ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 15)
❤ஆஷிக் 😍லவ்ஸ்😍அஸ்மி❤:
Episode 15:
இரவு எட்டு முப்பது மணிக்கு அஸ்மி வீட்டுக்கு வந்தாள்...
பரக்கத்...
கதவ திறந்துட்டு....
என்ன புள்ள இம்புட்டு லேட்டா வர?
யாராவது பாத்தா .
என்ன சொல்லுவாக?
புள்ளய வேலைக்கு அனுப்பபிட்டு ..
இதுவோ உக்காந்து சாப்புடுதுவோனு சொல்ல மாட்டாங்க?
கொஞ்சம் சீக்ரமா வந்துருக்க வேண்டிதான புள்ள...
அத்தா இருந்தா கத்தி தீத்துருப்பாரு..
போ.. போய்.. ப்ரெஸ் ஆகிட்டு வந்து சாப்டு..
உனக்கு ரெஸ்டே இல்ல..
அஸ்மி: அம்மா... வேலைக்கு போற இடத்து அவங்க குடுக்கற வேலய எப்டீ தட்டி கழிக்க முடியும்?
நம்பள நம்பி தான பொறுப்ப குடுக்கறாங்க...
நீ ஏன் பயப்புடற? நா என்ன தனியாவா வந்த?
அய்யோ... உளறிட்டனே.
பரக்கத்: அப்றம்..
அஸ்மி: என் கூட பஸ்ல. டெய்லி வரவங்களாம் வந்தாங்க.. சோ.. பயம் இல்ல மா.....
ஓகே... நா போய் ப்ரெஸ் ஆயிட்டு வரேன்..
உள்ள போய் ஆஷிக் வீட்டுக்கு பெயிட்டானா .. மொபைல எடுத்து பாக்குறா.... அவன்கிட்டருந்து எந்த மெசேஜும் வல்ல.. ஆஷிக்கு மெசேஜ் அனுப்பறா..
அதுக்கும் ரிப்ளை இல்ல...
சரி போய் சாப்ட்டு வந்துடுவோன்னு ..
சாப்டோன வந்து பாக்குறா...
அப்பயும் ரிப்ளை இல்ல..
மழை வேற அதிகமா பெய்துச்சு.. இவன் என்ன பண்ணானோ தெரியல...
சரி கால் பண்ணி தான் பாப்போமேனு பண்றா...
ஆஷிக்.. அட்டண்ட் பண்ணி அஷ்மி நா வெளில இருக்கன் ... அப்றம் வந்து பண்றன்னு கட் பண்ணிட்டான்....
என்னமோ தெரியல... அவசர அவசரமா கட் பண்றான்...
அதுக்குள்ள பரக்கத் அங்கு வர...
அஸ்மி மாமி போன் பண்ணாங்க.. கல்யாண வேலை லாம் ஆரம்பிக்கலயாம்....... இரண்டு நாள்ல நம்பள அங்க வர சொல்றாங்க. உன்ன லீவ் போட சொல்றாங்க..
கல்யாணம் முடியற வரை கொஞ்சம் உதவியா இருக்க சொல்றாங்க... சமீரும் பேசுனான்.. உன்ன விட்டு வர முடியாதுனு சொன்னோம்.
அவள லீவ் போட்டு வர சொல்லுனு சொன்னான்.
நீ என்ன சொல்ற?
அஸ்மி: மா..... நேத்து தான வந்துருக்கோம்.
தொடர்ச்சியா லீவ் போடறது கஷ்டம்.
நீங்க போங்க.. நா ஷாஜி வீட்லந்து போய்க்கறேன்.
நா வரல...
பரக்கத்: சரி மா .. நீ வந்தா மச்சி ரெண்டு பேருக்கும் உதவியா இருக்குமே..
சார் ட்ட கேட்டு பாரு.. கல்யாணம் முடிஞ்ச உடனே கிளம்பி வந்துடுவோம்..
அஷ்மிக்கு முன்னாடி இருந்த குதூகலம் இப்பொ இல்ல.. அதனால அவ அங்க போக விரும்பல...
சரி னு சும்மா தலய ஆட்டி வைக்குறா..
பரக்கத்: சரி தூங்கு... நா போய் வேலைய பாக்குறேன்...
அஷ்மி: ம் ..
அவளுக்கு தூக்கமே வரல...புரண்டு புரண்டு படுத்து கிட்டு இருந்ததால்..
எலெவேன் ஒ கிளாக் .. மொபைல் ரிங் ஆகி கட் ஆனது .... தூங்காதலா எடுத்து பார்த்தால்...
சமீர் மெசஜ் அனுப்பியிருந்தான்...
ஹாய் டி... என்ன பண்ற?
நாளைக்கு மாமியும் , நீயும் வந்துடுங்க டி..
ஆன்லைன் ல இருந்தான் ...
அஷ்மி: சொல்லு மச்சான் ... சும்மா பேசிட்டு இருக்கோம்... அத்தா அம்மா வருவாங்க .. நா அப்ரம் வரேன்.. சென்டர் க்கு லீவு போட முடியாது... அதான் ..
