ஆயுதா 19


பாரதி டேய் ப்ளீஸ் டா. டேய் உனக்கு வேணும்னா நீயே போய் கேட்டுக்கோடா என்ன தொல்லை பண்ணாத. டேய் உன் நண்பனுக்காக இது கூட பண்ண மாட்டியா. கிளாஸ் நடந்து கொண்டிருக்கும்போதே வம்பு செய்து கொண்டிருந்தான் ம்ரித்யு பாரதியிடம். ஆனால் பாரதி அவளை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆட்களை அனுப்பியிருந்தான். மதிய இடைவெளியில் சொல்லலாம் என்று திட்டம் போட்டிருந்தான். சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று அவனும் அவன் நண்பனது வம்பில் ஈடு கொடுத்து கொண்டிருந்தான். வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த professor பார்த்துவிட்டார் அவர்கள் இருவரையும். உடனே வெளியிலும் அனுப்பி விட்டார். ஹையா செம்ம டேய் டேய் டேய் ப்ளீஸ் டா எனக்கு அவ இல்லாம வாழ்க்கையே இல்லனு இருக்குடா என்று வருந்த ஆரம்பித்த நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை பாரதிக்கு. மதிய இடைவெளியும் வந்தது மாயா வந்து அவனை பிடித்துக்கொண்டாள். இதான் சாக்கு என்று பாரதி தனியே வந்து அவன் அனுப்பிய ஆளிடம் விவரம் பெற்றுக்கொண்டு ம்ரித்யுவை சந்திக்க சென்றான். ம்ரித்யு மாயாவிடன் போராடிக்கொண்டிருப்பது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது. சிரித்துக்கொண்டே அவர்களுடன் சென்றிணைந்தான். அவனை கண்டவுடன் ம்ரித்யுவிற்கு கோவம் வந்தது. ஏற்கனவே மாயாவை என்ன செய்வதென்றே தெரியாமல் இப்போது தன்னவளின் விவரங்கள் எதுவும் தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தான். பெயர் ஒன்றே தெரியும் ஆயுதா. யார் வைத்திருப்பார்கள் இவ்வளவு அழகான வித்யாசமான பெயரை என்று பல நேரங்களில் அவன் நினைத்ததுண்டு. ஏன் அவளிடம் வாங்கிய பொம்மையிடம் பேசும்போதெல்லாம் கூட, உனக்கு யாருடீ இப்படி ஒரு பேரு வெச்சா பொருத்தமான பெயரா என்று தெரிலடீ, ஆனா நீ தனியா தெரிவ இந்த பெயரில் பல நேரங்களில் நினைத்துக்கொண்டு இருக்கின்றான். எத்தனை நாட்கள் இரவில் அவளது பெயரை புலம்பி இருப்பான். அவளிடம் தேடி அலைந்திருக்கின்றான். பலன் கிடைத்தாற்போல அவள் இவன் கல்லூரியிலேயே. மாயா உன்ன உன்னோட கிளாஸ் professor கூப்பிடுறார் நீ போகல ஏதோ உன்னோட record submission பத்தி கேட்கணுமா என்று பாரதி அவளை வெளியே அனுப்ப ம்ரித்யு வித்யாசமாக பார்த்தான். டேய் உண்மையா தாண்டா கூப்பிட்டாரு. போயெல்லாம் சொல்லல என்றவுடன் திரும்பவும் அவன் முகம் தொங்கிப்போனது. சாப்பிடாமல் அந்த இடத்தை விட்டு அகல நினைத்தான். பசலை நோய் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் உண்டு. காதலியை கண்களில் காணும் வரை பொறுமையாய் இருப்பார்கள், பார்த்தவுடன் அவர்களுக்கு அவளில்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையே வரும். ம்ரித்யு அதனை பொய்யாக்கவில்லை. காலை அவளை பார்த்தது முதல் அவளை சந்தித்த முதல் நாளை நினைத்து நினைத்து உருக ஆரம்பித்து விட்டான். முதன் முதலில் அவளை பார்த்த அன்று அவள் உடல் உடை என்று எங்கு பார்த்தாலும் களிமண். மண்ணில் அவள் முகம் சற்று குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். கண்களில் தெரிந்த ஒளி, ஈர்ப்பு காந்த கண்ணழகி என்றே