ஆயுதா 2
அப்போது அவள் இறுதி ஆண்டு படிப்பு படித்துக்கொண்டிருந்தாள், அயுதா எல்லோருக்கும் பிடித்தமான பெண், எந்த ஆணிடமும் அனாவசியமாக பேச மாட்டாள், அவளுக்கு தோழி என்று யாரும் கிடையாது, அவளுண்டு அவளுடைய வேலை உண்டு என்றிருப்பாள், வளர்ந்த விதம் அப்படி.
அன்று கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் செய்வதாக தீர்மானம், வெளி கல்லூரியில் இருந்து மாணவ மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர், ஆயுதாவிற்கு இதில் எல்லாம் விருப்பம் கிடையாது, அவள் வகுப்பில் அமர்ந்து கொண்டு வரும் போகும் மாணவர்களை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தாள்
ஆயுதா அழகான பெண், பார்ப்பவரை கவரும் அழகில்லை தான், அனால் யாரும் வெறுக்காத அளவிற்கு அவளுடைய வனப்பு இருக்கும், ஆயுதா ஆயுதா கூப்பிட்டுக்கொண்டே வந்தான் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன், என்னடா என்றாள், அங்க அங்க, என்று இருந்தான் அந்த மாணவன், என்னடா, இழுக்கற, என்ன ஆச்சுன்னு கேட்டா, நம்ப நம்ப, ம்ரித்யு இருக்கான்ல அவன் அவன், யாருடா ம்ரித்யு என்றாள், என்னப்பா, அவனை போய் யாருன்னு கேக்கற, அவன் உன்ன 2 வருசமா லவ் பண்றான் அது கூட தெரியலேன்னுகூட பரவால்ல, அவன் நம்ப கூட படிக்கற பையன் அது கூட உனக்கு தெரியாதா என்றான், அவளுக்கும் தெரியும் ம்ரித்யு அவளுடன் படிக்கும் பையன் தான், என்று ஆனால், இப்போது அவனை தெரிந்தால் போல் காமித்துக்கொள்ள அவள் விரும்ப வில்லை, சரிடா ரொம்ப பண்ணாத என்ன ஆச்சு அவருக்கு சொல்லு, என்றாள், ஹ்ம்ம் சரிதான், என்ன சொல்லும்போது டா, அவனை சொல்லும்போது அவற்ரற சரி சரி, இப்போ அதல்லாம் பேச நேரம் இல்ல, அவன் ஒரு பிரச்சனைல இருக்கான், உன்ன கூப்படறான் கொஞ்சம் வாயேன்னான், ஆயுதா யோசித்தாள், ம்ரித்யு அனாவசியமாக அவளை தொல்லை செய்யமாட்டான், அது அவளுக்கு நன்றாக தெரியும், உடனே கிளம்பினாள், அவன் இருக்கும் இடத்திற்கு. அவளை அவன் தூரத்தில் இருந்தே கண்டு கொண்டான், அவளும் அவனை கண்டாள், அவர்கள் இருவர் கண்களும் ஒருமுறை அல்ல பல முறை மோதி நின்றது, இது முதல் முறை அல்ல, இதற்க்கு முன் பலமுறை இப்படி ஆனதுண்டு, அப்போதெல்லாம், ஆயுதா பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை, ஆனால் இன்று, ஏதோ வித்யாசமாக பட்டது, இருந்தாலும் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தினாள், ஆயுதா கூப்பிட்டான் மிருத்யு, யார் நீங்க எதுக்கு என்ன கூப்டீங்க, என்றாள், சரிதான், யார் நீங்க, நல்ல வரவேற்பு, ஏங்க, எல்லாரும் பேர் சொல்லி கூப்பிட்ட, ஒன்னு ஹாய் ன்னு சொல்லணும் இல்லேன்னா என்னனு கேக்கணும் இதென்ன யாரு நீங்கான்ன்னு வித்யாசமா கேக்கறீங்க, என்றான் மிருத்யு, அவள் அதற்கெல்லாம், அசையவில்லை, இருவர் கண்களும் வேறு இடம் பார்க்க வில்லை, அவள் திரும்பவும் எங்கே தன்னை யாரென்று கேட்டு