ஆயுதா 5, 6 & 7
ஹலோ மேடம் அயுதா சார் கூப்படறாங்க என்று அங்கு இருந்த நபர் ஒருவர் கூற, ஆயுதா நடப்பு உலகிற்கு வந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. இப்போது எதற்கு நாம் பழைய கதைகளை நினைத்துகொண்டோம் என்று அவள் வருந்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டாள்
அன்று நேர்முக தேர்வுக்கு அவள் எதுவும் தன்னை தயார் செய்து கொள்ளவில்லைதான் ஆனாலும் அவளால் இந்த வேலையை தனக்காக தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
மேலாளர் அறைக்குள் நுழைந்தாள், உள்ளே வரலாமா சார் என்று கேட்டுக்கொண்டே. வாங்க மேடம் ஒரு குரல் கொஞ்சம் கணீர் என்று வந்தது அறையில் இருந்து. நான் யாருக்கும் பயந்தவன் அல்ல என்பதை அந்த குரல் உணர்த்தியது. ஒரு 36 வயது தான் இருக்கும் அவருக்கு. ஆனாலும் முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தது. யார் அவரை பார்த்தாலும் ஒரு மதிப்பு குடுக்க தோன்றும். படித்த கலை முகத்தில் தாண்டவம் ஆடியது. நல்ல சிவப்பு நிறம், சராசரி உயரத்திற்கும் சற்று கூடுதலான உயரம். ஒல்லியான தேகம். உக்காருங்க மேடம் என்றார். முகம் புன்னகை மாறாமல் இருந்தது. எல்லோருக்கும் பிடித்து விடும் முகம். இருவர் அமர்வதற்கு அறை தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் மட்டுமே இருந்தார். அறையின் நறுமணமே அவர் எப்பேர் பட்டவர் என்பதை பறைசாற்றும் விதமாக இருந்தது. பெயர் பலகையில் ஆதித்யா என்று பொறிக்கப்பட்டு இருந்தது. பெயரின் பின்னே அவரின் கல்வித்தகுதி இருந்தது. உங்க பேர் என்ன மேடம் என்றார். ஆயுதா சார். நல்ல பேர். என்ன படிச்சுருக்கீங்க. ஆயுதா கூறினாள். பிறகு அவள் தொழிலில் உள்ள முன் அனுபவங்கள் எல்லாம் விசாரித்தார். மேற்கொண்டு உங்களுக்கு என்ன தெரியும் தெரியாது என்றெல்லாம் நான் கேக்கபோறது இல்லங்க. இங்க வந்து வேல கத்துண்டா கூட ஓகே தான் எனக்கு. நீங்க கொஞ்சம் sincere அண்ட் dedicated ஆஹ் ஒர்க் பண்ணா போறும்ன்னு சொன்னார். உங்களுக்கு இதே போல அலுவலகத்தில் வேலை செய்தால் என்ன சம்பளம் தருவார்க்ளோ அதே சம்பளம் தர சொல்றேன் என்றார். நான் பயந்தபோல அங்க எதுவும் நடக்கல. எனக்கு அது சுத்தமாக பத்தாது தான் இருந்தாலும் சரி சார் என்ன்றாள். எப்போதில் இருந்து வேலைக்கு வர போறேறீங்க என்பதை சொல்லிடுதுங்க, அதுக்கு ஏத்தாப்ல நான் உங்களுக்கு ட்ரைனிங் இங்க குடுக்க ஆள் ரெடி பண்ணி வெக்கறேன். நீங்க வீட்ல கொஞ்சம் பேசிட்டு எனக்கு இன்போர்ம் பண்ண போதும் என்றார். வீட்டிலா எனக்கென்று யார் இருக்கிறார்கள் பேசறதுக்கு என்று நினைத்துக்கொண்டு சரி சார் ஈவினிங் போன் பண்றேன் சார் எனக்கு உங்க நம்பர் குடுங்க ப்ளீஸ் என்றாள். அவர் அவருடைய விசிட்டிங் கார்டு கொடுத்து என் பேர் ஆதித்யா நீங்க எனக்கு ஈவினிங் சொல்லிடுங்க நான் கொஞ்சம் தயார் பண்ணிக்கணும். சரி சார் தேங்க்ஸ். என்று கூறிவிட்டு கிளம்பினாள் அவசர அவசரமாக குழைந்தைகள் வந்து தனக்காக காத்திருக்கும் என்ற நினைப்புடன். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பறந்தாள்.
