ஆயுதா 23
எதுக்கு அரவிந்த் போற வரவங்கள்ட்ட எல்லாம் என்னோட கணவர் நீதான்னு பொய் சொல்லிட்டு தெரியற. எங்க வீட்டு சொந்தக்காரர் கிட்டையும் 4 நாளைக்கு முன்னாடி போய் பேசியிருக்க, அவர்கிட்ட நீ தான் என்னோட கணவர்னும் எனக்கு உங்க வீட்டு மனுஷங்களோட பிரச்சனைனும் அதனால தான் இங்க நான் தனியா இருக்கேன்னும் சொல்லிருக்க. என்னோட கணவர் இறந்துட்டாருனு உனக்கு நல்ல தெரியுமே, அப்பாவும் நீ ஏன் இப்படி சொல்லிட்டு தெரியற. எனக்கு இங்க தெருவுல என்னோட மரியாதை கொறையர்த்துக்கு நீ ஏன் காரணமா இருக்க. நான் இப்போதான் எல்லா பிரச்சனை லேந்தும் கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துட்டு இருக்கேன். அது உனக்கு புரியலையா. கத்தி ஓய்ந்தாள். அவன் எதற்கும் அஞ்சுவது போல் தெரியவில்லை. என்ன ஆயுதா பேசி முடிச்சுட்டியா. நான் இப்போ பேசலாமா. அவள் அவனை கேள்வியாக பார்த்தாள். என்னடா நாம இவ்ளோ சொல்றோம் இவன் ரொம்ப சாதாரணமா பேசறானேன்னு நெனைக்கறியா. உன்ன நான் நம்ப கல்லூரிக்கு வந்த முதல் நாள்லேந்தே காதலிக்கறேன். அது உனக்கு தெரியுமா. உன்ன முதன்முதலா நம்ப கல்லூரிக்கு பக்கத்தில இருந்த பிள்ளையார் கோயில் ல தான் பார்த்தேன். நீ சாலையை கடக்கறப்போ ஒரு லாரி உன்ன மோதுறாப்ல வந்துட்டு போச்சே நெனப்பிருக்கா என்றதும் அவளுக்கு ம்ரித்யு நியாபகம் வந்தது. அது தான் அவள் அவனை கண்ட முதல் நாள். அன்னைக்கு நான் சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போ நீ ஒரு பிங்க் கலர் சுடிதார் போட்டுட்டு தேவைதையாட்டம் இருந்த நீ யாரோ எவரோ என்று நினைக்கறதுக்குள்ள நீ என்னோட காலேஜ் ல என்னோட கிளாஸ் ல இருந்த. கடவுள் எனக்கு காண்பித்து குடுத்த தேவதை நீ. உன்ன அணுஅணுவா ரசிச்சு காதலிச்சுருக்கேன். ஆனா நடுவுல வந்தான் அந்த ம்ரித்யு திடீர்னு அவன் உன்னை காதலிக்கறேன்னு சொன்னான். அன்னைக்கு நீ மருத்துவமனையில் இருந்தப்போ எனக்கு அப்போவே நான் செத்து போய்டணும்னு தோணிருச்சு. ஆனா இப்போ அவன் தான் இல்லையே நான் இருக்கேன் அந்த இடத்தில. அதுல என்ன தப்பு என்று விட்டு, நான் உன்ன நல்லா பாத்துப்பேன் ஆயுதா என்று அவள் கைகளை பிடித்து கெஞ்ச ஆரம்பித்தான். கெஞ்சுவதால் காதல் வந்து விடும் என்றால் உலகில் எத்தனை பேர் காதலித்து இருப்பார்கள் எத்தனை உறவுகள் சரியாக இருந்திருக்கும். அவன் கெஞ்சுவதை கண்டவுடன் ஆயுதாவிற்கு ஒரு அருவருப்பு தோன்றியது. காதலை கெஞ்சி பிச்சை கேட்டு வர வழைக்க முடியாது என்பது கூட தெரியாத ஒரு மனிதனை மனிதன் என்றே கூற முடியாது. அவனுக்கு காதல் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியவில்லை என்றே தான் கூற வேண்டும். அவனுக்கு தன் மேல் இருப்பது காதல் இல்லை. அது ஏதோ ஒரு ஈர்ப்பு என்றே அறிந்தாள் ஆயுதா. அவனை எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்பதில் இறங்க ஆரம்பித்தாள். ஆனால் அது விழலுக்கு இறைத்த நீரானது.
