40 முதல் முத்தம்
40 முதல் முத்தம்
பின்னாலிருந்து ஆதித்யாவை கட்டியணைத்து அவனை திக்குமுக்காட செய்தாள் கமலி. ஒன்றும் புரியாமல் அவளை நோக்கி திரும்பிய ஆதித்யா, அவளை மருண்ட பார்வை பார்த்துக் கொண்டு நின்றான்.
"கமலி, என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?"
இல்லை என்று தலையசைத்தாள் கமலி. நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஆதித்யா.
"திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?"
அமைதியாக நின்றாள் கமலி.
"நீ என்னை தொடும் போது கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்ட போலருக்கு..." என்றான் கிண்டலாக.
இன்னும் அவள் தலை குனிந்தபடி தான் நின்றிருந்தாள். அவள் முகத்தை உயர்த்திய ஆதித்யா, அவள் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்து பதற்றம் அடைந்தான். அவள் கன்னங்களை கையில் ஏந்தி,
"கமலி.. எதுக்காக அழற? நீ என்கிட்ட கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணலைன்னா பரவாயில்லை..."
அவளது கன்னங்களில் இருந்து மெல்ல தன் கையை அவன் எடுத்த போது, அவனது கரங்களைப் பற்றி, மீண்டும் தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள் கமலி.
"நான் உங்ககிட்ட ரொம்ப கம்ஃபர்டபிலா ஃபீல் பண்றேன் ஆதிஜி... என்னோட அம்மா மடியில் படுத்திருக்குற மாதிரி..." என்று அவள் கூறிய போது, அவள் கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
அவள் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனான் ஆதித்யா.
அடுத்த நொடி, அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து, அவனுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தாள் கமலி. ஆதித்யாவுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும், அவனது கரங்கள் அனிச்சையாய் மேலே எழுந்து, அவளை சுற்றி வளைத்துக் கொண்டன, உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு வளையத்திற்குள் அவளை கொண்டு வந்து...
அப்பொழுது ஆதித்யாவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர, அதை அவன் எடுப்பதற்காக அவளது அணைப்பில் இருந்து வெளியே வர முனைந்த போது, அவனை மேலும் இறுக்கி அணைத்து அவனது ஆச்சரியத்தை மேலும் கூட்டினாள் கமலி. அந்த அழைப்பை ஏற்காமல் தவிர்த்து, தனது கைபேசியை சைலன்ட் மோடுக்கு மாற்றினான், அவளது அணைப்புக்குள் இருந்தவாறு. அந்த அழைப்பை ஏற்பதை விட, தனது *கைக்குள்* இருந்த விஷயத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இருந்தது அவனுக்கு.
"கமலி, என்கிட்ட நீ இவ்வளவு கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணும் போது எதுக்காக அழுத?"
"நான் இதை புரிஞ்சுக்க ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன் ஆதிஜி..."
அதைக்கேட்டு புன்னகைத்தான் ஆதித்யா.
"நான் எதிர்பார்த்ததை விட நீ ரொம்ப சீக்கிரமே புரிஞ்சுகிட்ட..."
"ஐ அம் சாரி, ஆதிஜி..."
"அப்படின்னா உனக்கு நெருக்கமானவங்க லிஸ்டில் நான் வந்துட்டேனா?" என்றான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி. அவள் நெற்றியில் அன்பாய் இதழ் பதித்தான்.
அவனை அணைத்திருந்த அணைப்பை தளர்த்தி,
"உங்களுக்கு நான் ஒன்னு கொடுக்கணும்னு நினைக்கிறேன் ஆதிஜி... "
"நீ தான் உன்னையே எனக்கு கொடுத்துட்டியே..." என்றான் புன்னகையுடன்.
"இல்லையே... நான் இன்னும் என்னை உங்களுக்கு கொடுக்கலையே..." என அவள் கூற, விக்கித்துப் போனான் ஆதித்யா.
உண்மையிலேயே அவன் புரிந்து கொண்ட *அதே* அர்த்தத்தில் தான் அவள் இதைக் கூறுகிறாளா?
