ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 2)

❤️ஆஷிக் 😍லவ்ஸ்😍அஸ்மி❤️:
Episode 2:
                      அஸ்மி போன எடுக்கறா....
அஸ்மி: ஹல்லோ.... உங்களுக்கு இப்ப என்ன வேணும்?  கால் பண்ணலனு சொல்றன்.... விட வேண்டிதான.... ஏதாவது ஒரு நம்பர்க்கு கால் பண்ண வேண்டியது.... அப்றம் இத மாதிரி பேசி சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ண வேண்டியது....
உங்கள மாறி ஆளூக்கலாம் வேற வேலயே இல்லயா? அதுக்கு நான் ஆள் இல்ல... இனிமேல் கால் பண்ணா அவ்ளதான்......

ஆஷிக் போன ஸபீக்கர்ல போட்டுருந்தான்....

மன்சூர் பக்கத்துல தான் இருந்தான்.....டக்குனு போன புடுங்கினான்.....

மன்சூர் : ஹலோ... நீ என்ன பேரழகியா? உனக்கு எல்லாரும் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவாங்களாமா?
ரொம்ப திமிரா பேசற?

அஸ்மி: ஹலோ...  யார் நீங்க?

மன்சூர் : நா அவன் ப்ரெண்ட் ...... எனக்கு தான் மிஸ்ட் கால்ல இருந்தது.... இது உன் நம்பர் தான.... 97...........***நல்லா பாரு .... 987....... *****இது என்னோட நம்பர்.... போய்... டயல்ட் கால்ல பாரு....தெரியும்.....

அவன் என்னோட நம்பர்னு சொல்லாம அவனோட செல் ல பண்ணதால கன்ப்யூஷன்..... அத சொல்ல தான் அகையின் கால் பண்ணான்.....

அவன் பேசறத கேக்காம நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க.... போ... போய் செக் பண்ணி பாருனு சொல்லிட்டு போன கட் பண்ணிடறான்....

பர்ஸ்ட் டயல்ட் கால பாக்கறா..... அப்ப தான் ஞாபகம் வருது.... அட ஷாஜி கால் பண்ணாலே...
ஒரு வேல அவ லவ்வரா இருப்பானோ?

அவன் நம்பர்க்கு தான இவ கால் பண்ணா......

அஸ்மி: ஷாஜி ... இங்க வாடீ....  இது யார நம்பர்?

ஷாஜி: இது மன்சூர் நம்பர்... ஏன்டீ?

அஸ்மி: ஏன்டி என் மொபைலந்து கால் பண்ண? எனக்கு இதலாம் தேவயா?
அவன் நம்பர்க்கு நீ கால் பண்ண, அவனும் அதே நம்பர்லந்து பண்ணனும்.... அத விட்டுட்டு யார்ட்டவோ போன் வாங்கி பண்ணிட்டு ஓவரா பேசறான்...... இடியட்......

ஷாஜி: அத காதுலவே வாங்காம .... மன்சூரா பேசுனா? ஏய் போன் குடுடி நா பேசனும்.....

அஸ்மி : நீ என்ன லூசா? அவன் என்ன திட்டுனானு சொல்றன்.... நீ அவன்ட்ட பேசனுன்ற?

ஷாஜி: ப்ளீஸ் டீ.....அவனுக்கு என் மேல ஏதோ கோபம்.... என்னோட ப்ராப்ளம அப்றம் சொல்றன்....

அஸ்மி : சாரிடி..... நீ உன் போன்லந்தே பேசிக்க...
என்ன கம்பல் பண்ணாத.... விடு....

ஷாஜி: ஹோ... சரிடீ ... பரவால்ல....

அதுக்கப்புறம் ஏதும் பேசல.... ஷாஜி உள்ள பெயிட்டா.....

அஸ்மிக்கு பாவமா இருந்தது.....

அங்க,
ஆஷிக் : ச்ச... பாவம்டா அந்த பொண்ணு.... ஏன்டா இப்டீ பேசின?  நா உன்னோட நம்பர்லந்து போன் பண்ணிருந்தா அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்....  என்னால தான?

மன்சூர் : விடுடா.... இவளுங்கலாம் இப்டி தான்...
இந்த ஷாஜி இருக்காளே ........
அப்டினு ஆரம்பிச்சுட்டு ஸ்டாப் பண்ணிட்டான்...

ஆஷிக்: என்ன சண்டையா?? உங்களுக்கு வேற வேல இல்ல .... சும்மா சொல்லு....

மன்சூர் : ஒண்ணமில்லடா....

ஆஷிக்: சரி சொல்லாத உன் இஷ்டம்......
நா அந்த பொண்ணுட்ட பேச போறன்..... சாரி சொல்ல போறன்......

மன்சூர் : வேணாம்டா.... ஏற்கனவே வாங்கனது பத்தலயா.......

ஆஷிக் அவ நம்பர்க்கு டயல் பன்றான்.....

அஸ்மி கோவத்தோட உக்காந்துட்டு இருக்கா.... கால் வந்தோன செல்ல பாக்குறா....

மன்சூரோட ப்ரெண்ட் நம்பர்லந்து வந்திருந்தது ....
எடுக்கலாமா? வேணாமா ? யோசிச்சிட்டே கால் அட்டண்ட் பன்றாள்.....

நாளை சந்திப்போம்.........:

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #vimalasanju