ஆயுதா 14

ஆயுதா அவன் கைக்குள் தான் இருக்கின்றோம் என்ற உணர்வு வர சில நிமிடங்கள் ஆனது. இருவரின் கண்கள் மட்டுமே பேசிக்கொண்டன. தூரத்தில் கோவில் மணி சத்தம் கேட்டு உணர்வு பெற்றனர். தலை கவிழ்ந்தாள் ஆயுதா எங்கே அவள் தன்னை தவறாக புரிந்து கொண்டு விடுவாளோ இன்று இவளிடம் எல்லாவற்றையும் பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த ம்ரித்யுவிற்கும் பயம் கவ்விக்கொண்டது. அவள் கண்களில் கண்ணீர். யாரும் இல்லாத அனாதையாக வளந்தவளுக்கு இவன் இப்படி இருப்பது கொஞ்சம் அச்சத்தை தந்திருந்தது. இவனை நம்புவதா வேண்டாமா என்ற அச்சத்தை காட்டிலும் தான் தனது வசம் இழந்து அவன் வசம் சென்று கொண்டிருக்கின்றோம் என்ற அச்சமே அது. ம்ரித்யு நல்லவன் தான் ஆனால் அவனை பற்றி ஒன்றும் தெரியாது. யாரும் அவளுக்கு பக்கபலமும் கிடையாது. அதனாலே அவள் அவனை கொஞ்சம் ஒதுக்கி வைக்க நினைத்திருந்தாள். ஆனால் இன்று எல்லாம் மாறி போய்விட்டது. ஜில்லு தப்பா நெனச்சுடாதடா நான் வேணுன்னு இப்படி பண்ணல உன்ன நிறுத்த நெனச்சேன் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. ஆயுதா அவனை விட்டு வெகு தூரம் ஓடியிருந்தாள்.

அவன் சிறிது நேரம் அங்கேயே உக்கார்ந்து விட்டு பிறகு கிளம்பி கல்லூரிக்கு சென்றான். கல்லூரிக்கு செல்லும் வழியில் நண்பர்கள் அவன் சூழ்ந்து கொண்டனர். கல்லூரியில் ஒரு சின்ன பிரச்சனைடா. அந்த பிரிவை சேர்ந்த பெண்களை, நம்ப கிளாஸ் பசங்க கிண்டல் பண்ணிட்டாங்கன்னு இவனை அடிச்சிட்டாங்கடா. ஏண்டா வம்புக்கு போறீங்க. அதான் ஏற்கனவே நெறய பிரச்னை இப்போதான் சரி ஆகிருக்கு இப்போ திரும்பவும் சண்டையா ப்ரின்சிபால் நம்பளதாண்ட தப்பா நினைப்பார். உக்காரவெச்சு அட்வைஸ் வேற பண்ணிடுவாரு. இப்போ என்ன நடக்க போகுதோ வாங்கடா என்று ம்ரித்யு சென்று விட்டான். ஆயுதா நிலை வேறு மாதிரி இருந்தது. அவள் வகுப்பில் அர்விந்த் என்ற ஒரு மாணவன் அயுதாவிடம் கொஞ்சம் பேசுவான். அவன் யாரிடமும் அதிகம் பேசி ஆயுதா பார்த்ததில்லை ஆகையால் அவனை கொஞ்சம் நம்புவாள். அவனை நம்பியது தவறு என்று பிற்காலத்தில் உணருவாள். என்னாச்சு ஆயுதா. ஒண்ணுமில்ல அரவிந்த் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் கொஞ்சம் மனசு சரி இல்லை அவ்ளோ தான். கோவிலுக்கு போனா மனசு சரி இல்லையா ஆச்சர்யமாக கேட்டான். ஆமாம்பா. விடு. வா கிளாஸ் க்கு போலாம். என்று இருவரும் சென்று விட்டார்கள். போகும் வழியில் ஏன் ஆயுதா ம்ரித்யு கூட பேசிட்டு இருந்த நான் பார்த்தேன் இப்போ வேற மாதிரி சொல்ற என்னாச்சுன்னு சொல்ல மாட்டியா இல்ல விருப்பம் இல்லையா. அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்ரித்யு சும்மா தான் வந்தான். சோ கொஞ்சம் சாதாரணமா நேத்து நடந்ததை விசாரிச்ட்டு போய்ட்டான். அவ்ளோ தான். நேத்து நடந்தது என்று சொன்னவுடன் அவளுக்கு அந்த உடுப்பு நினைவிற்கு வந்தது. அதனை அவனிடம் தர வேண்டுமே என்ன சொல்வானோ என்ற நினைவில் அமர்ந்திருந்தாள். அரவிந் பேசின எதுவும் அவளது காதுகளில் விழா வில்லை. அப்போது அங்கே வந்த பாரதி அவளிடம், கண்ணம்மா என்னடா சாப்டியா என்ன பண்ண போற வரையா என்னோட கொஞ்சம் வெளில என்றான். அவளும் வெங்கண்ணா போலாம் என்று சந்தோஷமாக கிளம்பினாள். இதனை பார்த்த அரவிந் என்ன கண்ணம்மாவா அண்ணாவா என்னடா நடக்குது இங்கன்னு யோசிச்சிட்டு இருந்தான். எங்க அண்ணா என்ன கூட்டிகிட்டு போறீங்க. இங்க வாயேன் உனக்கு ஒன்னு காமிக்கணும்னு சொல்லிட்டு அங்க ம்ரித்யு எல்லோரிடமும் சண்டை போடுவதை காண்பித்தான். அவளுக்கு அதனை பார்த்தவுடன் பயம் கவ்விக்கொண்டது. யார் சண்டை போட்டாலும் அவளுக்கு பயம். இது ம்ரித்யுவிற்கு நன்றாக தெரியும் அதனாலேயே அவளுக்கு தெரியாமல் பின் பக்கம் சென்று சண்டை போட்டுகொண்டு இருந்தான். எல்லோருக்கும் இவனிடம் இருந்து சரமாரியாக அடி விழுந்து கொண்டு இருந்தது. ஒரு மாணவனுக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பித்து இருந்தது. ஒருவனுக்கு வாயில் அடி. ம்ரித்யு இவளை பார்த்து விட்டான். அவளை நோக்கி வந்தான். டேய் மீதி பேர நீங்க பாத்துக்கோங்கடா என்றுவிட்டு. ஆயுதா அவன் கைகளில் இருந்த ரத்தத்தை பார்த்து மயங்கி விழுந்து விட்டாள். ம்ரித்யு பதறி பாரதியிடம் எதுக்குடா இவளை இங்க கூட்டிட்டு வந்த. போடா பரதேசி என்று சண்டை போட ஆரம்பித்தான். பாரதி எதுவும் பேசவில்லை. இப்போ இவளை என்னடா பண்றது. சரி வா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம் என்று அவளை அழகாக தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்றான். அங்கே அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அருகில் பாரதியும் ம்ரித்யுவும் அமர்ந்திருந்தனர். ஏண்டா அவள் அங்க கூட்டிட்டு வந்த. நீ அடங்க மாட்டேங்கரடா அதான் அவளை கூட்டிட்டு வந்தேன். நீ எவ்ளோ பெரிய பிரச்னையை கூட்டி வெச்சுருக்கற தெரியுமா. அவனுங்க பண்ணது தப்பில்ல, நம்ப கிளாஸ் பசங்க பண்ணது தான் தப்பு. அவர்கள் கண்டிக்கறத உட்டுட்டு இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணி பெரிய பிரச்சனையா பண்ணி வெச்சுருக்க. அதான் அவளை கூட்டிட்டு வர வேண்டியதா போச்சு.