"நான் என்னை உங்களுக்கு கொடுக்க நினைக்கிறேன்... முழுசா... மனைவியா..."
ஆதித்யாவுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது. ஆயிரக்கணக்கான மின்னல்கள் ஒரு சேர அவனது உடலுக்குள் இறங்குவது போல் தோன்றியது. அவனது முதுகெலும்பில் நடுக்கம் தோன்றியது. அவனது அவநம்பிக்கையை விழுங்க படாத பாடுபட்டான் அவன். கமலியா இதைக் கூறுவது? திடீரென்று அவளுக்கு என்ன ஆனது? நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால், அவள் தனது வாழ்க்கையின் இவ்வளவு பெரிய முடிவை நிச்சயம் எடுத்திருக்க மாட்டாள். அவள் உணர்ச்சி வசப்பட்டிருப்பது நன்றாக தெரிந்தது. தன்னை அமைதி படுத்திக் கொண்டான் ஆதித்யா.
"கமலி..."
"நான் நிஜமா தான் சொல்றேன்"
"கமலி, ரிலாக்ஸ்... எது உன்னை இந்த முடிவை எடுக்க வச்சிதுன்னு எனக்கு புரியல. ஆனா, நீ அவசரபடுற..." என்றான் அவள் தோளை தொட்டு.
"இல்ல... நான் அவசரபடல. சொல்ல போனா, நான் ரொம்ப லேட்டா இந்த முடிவை எடுத்திருக்கேன்..."
"கமலி, நான் சொல்றத கேளு..."
அவன் உதட்டில் அவள் விரலை வைத்து,
"நீங்க சொல்றதை நான் கேப்பேன்... ஆனா, இந்த தடவை, நான் சொல்றதை நீங்க கேளுங்க. ஏன்னா, நான் ரொம்ப தெளிவா இருக்கேன்."
அவள் கன்னங்களை தாங்கி,
"கமலி, நீ என்ன கேக்குறேன்னு உனக்கு புரியல... நீ நினைக்குற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்ல..."
"பரவாயில்ல..."
"*லவ் மேக்கிங்* னா என்னன்னு தெரியுமா உனக்கு?"
"தெரியுமே... நான் நிறைய சினிமாவுல பாத்திருக்கேன்..." என்றாள் வெள்ளந்தியாக.
"அந்த மாதிரி சினிமாவை எல்லாம் நீ பாத்திருக்க மாட்ட..."
"அப்படினா, நீங்க எனக்கு சொல்லி தாங்க..."
"எப்படி...? நீ எனக்கு குட்டச், பேட்டச் பத்தி சொல்லி குடுத்தியே... அந்த மாதிரியா?" என்றான் கிண்டலாய்.
கமலி முகத்தை சுளுக்கென்று வைத்துக்கொள்ள,
"க்ரேஸி கேர்ள்... இதை பத்தி நம்ம அப்பறம் பேசலாம்..." என்றான்.
"இல்ல... இப்பவே சொல்லுங்க..."
தன் கண்களை சுழற்றினான் ஆதித்யா சிரித்தபடி .
"எனக்கு அதை பத்தி தெரியும் ஆதிஜி. வேணும்னா நீங்க என்னை டெஸ்ட் பண்ணி பாருங்க..."
ஆச்சரியமாய் புருவத்தை உயர்தினான் ஆதித்யா. டெஸ்ட்டா? என்ன ஆகிவிட்டது இந்த பெண்ணுக்கு? எப்படி அவளை பரிட்சிப்பது? அவளை பரிட்சித்தால், அது அவனுக்கே அல்லவா வினையாக முடியும்...? அவள் அருகில் வரும் போது, தன்னை கட்டுப்படுத்திகொள்ள அவன் படும் பாடு அவனுக்கு தானே தெரியும்...! அவளை சங்கடபடுத்த கூடாது என்பது தான் அவனுக்கு முக்கியமாய் தோன்றியது. ஆனால், அவளே தயாராக இருக்கும் பொழுது அவன் ஏன் முயன்று பார்க்க கூடாது...? சில நொடி யோசித்தான் ஆதித்யா. ஒன்று மட்டும் நிச்சயம், இந்த நாள், அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைய போகிறது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஆதித்யா.
