7

அந்த கெஸ்ட் houseil அங்கு வந்தவர்கள் தத்தம் அறையில் உறங்கிக்கொண்டிருக்க நிர்ச்சலனமாய் உறங்கிக்கொண்டிருந்த ஆதிராவின் முகம் உறக்கத்திலேயே திடீரென குழப்பத்தில் சுருங்கியது .அவள் நினைவடுக்குகளில் தெளிவில்லாத காட்சிகள் படமாய் விரிய எங்கோ நினைவலைகளில் அடித்து செல்லப்படுவதைப்போல் உணர்ந்தாள் ஆதிரா .திடீரன கண் விழித்தவள் தன்னை சுற்றி பார்க்க எங்கும் காரிருள் மண்டிக்கிடந்தது .

அவள் காதுகளில் பல குரல்களிலும் மரணக்கதறல்கள் கேட்க தான் எங்கே இருக்கிறோம் என்பதையே உணர முடியாதவளால் தன் காதுகளில் பேரிரைச்சலாய் கேட்கும் மரணஓலத்தை கேட்க முடியாது இரு காதுகளையும் தன் கை கொண்டு பொத்தியவள் தன் கண்களையும் இறுக மூடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து ஓட ஆரம்பித்தாள்.

அவள் ஓட ஓட அந்த குரல்கள் இன்னும் அதிகமாய் கேட்க கால்கள் எதிலோ தடுக்கி கீழே விழுந்தவள் காதுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்த அந்த சத்தங்கள் சற்று நேரத்திற்கு பின் மொத்தமாய் அடங்கியது .கீழே விழுந்ததில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்று தன்னை சரி பார்த்துக்கொண்டவள் பாதத்தில் முள் குத்தி ரத்தம் கசிவதை தவிர்த்து கையில் மட்டும் சிறு சிராய்ப்பு ஏற்பட்டிருக்க அந்த முள்ளை பிடிங்கி இருந்தவள் தரையிலிருந்து எழ அவள் முன்னே தூரத்தில் சிறு ஒளி கசிவதை உணர்ந்தாள் ஆதிரா.எழுந்தவள் தட்டு தடுமாறி அங்கே அவள் முன் இருந்த கிளைகளை விலக்கிக்கொண்டு முன்னேறி நடந்தாள்  .

அவள் கண்முன்னே ஓங்கி உயர்ந்து காட்சி அளித்ததொரு அழகிய அரண்மனை .அந்த இருளிலும் அதை சுற்றி மண்டிக்கிடந்த வேர்களும் ,ஆந்தையின் அகவலும் ,ஓநாய்களும் ஊளையும் அப்பாழடைந்த அரண்மனையை திகில் மூட்டுவ இயற்கையிலேயே சற்று பயந்த சுபாவம் உடைய ஆதிரா எப்படி தான் அத்தனை தைரியத்தை அடைந்தாளோ ஏதோ ஓர் உந்துதலில் அவள் கால்கள் முன்னேற அந்த அரண்மனையின் கதவுகளில் கை வைத்து உள்ளே சென்றாள்.

அவள் அவ்வரண்மனையில் கால்களை உள்ளே வைத்த நிமிடம் அங்கே அக்காட்டிற்கு மத்தியில் அமைந்திருந்த ஆற்றில் குமிழ் குமிழாய் நுரைகள் கிளம்ப ஆரம்பிக்க ஆங்காங்கே சூழல்கள் உருவானது .

ஏதோ ஓர் உந்துதலில் உள்ளே உள்ளே முன்னேறி அவள் செல்ல அங்கே அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவள் காலின் கீழ் இருந்த காய்ந்த சருகுகள் அவள் பாதங்களின் அடியே கசங்கி ஒலியை எழுப்ப அந்த அரண்மனையின் வாசலிற்கு வந்தவள் அதன் பிரம்மாண்டமான கதவின் முன் அப்படியே நின்றுவிட்டால் .

அது இரும்பில் ஆனதா மரத்தில் ஆனதா என்றே கூறமுடியாத அளவிற்கு தூசியால் மறைந்து இருக்க அருகே ஏதும் கம்பு தெரிகிறதா என்று தேடியவள் அங்கே கீழே விழுந்து கிடந்த குச்சியை எடுத்து அந்த கதவின் தூசிகளை தட்ட இங்கே அந்த ஆள் கொல்லும் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த காட்டில் இருந்த மரங்களனைத்தும் பெரும் புயல் காற்றில் அப்படியும் இப்படியும் அசைந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்த அக்காட்டில் காட்சியை கண்ட பிறைநிலவு பயத்தில் தன்னை மேகக்கூட்டங்களுக்கு நடுவே மறைத்துக்கொண்டது .

