ஆயுதா 1
அன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.
டேய் பசங்களா பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆச்சு பாரு, வேன் வந்திரும் சீக்கிரம் கிளம்புங்க, எப்பவும் நடப்பது தான் இருந்தாலும் இன்று கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. குழந்தைகளை அனுப்பி விட்டு இவள் தயாராகி தன்னுடைய இரண்டு சக்கர வாகனம் எடுத்துக்கொண்டு விலாசம் கேட்டு கிளம்பினாள் நேர்முக தேர்வுக்கு. சரியான நேரத்தில் வந்து விட்டாள் ஆனால் யாரும் இல்லை அவளை தவிர தேர்வுக்கு. சார் வர சொல்லிருந்தார் சொன்னவுடன் அங்கு இருந்த 50 வயது மதிக்த்தக்க ஒருவர், இரும்மா கூப்பிடுறேன் சொல்லி விட்டு சென்றார். சிறிய அளவிலான அலுவலகம் தான் இருந்தாலும் அழகாக இருந்தது. எல்லாவற்றையும் அலந்தாள் யார் யார் என்ன என்பதெல்லாம் பார்த்துக்கொண்டாள் அவளுக்கு அவர்களின் பெயர் தெரியாது ஆனால் என்ன செய்கிறார்கள் என்பதில் கருத்தாக இருந்தாள். கேள்விகள் கேட்டாள் ஒன்னும் தெியாது யோசனை ஒரு புறம் இருக்க குழந்தைகள் வந்தாள் என்ன செய்கிறார்கள் என்பதில் கருத்தாக இருந்தது. காத்திருந்தாள், மேலே இருப்பவர்கள் அழைப்புக்காக, நாம் கொஞ்சம் அவளை பற்றி பார்ப்போம், பெயர் ஆயுதா, வித்யாசமான பெயர், எல்லோரும் கூறினார்கள், எப்படி உனக்கு இந்த பேர், யார் வெச்சா இதனை வருடங்களாக, அவளுக்கு அவள் பெயரை யாரிடம் கூறினாலும் அவர்கள் கேட்கும் கேள்வி இவை தான், அவளுக்கே தெரியாது யார் தனக்கு இந்த பெயரை வைத்தார்கள் என்று. தாய் தந்தை யார் எப்போது பிறந்தோம் எதுவும் அவளுக்கு தெரியாது, 23 வயதான திருமணம் ஆன 2 குழந்தைகளுக்கு தாயான அபலை பெண். 20 வருடங்களுக்கு முன், ஒருநாள் அவள் பெற்றோருடன், தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டிற்கு பஸ்ஸில் பயணம் செய்யும் போது பஸ் விபத்துக்குள்ளானது என்று அவளுடைய தாத்தா பாட்டி கூறி கேட்டிருக்கிறாள், அதில் அவளது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார்கள், அது உண்மை தானா என்று கூட அவளுக்கு தெரியாது, அவளுக்கு 5 வயதான போது அவளது தாத்தா பாட்டியும் இறந்து போனார்கள், எதனால் என்றால் இன்று அவளுக்கு தெரியாது, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் வளர்ந்தாள், ஏதோ சாப்பிட்டு இதான் வாழ்க்கை என்று தெரியாமல், வாழ்ந்து கொண்டிருந்தாள் ஆயுதா. அந்த ஊரின் வாத்யார் ஒருவர் அவளுக்கு அவ்வப்போது கொஞ்சம் படிப்பு சொல்லிக்கொடுத்து அரசு உதவி வாங்கி கொடுத்து அவளுக்கு மேல் படிப்புக்கு வழி செய்தார் அவரும் இப்போது உயிருடன் இல்லை, அவளுக்கு அரசு கலைக்கல்லூரியில் பட்ட படிப்பிற்கு உதவி கிடைத்திருந்தது, நன்றாக படிக்கும் மாணவி என்பதால், படிப்பு, உணவு உடை ஹாஸ்டல் எல்லாமும் அவளுக்கு இலவசமாக, செய்து கொடுத்து இருந்தனர், கல்லூரி வாழ்க்கை தான் அவளுக்கு அவள் வாழ்க்கையை மேலும் சிக்கல் ஆக்கியது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top