ஏண்டா பாரதி அவளுக்கு சண்டைனா பயமா இல்ல ரத்தம் னா பயமா? தெரில எழுந்தோன்ன நீயே கேளு நான் கிளம்பறேன் பை. சென்று விட்டான். டேய் டேய்.. ஓடியே விட்டான். ஆயுதா இன்னும் எழுந்திரிக்க வில்லை. அருகில் இருந்து அவளுடைய அழகை பார்த்துக் கொண்டு இருந்தான் ம்ரித்யு. அவனுக்கு அவர்களுடைய கடந்த கால நினைவுகள் தோன்றியது. அவன் ஆயுதாவை இதற்க்கு முன்னாலும் பார்த்திருக்கிறான். அவனுடைய காதல் 2 வருடம் அல்ல அதற்க்கு மேலும் இருக்கும்.

ஆயுதா அப்போது பள்ளிக்கூடம் படித்து கொண்டு இருந்த வயது. அப்போதெல்லாம் அவள் இந்த விடுதியில் இல்லை. அவள் ஒரு அனாதை ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தால். அவளை அந்த ஊரின் அரசினர் பள்ளி ஆசிரியர் ஒருவர் படிக்க வைத்துக்கொண்டு இருந்தார். இது ம்ரித்யுவிருக்கும் தெரியும் அப்போது அல்ல இப்போது தான் கொஞ்ச நாட்களுக்கு முன். சின்ன வயது வந்து சிறுமி தான் மட்டும் நன்றாக இருந்த போதும் என்று நினைக்கும் உலகில் எல்லோர் பசி ஆற்றும் நல்ல உள்ளம் கொண்டவள். ஏதோ ஒரு வகையில் தான் இந்த ஆசிரமத்திற்கு உதவி செய்ய நினைத்தாள். அப்போது அவளுக்கு சிறு சிறு கைவேலை பாடுகள் தெரியும் ஆதலால் அந்த ஆசிரமத்திற்கு சென்று அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதும் மட்டும் இல்லாமல் அவ்வப்போது சிறு சிறு கடைகள் போல பொது இடங்களில் போட்டு அதனை விற்பனை செய்து அதனால் வந்த வருமானத்தை அந்த குழந்தைகளின் பசியாற்ற கொடுப்பது அவளது வழக்கம். அன்று வழக்கம் போல் ஸ்டால் போடுவதற்கு இடம் தேடிக்கொண்டு இருந்த சமயம் அந்த ஊரின் மையப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் மரத்தடி நிழல் இவர்களுக்கு கிடைத்தது. ஆசிரம நிர்வாகிகள் இருவருடன் ஆயுதா மற்றும் அந்த குழந்தைகள் சிலரும் வந்திருந்தனர். கைவினை பொருட்களை அடுக்கி வைத்து விட்டு அமர்ந்திருந்தனர் யாரும் வந்து கேட்பதற்காக. அன்று ம்ரித்யு அவனுடைய அம்மா மற்றும் மாயாவுடன் ஏதோ நேத்திக்கடன் செய்வதற்காக அந்த கோவிலுக்கு வந்திருந்தனர். பொதுவாகவே ம்ரித்யுவிற்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாததால் அவன் அங்கேயே நிழலில் நின்றுவிட்டான். டேய் தம்பி ராஜா வாடா கோவிலுக்கு என்று அம்மா அழைத்தும் போங்கம்மா நீங்க நான் இங்கயே காத்திருக்கிறேன் என்று விட்டு அங்கேயே நின்றுவிட்டான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top