந்த பத்திரத்தை வைத்தான் அர்ஜுன். இந்துவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது, அர்ஜுன் அவள் அருகில் வந்த பொழுது...! அவளுடைய பார்வை, தரையில் ஒட்டி நின்றது. ஆர்வம் ததும்பும் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள் இந்து. அவளைத் தன் கையில் அள்ளிக்கொண்டு, கட்டிலை நோக்கி நடந்தான் அர்ஜுன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top