அந்த கதவின் தூசிகளை தட்டிமுடித்தவளின் முன்னே ஓங்கி உயர்ந்து இருபது அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் கதவில் எங்கும் பாம்புச்சித்திரங்களும் வேறுபல புரியாத சித்திரங்களும் பொறிக்கப்பட்டிருக்க ஆங்காங்கே கரையான்கள் படிந்திருக்க பண்டைகாலத்திற்கே உரிய அழகுடனும் கம்பீரத்துடனும் உள்ளே இருக்கும் ரகசியங்களை பிறரின் பார்வையிலிருந்து மறைத்து உயர்ந்து நின்றது அக்கதவு .

அந்த கதவின் வெளிப்புறத்தை வருடியவளின் மனதில் இனம்புரியாத உணர்வுகள் பல எழ அந்த கதவை தன் கையால் தள்ள முயற்சித்தாள் ஆதிரா .அவள் இங்கே கையை கதவில் வைத்து தள்ளும் ஒவ்வொரு முறையும் அங்கே எங்கோ ஓர் இருளடைந்த இடத்தில சிறிது சிறிதாய் ஒளி பெருகியது.

அவள் அக்கதவை தன் கையை வைத்து தள்ள தள்ள அக்கதவு திறக்கவே இல்லை.அவள் மீண்டும் மீண்டும் முயற்சிக்க அக்கதவு சிறிதும் அசையாதிருக்க மீண்டும் தள்ள போனவளை தடுத்து நிறுத்தியது அவள் பின்னே கேட்ட"அதுக்குள்ள என்னம்மா அவசரம்? "என்ற ஒரு குழந்தையின் குரல்.

அந்த குரலில் திரும்பியவள் அங்கே பழைய காலத்து உடைகள் அணிந்து முகத்தில் பொங்கும் பிரகாசத்துடன் குண்டு கன்னங்களும் மை தீட்டிய பெரும் விழிகளுமாய் ஐந்து மதிக்கத்தக்க ஓர் சிறுமி அவளை கண்டு சிரித்தவாறு நிற்க ஆதிராவோ அவள் அழகில் சொக்கிப்போய் அவள் உயரத்திற்கு மண்டியிட்டவள் அவள் கன்னத்தை வருடி "யார் பாப்பா நீ? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற ?"என்க

அந்த குட்டி குழந்தையோ சிரித்தவள் "சாவி இல்லாம கதவை திறக்க முடியுமாமா?"என்க

அவளோ கேள்வியாய் நோக்கியவள் "இதோட சாவி எங்க இருக்குனு உனக்கு தெரியுமாடா ?"என்க

அவளோ சிரித்தவள் "தெரியும் அம்மா "என்க

ஆதிராவோ ஆர்வம் மேலோங்க "அப்போ எனக்கு அது எங்க இருக்குனு சொல்றீங்களா குட்டி?"என்க அந்த குழந்தையோ அவளின் கண்களை மூட சொன்னது .குழப்பத்துடன் நோக்கிய ஆதிராவின் கண்களில் அமைதியின் உருவாய் தெரிந்த அக்குழந்தையின் முகம் யோசனையை தவிர்த்து கண்களை மூட வைத்தது .

அவள் காதுகளில்

"இழப்புகளின் பழியை நீ தீர்க்க

அவள் பொறுப்பை ஏற்க

திறவா கதவும் திறந்திடும்

அணையா பழியின் முடிவினிலே

பழியினை முடிக்க பிறந்தவளே

உன்னை உணர்ந்து உண்மை அறிவாய் "என்று கூறி அக்குரல் தேய்ந்து மறைய

கண்களை திறந்த ஆதிராவின் முன்னே இருந்ததென்னவோ மலைபோல் குமிந்து ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த பிணங்கள் தான்.அக்காட்சியை கண்டவள் அலறி அடித்து எழ நெற்றியில் புறப்பட்ட வியர்வை அவள் முகத்தை முழுவதுமாய் நனைத்துவிட்டு கழுத்தினில் இறங்க சுற்றி சுற்றி தன் பார்வையை திருப்பியவளிற்கு அப்பொழுதே தன் அறையில் இருப்பது உரைத்தது .

