ஆயுதா 18

அன்று தான் ம்ரித்யு அவளை இரண்டாம் முறையாக சந்தித்து இருந்தான். டேய் அவ எந்த கிளாஸ் என்ன எதுன்னு கொஞ்சம் டீடெயில்ஸ் வேணுமடா பாரதி. நீ ஏதாச்சும் பண்ணேன். டேய் என்னடா என்ன போய் கேக்கற, எனக்கு அதெல்லாம் தெரியாது. டேய் ப்ளஸ் டா. சரி யாரு அந்த பொண்ணு உனக்கெப்படி அவளை தெரியும் என்று எதிர் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தான் பாரதி. மாயா நீ கிளாஸ் க்கு போ நாம லஞ்ச் ல மீட் பண்ணலாம் என்று அவளை துரத்தி விட்டான். அவளும் சரி ம்ரித்யு என்று சென்று விட்டாள். இப்போ கேளு நீ கேக்கணும்னு நெனைக்கறத என்று பாரதியின் முன் அமர்ந்தான். யாருடா அவ உனக்கு அவளை ஏற்கனவே தெரியுமா? அவளை பார்த்தென்ன ஏன் இப்படி ரியாக்ட் பண்ற. டேய் அவளை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் எங்க அம்மாவோட கோயிலுக்கு போனப்போ பார்த்தேண்டா அப்போ அனாதை ஆசிரம பிள்ளைகளுடன் நின்னுட்டு இருந்தா. அந்த இடத்தில பளிச்சுன்னு இருந்தா. எனக்கு அவளை ரொம்பவும் பிடித்துப்போனது. அப்பறம் இப்பதான் பாக்கறேன். இப்போ பாத்தோடனே அந்த பல்பு இன்னும் பளிச்சுன்னு எரிஞ்சுதுடா. அதான் லவ் பண்றேன் போல. டேய் என்று எல்லோரும் அவனை சுற்றி வம்பு செய்ய ஆரம்பித்தனர். கல்லூரி வாழ்க்கை என்றுமே ஒரு பட்டாம்பூச்சி வாழ்க்கை. அதில் எப்போதுமே ஒரு சுவாரசியம் உண்டு, எல்லோருக்கும் ஒரு காதல் கதையும் உண்டு. அறிமுகம் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் நண்பர்கள். நண்பர்களின் காதலிகள் தங்கைகள், காதலர்கள் அண்ணன்மார்கள். எல்லோரும் உறவுகள். வேறு துறை மாணவர்கள் சண்டை, அடுத்த கல்லூரி மாணவர்கள் சண்டை வந்தால் வேறு துறை மாணவர்கள் நண்பன். நண்பனின் நண்பர்களும் நண்பர்களே. பிரிவினை கிடையாது, சோகம் கிடையாது. எப்போதும் சந்தோஷம் மட்டுமே. வாழ்க்கை அவர்கள் கல்லூரிக்குள் அடங்கி விடும். ம்ரித்யு சிறிய வயதில் இருந்து ஆசைப்பட்டதல்லாம் அடையும் அளவிற்கு செல்வம் படைத்தவன். அதனாலோ என்னவோ அவனுக்கு எதன் மீதும் அதிக ஆசை இல்லை. இருப்பதை சாப்பிடுவது, கிடைத்ததை போதும் என்ற பாங்கில் இருந்து விட்டான். அவன் முதன் முதலில் ஒரு பெண்ணை பார்த்து அவளை தனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லுவது இதுவே முதல் முறை. எந்த பெண்ணிடமும் கண்ணியம் தவறாமல் நடப்பான். முகம் பார்த்து பேசும் நல்ல குணம் கொண்டவன். கொஞ்சம் முன்கோபி. அதனால் சீக்கிரம் அவனுக்கும் மற்றவர்களுக்கும் சண்டை வந்து விடும். அவனை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அவனுடன் இருக்க இயலும். எத்தனை எத்தனையோ பெண்கள் அவன் நினைத்தாள் கிடைத்துவிடும் ஆணழகன். யாரும் பார்த்தால் உடனே சொக்கி போய்விடும் கண்கள். பார்க்க அழகாக இருப்பான். அதனாலேயே அவனை பெண்கள் சூழ்ந்து இருப்பார்கள். இவன் எல்லோரையும் அழகாக கழட்டி விட்டு விடுவான். தன்னை காதலிக்கும் பெண்ணை தவிர யாரும் அவனை நெருங்க விட கூடாது என்பதில் கவனமாக இருப்பான். மாயா அத்தை பெண் என்பதனாலேயே அவன்னுடன் இருக்கின்றாள். இல்லையெனில் அவளும் எப்போதோ மற்ற பெண்கள் கதிதான். அவளை பற்றி அவனது ஆணையிடம் 1000 முறை சண்டை போட்டு இருக்கின்றான். அம்மா எனக்கு அவளை திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை தேவை இல்லாமல் அவளுக்கு கற்பனைகளை வளர்த்து விடாதீர்கள் என்று. ஆனால் தம்பி இது அப்பாவோட எண்ணம் என்னாலலாம் ஒன்னும் செய்யமுடியாது. கல்லூரி படிப்பு முடியட்டும் எல்லாம் அப்பறம் பேசிக்கலாம். நீ இப்போதைக்கு எதையும் போட்டு கொழப்பிக்காம படிக்கற வழிய பாரு என்றுவிட்டார். அவனும் சரி தன்னை மீறி என்ன நடக்க போகின்றது என்று விட்டு விட்டான். அதுவே தனக்கு பின்னாளில் பெரிய ஆபத்தை தரும் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top