ஆயுதா 4
ஆயுதாவின் அருகில் அவர்களது நண்பன் அமர்ந்தான். ஆயுதா எனக்கு உன்கிட்டக சில விஷயங்கள் பேசணும்மா ஆனா அதுக்கு இது சரியான தருணம் இல்ல, நான் உன்ன உன்னோட விடுதியில் விட்டுட்டு என் வீட்டுக்கு போகணும். நீ வரியா என்றான். தப்பா எடுத்துக்காத ஆயுதா என்ன உன் சொந்த கொடபொறந்த அண்ணனா நெனச்சுக்கோடா எதுவாக இருந்தாலும் இந்த அண்ணாகிட்டக சொல்லுடா என்றான். அவளும் சரி என்று தலை அசைத்தாள் ஆனால் வேறு எதுவும் பேசவில்லை. தன்னுடைய ஆசை பேராசை எட்டாக்கனிக்கு ஆசைப்படும் தன்னிலையை அவள் யாரிடம் சொல்லுவாள்.
போலாம் அண்ணா என்றாள். அவள் தன்னை அண்ணா என்று அழைப்பது இதுதான் முதல் முறை என்பதால் அவனுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது. அண்ணா உங்க பேர் என்ன என்று கேட்டாள் அது கேட்டுது போ நீ என்ன இந்த காலேஜ் ல தானே படிக்கற யார் பேரையும் தெரிந்து வெச்சுக்க மாட்டியா, இப்போ நாம காலேஜ் முடியவே போகுது இப்போ போய் என் பேர கேக்கற என்றான். அவள் திரு திரு வென்று முழித்தாள். நான் வேற பிரிவை சேர்ந்தவனா இருந்தா கூட பரவல்லம்மா உன் பிரிவை சேர்ந்தவன் என் பேறே தெரியல. சரி உனக்கு நம்ப கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்கள் பேராச்சும் தெரியுமா உனக்கு என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டான். ஆயுதா அழ ஆரம்பித்து விட்டாள். இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எப்படிதான் வற்றாத ஜீவநதி கண்ல இருக்குமோ தெரியாதுப்பா என்றான். அதுக்கு முறைத்தாள். என் பேர் பாரதி என்றான். அவளுக்கு மீசை வைத்த நம் பாரதியும் அவரது கண்ணம்மாவும் நினைவுக்கு வந்தார்கள்.
வெகு நாட்கள் அவள் நினைத்ததுண்டு தான் அந்த பாரதியின் கண்ணம்மாவாக இருக்க மாட்டோமோ என்று. பாரதி கண்ணம்மா போலாம்டா என்றான். அவள் அவனை பிரமிப்பாக பார்த்தாள். என்ன என்னனு அண்ணா கூப்டீங்க என்றாள். கண்ணம்மான்னு ஏண்டா புடிக்கலியா என்றான். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. அவன் அவள் தலையை கோதி அவன் தோள்களில் சாய்த்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அம்மாடி ஆயுதா உன் பாச மழையை இன்னொரு நாள் பொழியலாம்மா வா நாம போய் பார்க்கிங் ல இருக்கற என்னோட வேண்டிய எடுத்துக்கிட்டு உன்ன ஹாஸ்டல் ல உட்டுட்டு நான் வீட்டுக்கு போறேன் என்றான். சரி என்று கிளம்பிளார்கள். அண்ணா என்று அழைத்தாள், என்னம்மா என்றான். நான் இன்னும் உடுப்பு மாத்தலையே என்ன பண்றது என்றாள். அவனுக்கு தானே தெரியும் அது அவளுக்காகவே வாங்கிய உடுப்பு என்று. பரவல்லடா அதுக்கும் சேர்த்து ம்ரித்யு கணக்கு கொடுத்து விடுவான் நீயே இந்த உடுப்பை வெச்சுக்கோ என்று கூற, அவள் இவனை வித்யாசமாக பார்த்தாள். இன்னும் இங்கயே நின்னுட்டு இருந்தா கல்லூரியவே பூட்டிட்டு போய்டுவாங்கம்மா போலாமா என்றான் பேச்சை மாற்றும் விதமாக. அவளும் அவசர அவசரமாக அவன் பின்னே ஓடினாள். போகும் வழியில் உணவு உண்டார்கள் இது அவளவனின் கட்டளை பிறப்பிக்க பட்டது அவனது நண்பனிடம். எல்லோரும் ஆயுதாவையே பார்த்தார்கள். பின்னே இருக்காதா, ட்ராமாக்கக வாங்கிய உடுப்பு அந்த அலங்காரங்கள் என ஒரு சினிமா நடிகை போலவே அவள் வளைய வந்தாள். இவன் அவளை வண்டியில் இருந்து கை கொடுத்து இறக்குவதும் அவளுக்காக பணம் செலுத்துவதும் அவன் இவளுக்கு வேலையாள் போலவும் இருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top