ஆயுதா 29
ஆயுதா ஆயுதா போலாமா இன்னும் எத்தனை நேரம் இப்படியே நிக்க போற, வீட்ல அம்மா காத்துட்டு இருப்பாங்க, ம்ரித்யு வேற வெளில நின்னுட்டு இருக்கான். வா போகலாம். என்று அவளை அழைத்தான் பாரதி. அவளுக்கு உலகம் இன்னும் புரிபட வில்லை. தான் ஏதோ தவறு செய்து விட்டோம் என்ற நினைவிலேயே இருந்தாள். பாரதி அவளது அருகில் சென்று, கண்ணம்மா என்னடா யோசனை இப்போ போய் ? அண்ணா நான் உங்கள்ட்ட சில விஷயங்கள் பேசணும்னு நெனச்சேன் ஆனா நாம இன்னும் பேசவே இல்ல. நீ என்கிட்டக பேசக்கூடாது கண்ணம்மா ம்ரித்யு கிட்ட தான் பேசணும், உங்க ரெண்டு பேருக்கும் இடைல இருக்கற பெரிய சுவர் அத நீங்கதான் உடைக்கணும். இப்போ போலாம் வா, என்கிட்டே பேசணும்னாலும் இது நேரமல்ல கண்ணம்மா. போலாம் வா என்று அவளை இழுக்காத குறையாக கூட்டி சென்றான்.
ம்ரித்யு அங்கே காரில் உக்கார்ந்து கொண்டு ரேடியோ வில் பாட்டுக்கேட்டு கொண்டிருந்தான் கண்களை மூடியபடி. இவர்கள் காரில் ஏறியவுடன், வண்டியை start செய்தான், ஆனால் பாட்டு நிற்கவில்லை. ஓடிக்கொண்டிருந்தது
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
பாரதிக்கு புரிந்தது, ம்ரித்யு கொஞ்சம் disturb ஆகி இருக்கிறான் என்று ம்ரித்யு கஷ்டமான மனநிலையில் மட்டுமே இது போன்ற பாடல்களை கேட்பான். சாதாரணமாக english பாடல்கள் மட்டுமே அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆயுதாவிற்கு இந்த பாடல்கள் எந்தவித சலனத்தையும் தர வில்லை. கஷ்டம்டா சாமி என்பது போல் இருத்தது பாரதி நிலை. சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டனர். பாரதியும் ஆயுதாவும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்று விட்டனர். ம்ரித்யுவிற்கு இது பழக்கப்பட்ட வீடு தான் என்றாலும் காரை நிறுத்தி விட்டு இறங்கி வரும்போது ஏதோ ஒன்று அவனை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்தது. வாசலில் நின்று தவித்துக்கொண்டிருந்தான். பாரதி ஆயுதாவை அவனுடைய அம்மா அப்பாவிற்கு அறிமுகம் செய்து விட்டு ஆயுதாவிற்கு குடிக்க பழரசம் கொடுக்க அம்மாவிடம் சொல்லிவிட்டு ம்ரித்யுவை தேடினான். அவனை காணாது வெளியே வந்தான், ஏண்டா இங்கயே நிக்கற உள்ள வாயேன், டேய் காலேஜ்லேந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆகுது வீட்டுக்கு போன் பண்ணி inform கூட பண்ணல, அங்க மாயா வீட்டையே ரெண்டா ஆக்கிருப்பா, நான் கிளம்பறேன் நீ அவளை பாத்துக்கோ என்று புறப்பட எத்தனிக்கையில் பாரதி அம்மா coffee கப்புடன் வெளியே வந்தார். அவனை நன்றாக அறிந்தவர் போல இருந்தது அவருடைய செய்கைகள், இந்தா ம்ரித்யு coffee குடிச்சுட்டு கெளம்புப்பா என்று குடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார். அவன் coffee குடித்துவிட்டு கப்பை பாரதியிடம் கொடுத்துவிட்டு, மாப்ள அவளை கொஞ்சம் நல்லா பாத்துகோடா, என்றான் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. பாரதி அவனை கட்டிக்கொண்டு, என்னடா என்றான். இல்லடா மாப்ள, உனக்கு கஷ்டம் குடுத்துட்டேண்டா அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. உங்க வீட்ல இதை எப்படி எடுத்துக்கறாங்கன்னு நான் யோசிக்கவே இல்லடா. டேய் ரொம்ப பேசற, அவ எனக்கு தங்கச்சி என் வீட்ல இருக்கறது எனக்கு பெரிய விஷயம் இல்ல. அம்மா இவன் என்னவோ சொல்றான் பாருங்க என்றதும் பாரதியின் அம்மா கப்பை வாங்க வந்தவர், என்ன ம்ரித்யு இப்படிலாம் பேசற, எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும்னு நிறைய நாள் நெனச்சுருக்கேன், ஆயுதா என்னைக்கும் என் பொண்ணு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எங்க வீட்லேந்து தான் அனுப்புவோம் என்று உரிமையாக சொன்னார். அவன் நெகிழ்ந்து போனான், சரிடா ரொம்ப புழியாத, கெளம்பு.
மனம் லேசானது போல் இருந்தது ம்ரித்யுவிற்கு. காரை கிளப்பினான் வீட்டிற்கு போகும் வழியில் எப்போதும் போல் ஆங்கில பாடல்கள் அலற ஆரம்பித்தது.
Hi there! Would you be happy if you knew
That there is someone there, Who doesn't care If all your clothes are new?
Hey there! You might be a thousand miles apart,
Well you can have a house,
A boat, a spouse, It matters who you are. I live with no regrets,
But elephants never forget, I'm coloring a life
That's turning bright. I live with no regrets,
But elephants never forget, I'm following a sign,
'The road is fine'.
அவன் அழகாக பாடிக்கொண்டே வீட்டிற்கு சென்றான். காரை அதனுடைய இடத்தில் நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் ரொம்ப சந்தோஷமாக உள்ளே சென்றான் வாயில் பட்டை முணுமுணுத்ததுக்கொண்டே. அங்கே அவனுக்கு பெரிய விபரீதம் காத்திருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top