விடுவாளோ என்ற பயத்தில், எனக்கு உங்க உதவி தேவைப்படுத்துங்க, அதுக்கு தான் கூப்பிட்டேன், என்ன உதவி பண்ணனும் என்றாள், இன்னைக்கு கலை, நிகழ்ச்சி இருக்கு நம்ப கல்லூரியில் உங்களுக்கு தெரியும்ல. என்றான், ஹ்ம்ம் என்றாள், அதுக்கு அபி வரேன்னு சொல்லிருந்தாள், ஒரு நாடகம், போடலாம்மு இருந்தோம், ஆனா, கடைசி நேரத்தில அவளுக்கு உடம்பு சரி இல்லாம போய்டுச்சு, என்ன பட்றதுன்னு தெரியல, நீங்க கொஞ்சம் அவளோட, இடத்தில நடிசீங்கன்னா, இன்னைக்கு நாங்க, கொஞ்சம் மேனேஜ் பண்ணிடுவோம், என்றான், அவளுக்கு அவன் அப்படி சொன்னவுடன், ரொம்ப பிடித்து போனது, அபி மேல் ஏற்கனவே, கொஞ்சம் புகைந்து கொண்டு தான் இருந்ததாள், இப்போது பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் ஆனது. யோசனையாக அவனை பார்த்தள், அவன் கண்கள், கிறங்கி தான் அவளை பார்த்தது, அவன் கவலைப்படாதீங்க, என் விரல் கூட உங்க மேல படாது நான் எந்த advantage உம் எடுத்துக்க மாட்டேன், அவன் சொன்னவுடன், அவளது கண்கள் கேள்வியாக அவனை பார்த்தது, இப்படி கண்ணுளையே பேசினீங்கன்னா, எனக்கு எல்லாம் புரியதுங்க, உங்களுக்கு என்ன பிரச்னைன்னு சொல்லுங்க ப்ளீஸ் என்றான், நான் ஒன்னும் practice பண்ணலை அதான் யோசனையை என்றாள், அப்பாடா, நான் கூட வேற என்னென்னமோ யோசிச்சிட்டேன், என்றான், அவள் திரும்பவும் அவனை கேள்வியாகவே பார்த்தாள் இதற்கும் பார்வை தானா இந்த பார்வைல தானடி விழுந்தேன் என்று சினிமா தனமாக சொன்னான் மெதுவாக, அவள் என்ன என்றாள், காதுல விழுந்தா கூட என்னனு தானே கேப்ப என்று நினைத்துக்கொண்டு, உங்களுக்கு ஓகே வா என்றான், அவளும் சரி என்று அவன் பின் குட்டி போட்ட பூனையாக சென்றாள்.
கூட்டி வந்த நண்பன் அவளை கிண்டல் செய்தான் ஏம்மா நான் கூப்டப்போ என்னவோ அவன தெரியாத மாதிரி பில்டப் பண்ண இப்போ என்னடான்னா அப்படியே அவன் பின்னாடியே ஒன்னும் பேசாம போற இதல்லாம் சரில்ல சொல்லிட்டேன் என்று அவனும் சென்று விட்டான். ஆயுதா வின் மனது ஏன் நாம இவன் பின்னாடியே போறோம் அவன் கூட பேசும்போது ஏன் என்னவோ போல இருக்கு, அப்படியே பட்டாம்பூச்சி போல பறக்குது மனசு ஒன்னும் புரியல என்று தனக்கு தானே பேசியபடி அவன் பின்னே நடந்தாள், தன்னுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் இருந்தனர் ஒரு ஆசிரியரும் இருந்தார் எல்லோரும் கத்தி கூசலிட்டபடியே இருந்தனர் ஆசிரியர் கட்டளைகளை பிறபித்த வண்ணம் இருக்க மிர்தியு கண்கள் ஆயதா மீதே இருந்தது. ஆயுதா க்கும் அது புரிந்தாலும் வெளிக்காட்டாமல் ஆசிரியர் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தாள். ஆயுதா நீ மிர்த்யு க்கு ஜோடியா நடிக்கணும்மா என்றார் ஆயுதா கண்கள் விரிந்தன. ஹையோ ஏற்கனவே நீ அழகுடீ செல்லம் இதுல அந்த கோழி முட்டய வேற உருற்றையேன்னு இங்க மிரித்யு பாடு படு திண்டாட்டமாக இருந்தது. சரி சார் என்றாள், டேய் ம்ரித்யு