"ஆதிஜி என்னை டெஸ்ட் பண்ணுங்க" என்றாள் கமலி.
"நெஜமாத் தான் சொல்றியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"சரி... அப்படின்னா, என்னை கிஸ் பண்ணு"
அவள் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. *உன்னால் முடியாது* என்று அவன் கூற நினைத்த போது, மெல்ல அவன் கன்னத்தை நோக்கி நகர்ந்த கமலியை தடுத்து நிறுத்தினான் ஆதித்யா. அவனை கேள்விக்குறியுடன் பார்த்தாள் கமலி.
"நீ உன்னை *பெரிய பொண்ணா* தானே நிரூபிக்க நினைக்கிற?"
"ஆமாம்" என்றாள்.
"அப்படின்னா, பெரியவங்களை மாதிரி கிஸ் பண்ணு"
"அப்படின்னா?"
"லிப் கிஸ்"
அதைக் கேட்டு மென்று முழுங்கினாள் கமலி. அவளது பார்வை அனிச்சையாய் ஆதித்யாவின் இதழ்களை நோக்கி நகர்ந்தது.
தன் கைகளை கட்டிக் கொண்டு புன்னகையுடன் நின்றான் ஆதித்யா. ஒரு நொடி கண்ணை மூடினாள் கமலி. ஆழமாய் மூச்சை இழுத்து விட்டு கண்ணைத் திறந்தாள். அவள் தயாராகி விட்டது போல தெரிகிறது.
ஆதித்யாவின் முகத்தை தன் கையில் ஏந்தி, அவன் தன் இதழ்களில் ஏந்தியிருந்த புன்னகையை மறையச் செய்தாள் கமலி. அவனது இதயம் தாறுமாறாய் துடிக்கத் துவங்கியது. அது அவன் மனதில் ஒருவித பதற்றத்தை விளைவித்தது.
மலரின் மேல் பட்டாம்பூச்சி அமர்வது போல், தன் இதழ்களை அவன் இதழில் ஒற்றி எடுத்தாள் கமலி. அது ஆதித்யாவுக்கு தாங்க முடியாத கிளர்ச்சியை அளித்தது. அவன் மனதில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறந்தது. அவன் இது வரை கட்டிக் காத்து வைத்திருந்த *பொல்லாத ஆசைகள்* கட்டவிழ்த்து விடப்பட்டன. நிலைகுலைந்து போனான் ஆதித்யா.
அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள் கமலி, அவன் முகத்தை இன்னும் கைகளில் ஏந்தியபடி. மெல்ல கண் திறந்தான் ஆதித்யா.
"நான் பாஸ் ஆயிட்டேனா?"
இல்லை என்று மயக்க நிலையில் தலையசைத்தான் ஆதித்யா.
"ஏன்? "
"நான் சொன்னது இது இல்ல..."
"அப்படின்னா, எப்படி கிஸ் பண்றதுன்னு நீங்க எனக்கு சொல்லுங்க"
"நெஜமாத் தான் சொல்றியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள். அவ்வளவு தான்... ஏற்கனவே பொல்லாத எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருந்த ஆதித்யா, மொத்தமாய் தன் வசம் இழந்தான். எது எப்படி இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை இழக்க அவன் தயாராக இல்லை. ஆனால், தன்னுடைய சுய ரூபத்தை காட்டி கமலியை கதிகலங்கச் செய்து விடக்கூடாது என்பதில் மட்டும் அவன் உறுதியாய் இருந்தான்.
