ஆயுதா 24

முதன் முறையாக தனக்கென்று யாரும் இல்லாததை உணர்ந்தாள் ஆயுதா. தவறு எங்கு நடந்தது என்பது புரியவில்லை. அலுவலகத்திற்கு செல்ல வில்லை. இதோ இன்றோடு 10 நாட்கள் ஆகி இருந்தது. குழந்தைகள் பள்ளி சென்றவுடன் இவனுக்கு பயந்து அறையில் சென்று தாழிட்டு விடுவாள். குழந்தைகள் வரும் போதே வெளியில் வருவாள். இரவில் அர்விந்த் குடிக்க ஆரம்பித்து இருந்தான் வெளியில் செல்லும் போது கதவை வெளியில் பூட்டி வைத்து செல்ல ஆரம்பித்தான். என்ன செய்வதென்றே தெரியவில்லை ஆயுதாவிற்கு. இரவில் குழந்தைகள் தூங்கியவுடன் இவளுடன் பேச ஆரம்பிப்பான் அவனுடைய மது வாடை வீடு முழுவதும் இருந்தது. அன்று அவள் வாழ்வின் பெரிய துக்கமான நாளாக மாறியது. அர்விந்த் அவளை அன்று பேச விட வில்லை. தான் அருந்திய மதுவில் அந்த மாதுவின் கற்பு சூறையாடப்பட்டு இருந்தது. ஒரு நாள் இரண்டு நாள் என அவன் நாட்களை கூட்டிக்கொண்டு தான் போய்கொண்டு இருந்தான். பெண்ணின் மனதை புரிந்து கொள்ள தயாராக இல்லை. அன்று 12 நாள். ஆயுதா இனியும் இவனுடன் இருந்தாள் தன்னுடைய வாழ்வு தன் குழந்தைகள் வாழ்வு இரண்டும் சீரழிந்து விடும் என்று குழந்தைகளை பள்ளியில் விட்டுட்டு வருவதாக சொல்லி வெளியே வந்தாள். தூரத்தில் தெரிந்த பள்ளி வாகனத்தை நிறுத்தி அதில் அவளும் ஏறிக்கொண்டு முதன்மை சாலையில் இறங்கிக்கொண்டாள். அவள் பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். உடனே சிறிது தூரத்தில் இருந்த காவல் நிலையம் சென்று அர்விந்த் மீது ஒரு complaint, கொடுத்தாள். அவனால் தன்னுடைய கற்பு போய்விட்டது என்று அவளால் சொல்ல முடியவில்லை. அவன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து தன்னை மானபங்கம் செய்ய முயற்சித்தான் என்றும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்தாள். இப்போதுள்ள ஒரே தீர்வு இதுதான் என்று தோன்றியது அவளுக்கு. அங்கே இருந்த ஒரு உயர் அதிகாரி இவளுடைய விலாசம் மற்றும் சில தகவல்கள் சேகரிதுக்கொண்டு இவளை முன்னே அனுப்பி பின்னால் அவர்களும் வந்தனர். இவள் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் வீட்டினுள் சென்றாள். அவள் உள்ளே நுழைந்த உடன் அர்விந்த் பிரச்சனையை ஆரம்பித்தான். அவளை அடிக்க ஆரம்பித்த நிலையில் காவலர்கள் வீட்டின் வாசல் மணியை ஒளித்தனர். உடனே கதவை திறந்து வெளியே வந்தாள் ஆயுதா. உள்ளே வந்த காவலர்கள் இருவரையும் விசாரிக்க ஆரம்பித்தனர். இவனை யார் என்று கேட்டதற்கு ஆயிதாவின் கணவன் என்று சொல்லவும், ஆயுதா எல்லா உண்மைகளயும் அவர்களிடம் கூறி விட்டாள். சார் தயவு செஞ்சு என்னை காப்பாத்துங்க. 12 நாளா இங்க என் வீட்ல உக்கந்துகிட்டு என்னையும் வெளில போக விடாமல் அடிச்சு கொடுமை படுத்திட்டு இருக்கான். என்னோட கூட படிச்சாண்ணு தான் உள்ள விட்டேன் ஆன என்ன சீரழிசுட்டான். என்ன காப்பாத்துங்க என்று அழுதாள். சார் சார் அவ பொய் சொல்றா நம்பாதீங்க. அவர்களில் ஒருவர் கீழே சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்து விட்டு வந்து சார் இவன் சொல்றது பொய் தான் சார். இந்த பொண்ணுக்கு யாரும் இல்லனு தெரிஞ்சு தான் வந்திருக்கான். அந்த பொண்ணோட வீட்டுக்காரர் இறந்துட்டர்னு தான் எல்லாரும் சொல்றாங்க. 4 தட்டு தட்டினா இவன் சரி வருவான் என்று அவனை கூட்டி செல்ல முற்பட்டனர். ஆயுதா சார் அடிக்க லாம் வேண்டாம் சார் கண்டிசு விட்ருங்க. நானும் அவனை வீட்டுக்குள்ள விட்ருக்க கூடாது அவன் உரிமை எடுத்துகிட்டாண் என்னோட தப்பும் இருக்கு என்று அவன் மேல் பரிதாப பட்டாள். நீ தப்பு பன்ற ஆயுதா உன்ன நான் சும்மா விட மாட்டேன் என்று கர்ஜித்தான். அவர்கள் நாங்க பாதுகரோம்மா நீ நிம்மதியா இறும்மா என்று கூறிவிட்டு அவனை கூடிசென்றனர். ஆயுதா கதவை சாததிவிட்டு கதறி அழ ஆரம்பித்தாள் தன்னுடைய நிலையை எண்ணி.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top