சமீர்: ஹே... பரவால்ல ... அப்போ வேலைய விட்டுரு ..
அஷ்மி: ஹம்ம்ம் ...அப்ரம். வேலைய விட்டு உன் வூட்ல உக்கார சொல்றியா... உன் ஒய்ப் வந்த என்ன அடிச்சி தொரத்திடுவா..
சமீர்: வரப்ப பாத்துக்கலாம்.. டி.. அப்பா.. உம்முன்னு இருந்த எண்ண வாயடிக்குற ...
அஷ்மி: மச்சான் ... நா எப்போயும் வாயாடி தான் ... நீ பேசல ...அதான் நாணும் பேசல...
சமீர்: சரி டி.. வெயிட் பண்ணு இம்போர்ட்டண்ட் கால் பேசிட்டு வரேன்..
அஷ்மி: ஹ்ம்ம் .. சொல்லிட்டு பாக்குறா... ஆஷிக் மெசஜ் பண்ணிருந்தான்...மன்சூர் அன்னிக்கு பேபி பொறந்துருக்கு... அத பாத்துட்டு அப்டியே வீட்டுக்கு வந்தேன் இப்போதான்... என்ன தூங்கலையா ஆன்லைன் ல இருக்க?
அஷ்மி: ஓ ...வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லு ... நீ பத்திரமா போய்ட்டேல ...
ஆஷிக்: ம் ... வந்துடேன்..
நாளைக்கு ஒர்க் உண்டுல தூங்காம ஆன்லைன் ல இருக்க?
அஷ்மி: இல்ல சமீர் பேசிட்டு இருந்தாரு ...
அவென்டேந்து ரிப்லயே வரல..
அப்ரம் இவளே அனுப்பறா ...
ரொம்ப தங்க்ஸ் ஆஷிக் நீ , மன்சூர் அண்ணா, பெமினா சித்தி இவங்கல்லாம் இல்லனா ணா எப்டி வீடு வந்த சேந்தூர்ப்பேன் ...
இந்த உதவிய மறக்க மாட்டேன்...
ஆஷிக்: ம்ம்ம் .. பரவால்ல ..
சரி போய் தூங்கு ... பாய்.
அஷ்மி தூங்கலானு போறப்ப சமீர் குட் நைட் டி..னு மெசஜ் அனுப்பறான் ..
இவளோ நேரம் யார்ட்ட பேசின்ட்ருந்த .... மச்சான் ...
சமீர்: அதுவா டி.. என்னொட வருங்கால ஒய்ப்ட்ட ... உங்கிட்ட சொல்ல என்ன இருக்கு...
தன் லவ் ஸ்டோரி ய சொல்லறான் ...
அவன் கூட பயணத்துல இருக்கிற பிரெண்டோட தங்கச்சியாம் ... வீட்ல யாருக்கும் தெரியாதாம்... அவன் பிரண்ட்க்கு தெரியுமாம்...
தங்கச்சிங்க கடன் லாம் முடிஞ்சுபோன வீட்ல சொல்லி நிக்காஹ் பன்னலாமுன்னு இருக்கேன்...
இப்போதைக்கு யார்ட்டயும் சொலிடாத அஷ்மி..
அஷ்மி: சரி மச்சான் ...சொல்ல மாட்டேன் ... நீ தூங்கு ..
அவளுக்கு கொஞ்சம் அழுகை...ஆத்திரம்... வருத்தம் ... ஏமாற்றம்... எல்லாமே இருந்துச்சி..
ஏன்னா ...சின்ன வயசுலேந்து பேசப்பட்ட ஒரு விசயம் இது ... முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டது நல்லது தான் ... பெரியவங்களுக்கு இது ஏமாற்றமா இருக்கும்..
கடவுள் நமக்குன்னு எதை தரணுமோ அத தருவார்... இது எனக்கு கவலையான விசயம் தான் ..
இருந்தாலும் அவண் மனசுல வேற ஓரு பொண்ணு இருக்கறப்போ நா அவனை நெனைக்க கூடாது... இது தப்பு...
தனக்கு தானே ஆறுதல் சொல்லி தூங்க பாக்குறாள் ... பட் தூக்கம் வல்ல ...
யார்கிட்டயாவது ஷேர் பண்ணணும்னு நெனச்சா ...
ஷாஜி தான் தன்னோட சுக துக்க தோழி...இத அவள்ட சொல்ல முடியாது ...
யோசிச்சுகிட்டே படுத்திருந்தா ...
திடிர்னு.. செல எடுத்து ஆஷிக்கு எல்லாத்தையும் மெசஜ் பண்ரா.
பண்ணிட்டு ... எண் மனசு இப்பொ பிரியா இருக்கு...
எல்லாத்தையும் புலம்பிட்டேன்... குட் நைட் னு அனுப்பிட்டு தூங்கிடறாள் ..
to be continued .........
#§âßï#
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top