பாட வேண்டும் என்று தோன்றியது இப்போது அவனுக்கு. பச்சை நிற பாவாடை சட்டை என்று சிறு பெண்ணாக இருந்தாள். வயது வந்த பெண் தான் என்றாலும் அதற்க்கான உடலமைப்பு அவளுக்கு அப்போது இல்லை. நயன்தாரா ஸ்னேகா என்று யார் முக சாயலையும் ஒத்து போகாத லட்சணமாக முகம், எந்த நடிகையுனேயும் இல்ல யாருடனும் ஒத்து போகாத முகம். எல்லோருக்கும் பிடித்த முகமாகவே தோன்றியது ம்ரித்யுவிற்கு. முழுதாக 4 மணிநேரங்கள் ஆகின்றன. அவனால் இதனையே தாக்கு பிடிக்க முடியவில்லை. இது எதுவும் பாவம் நம் கதாநாயகிக்கு தெரியாது. எழுந்து செல்லும் தன் நண்பனை பார்த்தான் பாரதி. மச்சி எங்கடா போற. எங்கயோ போறேன் போங்கடா. டேய் மாப்பிள்ளைக்கு ஒரு surprise குடுக்கலாம்னு பார்த்தேன். surprise என்றவுடன் நின்ற ம்ரித்யு திரும்பி தன் நண்பனை பார்த்தான். விட்டால் அழுதிருவ போல. சரி வா அவளை பத்தி சொல்றேன் என்று சொன்ன அடுத்த வினாடி தனது நண்பனை தூக்கி தட்டாமலையாய் சுற்றினான். டேய் டேய் விடுடா. தல சுத்துது விடு டா. இருவரும் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்தார்கள். சொல்லுடா என் உயிர் நண்பன்டா நீ. டேய் இப்போதான் உன் உயிர் அவன்னு சொன்ன. இப்போ என்ன சொல்ற. டேய் மொக்க போடாம சொல்லுடா. சரி கேளு அவ பேரு ஆயுதா. தெரிஞ்ச matter சொல்லாம புதுசா எதையாச்சும் சொல்லுடா. டேய் இது தெரிஞ்ச matter ஆ. எப்படி உனக்கு அவ பேரு தெரியும். டேய் அன்னைக்கு அந்த stall போட்டங்கள்ல அப்போவே அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேண்டா. மேற்கொண்டு சொல்லேன். சரி சார் கேளுங்க. அவங்களுக்கு அப்பா அம்மா கிடையாது. தனியா தான் வளந்திருக்கா. அந்த கிராமத்தில இதை டீச்சர் யாரோ தான் படிக்க வெச்சுட்டு இருக்காங்க. அனாதை பொண்ணு. இப்போ நல்ல மார்க் வாங்கி merit ல நம்ப காலேஜ் ல சேர்ந்திருக்கா. பொறுப்பான பொண்ணு. அந்த ஆசிரமத்திற்கு தன்னல முடிஞ்சதை செய்யானும்னு stall போட்டு hand crafts வித்துட்டு இருக்கா. இதான் அவலொட story. இனிமேல் கதையை நான் சொல்லட்டா இல்ல நீ சொல்றயா கேட்டான் நீங்க ஒரு ஆணியும் கழட்ட வேண்டாம் சார் நாங்களே எல்லாத்தையும் கழட்டிக்கறோம் என்று சொல்லி முடிக்கவும் அவனது நண்பர்கள் அனைவரும் ஹேய் என்று கோரஸ் ஆக கத்தவும் சரியாக இருந்தது. அந்த இடமே சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. பள்ளி நண்பர்கள் ஒரு விதம் என்றால் கல்லூரி நண்பர்கள் ஒரு விதம். கல்லூரி செல்லாதவர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை. கல்லூரி சென்றவர்களுக்கு அது ஒரு கனா காலம் தான்.

ஆயுதா தாய் தந்தை இல்லாத அனாதை பெண்ணா என்ற நினைப்பை விட, உனக்கு நான் தாயும் தந்தையாக இருந்து அவர்கள் கொடுக்காமல் விட்டுச்சென்ற அத்தனை அன்பையும் பொழிவேனடி என் கண்ணே என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டே இருந்தான். உனக்கு நீ யாருமில்லாதவள் என்ற எண்ணம் வராமல் பார்த்துக்கொள்வேனடீ. நான் தான் உலகம், என்னுடன் இந்த உலகை நீ சுற்றி வர வேண்டும் என்று ஏதேதோ முடிவுகள் எடுத்துக்கொண்டான். பாவம் விதி வலியது அவனுக்கு தெரியாதே.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top