ஆயுதா 28
இவ்வளவு தொல்லை கொடுத்த அந்த அரவிந்து யார் என்று இப்போது பார்க்கலாமா ? சொல்ற அளவுக்கு பெரிய அறிமுகம் எல்லாம் அவனுக்கு குடுக்க முடியவில்லை. அவன் ஆயுதாவிற்கு செய்த கொடுமைகள் அப்படி. ஆனாலும் எல்லோரும் பிறப்பில் கெட்டவர்கள் அல்லவே, ஏதேனும் ஒரு சூழ்நிலை தான் அவர்களுக்கு இவ்வாறு செய்ய வைத்து விடுகின்றது. இதில் கெட்டவர்கள் அவர்கள் அல்ல அவர்களின் சூழ்நிலைகளே. ஆனாலும் எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை நிதானம் செய்து கொள்ள வேண்டும் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் மாற்றும் சூழ்நிலையை எதிர் கொள்ளும் திறன் எல்லோருக்கும் அமைந்து விடாது. இதில் முதல் ரகம் தன்னை திடம் செய்து கொண்டவள் இரண்டாம் ரகம் அரவிந்த், சூழ்நிலையை தவறாக மாற்றிக்கொண்டவன்.
அரவிந்த் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர், அவனுக்கு ஒரு அண்ணன் படிப்பு வராது அவனுடைய நண்பர்கள் சகவாசம் எல்லாம் சேர்ந்து அவனது தந்தைக்கு அவனை கண்டிப்பதிலேயே கவனம். தாயின் மறைமுக அனுசரிப்பு கேட்ட போதெல்லாம் கொடுக்கப்பட்ட பணம், அவனை கொஞ்சம் கெட்டவனாகவே வளர செய்தது. தந்தையின் கெடுபுடி அவனுக்கு வெளியில் இருந்த சுதந்திரம் இரண்டையும் அவன் தவறாக எடுத்துக்கொண்டு இவ்வாறு அவனை ஆக்கியது. ஒரு நிலைக்கு மேல் தந்தை அவனை கண்டிப்பது உதவாதது என்று விட்டு விட்டார். அண்ணன் படித்து ஏதோ ஒரு நல்ல வேலைக்கு சென்று கல்யாணம் செய்து தன் வாழ்க்கையை சரி செய்து கொண்டு விட்டார். அரவிந்த் இவ்வளவு காலங்கள் வீணடித்து விட்டு இப்போது யோசித்து இந்த கல்லூரியில் சேர்ந்திருந்தான். கல்லூரிக்கு வந்த முதல் நாளே ஆயுதாவை கண்டு அவளை காதலிக்கும் முடிவுக்கு வந்தான். அவளை எப்போதும் தன்னுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டான். கல்லூரிக்கு எல்லோருக்கும் முன் வந்து அவளுக்காக காத்திருந்து அவளுடன் மட்டும் பேசி அவளுடனே வெளியில் செல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருந்தான். அளவுக்கு மிஞ்சிய கண்டிப்பும் மனிதனை குற்றவாளியாக்கும் என்பதற்கு அரவிந்த் வாழ்க்கை ஒரு உதாரணம். இதுவே போதும் அவனை பற்றி என்று நினைக்கின்றேன்.
ஆயுதா கல்லூரியில் சேர்ந்து ஒண்டிரண்டு மாதங்கள் கழித்து தான் ம்ரித்யு கண்களில் பட்டாள். ம்ரித்யு கல்லூரிக்கு சரியான நேரத்திற்கு வந்து கல்லூரி முடியும் முன்னரே வெளியே சென்றுவிடுவான். எப்போதும் காரில் வந்து செல்லும் அவனுக்கு இவள் வருவது போவதும் தெரியாது. அன்று அவன் சீக்கிரம் வந்ததால் மட்டுமே அவளை பார்க்க முடிந்தது.
ஆயுதாவை அவளது விடுதியில் இப்போது தனியாக விடுவதற்கு ம்ரித்யுவிற்கு சிறிதும் இஷ்டம் இல்லை. பாரதிக்கும் அது சரி என்று தோணவில்லை. ஆகையால் ஆயுதாவை பாரதி வீட்டிற்கு கூட்டி செல்வது என்று முடிவு செய்தனர்.