இவை எத்தனை சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் அர்விந்த் இல்லை. ஆயுதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போதைக்கு இந்த பிரச்சனையை தள்ளி வைப்போம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் அது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்பதை விரைவில் உணர்ந்தாள். சரி அர்விந்த் நான் அலுவலகம் கிளம்பனும் நீ சொல்றத அப்பறம் யோசிக்கறேன். நீ கெளம்பு அப்பறம் பேசிக்கலாம் என்றுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள். ஆனால் அரவிந்த் விடவில்லை. நீ போ ஆயுதா நான் இங்கயே இருக்கிறேன் நீ சாயந்திரம் வந்த ஒடனேயே பேசலாம் என்றான். அவளுக்கு நேரம் போய்க்கொண்டே இருந்தது. பொறுமையும் இழந்திருந்தாள். வீட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை, யாரும் எதையும் எடுத்துக்கொண்டு போக முடியாது ஆகையால், சரி என்றுவிட்டு கிளம்பி விட்டிருந்தாள். போகும் வழி எல்லாம் இதனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். அலுவலகத்திலும் அவளால் வேளையில் ஈடுபட முடியவில்லை. எங்கு திரும்பினாலும் ஊசி தன்னை குத்திடுவது போல் தோன்றியது.
காதல் என்பது ஒருவரை பார்த்தவுடன் வரும் இல்லை சிலருடன் பழகும் போது வரும் ஒரு வரம். எல்லோருக்கும் அமையாது. சிலருக்கு அமைந்தாலும் கல்யாணம் வரை செல்லாது. ஒரு சிலருக்கே சாகும் வரை ஒன்றாக இருக்கும்படி அமையும். அது ஒரு வரம். சரியான காதல் சரியான நபருடன் என்பதே இந்த காலத்தில் இல்லை. அலுவலகத்தில் ஆதித்யா என்ன ஆயுதா ஒரு மாதிரி இருக்கீங்க ஏதாச்சும் பிரச்சனையா ? என்னோட உதவி ஏதாவது வேணுமா? இல்ல சார் ஒண்ணுமில்ல நான் சாதாரணமாக தான் இருக்கிறேன். ஏன் பொய் சொல்லறீங்க மேடம் உங்களை பாத்தா தான் நல்லாவே தெரியர்தே நீங்க சரி இல்லன்னு சரி விருப்பம் இல்லேன்னா வேண்டாம். ஆதித்யா நல்ல மனம் படைத்தவர். ஏதோ ஆரம்பத்தில் நான் செய்த தவறுகள் தான் அவரை எனக்கு கொஞ்சம் பயம் காட்டியது. ஆனாலும் தொழிலை எனக்கு பொறுமையாக கற்று கொண்டிருக்கிறார். வேறு யாரவது இந்த இடத்தில் இருந்தால் ஆயுதா இந்நேரம் அங்கு வேலை செய்யவே முடியாது.