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள்
"செய் கனவா எவ்ளோ பயங்கரமா இருந்துச்சு எம்மா "என்று நினைத்தவள் தண்ணீர் எடுத்து குடிக்கலாமென்று எழ அப்பொழுதே கவனித்தாள் தன் கைகளில் இருக்கும் சிராய்ப்பு காயத்தையும் காலில் முள் குதி இருந்த காயத்தையும் .

அவற்றை கவனித்தவளிற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை தலையை கையில் தாங்கியவள் குழப்பத்தில் அப்படியே அமர்ந்து விட்டாள்.அந்த குழம்பிய நிலையில் தன் அன்னை கூறிய வார்த்தைகள் அவள் மனதில் ஓடியது "ஆதிரா கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சனைனு ஒன்னு எதுவுமே இல்லடா .எப்போவாச்சும் உனக்கு குழப்பமாவும் முடிவு கிடைக்காமலும் இருந்துச்சுன்னா கண்ணை மூடி கடவுளை நெனச்சுக்கோ அவரே உனக்கு ஒரு வழி காட்டுவார் "நினைவில் வர காலையில் கோயிலிற்கு சென்று வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டவள் எழுந்து அவ்வறையில் இருந்த தண்ணீர் பாட்டிலை பார்க்க அதிலோ சொட்டு தண்ணீர் கூட இல்லாதிருந்தது .

இது வேற என்று சலித்துக்கொண்டே தன் அறைக்கதவை திறந்தவள் வெளியே செல்ல அவ்வறையின் ஜன்னல் புறத்திலிருந்து அவளின் ஒவ்வொரு செய்கையையும் கண்களில் ஏதோ ஓர் உணர்வுடன் (பாசமா? பழியா ?)கவனித்துக்கொண்டிருந்தது ஓர் கரும்புகை உருவம் .

வெளியேறியவள் ஹாலிற்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அறைக்குள் செல்ல போக அந்த ஹாலின் ஓரத்தில் ஓர் உருவம் பதுங்கி பதுங்கி செல்வதை பார்த்தாள் ஆதிரா .அவள் கனவின் நீட்சயோ ,இல்லை மனதின் உந்துதலோ அவ்வுருவத்தின் பின்னே வேக எட்டுக்களுடன் நடந்தாள் ஆதிரா .அவ்வீடு மிகவும் பெரியதாக இருந்தது கீழ் தலத்தில் ஒரு ஹாலும் பல அறைகளும் நடுநடுவே நடைபாதையும் இருக்க அந்த உருவத்தை பின்தொடர்ந்து எதனை வேகமாய் சென்றாலும் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை ஆதிராவால் .

பின் ஓர் வளைவில் திரும்பிய அவ்வுருவத்தை பின் தொடர்ந்து சென்றவள் அவ்வளைவுப்பாதையை பார்க்க அங்கே ஓர் உருவம் இருந்ததற்கான அடையாளமே இல்லாதிருந்தது.அவ்வளைவு பாதையை பின்தொடர்ந்து சென்றவள் கொல்லைபுறக்கதவு திறந்து கிடக்க அதன் வெளியே காலடித்தடங்கள் இருப்பதை பார்த்தவள் கொள்ளை புறத்தில் வேலைக்காரர்கள் தங்கிக்கொள்ள அமைந்திருந்த குடிலில் விளக்கெரிவதை பார்த்தாள் .

அதை கண்டவள் "ஓஹ் வேலை பாக்குறவுங்களா தண்ணி எடுக்குறதுக்காக வந்துருப்பாங்க நா வேற லூசு மாறி திருடன்னு நினைச்சுட்டேன் "என்று தன் தலையில் தட்டிக்கொண்டவள் பின் திரும்பி தன் அறைக்கு செல்ல அவள் சென்றபின் அந்த வளைவுப்பாதையில் அமைந்திருந்த ஓர் சிறு அறையிலிருந்து வெளிப்பட்ட அவ்வுருவம் அவள் செல்வதையே பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சை விட்டபடி ஓர் அறைக்குள் நுழைந்து கொண்டது தன்னை இரு கண்கள் கவனிப்பதை அறியாது .

அடுத்த நாள் காலை மிகவும் அழகானதாக விடிந்தது .எனில் அது அழகானதாய் முடியுமா என்பது கேள்விக்குறியே .

அவ்வீட்டிற்குள் இருக்கும் அந்த உருவம் யார் ?

ஆதிராவின் கனவின் பின்னணி என்ன ?

தொடரும் மர்மமுடிச்சுகள் மங்கலாபுரியில் அவிழ்க்கப்படுமா ?

வெயிட் அண்ட் வாட்ச் 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top