அயுதா 21
சார் அந்த பொண்ண கூட்டிட்டு வந்தது நீங்க தானே என்று ஒரு nurse ஓடிவந்தாள். ஆமாம் என்று பார்வையை குறுக்கி அவளை பார்த்தான். அந்த பொண்ணு தனியா இருக்காங்க நீங்க இங்க வந்து பேசிட்டு இருக்கீங்க, duty doctors இப்போ rounds வருவாங்க அதான் உங்கள கூப்பிடலாம்னு வந்தேன். அங்க அவளோட நண்பர்கள் இருந்தார்களே, இப்போ இவங்க வந்து நம்பள கூப்பிட்றாங்க என்ன பண்றது என்று யோசிப்பதற்குள். சரி வாடா மச்சி போலாம் என்று பாரதி விரைந்திருந்தான். அவர்கள் ஆயுதா இருந்த அறைக்குள் நுழையவும் மருத்துவர்கள் வரவும் சரியாக இருந்தது. அங்கே அரவிந் ராதா இருவருமே இல்லை. நீங்க ரெண்டு பெரும் யாரு இவங்களுக்கு என்ன வேணும் என்று கேள்விகள் ஆரம்பித்தன. பாரதி சற்றும் யோசிக்க வில்லை. அவ என் தங்கச்சி doctor இவன் என்னோட நண்பன். சரி அவங்க ரொம்ப weak ஆ இருக்காங்க அதான் மயங்கிட்டாங்க. கலம்பற சாப்பிடவும் இல்லைனு நினைக்கறேன். இப்போ She is alright. இந்த trips முடிஞ்சா உடனே நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்றுவிட்டு சென்றார்கள். பாரதி ம்ரித்யுவை முறைத்தான். வேறு இடமாக இருந்தால் அடி வெளுத்து வாங்கிருப்பான். மருத்துவமனை என்பதால் முறைப்புடன் நின்றது. ஆயுதா இன்னும் கண்ணை திறக்கவில்லை. ஏன்டா ஏதோ அவ நண்பர்கள் வந்துட்டாங்க உட்டுட்டு வந்துட்டேன்னு சொன்ன. யாரையும் காணல. சரி இருடா பாக்கறேன் என்று ம்ரித்யு வெளியில் வந்தான். அங்கே தூரத்தில் ராதா தனியாக யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தது தெரிந்தது. அரவிந் காணவில்லை. இவனை பார்த்தவுடன் ராதா வந்தாள். என்னம்மா அவளுக்கு முடியலன்னு உன்ன பாத்துக்க சொன்னா நீ வெளில போன் பேசிட்டு இருக்க ? அந்த அரவிந்த் எங்க. அவன் தான் அவளை பாத்துக்கறதா சொன்னான் எனக்கு வீட்லேந்து போன் வந்துச்சு அதன் பேச போய்ட்டேன். சாரி என்றாள். அரவிந்தை தேடுவது தனக்கு தேவை இல்லாத வேலை என்றுவிட்டு நீ போர்துன்னா போம்மா நான் அவளை விடுதியில் விட்டுடறேன். என்றதும் ராதா சரி நான் கிளம்பறேன் தேங்க்ஸ் என்றுவிட்டு சென்றுவிட்டாள். என்ன நண்பர்கள் இவர்கள் என்று நினைத்துக்கொண்டு அறைக்கு சென்று பாரதியுடன் அமர்ந்து விட்டான். பாரதிக்கு கோவம் குறைய வில்லை. இல்லடா மாப்ள இப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது அதான். டேய் எனக்கு அதெல்லாம் கோவம் இல்லடா அதான் நாம வீட்டுக்கு போகலியே இங்க தானே நின்னு பேசிட்டு இருந்தோம். நீ ஏன் கலம்பற அவளை பார்த்ததை என்கிட்டக சொல்லல. டேய் சொல்லக்கூடாதுன்னு இல்லடா. நான் அவளை பார்த்துட்டு வந்த ஒடனே உன்கிட்டக பேசணும்னு தான் வந்தேன் அதுக்குள்ள அவனுங்க என்னென்னமோ பண்ணி சொதப்பிட்டனுங்க. இந்த விஷயத்தில நாங்க ரெண்டுபேரும் சாப்பிடலங்கர்தே நெனப்புல இல்ல. என்னது நீயம் சாப்பிடலையா. சரி இரு நான் போய் உங்க ரெண்டுபேருக்கும் எதையாச்சும் சாப்பிட வாங்கிட்டு நான் டீ குடிச்சுட்டு வரேன் என்றுவிட்டு கிளம்பினான். டேய் நான் வந்தோன்ன முதல் வேலை நீ ஏன் அவளை காலம்பற பாத்த என்ன பேசுன எனக்கு சொல்லணும் சொல்லிட்டேன். ஆயுதா எப்போது கண்ணை திறப்பாள் என்று காத்திருந்தான் அவன். அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தது இரண்டு விழிகள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top