வரும் வழியில் அவளுடைய கவனம் அந்த ஆதித்யாவின் மீதே இருந்தது. என்ன ஒரு ஈர்ப்பு அந்த கண்களில். ம்ரித்யுவிடம் அவன் கண்ட அதே ஈர்ப்பு அந்த கண்களில் இருந்தது. அதே ஒரு பாதுகாப்பு உணர்வு அவரிடம் தோன்றியது. உடனே அவளுக்கு அழுகை வந்து விட்டது. அழுது கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தாள். தான் ஏன் இப்படி நினைக்கின்றோம் என்று தன்னை தானே நொந்து கொண்டாள். வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். ஆனால் குழந்தைகளை காணவில்லை. வேன் ஓட்டுனருக்கு போன் செய்தாள். இன்று பள்ளியில் யாரோ புது பிரின்சிபால் வந்திருப்பதாகவும், இப்போதுதான் பள்ளி விட்டார்கள் என்றும் இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் தாங்கள் வருவதற்கு என்றும் கூறினான். ஆயுதாவிற்கும் அந்த நேரம் தேவைப்பட்டது. தன்னை ஆசுவாச படுத்திக்கொள்ள. உடனே சென்று குளித்தாள். அப்போது தான் கொஞ்சம் தெளிவு பிறந்தது. உடை மாற்றி பொட்டிட்டு தலை முடியை தூக்கி கிளிப்பில் இட்டாள். சமையல் அறைக்கு சென்று தான் கொஞ்சம் செய்து வைத்திருந்த உணவை கொறித்தாள். மனம் ஒரு நிலையில் கொண்டு வருவதற்கு வயறு காலியாக இருக்க கூடாது. யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது.
சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தாள். குழந்தைகள் வண்டி வரும் சத்தம் கேட்டது. தான் இருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் குழந்தையும் அதில் தான் படிக்கிறாள். ஆயுதா இரண்டு குழந்தைகளும் அவளும் வந்துவிட்டிருந்தனர். அந்த குழந்தையின் அம்மா வேலைக்கு சென்றிருப்பதால் அவளையும் ஆயுதா தன்னுடனேயே அழைத்து வந்து விட்டாள். மூவருக்கும் கை கால்கள் சுத்தம் செய்து, தன் குழந்தைகளுக்கு உடை மாற்றி, மூவருக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தாள். ஏதேதோ பேசிக்கொண்டே மூவரும் உணவு உண்டனர். பின் அனைவரும் ஓய்வெடுக்க படுக்கையறைக்கு சென்று படுத்துக்கொண்டனர். குழந்தைகள் உறங்கி விட்டனர். ஆயுதாவிற்கு கொஞ்சம் உறக்கம் வர வில்லை. ஆயுதாவிற்கு பொதுவாக மதிய நேரத்தில் தூங்கி பழக்கமும் இல்லை. கீழ்வீட்டு குழந்தையின் அம்மா வந்தாள், இருவரும் ஒரே வயதை ஒத்தவர்கள். என்ன ஆயுதா என்ன பண்றீங்க, தூங்கறப்போ தொல்லை பண்ணிட்டேன் போல, இல்லங்க, தூங்கலை, கொழந்தேள் தான் தூங்கறா. சரி பாப்பாவை கூட்டிட்டு போகவா என்றாள். இப்போதான் தூங்க பண்ணேன் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து விடறேன் என்றாள். என்ன ஆச்சு நேர்முக தேர்வு என்றாள். இன்னைக்கு ஈவினிங் போன் பண்ணி என்னைக்கு சேரணும்னு சொல்ல சொல்லிருக்காங்க, குழந்தைகள் என்ன செய்வாங்கன்னு யோசனையை இருக்கு அதான் இன்னும் முடிவு சொல்லல என்றாள் ஆயுதா. நீங்க யோசிச்சு பண்ணுங்க ஆயுதா, குழந்தைகள் வர்றதுக்குள்ள உங்களால அலுவலகத்தில் இருந்து வர முடியும்ன்னு நினைசீங்கன்னா போங்க என்று கூறி விட்டு சென்று விட்டாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top