ஆயுதாவின் விடுதிக்கு சென்று பாரதி நீ போய் formalities முடிச்சுட்டு வா நான் அம்மாகிட்ட பேசி வெக்கறேன் என்றான். இவர்கள் இருவர் பேசிக்கொள்வதும் ஆயுதாவிற்கு புரியவில்லை. இறங்கும்மா போலாம் என்றான் பாரதி. உள்ளே விடுதிக்கு சென்று வார்டனிடம், மேடம் ஆயுதாவை நான் என் தங்கையாக சுவீகாரம் செய்து கொண்டுவிட்டேன். அதனால நான் இவளை எங்கள் வீட்டிற்க்கே அழைத்து சொல்லப்போகிறேன். உங்களுக்கு அப்பறமா வந்து documents குடுத்தறேன் என்றான். ஆயுதாவும் அசந்து தான் போனாள். என்ன சொல்வதென்றே தெரியல்லப்பா ரொம்ப நல்ல பொண்ணு நல்ல இடத்துக்கு தான் போறா பாத்துக்கோங்கப்பா என்றார் வார்டன். ஆயுதா இப்போ உனக்கு கெடச்சுருக்கற நல்ல வாழ்க்கைக்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்றேன்மா. ஜாக்கரதையா போயிட்டு வாம்மா என்றார். அவள் எதுவும் பேசவில்லை. அறைக்கு சென்று எல்லாவற்றையும் எடுத்து வைத்தனர். வெளியில் ம்ரித்யு பாரதி அம்மாவிற்கு போன் செய்தான் அம்மா நான் ம்ரித்யு பேசறேனம்மா. சொல்லுடா, அம்மா நாங்க இன்னைக்கே ஆயுதாவ நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேம்மா நீங்க அப்பாகிட்டக சொல்லிறீங்களா? சரி தம்பி நீ கூட்டிட்டு வா, நான் பாத்துக்கறேன் என்று வைக்க போனவரை. அம்மா அவளுக்கு கொஞ்சம் முடியல, இப்போதான் மருத்துவமனையில் இருந்து கூட்டிட்டு வரோம் அதனால, அதனால என்னப்பா நான் பாத்துக்கறேன் நீ ஒன்னும் சொல்லணும் அவசியம் இல்லப்பா அம்மாக்கு ஒரு பொண்ண எப்படி பாத்துக்கணும்னு தெரியும் கண்ணு என்றார். ம்ரித்யு நெகிழ்ந்து போனான். சாரிம்மா தப்பா எடுத்துக்காதீங்க, சொல்லணும்னு ஏதோ சொல்லிட்டேன் சரிப்பா இதுல என்ன இருக்கு உன்னோட காதலியாச்சே, கொஞ்சம் extra தான் சொல்லுவ, அம்மாஆ சும்மா இருங்கம்மா, இன்னும் அவள்ட சொல்லி ok வாங்கல நீங்க அதுக்குள்ள, சரி சரி நான் வெக்கறேன் நீங்க வந்து சேருங்க. சிரித்தான் ம்ரித்யு.
அவர்கள் உள்ளே எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தனர். ம்ரித்யு சிரித்த முகத்தினுடையே உள்ளே சென்று அவர்களுக்கு உதவலாம் என்று சென்றான். அங்கே அவர்கள் இருவரும் ஒன்றும் பேசாது எல்லாவற்றைம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். இவன் உள்ளே சென்றதும், என்ன மச்சான் அம்மாகிட்ட சொல்லிட்டியா, சொல்லிட்டேன்டா, room ready பண்ணி வெக்கறேன் சீக்கரம் வாங்கன்னு சொன்னாங்க. சரி நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க சீக்கரம் சீக்கரம் என்று அவசர படுத்தினான். அவர்களிடம் சொல்லிக்கொண்டே எல்லாவற்றையும் அவனும் எடுக்கலானான். அங்கே ம்ரித்யு வாங்கி கொடுத்த உடை ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தப்பட்டு இருந்தது. அதை பாரதி ம்ரித்யு இருவரும் கவனித்தனர். இங்க ஒருத்தி நேத்தே ஒரு dress திருப்பி தரணும் இன்னும் தரல, நான் கடை காரன்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல, ஏன்டா மாப்ள உனக்கு தெரியுமா அந்த பொண்ண, என்று ம்ரித்யு பாரதியிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான். ஆயுதவிர்க்கு உள்ளே கிலி பிடித்துக்கொண்டது. பயத்தில் உடல் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது. அண்ணா அது எனக்கு வாங்கினது இல்லையா, நீங்க அப்படி சொன்னதால தானே வெச்சுருக்கேன், இல்லேன்னா நேத்திக்கே குடுத்திருப்பேனே என்று அழுதுவிட்டாள், ம்ரித்யுவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கையில் இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்னம்மா நீ அவன் கிண்டல் பண்றான் அதுக்கெல்லாம் நீ போய் அழுதுகிட்டு இருக்க, பாரு அவன் முகமும் வாடி போச்சு. சிரிச்சுகிட்டே தானே பேசறான். நீ இப்படி அழுதா அவன் தங்கமாட்டான் கண்ணம்மா என்றான் பாரதி. அவள் அழுகை நின்றது ஆனால் மனம் ஒரு லயிப்பில் இருந்தது. எதனையும் யோசிக்கும் திறன் இப்போது அவளிடம் இல்லை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top