ஆயுதா 22

ஆதித்யாவின் பொறுமையை சோதித்த காரணத்தினால் அவள் நிறைய நேரங்களில் அவரிடம் இருந்து பல திட்டுகளையும் அதற்க்காக அசிங்கப்படவும் வேண்டியிருந்தது. இந்த சூழலில் அவள் ஒரு நாள் அவளது கல்லூரி நண்பன் அரவிந்தை சந்திக்க நேர்ந்தது எதிர்பாராத விதமாக. அதுவும் அவளது அலுவலக வாயிலில். அவளுக்கு அது சந்தேகத்தை தர வில்லை மாறாக ஆச்சர்யத்தை தந்து இருந்தது. டேய் அரவிந்த் எப்படி இங்க. நீ எங்கப்பா இங்க. நான் இங்க தாண்டா வேல பாக்கறேன். வீடு எங்கப்பா இருக்கு நீ எப்படி இருக்க. நான் நன்னாருக்கேண்டா. வீடு இங்கேந்து கொஞ்ச தூரம் போகணும். வண்டில போயிடுவேன். நான் உங்க வீட்டுக்கெல்லாம் வரக்கூடாதா. வாயேண்டா. நானே கூட்டிட்டு போறேன் என்று அவனை தனது இருசக்கர வானத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினாள்.

எந்த பெண்ணும் இன்னொரு ஆடவனை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர அனுமதிக்க கூடாது அவன் நண்பனாக இருந்தாலும் சரி. இது அந்த ஆடவன் அவள் மீது நிறைய உரிமை எடுத்துக்கொள்ள வழி வகுக்கும் என்று அப்போது பாவம் அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கென்று இப்போது இருப்பது அந்த 2 குழந்தைகள் மட்டுமே. அவளுக்கு இப்போது இந்த வயதில் தேவை ஒரு ஆடவனின் துணை. ஆனால் அவன் எப்படி பட்டவன் எந்த ஸ்தானத்தில் அவளுக்கு வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு அனுமதிக்க வேண்டும். ஆதித்யாவினுடன் அவளுடைய வேளையில் நிறைய நேரங்கள் ஆதித்யாவுடனேயே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இத்தனை மனிதர்களுக்கு இடையில் கண்ணியம் தவறாது பழகும் ஆதித்யா அவளை கொஞ்சம் அசைத்து தான் இருந்தார். ஆரம்பத்தில் இருந்து ஆதியாவின் கணீர் என்ற குரல் அவளுக்கு அவளுடைய ம்ரித்யுவை நிறைய நேரங்கள் நினைவு படுத்தி இருந்தது. இந்நிலையில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் ம்ரித்யு வை நினைவு படுத்திக்கொண்டு இருந்தன. ம்ரித்யுவிற்கும் அடிக்கடி கோவம் வரும் முன்கோபி. ஆனால் நல்ல மனம். யாரும் கஷ்ட பட அனுமதிக்க மாட்டான். இவள் பாசியாய் இருந்தால் பொறுக்க அவனால் முடியாது. இது போன்ற பல. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதாவின் மனம் ஆதித்யாவிடம் சென்றது. இது காதல் அல்ல ஒரு மரியாதை கலந்த அன்பு என்றே ஆரம்பத்தில் இருந்தது. இரு சக்கர வாகனத்தில் இருவரும் பேசிக்கொண்டே ஆயுதாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். குழந்தைகள் பள்ளியில் இருந்து drawing class போயிருக்காங்க டா. நீ வீட்டுக்குள்ள இரு நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன். அவள் வருவதற்குள் அவன் வீட்டின் கதவை திறந்து அவளுக்கும் அவனுக்கும் டீ போட்டுவிட்டு அமர்ந்தான். அவள் குழந்தைகளை அழைத்து வந்து உடை மாற்றி அவர்களை homework எழுத உக்கார்த்தி வைத்தாள். அம்மா இந்த uncle யாரு. உங்க அம்மா கூட காலேஜ் ல படிச்சேன்டா. உன் பேரு என்ன ? நான் யதுநந்தன் இவன் என்னோட தம்பி மதுசூதனன். ஓ என்ன படிக்கறீங்க நான் 1st standard இவன் UKG ஹ்ம். சரிடா நீங்க போய் வீட்டுப்பாடத்தை எழுதுங்க. என்ன ஆயுதா நீ என்ன பண்ற. ஏன் இப்படி இருக்க. அதெல்லாம் ஒண்ணுமில்லடா நல்லாயிருக்கேன். இப்போதான் இந்த வேலை கெடச்சுச்சு. இப்போ நாங்க 3 பேரும் ஓரளவுக்கு நல்ல life வாழ ஆரம்பிச்சுட்டோம். ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தனர். நேரம் 8ஐ தொட்டது. அவன் கிளம்பிவிட்டான்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. அவளுக்கு ஆதித்யா இப்போது வேலை கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டார். இருவரும் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஆதலால் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருந்தனர். ஆனாலும் அவள் அவளின் இடத்தில் இருந்து மாறா வண்ணம் நடந்து கொண்டாள். கொஞ்சம் பேரும் கிடைக்க ஆரம்பித்து இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பான பெண்ணாக அனைவரின் கண்களிலும் ஆயுதா பட ஆரம்பித்தாள். யாரிடமும் தன்னுடைய கணவன் யார் அவன் எங்கே என்ற எந்த கேள்விகளும் எழாத அளவிற்கு நடந்து கொண்டிருந்தார். ஆதித்யாவிற்கும் தெரியாது. இடை இடையே அரவிந்தின் ஊடுருவல் அவளது வீட்டில் நடக்க ஆரம்பித்திருந்தது. அவளும் அவனை நண்பனாக நல்ல மாதிரி நினைத்து இருந்ததால் அனுமதித்து இருந்தாள். அரவிந்த் வீட்டிற்கு வர ஆரம்பித்து சரியாக 4 மாதங்கள் ஆகி இருந்த நிலையில் கீழே இருந்த அவளது தோழி அவளை பார்க்க வந்திருந்தாள். அன்று ஞாயிற்று கிழமை. குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தனர் மதிய வேளையில். வாங்க. உக்காருங்க. ஹ்ம் எப்படி போகுது வேலையெல்லாம் ஆயுதா. நல்ல போகுதுங்க. இப்போதான் settle ஆகியிருக்கு. ஹ்ம் உங்க வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தர் வராரே ஆமாம் அவருக்கென்ன. இல்ல அவர் உங்களை அவரோட husband னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காரு. அவர் உங்க கணவரா ? யார்கிட்டம்மா சொன்னார். ஒரு வாரத்துக்கு முன்னாடி இங்க வந்திருக்காரு. சாவி நீங்க குடுக்கலேன்னு கீழ வந்து கேட்ருக்காரு. என்னோட கணவர் தான் இருந்திருக்கார். நீங்க யாரு எதுக்கு சாவி கேக்கறீங்கன்னு கேட்டதுக்கு நான் ஆயுதாவோட புருஷன். எங்க ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை அதான் அவ கோச்சுக்கிட்டு இங்க வந்துட்டா. நானும் இங்கயே வந்துட்டேன். என்று சொல்லி இருக்கிறார். அப்பறம் சாவி இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டாராம். அப்பறம் பக்கத்துக்கு வீடு uncle கிட்டையும் இதையே சொல்லி பேசிருக்கிறாராம். எல்லாரும் இப்போ என்னை கேக்கறாங்க அதான். தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க கணவர் இறந்து விட்டார் என்று தான் நீங்க சொல்லிருக்கீங்க. அதான் இப்போ என்னோட வீட்டுக்காரர் உங்கள கேட்டுட்டு வர சொல்லி தொல்லை பண்ணினார். நான் நாகரீகமா இருக்காதுன்னு கேக்கலை. நேத்து என்கிட்டயே வந்து அப்படி சொல்லவும் நான் உங்க கணவர் தான் இறந்துட்டார் நீங்க ஏன் இப்படி சொல்லறீங்கன்னு கேட்டா, அவ பொய் சொல்றா நீங்க அதெல்லாம் நம்பாதீங்க என்று சொல்லிட்டு போய்ட்டார். நீங்க என்ன பிரச்சனைனு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்ல இருக்கும் இல்லேன்னா உங்கள வீடு காலி பண்ண சொல்லி பிரச்சனை பண்ணுவாரு என்னோட கணவர். ஆயுதா சிலை ஆகி விட்டாள். வாலு போச்சு கத்தி வந்தது கதை யாகி போனதென்ன என்று பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றே தெரியவில்லை. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரிய வில்லை. ஆனா கொஞ்சம் நேரம் குடுங்க நான் என்னன்னு இதை பாக்கறேன். ஆனா நான் உங்கள்ட்ட பொய் சொல்லல அது மட்டும் நம்புங்க போதும் இப்போ நீங்க கொஞ்சம் என்னை தனியா விட்டீங்கன்னா தேவலாம். என்று கூறவும் அவள் சாரி தப்பா நெனச்சுக்காதீங்க என்று கீழே சென்று விட்டாள். கதவை தாழிட்டு விட்டு குழந்தைகளுடன் சென்று படுத்து விட்டாள். எதையும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. நாளை குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் அவள் அலுவலகம் செல்ல வேண்டும் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். யாருக்காகவும் எதுவும் நிற்காது. எதையும் நிறுத்தவும் முடியாது. அவனை எப்படி சமாளிப்பது என்பதை பிறகு யோசித்துக்கொள்வோம் என்று தன் தினசரி வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். மாலை நேரம் கீழே சென்றாள். அந்த பெண்ணை அழைத்தாள். உங்க கணவரையும் கொஞ்சம் கூப்படறீங்களா. இருவரையும் அழைத்து. சார் அந்த பையனை பத்தி தெரியாம வீட்டுக்குள்ள நண்பன்னு நெனச்சு அனுமதிச்சேன். ஆனா அவன் இப்படி உங்கள்ட்ட வந்து சொல்லுவான்னு நினைக்கல. உங்க wife சொன்னாங்க. என்னோட கணவர் இறந்து விட்டார் தான். அதான் உண்மை இவன் என்னுடன் படித்த பையன். இப்படி நான் எல்லோரிடமும் சென்று கூற முடியாது. இதனை நான் சமாளித்துக்கொள்கிறேன். உங்களுக்கு பிரச்சனையை என்று தோன்றினால் நான் வேறு வீடு பார்த்துக்கொள்கிறேன் என்றாள். அதெல்லாம் ஒன்னு பிரச்சனை இல்லங்க, உங்கள தப்பா எல்லோரிடமும் திருச்சு அசிங்க படுத்திற போறான் பாத்துக்கோங்க என்று சென்று விட்டான். அந்த பெண்ணிற்கு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை. இவள் வீட்டிற்கு சென்று விட்டாள். ஆனாலும் அங்கே ரொம்ப காலம் இருக்க முடியாது. அரவிந்த் மூலம் ஏதேனும் பிரச்சனை வரலாம். ஆதித்யாவிடமும் சொல்ல முடியாது. தன்னுடைய தன்மானம் போனது போல் உணர்ந்தாள். இருந்தும் அவளிடம் மனோதிடம் குறையவில்லை. மறுநாள் திங்கட்கிழமை அரவிந்த் காலை சீக்கிரமே வந்திருந்தான் அவளின் வீட்டிற்கு அவனுக்கு நேற்று நடந்த எதுவும் தெரியாது. இவளும் அவனை பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள். நான் இல்லாதப்போ இங்க வந்தியா அரவிந்த். இல்லையேப்பா நீ இல்லாதப்போ நான் எதுக்கு வரணும். அதுக்கு என்ன அவசியம் இருக்கு. சரி நீ ஊருக்கு போகாம எதுக்கு இங்க சுத்திகிட்டு இருக்க. இங்க எதுவும் வேல கிடைக்குதா பாக்கணும் அப்பறம் நான் காதலிக்கற பொண்ணு இங்க தான் இருக்கு. யார் அந்த ராதாவா. அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஆமாம் என்று சொல்லி வைத்தான். சரி அரவிந் இனிமே இங்க வராத. நான் தனியா இருக்கேன் நீ வந்தா யாரேனும் எதுவும் சொல்லுவாங்க. அதெல்லாம் முடியாது ஆயுதா நான் வருவேன். எதுக்கு அரவிந்த், நீ தனியா இருக்க உனக்கு ஏதாச்சும் உதவி பண்ணலாம்னு, நீ ஒரு உதவியும் பண்ண வேண்டாம்டா, பண்ண வரைக்கும் போதும். என்று கத்தி விட்டாள்.......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top