அவள் அருகில் அவன் வந்த போது, இதுவரை காணாத ஒரு புதிய ஆதித்யாவை கமலி கண்டாள். அவளது முகத்தை பிடித்தவாறு அவள் கன்னத்தில் கோடு வரைந்தான். தன் கண்களை மூட வேண்டும் என்று தோன்றியது கமலிக்கு. ஆனால், நீ *ஃபெயில்* என்று அவன் கூறிவிட்டால் என்ன செய்வது? எண்ணங்களின் கலவையாய் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் கமலி.
மெல்ல அவள் முகம் பற்றி, அவள் இதழ் பறித்தான் ஆதித்யா. கமலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. முத்தம் என்றால் இப்படியா? ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் அவள் வயிற்றில் பறப்பது போல் உணர்ந்தாள் கமலி. அவளது கண்கள் அனிச்சையாய் மூடின. அவளது கால்கள் வலிமை இழந்ததால், ஆதித்யாவின் இடையை சுற்றி வளைத்துக்கொண்டாள் கமலி. அது அவனுக்கு மேலும் தைரியத்தை வழங்கியது.
தனது வாழ்வில், இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று அவன் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்றில், மேலும் மேலும் மூழ்கிக் கொண்டிருந்தான் ஆதித்யா. எப்பொழுது அவன் கமலியை இறுகத் தழுவினான் என்று அவனுக்கே புரியவில்லை. தன் மனத்தில் இவ்வளவு நாள் தேக்கி வைத்திருந்த ஆசைகள் அனைத்தையும், ஒரு கவிதை முத்தமாய் வெளிப்படுத்தினான் ஆதித்யா.
அவனது உள்ளுணர்வு அவனை பூமிக்கு கொண்டு வந்தது. அவன் என்ன செய்ய நினைத்து என்ன செய்து கொண்டிருக்கிறான்...? இந்த முத்தத்தின் மூலம் அவன் கமலிக்கு சொல்ல நினைத்தது என்ன? அவளது இதழ்களை மெல்ல விடுவித்தான். வியர்த்துக் கொட்ட நின்றிருந்த கமலியை, மென்மையாய் அணைத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அவளது கூந்தலை வருடியபடி,
"கமலி, இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும். நீ இவ்வளவு நாளா எதை முத்தம்னு நினைச்சிக்கிட்டு இருந்தியோ, அதுக்கு மேல நிறைய விஷயம் இருக்கு. அதே மாதிரி தான் லவ் மேக்கிங்கும்... அது நீ நினைக்கிற மாதிரி இல்ல... தாம்பத்தியம்னா என்னன்னு உனக்கு தெரியுமா?"
தலையை நிமிர்ந்து அவனை பார்த்து கண் இமைத்தாள் கமலி. அந்தப் பார்வை கூறியது அவளுக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது என்று.
அதில் ஒன்றும் ஆதித்யாவிற்கு ஆச்சரியம் அல்ல. அது அவன் எதிர்பார்த்தது தான். அவள் தான், *பேட் டச்* ஐ எண்ணி பயந்த பெண் ஆயிற்றே... அதைப் பற்றி அவளுக்கு தெளிய வைக்க நினைத்தான் ஆதித்யா. நிச்சயம் அவள் பயப்படத் தான் போகிறாள். ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை. அவளை அவனால் அழ வைக்க முடியாது. சாதாரணமாய் கட்டியணைப்பது என்பது வேறு... தாம்பத்தியம் என்பது வேறு... இப்பொழுது தான் அவனை அணைக்கவே துணிந்திருக்கிறாள் கமலி. மீண்டும் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
"கமலி, நீ முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்கணும். தாம்பத்திய உறவு எந்த ஒளிவு மறைவும் இல்லாதது. எதுவும்னா எதுவும்...( என்பதை அழுத்தினான்) நான் என்ன சொல்றேன் உனக்கு புரியுதா...? சரி, உனக்கு புரியுறா மாதிரி சொல்றேன். அதல முழுக்க முழுக்க வெறும் *பேட் டச்* மட்டும் தான் இருக்கும்... உன்னோட கற்பனைக்கு எட்டாத அளவுக்கு..."
அவள் மென்று விழுங்குவதை கண்டான் ஆதித்யா.
