ஆயுதா 15
அப்போது சில குழந்தைகள் தங்கள் கைகளில் சின்ன சின்ன பொருட்களை வைத்து விளையாடி கொண்டு இருந்தனர். ம்ரித்யு அப்படி பட்ட பொருட்களை எல்லாம் பார்த்தது கிடையாது. உண்டிவில், குட்டி கை ராட்டினம் மற்றும் சமையல் செய்யும் சின்ன சின்ன பொருட்கள் என அது போல நிறைய இருந்தது. அங்கே விளையாடிக்கொண்டு இருந்த ஒரு பாப்பாவிடம் என்ன பாப்பா இது எங்க கிடைச்சுது என்று கேட்டு அங்கே ஆயுதா இருந்த மரத்தடிக்கு சென்று பார்வையிட்டான். அப்போது அங்கே குட்டி ராணி தேனீ போல் சுறுசுறு என்று ஆயுதா தனது கைகளால் சின்ன சின்ன பொருட்களை மரத்தினாலும், மண்ணிலாலும் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். அவனுக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து போயிற்று. சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக கண்களில் தோன்றினாள். இருந்தும் அவனுக்கு அவள் மேல் அப்போது காதல் எல்லாம் வரவில்லை. அவளை பிடித்திருந்தது அவ்வளவே. அவன் பார்த்த பெண்கள் போல் அவளில்லை. அவளிடம் இருந்து எதையாவது வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவளிடம் சென்று கடையில் உள்ள பொருட்களை பார்வை இட்டான்.
அவனுக்கு ஒரு ராஜா ராணி குதிரையில் இருந்த மண் பொம்மை மிகவும் பிடித்து போனது. அதனை காண்பித்து இத யார் பண்ணா ? ரொம்ப நல்லாருக்கு என்று அதனை வாங்குவதற்காக அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். ஏய் பாப்பா இந்த doll என்ன rate ? அவளுக்கு கோவம் வந்தது. என்னது ஏய் யா ? அப்படிலாம் கூப்பிடாதீங்க, என் பேரு ஆயுதா என்றவுடன் அவனுக்கு அந்த பெயரில் ஒரு ஈர்ப்பு வந்தது. ஆயுதா தனக்கு தானே சொல்லி பார்த்துக்கொண்டான். அவனுக்கு பிடித்து போய்விட்டது. சரி ஆயுதா இந்த doll என்ன rate ? அந்த doll யாரு பண்ணது ? அது அது வந்து அதை நான் தான் பண்ணேன் ஆனா எனக்கு அதோட விலை தெரியாது. அவளுக்கு விலை கூறும் வயதில்லை. எப்போதும் ஆசிரம நிர்வாகிகள் தான் பொருள் விற்பதில் இருப்பார்கள், இவளுக்கு செய்வது மட்டுமே வேலை. அப்போது அவர்கள் உணவிற்க்காக, வெளியில் சென்றிந்தனர். என்னது விலை தெரியாதா என்று அந்த விலை மதிப்பற்ற அழகியிடம் கேட்டுக்கொண்டு இருந்தான். அந்த நேரம் அவனது அம்மா மற்றும் மாயா வந்து விட, என்ன தம்பி இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க, இல்லம்மா இந்த doll is so beautiful அதான் வாங்கலாம்னு பார்த்தேன். மாயா உடனேயே. Hei this is not that much good. This is made just in mud. சொன்னவுடன் அவனுக்கு கோவம் வந்தது. ஆயுதாவிற்கு கொஞ்சம் வருத்தம் ஆனது. ம்ரித்யுவின் அம்மா அவன் கோவத்தில் எதுவும் சொல்லிவிட கூடாது என சரிப்பா நீங்க வாங்கிக்கோங்க என்றார். ஆசிரம நிர்வாகிகள் வந்து விட, விலை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவன் அவளது கண் மறையும் வரை பார்த்துக்கொண்டே சென்றான். மாயா அவனை கவனித்துக்கொண்டே வந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் ம்ரித்யு உடனேயே தனதறைக்கு விரைந்து சென்று அந்த பொம்மையை பத்திரப்படுத்தினான்.
அவனுக்கு அந்த பொம்மையை இன்று பார்த்தாலும் தானும் ஆயுதாவும் இருக்கும் நினைப்பு மட்டுமே வரும். ஆயுதா நினைப்பு வரும் போதெல்லாம் அவனுக்கு இந்த பொம்மையை பார்த்து பேசுவது பிடிக்கும். அதற்க்கு பிறகு பல நேரங்களில் அந்த மரத்தடிக்கு சென்று அவளை தேடி இருக்கின்றான் ஆனால் அவள் கிடைக்கவில்லை.
"அவளில்லா நேரங்களில் அவளை மட்டும் நினைக்கும் இதயம்,
அவள் இருக்கு திசை கண்டு துடிக்கும் இதயம்,
எப்போதடீ உன்னை பார்ப்பேன் என்று எங்கும் எனது கண்கள்,
சீக்கிரம் எந்தன் உள்ளம் தேடி வந்துவிடடீ என் காதலியே"
என்று கவிதை பாடிக்கொண்டு இருந்தான்.
அன்று தான் அவளை திரும்பவும் பார்க்க முடிந்தது. கல்லூரி சேர்ந்து இருந்த 2ம் நாள் மாயாவிடம் தப்பிக்க நினைத்து சீக்கிரமே கல்லூரிக்கு வந்திருந்தான். அவனுடைய பள்ளி நண்பர்கள் சிலரும் அவனுடனேயே அதே கல்லூரியில் சேர்ந்து இருந்தனர். அவர்கள் எல்லோரும் மைதானத்தின் பக்கத்தில் இருந்த மரத்தடியில் உக்கார்ந்து பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருந்தனர். ம்ரித்யு மனம் ஏதோ ஒரு தவிப்பை உணர்ந்திருந்தது. என்னவோ போல இருக்குடா மச்சி. என்னன்னு சொல்ல தெரில. மனசு பட பட ன்னு இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு இரு சக்கர வாகனம் தரையில் கிரீஈஈச் என்று சத்தமிட்டு நின்ற ஓசை கேட்டு எல்லோரும் அங்கே திரும்பி பார்த்தனர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top