ஆயுதா 11


காலை 7 மணி எப்போதும் போல் பிள்ளையாரை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும். நேரம் தவறி எழுந்ததால் எல்லாமே அவசர அவசரமாக செய்ய வேண்டி இருந்தது. விடுதி வார்டனிடம் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி வெளியே வந்தவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றாள். எதிரில் ஒரு பெஞ்சில் ம்ரித்யு தனது வண்டியில் அமர்ந்து இவளுக்காக காத்திருந்தான். நேற்று வரை எதுவும் இப்படி இல்லை. இன்று எல்லாமே மாறி இருந்தது. அவள் அவனை கண்டதும் இன்னும் புத்துணர்ச்சி வந்திருந்தது. முகம் முத்தாப்பாய் இருந்தது. பூவை பூவாய் மலர்ந்திருந்தாள். இருந்து எதையும் அவள் காண்பித்துக்கொள்ள விரும்ப வில்லை. இருந்தாலும் அவள் முகம் அவனுக்கு காண்பித்துக்கொடுத்து விட்டது. ம்ரித்யு இவளை பார்த்து ஹாய் என்று கை அசைத்தான். இவளது கை அவளையும் அறியாமல் காண்பித்தது. அருகில் அழைத்தான். சென்றாள். வண்டியில் ஏறும்படி கூறினான், ஏறினாள். எதுவும் பேசவில்லை. அவளை எப்போதும் செல்லும் பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிச்சென்றான். அவள் இறங்கி கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கிவிட்டு திரும்பினாள், ம்ரித்யுவும் அவளுக்கு அருகில் இருந்து சாமி கும்பிடுவது தெரிந்தது. அவனுக்கும் இது முதல் தடவை கோவிலுக்கு வருவது. அவளுக்கு அதுவும் அடுத்த ஆச்சர்யத்தை தந்திருந்தது. பிரசாதம் பெற்றுக்கொண்டு அருகில் இருந்த குளக்கரையில் இருவரும் அமர்ந்தனர். எப்போதும் அந்த குளத்தில் தண்ணீர் இருக்காது. இப்போது மழை பெய்திருந்ததால் கொஞ்சம் நீர் நிறைந்திருந்தது.

அமைதியாக உட்காந்திருந்தாள் ஆயுதா. அவளுக்கு இந்த குளக்கரையில் அமர்ந்திருக்க பிடிக்கும். சின்ன சின்ன குருவிகளின் சத்தம், கோவில் மணி ஓசை தெய்வீக மணம் கமழும் சுற்றுப்புற சூழல் ரம்யமான இசை என அந்த இடம் அவளுக்கு ஒரு மன நிம்மதியை தரும். ஆதலால் அவளுக்கு இங்கே இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம். இப்போது கூடவே ம்ரித்யு அவள் மனதுக்கு மிகவும் பிடித்து போன இடத்தில், எல்லாம் சேர்ந்து அவளை வானில் பறக்க வைத்து இருந்தது.

ஆயுதா என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே, ஆயுதாவாகவே தொடர்ந்தாள், ம்ரித்யு இது உங்க பேரு அது தெரியும் உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள். உங்களுக்கு நான் நல்லா நடிப்பேன்னு தெரியுமா, நான் அடிச்சதுக்கு கூட நீங்க எதுவுமே கேக்கலியே, ஏன் அழுதேன்னு கூட கேக்கல வேற வேற பேசறீங்க அப்படீன்னு 100 கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தாள், ம்ரித்யு அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டு இருந்தான், அவளின் அலங்காரம் இல்லாத பளிங்கு முகம், காதில் இருக்கும் பெரிய வளையங்கள் அவள் பேசும்போது ஆடிக்கொண்டு இருந்தது. எல்லாமே அவளுடைய அழகிற்கு அழகு சேர்த்து இருந்தது. இந்த ட்ராமாவிற்க்காக போட்ட உடை அவளுக்கு கணகச்சிதமாக பொருந்தி இருந்தது மேலும் அவனை இன்னும் இம்சித்து இருந்தது. அவனுடைய எண்ணம் முழுவதும் அவள் ஆக்ரமித்து இருந்தாள். அவள் கேட்ட எதுவும் அவனது காதில் விழாத அளவுக்கு இருந்தது அவளது ஆக்ரமிப்பு. ஆயுதா அவனையே பார்த்துக்கொண்டு பதிலுக்காக காத்திருந்தாள் அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது அவளுக்கு மேலும் வெட்கம் வந்து முகம் சிவந்திருந்தாள். ஆடவன் தன்னுடையவன் குறு குறு என்று பார்க்கும் பார்வைக்கு எல்லா பெண்டிரும் அடிமை இவள் எம்மாத்திரம்.

ம்ரித்யு என்று அழைத்தாள் அவ்வளவு தான் அவன் தன்னின் மீது ஒரு வாடை காற்று வீசி சென்ற மயக்கத்தில் சென்று விட்டான். இத்தனை வருடங்களில் தன்னுடைய பெயரை யார் யாரோ எப்படி எல்லாமோ கூப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் ஆயுதா கூப்பிடும் போதும் அதனுடைய தாக்கம் தன் உயிர்வரை சென்றதை ம்ரித்யு உணர்ந்தான். ம்ரித்யு என அவனை அசைத்தாள் என்னங்க நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்க. சாரி ஆயுதா. என்ன கேட்டீங்க. எனக்கு நீங்க கேட்டது கொஞ்சம் காதுல விழல, என்னது காதுல விழலையா. ஆச்சர்யமாக கேட்டு விட்டு, திரும்பவும் எல்லா கேள்விகளையும் கேட்டு வைத்தாள். உனக்கு இவ்வளவு பேச தெரியுமா. என்றுவிட்டு, ஒவ்வொரு கேள்வியாக கேள் ஜில்லு என்றான். என்னது ஜில்லு வா கண்ணை உருட்டினாள். அவளுக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. இன்னும் இருவரும் காதலை சொல்லிக்கொள்ள வில்லை அதுக்குள்ள என்னனா பண்ணுதுங்க. ஹ்ம் ஆமாம் சூர்யா ஜோ சினிமா படம் ஜில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்தேன் அப்போதே உனக்கு இந்த பேர் வெச்சுட்டேன். என்னோட பெயரே நல்லா தானே இருக்கு, எதுக்கு இந்த பெரு. இந்த பெரு நான் மட்டும் உன்ன கூப்பிட. நீங்க மட்டும் ஏன் என்ன கூப்பிடனும். அச்சோ இவளுக்கு எப்படி சொல்லி புரியவெப்பேன். என்றுவிட்டு. உன்னோட கேள்விக்கு பதில் சொல்லணும் ஒன்னு ஒண்ணா கேளுன்னு சொன்னேன் நீ வேற வேற கேள்வியை கேட்டுகிட்டே இருந்தா நான் எந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன் என்றான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top