7 காத்திருந்த முதலிரவு

7 காத்திருந்த முதலிரவு

திரைசீலைக்கு பின்னால் அவள் அப்படி ஒளிந்து கொண்டிருந்ததை பார்த்து, கையை கட்டிக்கொண்டு புன்னகையுடன் நின்றான் ஆதித்யா. தன் கண்ணை மெல்ல திறந்து பார்த்த கமலி, ஆதித்யா தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து, *அட்டேன்ஷன்* போசில் நின்றாள்.

"அங்க என்ன செய்யற? வெளியே வா" என்றான்.

மாட்டேன் என்று தலையசைதாள்.

"ராத்திரி ஃபுல்லா அங்கேயே நிக்க போறியா?" என்று அவன் கேட்டவுடன் அழ தொடங்கினாள்.

"ஏன் அழற? மொதல்ல வெளியே வா"

"நான் வரமாட்டேன்"

"ஏன்?"

"நீங்க என்னை *பேட் டச்* பண்ணுவீங்க"

"என்னனனது????" என்று முகம் சுருக்கினான்.

"பேட் டச்"

"நான் ஏன் உன்னை பேட் டச் பண்ணணும்?"

"ஏன்னா, நீங்க என்னோட புருஷன்"

"ஓ... புருஷன்னா பேட் டச் பண்ணுவாங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"உன் அளவுக்கு எனக்கு எனக்கு விவரம் பத்தாது. எனக்கு பேட் டச் பதியெல்லாம் எதுவும் தெரியாது" என்றான் சிரிப்பை அடக்கியபடி.

"உங்க டீச்சர் இதெல்லாம் உங்களுக்கு சொல்லி தரலயா?"

"நான் நர்சரி படிப்பை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டேன். அதனால அதை பத்தி கத்துக்குற அறிய வாய்ப்பு எனக்கு கிடைக்கல" என்றான் சோகமாக.

"ஓ..."

"நான் உன்னை பேட் டச் பணமாட்டேன். வா வெளியே "

"நிஜமா என்னை பேட் டச் பண்ணமாட்டிங்களா?" என்றாள் நம்பிக்கை இல்லாமல்.

"மாட்டேன்" என்றான்.

"கடவுள் சாத்தியமா?"

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல"

"என்னது...? கடவுள் நம்பிக்கை இல்லாம எப்படி இருக்க முடியும்?"

"நான் அப்படி தான்"

"அப்போ நீங்க எப்படி நல்லவரா இருக்க முடியும்?"

"அப்படின்னா?"

"நீங்க செய்யறதை கடவுள் பாக்குறாருன்னு தெரிஞ்சா தானே நீங்க தப்பு செய்யாம இருப்பிங்க?"

"நான் எனக்கு உண்மையா தான் இருப்பேன். உன்னோட கடவுள் என்னை பாத்தாலும், பாக்கலானாலும், நான் தப்பு பண்ண மாட்டேன்"

நம்ப முடியாமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள் கமலி.

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லங்குறதுக்காக, நீ என்னை பேயை பாக்குற மாதிரி பக்கதே" என்று சிரித்தான்.

"தாயே மகமாயி... என்னை யாரு கூட சேத்துவச்சிட்டீங்க...?" என்று முணுமுணுத்தாள்.

"நம்ம ரெண்டு பேரையும் சேத்து வச்சி உன்னோட மகமாயி தப்பு பன்னிட்டாங்கனு சொல்றியா?" என்றான் கிண்டலாக.

"மகமாயி தப்பு பண்ண மாட்டாங்க. அவங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்"

"குட். நான் உன்னை தொட மாட்டேன். நீ என்னை நம்பலாம். வெளியே வா"

தயக்கத்துடன் மெல்ல வெளியே வந்தாள்.

"ஒரு நிமிஷம்..." என்று அவள் கூற,

நின்று அவளை ஏறிட்டான். குனிந்து அவன் காலை தொட்டாள் கமலி. ஓரடி பின்னால் எகிறி குதிதான் ஆதித்யா.

"வாட் த ஹெல்.... என்ன பண்ற, டேமிட்?"

"என் பேரு டேமிட் இல்ல"

"தெரியும்... கமலி டேமிட்"

"கமலி டேமிட் இல்ல... கமலி மட்டும் தான்."

"அம்மா தாயே, கமலி... இப்போ நீ என்னம்மா பண்ண?"

"நான் உங்களுக்கு மரியாதை தரணும்னு அம்மா சொன்னாங்க. அதனால உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குனேன்"

"நீ அதெல்லாம் செய்ய வேண்டாம்"

"ஆனா, அம்மா சொன்னாங்களே..."