"அப்படிப்பட்ட *பேட் டச்* க்கு நீ தயாரான்னு யோசி. வேண்டிய டைம் எடுத்துக்கோ. உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. உன்னுடைய கம்ப்ஃபர்ட் தான் எனக்கு முக்கியம். நான் எவ்வளவு நாள் வேனும்னாலும் காத்திருப்பேன். ஒருவேளை, உன்னால இது முடியும்னு தோனிச்சுன்னா, ராத்திரி 9 மணிக்கு முன்னாடி நம்ம ரூமுக்கு வா. ஒருவேளை, 9 மணிக்கு முன்னால நீ வரலைன்னா, நீ அதுக்கு தயாரில்லன்னு நான் புரிஞ்சிக்குவேன். சரியா?"
அவளது பதிலுக்கு காத்திராமல், தனது கோட்டை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து நடந்தான் ஆதித்யா. கதவருகில் நின்று கமலியை திரும்பிப் பார்த்தவன், அவள் அவனையே வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தான். லேசாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து நடந்தான் ஆதித்யா.
இன்ட்காம்
கமலியை தடுத்து நிறுத்தி விட்டான் தான்... ஆனால், அவன் மனதை...? ஆதித்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
இது அவனுக்கே கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லையா...? இப்படியா ஒரு பெண்ணை பயமுறுத்துவது...? போகிற போக்கை பார்த்தால், அவனுக்கு முதலிரவு என்பது நடக்கவே நடக்காது போல் தெரிகிறது... கல்யாணம் பண்ணியும் அவன் பிரம்மச்சாரியாகவே காலம் கழிக்க போகிறான்... மடையன்... எவ்வளவு நல்ல சந்தர்ப்பம்... வழக்கமாய் கமலி இப்படி எல்லாம் துணிந்து முடிவு எடுக்க மாட்டாள். இவன் தான் அதை கெடுத்து விட்டான்.
அவனுடைய மனைவி, தானாகவே வந்து, தன்னை தருகிறேன் என்றாள். மிக நல்ல கணவனான நமது ஆதித்யா, அவளைத் தடுத்து விட்டான்... போதாத குறைக்கு, தாம்பத்தியம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்து, போதுமான அளவுக்கு அவளை பயமுறுத்தியும் விட்டான்... இதில், முத்தத்துடன் எடுத்துக்காட்டு வேறு... இந்த விஷயத்திலெல்லாம் பாடம் நடத்திக் கொண்டா இருப்பார்கள்? இதெல்லாம் அவசியம் தானா? செயல்முறை என்று வரும் பொழுது அவளே புரிந்துகொண்டு விடமாட்டாளா?
ஒருவேளை, அவள் ஒன்பது மணிக்கு முன் வராவிட்டால் என்ன செய்வான் ஆதித்யா? இதன் பிறகு நிச்சயம் கமலி இதைப் பற்றி வாயை திறக்கப் போவதில்லை. செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இப்பொழுது எதற்காக இவன் பரிதவித்துக் கொண்டிருக்கிறான்? தனது நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடினான் ஆதித்யா.
"ரிலாக்ஸ் ஆதி... டேக் இட் ஈஸி... கமலியின் முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவளுக்கு யோசிக்க நேரம் கொடு..." என்று யோசித்து, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஆதித்யா.
கமலி தன்னை அணைத்துக் கொண்ட விதமும், என் அம்மாவின் மடியில் படுத்திருப்பது போன்ற உணர்வு உன்னிடம் எனக்கு ஏற்படுகிறது என்று அவள் கூறிய விதமும், அவனை கலவரப்படுத்தியது. அவளுக்கு திடீர் திடீர் என்று என்ன தான் தோன்றுமோ... அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளே முடிவு செய்யட்டும்... என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் ஆதித்யா.
கமலிக்காக மூன்று வருடம் காத்திருக்க தயாராய் இருந்த ஆதித்யா, அந்த ஒரு நாளை கடக்க திணற போகிறான்... வருவாளா கமலி?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top