மாலை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலே பயமாக இருந்தது. அரவிந்த் வீட்டில் இருப்பது நல்லதல்ல. குழந்தைகள் வேறு கேட்டால் என்ன சொல்வது. அக்கம் பக்கத்தினர் தன்னை தவறாக நினைக்க தானே வழி வகுத்தார் போல் ஆகிவிட்டதே என்று அழுது கொண்டே வண்டியில் வீட்டிற்கு சென்றாள். அரவிந்த் குழந்தைகளை வீட்டிற்கு கூட்டி வந்திருந்தான். கோவம் கொண்ட ஆயுதா நீ எதுக்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்த. அது உன் வேலை இல்ல. என்று கத்தினாள். குழந்தைகளிடமும் கோவத்தை காட்ட வேண்டி இருந்தது. அவள் நிலை குலைந்து விட்டாள். தனக்கென்று ஆதாரமான குழந்தைகளை வைத்து தன்னை பணிய வைத்து விடுவானோ என்பது தான் அது. அம்மா அம்மா இந்த uncle உன்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அதனால நாங்க ரெண்டு பேரும் இவரை அப்பான்னு கூப்பிட சொல்றாரும்மா என்றான் யது. அரவிந்து நீ எல்லை மீறி போய்க்கிட்டு இருக்க. இது தேவை இல்லாத வேலை. நீ செய்யறது எதுவும் சரி இல்ல. என்று விட்டு குழந்தைகளை அறையில் வைத்தது சாத்தினாள். இவனுக்கு ஒரு முடிவு இன்றே கட்டி விட வேண்டும் என்று முடிவுடன் இருந்தாள். சொல்லு அரவிந்த் இப்போ என்கிட்ட என்ன எதிர்பாக்கற. நீ 4 மாசமா இங்க தான் சாப்பிட்டுட்டு இருக்க. நான் உன்கிட்ட எதுவும் கேக்காம நண்பன்னு சாதம் போட்டுட்டு இருக்கேன். ராத்திரி இங்க தங்க அனுமதிக்க முடியாதுன்னு வெளில போய்டுற. இப்போ கல்யாணம் அது இதுன்னு குழந்தைகளை வேறு திசை திருப்பர. நீ என்ன காதலிச்சு இருக்கலாம். அதுக்ககலாம் நான் இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது அரவிந்த். நிதானமாக தன்னுடைய கருத்துக்களை இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டாள். ஆனால் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அவன் சாதாரணமாகவே இருந்தான். என்னமோ அவனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருந்தது அவனுடைய நடவடிக்கை. ஆயுதா நீ எதுக்கு இப்போ இவ்ளோ எமோஷனல் ஆகுற. நீ இருக்கற இடத்தில தான் இனிமே நான் இருப்பேன். இல்லேனா நீ என்னோட வந்திரு. நான் உன்ன எங்க ஊருக்கு கூட்டிட்டு போய்டுறேன். உன்ன கல்யாணம் பண்ணிக்காம விட மாட்டேன் என்று கொஞ்சம் கட்டமாகவே சொன்னான். ஆயுதாவிற்கு பயம் கண்டு விட்டது. ஆனாலும் முகத்தில் காட்டாமல் குழந்தைகளுக்கு உணவளித்து தூங்க வைத்து விட்டு திரும்பவும் அரவிந்த்திடம் வந்தாள். அவனை எப்படி வெளியே அனுப்புவது என்று தெரியவில்லை. அவனும் சற்று தன்னுடைய கூற்றில் நிலையாக இருப்பது தெரிந்தது. அவனுடைய கோவம் வேறு அவளுக்கு புதிது இப்படி எல்லாம் அவள் அவனை கண்டது இல்லை. இந்நேரத்தில் யாரையும் உதவிக்கு கூப்பிடவும் முடியாது. யாரையும் அவளுக்கு தெரியவரும் தெரியாது. ஏதேதோ பேச்சு வார்த்தைகள் நடந்தது இருவருக்கும் இடையில். எதுவும் பலனளிக்க வில்லை. அரவிந்த் வாய் வார்த்தையாக பேசிக்கொண்டிருந்தவன், அவளை அடிக்கவும் ஆரம்பித்தான். அவளால் அவனுடைய அடிகளை வாங்க திறன் இல்லாமல் சோர்ந்து விட்டாள். ஒரு நாளில் இது முடியக்கூடிய பிரச்சனையாக இல்லாமல் அடுத்து வந்த நாட்களிலும் தொடர ஆரம்பித்தது
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top