ஆயுதா 3
ஆயுதா மிக அற்புதமாக நடித்தாள், மேடையில் நடித்தாள் என்று சொல்வதை காட்டிலும், அந்த பாத்திரமாகவே இருந்தாள், அவளுக்கு ம்ரித்யுவை மிகவும் பிடித்து போய்விட்டது, அவன் சொன்னது போலவே அவள் மேல் அனாவசியமாக, கைகள் படாமல் பார்த்துக்கொண்டான், அவன் கண்கள் மட்டும் அவளை மோதியே நின்றது, எங்கு அவள் சென்றாலும் அவனுடைய கண்கள் அவளை மொய்த்தவண்ணம் இருந்தன, என்ன ஒரு ஈர்ப்பு அந்த கண்களில், அதனால் தான் எல்லா கவிஞர்களும் கண்களை, காந்த கண்கள் என்க்ரின்றார்களோ அவளுக்கும் கவிதை தோன்றியது, எல்லாமே சினிமாத்தனமாக இருந்தாலும் தான் இவனை காதலிக்கின்றோம் என்பதை அவள் கண்கள் மூலமாக அவனுக்கு தெரியப்படுத்திவிட்டோம் என்பதை மறந்து போனாள் இளமங்கை. அந்த கதையின் கடைசியில் காதலன் இறந்து விடுவான் அதை நினைத்து காதலி கண்ணீர் மல்குவாள் ஆனால் இங்கே ஆயுதா நிஜமாகவே ம்ரித்யு இறந்து விட்டான் என்று நினைத்து தனது கதா பாத்திரத்தை மறந்து போனாள், அவள் தான் மேடையில் நடித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து நிஜமாகவே சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டாள், ஆயுதா நடிக்கின்றாள் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், ம்ரித்யுக்கு மட்டும் புரிந்தது அவளுடைய மனம். அவன் பதறி விட்டான், அனால் மேடையில் வெளிக்காட்ட முடியவில்லை, தன் அருகில் இருந்த நண்பனை அழைத்து திரையை மூட சொன்னான், உடனே, எல்லாரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர், ஆனாலும் ஆயுதா அழுகையை நிறுத்தவில்லை இதை யாருமே எதிர் பார்க்கவில்லை. எல்லோரும் அவள் நடித்துக்கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர். ம்ரித்யு அவளை வெளியே அழைத்து சென்று விட்டான், அவர்கள் இன்னும் உடுப்பு கூட மாற்றவில்லை. வெளியில் வந்து ஒரு இடத்தில் தனியாக அமர்ந்துகொண்டனர்.
ஆயுதாவிடம் ஒரு அமைதி நிலவியது தான் ஏன் அழுதோம் என்று கூட இன்னும் விளங்கவில்லை அவளுக்கு. அவளது மனம் பாடாய் படுத்திக் கொண்டு இருந்தது, தான் அவனை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் யாருக்காகவும் இது வரை இப்படி அழுத்ததில்லை என்றாலும், அவன் முன் தன் உணர்வை வெளிக்காட்டி விட்டதில் வெட்கம் வேறு பிடுங்கி தின்றது. அவன் தன்னுடன் இருக்கும் போது பாதுகாப்பை உணர்ந்திருந்தாள் என்றும் சொல்லத்தான் வேண்டும். ம்ரித்யு தொடர்ந்தான், ஆயுதா நீ கொஞ்சம் நார்மல் ஆய்ட்ட ன்னு நினைக்கறேன், நாம கெளம்பலாமா, உனக்கு விடுதிக்கு நேரம் ஆகி விட்டது என்றான். ஏன் ஆயுதா அழுத என்று கேட்பான் என்று நினைத்தவளுக்கு அவன் கேள்வி வித்யாசமாகபட்டது. அவன் எதையும் காண்பித்துக் கொள்ள விரும்ப வில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதற்க்கு காரணம் தான் ஆயுதாக்கு புரியவில்லை. ம்ரித்யுவிடம் இருந்தது, இப்போது ஏன் எதற்கு என்ற கேள்விகள் தேவை இல்லை, அவள் தன்னை காதலிப்பது தெரிந்து விட்டது என்பது தான் காரணம்.
சில்லென்ற காற்று வீசிக்கொண்டு இருந்தது. வானம் கொஞ்சம் இருட்டும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாத சூழலில் இருந்தது. அலங்காரத்திற்க்காக வைக்கப்பட்ட விளக்குகள் ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தன. தூரத்தில் மாணவர்கள் கூச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆயுதா எதுவும் பேசவில்லை அவளுக்கு இன்னும் நேரம் தேவைபட்டது. இந்த நிலையிலிருந்து வெளியே வருவதற்கு. ம்ரித்யு இன்றே எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாத காரணத்தினால், சிறிது அவனும் அமைதியே காத்தான். அங்கே பெரும் பலத்த அமைதி நிலவியது. ஆயுதாவிற்கு சில விஷயங்கள் ம்ரித்யுவிடம் கேட்க வேண்டி இருந்தது. ஆனால் எப்படி கேட்பது என்ற தயக்கமும் இருந்தது. நேரம் வேறு கடந்து கொண்டுஇருந்தது. நேரம் கடந்து விடுதிக்கு சென்றால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள், உணவும் கிடைக்காது. இது ஆயுதாவிற்கு நன்றாக தெரியும். இது ஏற்கனவே ம்ரித்யுக்கு தெரிந்ததனால் தான் அவளை விடுதிக்கு போலாமா என்று கேட்டான்
இருந்தும் அவளுக்கு அவனை விட்டு பிரிய மனம் வரவில்லை, அவனுக்கும் அவளை விட்டு செல்ல மனம் வரவில்லை. அவனது நண்பர்கள் அவர்கள் இருவரையும் காணாது தேடி அவர்கள் இருந்த இடத்திற்க்கு வந்துவிட்டனர். ஏண்டா இன்னும் எவ்ளோ நேரம் இங்கயே உக்காந்து இருக்க போறீங்க ரெண்டு பெரும் என்று ஒவ்வொருவராக, ஒவ்வொரு கேள்விகள் கேட்க ஆரம்பித்து இருந்தனர், அப்போது அந்த கூட்டத்தில் ஒருத்தி ம்ரித்யு இந்தா இந்த ஜூஸ் குடி என்று கொடுக்க அதை அவன் ஆயுதாவிடம் கொடுத்து குடிக்க வைத்தான், இதனை கண்ட அந்த பெண்ணுக்கு ஆயுதா மீது கொஞ்சம் கோவம் வந்தது, வெளிக்காட்டிக்கொள்ளாமல், ம்ரித்யு நாம போலாமா, மாமாவும் அத்தையும் போன் பண்ணிட்டாங்க வா என்றாள், அப்போதுதான், அவளுக்கு தெரிந்தது அந்த பெண் அவனின் உறவு என்ற விஷயம். யாரும் ஒன்றும் பேசவில்லை, திரும்பவும் ஒரு அமைதி நிலவியது ஆயுதா அல்லது ம்ரித்யு இருவரில் யார் என்ன சொல்ல போகின்றார்கள் என்பதற்கான அமைதி அது. ம்ரித்யுவின் அத்தை பெண் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல தயாராகி விட்ட நிலையில், ம்ரித்யு அவன் நண்பனிடம், டேய் நீ கொஞ்சம் ஆயுதாவை அவளது விடுதியில் விட்டுட்டு உன்னோட வீட்டுக்கு போய்டுடா என்று கூறிவிட்டு சென்றுவிட்டான், அந்த பெண்ணும் அவளுடைய நண்பர்களும் அவர்களுடனேயே சென்று விட்டார்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top