"எனக்கு மரியாதை தார சொன்னாங்க தானே?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அப்படினா நான் சொல்றதை நீ கேக்கணும் தானே?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அப்படினா இதெல்லாம் நீ செய்யாத. ஓகே?"

சரி என்று தலையசைதாள்.

"நான் இந்த ரூம்ல தூங்கலாம் தானே?"

"பின்ன? உங்களை வெளியே அனுப்பிட்டா அம்மா திட்டுவாங்களே..."

"தப்பிச்சேன்..."

"நான் தரையில படுத்துக்குறேன்"

"தரையிலயா?"

"ஆமாம். உங்க கூட எப்படி நான் கட்டில்ல தூங்குறது?"

"அப்போ, நீ கட்டில்ல தூங்கு. நான் சோபாவுல தூங்குறேன்"

"உங்களுக்கு முதுகு வலிக்காதா?"

"இல்ல. எனக்கு அது பழக்கம் தான்" என்று பொய் கூறினான்.

"அப்படியா? அப்போ சரி" என்ற அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

"போய், இந்த பட்டு புடவையை மாத்திக்கோ."

சரி என்று கூறிவிட்டு குளியலறைக்கு சென்றாள் கமலி. அவள் வெளியே வருவதற்கு முன், தன் உடையை மாற்றிக்கொண்டு, சோபாவில் படுத்துக்கொண்டான் ஆதித்யா. கமலி கட்டிலில் வந்து படுக்கும் வரை காத்திருந்தான்.

"நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?" என்றான்.

"என்ன?"

"குட் டச், பேட் டச்ன்னா என்னன்னு, எனக்கு கொஞ்சம் சொல்லேன்." என்றான் சீரியசாக.

அதை வேண்டுமென்றே கேட்டான். அந்த விஷயத்தில் அவளுடைய சரியான நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான் அவன்.

"எனக்கு அதை யாருமே சொல்லி கொடுக்கல. நீ சொல்லி தாயேன்"

கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் கமலி.

"உங்களுக்கு தெரியாதா?" என்றாள் சோகமாக.

தெரியாது என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு தலையசைத்தான்.

"குட் டச்ன்னா, அவங்க தொடும் போது நமக்கு தப்பா தோணாது. சந்தோஷமா, பாதுகாப்பா இருக்கும். நம்ம அம்மா, அப்பா, ஃபிரன்ட் கூட இருக்குறா மாதிரி"

"ஓ... கிரேட்... அதுக்கு ஏதாவது உதாரணம் சொல்லேன்"

"கை குலுக்குறது... முதுகை தட்டி கொடுக்குறது... மனசுக்கு நெருக்கமா இருக்குறவங்க நெத்தியில முத்தம் கொடுக்குறது... ஆசையா கட்டி பிடிக்குறது"

"ஓ... இதெல்லாம் செய்யும் போது நீ பேடா எடுத்துக்க மாட்டியா?"

"மனசுக்கு நெருக்கமானவங்க மட்டும் தான்" என்றாள் அழுத்தமாக.

"ரொம்ப விவரம் தான்" என்று மூணுமுணுத்தான்.

"என்ன சொன்னிங்க?"

"ஒன்னும் இல்ல... இப்போ பேட் டச் பத்தி சொல்லு"

"அப்படி தொடும் போது சுத்தமா பிடிக்காது. பயமாவும், பாதடமாவும் இருக்கும்"

"இதுல மட்டும் ரொம்ப தெளிவா இருக்கா... இந்த பாடத்தை இவளுக்கு சொல்லி கொடுத்தவன் மட்டும் என் கையில கெடச்சான்... செத்தான்" என்று மனதில் எண்ணினான்.

"இன்னும் ஒரு முக்கியமான விஷயம். நீங்க யாரோட வாயையும் பொத்த கூடாது" என்றாள் விழி விரிய.

"அதுவும் பேட் டச்சா?" என்றான் புருவத்தை உயர்தியபடி.

"பின்ன? நல்ல எண்ணத்தோட யாராவது வாயை பொத்துவாங்களா?"

"நீ ஒரு ஜீனியஸ்... யாருமே அதை நல்ல எண்ணத்தோட செய்ய மாட்டாங்க"

"நீங்க என்னை பேட் டச் பண்ணமாட்டிங்க இல்ல?" என்றாள் தயக்கத்துடன்.

"மாட்டேன். உன்னை பயப்படவும், பதட்டபடவும் வைக்க மாட்டேன்... என்னை தொடுறது தப்பில்லன்னு, நீ நினைக்குற வரைக்கும்...! நீ என்னை முதல்ல பேட் டச் பண்ற வரைக்கும்... உன்னை நான் தொட மாட்டேன்"

"நான் ஏன் உங்களை பேட் டச் பண்ண போறேன்?" என்றாள் கோவமாக.