அவளுக்கு டிரஸ் அவள் என்ன பேசணும் கதை என்ன எல்லாத்தையும் அவளுக்கு சொல்லிடு என்று கூறிவிட்டி ஆசிரியர் சென்று விட்டார், அவள் ம்ரித்யு வை பார்த்தாள், வாய தொறந்து ஏதாச்சும் கேக்கறாளா பாரு, எல்லாத்துக்கும் பார்வை தான், இதுல தானே விழுந்தேன் பெரு மூச்சு விட்டுக்கொண்டான், ஆயுதா நீ போய் இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வரையா, நான் உனக்கு short and sweet ஆஹ் இந்த ட்ராமா பத்தி சொல்லிடறேன், ஆயுதா உடை மாற்ற அறையை கண்ணாலேயே தேடினாள், ம்ரித்யு உடனே டேய் அவ துணி மாத்த இடம் தேற்றா டா நீ போய் உதவி பண்ணுடா என்று தன்னுடன் இருந்த நண்பன் ஒருவனுக்கு கட்டளை, பிறப்பித்தான், அப்போது அவளுடன் படிக்கும் சக மாணவி ஒருத்தி வர, வாடீ நாம போய் துணி மாத்தலாம், என்று ஆயுதாவை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள், எல்லோரும் அவரவர் வேலைகளை பாத்துக்கொண்டு இருந்தனர், மற்ற கல்லூரி மாணவ மாணவர்களும் வந்து கொண்டே இருந்தார்கள், இதோ இன்னும் சிறிது நேரத்தில் கலை நிகழ்ச்சிகள், ஆரம்பம் ஆக போகிறதென்பதை மைக்கில் கூறிக்கொண்டு இருந்தார்கள், அப்போது வெளி கல்லூரி மாணவர்கள், சிலர் நிலா மற்றும் நண்பிகள் உடை மாற்றிக்கொண்டு இருந்த அறையின் வெளியில் இருந்து எல்லோரையும் வம்பு செய்துகொண்டு இருந்தனர், ஆயுதா அழ ஆரம்பித்து விட்டிருந்தாள். அப்போது ம்ரித்யுவின் நண்பன், இதனை பார்த்து விட்டு அங்கு ஒரே களேபரம் ஆகி விட்டிருந்தது, ம்ரித்யு உடனே அங்கு வந்து நடந்ததை ஆசிரியர்களிடம், கூறி பிரச்னையை சரி செய்தனநர், ஆயுதா அழுகையை நிறுத்த வில்லை, அவளுக்கு இதல்லாம் பழக்கமில்லை என்பதால், பயந்து போய் இருந்தாள். ம்ரித்யு எல்லாரையும் அனுப்பிவைத்தான் கலைஅரங்ககிற்கு, ஆயுதா ம்ரித்யு தனியாக இருந்தனர் அந்த அறையில், ஆயுதா அழைத்தான், நான் உன்ன காதலிக்கறேன் என்று கூறினான். ஆயுதா அதிர்ச்சியில் அழுகையை நிறுத்தி விட்டிருந்தாள், ஒரு பளீர் அரை அவன் கன்னங்களில் விழுந்தது, இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆயுதா ட்ராமா கதையை சொல்லிடவா, ஆரம்பிக்க போறாங்க என்றான் ம்ரித்யு, ஹ்ம்ம் என்றாள், விலாவாரியா சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு மேடைக்கு சென்றான், அது ஒரு காதல், கதை என்பதால் ம்ரித்யு தன் காதலை, அவளுக்கு முன்னமே கூறி இருந்தான் அது அவர்கள் இருவரும் மேடையில் நடிக்க கொஞ்சம் உதவும் என்பது ம்ரித்யுவின் நம்பிக்கை, அனால், அவன் அடி விழும் என்று எதிர்பார்க்க வில்லை தான், இருவரும் மேடையில் நடிக்க ஆரம்பித்து இருந்தனர், யாரும் அவர்கள், இருவரும் மேடையில் நடிப்பதாக நம்பவில்லை, உண்மையில் அவர்கள், அப்படியே காதலிப்பதாக தான், இருந்தது அந்த நடிப்பு. இதுக்கு மேல தானே இருக்கு ஆப்பு நம்ப ம்ரித்யுக்கு
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top