ஆயுதா 12

அம்மா ஹோம் ஒர்க் பண்ணனுமா கொஞ்சம் சொல்லி தாயேன் ஒண்ணுமே புரியல என்று பிஞ்சு மழலையில் வந்து நின்றான் அவளுடைய யதுநந்தன் பெரியவன். பெரியவன் தான் பிறந்ததில் வயதில் 7 ஐ தொட்டிருந்தான். சின்னவன் 5 ஐ தொட்டிருந்தான் மதுசூதனன். இந்த இருவர் தான் இப்போது நமது ஆயுதாவின் வாழ்க்கை. சரி யது குட்டி வா நான் சொல்லி தரேன் சரி மது எங்க நான் பால் குடுத்தேன் குச்சுட்டானா என்று தனது நினைவுலகிற்கு வந்து விட்டாள். இன்று ஒருநாள் தான் தனது குழந்தைகளை பக்கத்தில் அமர்த்தி எல்லாம் செய்ய முடியும் நாளையில் இருந்து அவர்களே கொஞ்சம் அவர்களை தயார் செய்து கொள்ள பழக்க வேண்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளிடம் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள். டேய் 2 பெரும் நாளைலேந்து நீங்களே குளிச்சு பள்ளிக்கு ரெடி ஆய்டனும் என்ன தொல்லை பண்ண கூடாது. நான் நாளைலேந்து வேலைக்கு போக போறேன். ஏன் மா நீ வேலைக்கல்லாம் போற, எங்க கூடவே இரும்மா. உன் கூடதான்டா இருப்பேன். நீ பள்ளிக்கு சென்றதும் ஆபீஸ் க்கு போய்டுவேன் நீ ட்ராயிங் கிளாஸ் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள வந்துருவேன். டிரைவர் அங்கிள் கிட்ட அங்க இறக்கி விட சொல்லிருக்கேன் தம்பியையும் நீ தான் பாத்துக்கணும் சரியா என்றாள். அவனே குழந்தை அவன் எப்படி இன்னொரு குழந்தையை பார்த்துக்கொள்ள முடியும். யது சரிம்மா ஆனா மது கிட்டையும் சொல்லிடு அவன் ஓடிண்டே இருப்பான். நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டான் மிஸ் என்ன திட்டுவா என்றது மழலை மாறாமல். மது இங்க வா. யது சொல்றது உண்மையா நீ அவன் சொன்ன கேக்க மாட்டேங்கறாயாமே என்ன. இல்லம்மா நான் கேப்பேன் நான் குட் பாய் என்றது. சரி இப்போ உக்காந்து வீட்டுப்பாடங்களை எல்லாம் முடிச்சுடுங்க. நான் ராத்திருக்கு எதாச்சும் பண்றேன். 3 வரும் உட்காந்து வீட்டுப்பாடங்களை செய்ய ஆரம்பித்தனர்.

அம்மா ராத்திரி எனக்கு பூரி பண்ணி தரயா கேட்டது மது. அம்மா இவன் எப்போ பாரு பூரியே கேக்கறான் எனக்கு பூரி வேண்டாம் இது யது. ரெண்டு பேர் கேட்டதும் கிடையாது மோர் சாதம் தான். நான் நாளைக்கு காய்கறி எல்லாம் நறுக்கி ரெடி பண்ணி வெக்கணும். குழந்தைகள் முகம் வாடி போனது. அவள் அதனை எல்லாம் கண்டுகொண்டிருக்கின்ற நிலைமையில் இல்லை. சரி சரி ஒடனே மூஞ்சிய தொங்க போடாதீங்க நான் நாளைக்கு பண்ணி தரேன்னு சொல்லிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள். 7 & 5 வயது குழந்தைகளிடம் தான் பேசுகின்றோம் என்றெல்லாம் இல்லை அவளுடைய செயல்பாடுகள். என்ன செய்வது விதி அவளை இவ்வாறு மாற்றி இருந்தது.

யது மது பேசிக்கொண்டனர். ஏன்டா நம்ப அம்மா மட்டும் எப்பவுமே இப்படி இருக்கா, நாம குட்டி பாப்பா தானே, கீழ ஆண்ட்டி எப்படி அந்த பாப்பாவை பாத்துக்கறாங்க என்றான் மது. அம்மா பாவம்டா உடு. நாம தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்று பெரிய மனுஷ தோரணையில் யது. குழந்தைகள் அவர்கள் உலகத்தில் இருந்தார்கள். சாதம் பிசைந்து கொண்டு வந்து ஊட்டி விட்டாள் ஆயுதா. அம்மா தொப்பை ரொம்பிடுத்து போரும். சரிடா ரெண்டு பேரும் வாய தொடச்சுண்டு புத்தகத்தை எடுத்து பைக்குள் வெச்சுட்டு யூனிபோர்ம் எல்லாம் ரெடி பண்ணிட்டு படுக்கைக்கு போங்க என்றாள். அம்மா கொஞ்ச நேரம் சின்சான் பாத்துட்டு போறோமே. சரிடா ஆனா 9 குள்ள படுத்துறணும் சரியா. சரிம்மா. இரண்டும் அவள் சொன்ன எல்லாவற்றையும் செய்து விட்டு டிவி முன் அமர்ந்து விட்டனர். ஆயுதா தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். எல்லாம் ஆயிற்று மணி 9 குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு விளக்கை அணைத்து விட்டு தானும் அருகில் படுத்துக்கொண்டாள். குழந்தைகள் சிறிது நேரத்தில் உறங்கி விட்டிருந்தனர். குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். படுத்தவுடன் உறங்கி விட்டனர். கவலை என்றால் என்னவென்றே தெரியாத பருவம். இவளுக்கு உறக்கம் தான் வருவேனா என்றது. எத்தனை பாதைகளை கடந்து விட்டாள். எத்தனை முள்ளில் நடந்து விட்டாள். இன்னும் விடியவில்லை பாவம் அபலை.

நாளை விடியலாவது அவளுக்கு நன்மையாக இருக்குமா ?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top