"அப்போ நான் (அழுத்தமாய்) ஏன் உன்னை பேட் டச் பண்ண போறேன்?"

"நீங்க என் புருஷன்..."

"அதே மாதிரி, நீ என்னோட பொண்டாட்டி... நீயும் என்னை பேட் டச் பண்ண முடியும் தானே?"

"நான் ஒன்னும் உங்களை தொட மாட்டேன்" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"அதை நம்ம அப்பறம் பாக்கலாம். நியாபகத்துல வச்சிக்கோ... நீ என்னை பேட் டச் பண்ற வரைக்கும், நீ என்னோட கம்ஃபர்ட்டபிலா ஃபீல் பண்ற வரைக்கும், நான் உன்னை பேட் டச் பண்ண மாட்டேன்."

"இவரை நான் ஏன் தொடணும்?" என்று கூறியபடி படுத்துக் கொண்டு, போர்வையால் போர்த்திக் கொண்டாள்.

சிரித்தபடி கண்களை முடிகொண்டான் ஆதித்யா.

கமலிக்கு தூக்கம் வரவில்லை. ஆதித்யா அவளை தொட மாட்டான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அடிக்கடி திட்டுகிட்டு எழுந்து, ஆதித்யா உறங்குகிறனா என்பதை பார்த்தபடி இருந்தாள்.

அவன் சோபாவில் உறங்குவதை பார்த்து நிம்மதியடைந்தாள். அவள் நினைத்தது போல, ஆதித்யா அவ்வளவு ஒன்றும் மோசமானவன் இல்லை போலிருக்கிறது. இரண்டு மணிக்கு பிறகு, தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உறங்கி போனாள் கமலி.

மெல்ல கண் விழித்த ஆதித்யா, அவள் ஆழ்ந்து உறங்கிவிட்டாளா என்பதை தெரிந்துகொள்ள, கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுத்து அவள் மீது விசினான். அவளிடம் எந்த அசைவும் தென்படாமல் போகவே, எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்தான். குழந்தை தனத்தையும், வெகுளிதனத்தையும் கலக்கி கட்டிய பொட்டலம் இந்த பெண். அவனது விழிகளும், அதரங்களுடன் இணைந்து குறுநகை புரிந்தன. அந்த பெண்ணை எவ்வளவு பார்த்துக் கொண்டிருந்தாலும் போதாது என்று தோன்றியது அவனுக்கு. மென்மையாய் அவள் கன்னத்தை வருடிகொடுத்தான்.

"மிஸஸ் ஆதித்யா, என்ன மாதிரி பாடம் சொல்லி குடுத்த நீ எனக்கு...! குட் டச், பேட் டச். நல்ல வேளை, நீ இந்த ரூம்ல இருந்து ஓடி போகல, என்னையும் வெளியே தூரத்தல... அது வரைக்கும் பரவாயில்ல. நீ தரையில தூங்குனா, என்னால உன்னை தொட முடியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்க. எவ்வளவு குழந்தைதனம்...!" என்று சிரித்தான்.

"மூணு வருஷம்... டேமிட்... ஆனா, உன்னை ஜெயிக்க அவ்வளவு நாள் தேவைபடாதுன்னு எனக்கு தோணுது. உனக்கு தெரியுமா, ஒவ்வொரு நிமிஷமும் உன் மேல எனக்கு இருக்குற காதல் அதிகமாயிகிட்டே போகுதுன்னு...? ஐ லவ் யூ ஸோ மச், என் செல்ல பொண்டாட்டி"

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். முதலிரவில் முதல் முத்தம்.

ஆதித்யா கூறியது போல, கமலி அவனை முதலில் பேட் டச் செய்ய வாய்ப்பிருக்கிறதா? இப்போது கமலி இருக்கும் நிலையை பார்க்கும் போது, அது சற்றே மிகையாக தெரியலாம், ஆதித்யாவுக்கு இருப்பது அதீத நம்பிக்கையாக தோன்றலாம், ஆனால், வரும் காலத்தில் நடக்க இருப்பது என்ன என்று யாருக்கு தெரியும்? யாரும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம்... ஆதித்யா, கமலியை தனது அன்பால் கவர்ந்து விடலாம்... கமலி ஆதித்யாவை மனதார காதலிக்க துவங்கலாம்... அவனிடம் பாதுகாப்பாய் உணரலாம்... அவனுக்காக எதையும் செய்ய துணியலாம்... அவனைவிட எதுவும் பெரிதல்ல என்று அவளுக்கு தோன்றலாம்... ஒரு வேளை, இது அனைத்துமே கூட நடக்கலாம்... பார்ப்போமே, அவர்கள் வாழ்க்கை நமக்கு என்ன ஸ்வாரஸ்யதை தேக்கி வைத்திருக்கிறதென்று...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top