ஆயுதா 20
இதோ இதனுடன் 2 வருடங்கள் ஓடிவிட்டது முதல் நாள் அவளை சந்தித்த உணர்வே இன்றும் உள்ளது. மருத்துவ மனையில் அவளருகில் உக்கார்ந்து முதல் இரண்டாம் சந்திப்புகளை நினைத்துக்கொண்டு இருந்தான். அவளை அங்கம் அங்கமாக ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் மயக்கத்தில் இருந்தாள். அவள் முகத்தில் இருந்து அவனால் கண்களை அகற்ற முடியவில்லை. அவளிடம் ஒரு சோகம் தெரிந்தது. அவள் ஏன் நேற்று அப்படி தனக்காக அழுதாள். தன்னை காதலிக்கிறாளா எப்படி தெரிந்து கொள்வது. என்னை எதிர்பாக்கின்றாளா, என்ன அவளுக்கு பிடிக்குமா, காதலை சொன்னவுடன் அப்படி ஒரு அறை விட்டாளே அப்போ அவளுக்கு என்னை பிடிக்காதா. இல்லையே அவள் என்னை பார்க்கும்போதெல்லாம் நான் அவளிடம் என் காதலை உணர்ந்திருக்கின்றேனே. அவள் அனாதை என்று மருகிவிட கூடாது என்று எவ்வளவெல்லாம் செய்தேன். இந்த பாரதியை அண்ணனாக மாற்றினேன். அவள் என் காதலை ஏற்றுக்கொண்டு விட்டாளா இல்லையா. ஹையோ பைத்தியமே பிடித்துவிடும் போல இருக்கே. காதலை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. சொன்னவுடன் பதில் கிடைக்காவிட்டால் அச்சோ முடியல. ஏண்டீ படுத்தற. நீயென்றால் எனக்கு கொள்ளை இஷ்டம் டீ. உன்ன என்னோட கண்ணுக்குள்ள வெச்சு பாத்துப்பேன்டீ. என்கிட்டே வந்திருடீ. என்றெல்லாம் பிணற்றி கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் அங்கு அரவிந் வந்தான். என்ன ஆச்சு ம்ரித்யு ஏன் அவ இங்க இருக்கா. நீ யாரு எதுக்கு அவளை பத்தி விசாரிக்கற. அவ என்னோட கிளாஸ் தான் நானும் இவளும் பேசிட்டு இருந்தோம் நீங்க கூப்பிட்டதா பாரதி வந்து கூட்டிட்டு போனார் அப்பறம் தான் தெரிஞ்சுது அவளுக்கு உடம்பு சரியில்லாம போச்சு நீங்க இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு. அதான் நானும் இவளும் வந்தோம் அன்று அங்கிருந்த ஒரு பொண்ணை காண்பித்தான். அவள் அயுதாவின் கல்லூரி தோழி. தோழி என்றால் ஒன்றாக படிப்பவள் அவள் பெயர் ராதா. நான் ராதா ஏன் ஆயுதா இங்க இருக்கா என்ன ஆச்சு. ஒண்ணுமில்லம்மா சும்மா மயக்கம் போட்டும் விழுந்துட்டா அதான் இங்க கூட்டிட்டு வந்திருக்கோம் அவளுக்கு ஒண்ணுமில்ல. நீ அவளை பாத்துக்கறியா நான் கிளம்பறேன். ஆனா என்கிட்டே அவளை கூட்டிட்டு போக காசு இல்லையே ராதாவும் அரவிந்தும் ஒன்றாக கூறினார்கள். நான் பணத்தை எல்லாம் கட்டிட்டேன். நீங்க அவளை விடுயில் கொண்டு போய் விட்டுட்டா மட்டும் போதும். அப்படீன்னா சரி. கிளம்பி பாரதியை தேடி சென்றுவிட்டான். அவனுக்கும் அவளுடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் அவள் இந்நிலையில் இருக்கும் போது தன்னால் பார்க்க முடியாதே. மனதை கல்லாக்கி கொண்டு அங்கிருந்து சென்றான். ஏண்டா அவளை விட்டுட்டு வந்துட்ட பாரதியின் கேள்வி. அதில்லை மச்சி அவளோட classmates வந்துட்டாங்க சரி அவளுக்கும் ஒரு நிம்மதியை அது கொடுக்கும் அவளுக்கு என்னை அவ்வளவாக தெரியதல்லவா. அதான். சரிதான் போ என்று பெருமூச்செறிந்தான் பாரதி. அவளுக்கு என்னை பிடிக்குமாடா. இப்படி நான் சண்டை போட்டதுக்கே மயங்கிட்டா. நேத்து உட்டா பாரு ஒரு அறை ஹையோ வலிக்குதுடா இன்னும். ஏண்டா நான் நேத்து ஏன் கன்னம் வீங்கிருக்குன்னு கேட்டதுக்கு எங்கயோ இடிச்சுகிட்டதா சொன்ன. ஓ கண்ணம்மா உட்டது தான அது என்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். டேய் வேண்டாம்டா மச்சி செம்ம கோவத்துல இருக்கேன் இன்னும் கிளப்பாத. போய்ட்டு ஒழுங்கா. டேய் நீ அடி என் கண்ணம்மா கையால வாங்க குடுத்து வெச்சிருக்கனும்டா. டேய் வேண்டாம்டா அவ ஏற்கனவே என்கிட்டே பேசல இன்னைக்கு காலேலையும் நான் கடுப்புல இருக்கேன். நீ சிரிக்காத அடி நீ இப்போ வாங்கிடுவ. என்னது கலம்பரையா. எப்போடா பேசின அவகிட்ட. அச்சுசோ உளறிட்டோமே. சரி சொல்லுவோம். என்று ஆரம்பித்தான். அந்நேரம்..........
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top