6
வெளியே வண்டி எதுவும் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்த ஆதேஷின் கண்களில் கார்,ஆட்டோ போன்ற எந்த வண்டியும் தட்டுப்படாமல் போக என்னடா இது ஒரு வண்டியையும் காணோம் என்று நினைத்தவன் சற்று அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து அங்கே போடப்பட்டிருந்த மண் ரோட்டில் நின்று இடுப்பில் கை வைத்தவன் சுட்டெரிக்கும் வெயிலில் நெற்றியில் துளிர்ந்த வியர்வையை துடைத்துவிட்டு வலதுப்புரம் திரும்பி நிற்க அவன் பின்னே "தம்பி "என்று ஒரு ஆழ்ந்த குரல் வெகு அருகாமையில் கேட்டது .
தனக்கு வெகு அருகாமையில் கேட்ட அந்த குரலில் லேசாய் திடுக்கிட்டவன் பின்னே திரும்பி பார்க்க அவன் முகத்திற்கு நேராய் தாடியும் மீசையும் முகத்தை சுற்றி மண்டிக்கிடக்க கண்கள் கருவளையம் போட்டு உள்ளே அமிழ்ந்து கிடைக்க கையில் தடியுடனும் தலைமுடி ஆங்காங்கே பரட்டையாய் இருக்க ,பட்டினியில் பலநாள் கிடந்தவர் போல் அவர் உடல் இளைத்து கருத்து மெலிந்து கிடக்க அவர் அணிந்திருந்த உடை ஆங்காங்கே கிழிந்து தொங்கியது .
இத்தனை முதுமையிலும் கண்களில் தெரிந்த ஒளி சற்றும் குறையாதிருக்க அவனை நோக்கி ஓர் மர்மச்சிரிப்பை உதிர்த்தார் அப்பெரியவர் .
முதலில் சற்றே திடுக்கிட்டவன் பின் அவரிடம் "யார் அய்யா நீங்க இங்க என்ன பண்றீங்க என்றவன் தன் பார்வையை அப்படியும் இப்படியும் சுற்ற விட்டு இங்க வண்டி எதுவும் கிடைக்காதா ?"என்று கேட்டு விட்டு திரும்பி நிற்க
அவரோ சம்மந்தமே இல்லாமல் "இத்தனை தொலைவு எம் தாய் வழித்துணையாக வந்த உமக்கு இனி அவரை அழைத்து செல்லவோ வழி இல்லாதிருக்கும் "என்க ஏனோ ஆதேஷின் முகத்தில் என்னென்று தெரியாத ஓர் பாவம் குடியேறி அடுத்த நொடியே அவர் புறம் திரும்ப அங்கே ஓர் ஆள் நின்றதன் அடையாளமே இல்லாதிருந்தது .
அதிர்ந்தவன் சுற்றி முற்றி தன் பார்வையை திருப்ப அங்கே யாருமே இங்கே இத்தனை நேரம் இருந்ததற்கான சுவடே இல்லை காற்றில் கரைந்தார் போல் மறைந்திருந்தார் அம்முதியவர் "ரிடிகுலஸ்"என்று முணுமுணுத்தவன் அவர் நின்ற இடத்தை பார்க்க அங்கே ஏதோ ஓர் காகிதம் ஓர் கல்லின் கீழ் வைக்கப்பட்டிருந்தது .
அதை எடுத்து பார்க்க அதுவோ வெற்றுக்காகிதம் எனில் பல ஆண்டுகள் பழமையானதென்பதை உணர்த்தும் வகையில் ஓரத்தில் கரையான்கள் அரித்திருந்தது .அதை கையில் எடுத்தவன் என்ன நினைத்தானோ தன் பாண்ட் பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டான் .பின் தூரத்தில் ஒரு மாட்டு வண்டி போவதை பார்த்தவன் அதை நிறுத்த வேண்டி அவ்விடம் நோக்கி விரைய அவன் சென்ற சற்று நேரத்தில் மீண்டும் அதே இடத்தில நின்று அவன் போகும் திசையை பார்த்து சிரித்தபடியே தனக்குள்ளே ஏதோ முனங்கிக்கொண்டிருந்தார் அம்முதியவர் .
இங்கே ஆதேஷ் அந்த வண்டிக்காரரை தொடர அங்கோ ஆதிராவின் வாயை ஏதோ ஒரு உருவம் பின்னிருந்து பொத்தியது .முதலில் திகைத்தவள் பின் மின்னல் வேகத்தில் அவன் கையை பிரித்து பின் புறமாய் வளைக்க அவனோ "ஆஆ ஆதி குட்டி ஆதி குட்டி விடுடா விடுடா "என்க அப்பொழுதே போன் பேசிவிட்டு வந்த வேதித்யா ஆதிரா ஒருவனின் கையை பின்புறம் வளைப்பதை கண்டு வேகமாய் வந்தவள் இது எங்கோ கேட்ட குரலாய் இருக்கிறதே என்று பார்க்க அதற்குள் ஆதிராவோ குரலை இனம் கண்டவள் "அஜய் அண்ணா நீங்களா "என்று கையை விட தன் கையை விளக்கி கொண்டே அவர்களை நோக்கி புன்னகையுடன் திரும்பினான் வேதித்யாவின் வருங்கால கணவன் அஜய் .
அஜய் ஆண்களுக்கே உரிய சராசரியான உயரத்தில் மயக்கும் ரகசியம் பேசும் கண்களுடன் சிரிக்கையில் கன்னத்தில் ஆழமாய் விழும் குழியுடன் மாநிறத்தில் நாம் பொதுவாய் பார்க்கையில் சைட் அடிக்க தோன்றும் ஆண்களின் ரகம்.வேதித்யாவின் குடும்பமும் இவனின் குடும்பமும் குடும்ப நண்பர்கள்.அதில் வேதித்யாவிற்கும் இவனிற்கும் காதல் பூக்க உடனே வீட்டில் பேசி வேதித்யாவின் படிப்பு முடிந்ததும் திருமணம் நடப்பதற்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
ஆதிரா சிறு வயதிலிருந்தே ஆதிராவின் தோழி ஆதலால் அஜயும் ஆதிராவும் உடன் பிறவா அண்ணன் தங்கைகளாகவே பழகி வந்தனர் .
அவ்விடத்தில் அஜயை கண்டவள் ஆனந்த அதிர்ச்சியுடன் "அஜூ அண்ணா நீங்க வரதா சொல்லவே இல்ல எப்போ அண்ணா வந்தீங்க எதுல வந்தீங்க ட்ரைன்ல கூட உங்கள பாக்களையே "என்க
அவனோ "ஒய் பட்டாக்(ஹிந்தில பாட்டாக்னா பட்டாசுன்னு அர்த்தம் ) பொறுமை பொறுமை .நா உங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு நெனச்சேன் அதான் வரேன்னு சொல்லல அண்ட் நா ட்ரைன்ல வரல என்னோட ஜீப்ல வந்தேன் ஜீப் கொஞ்சம் தூரம் தள்ளி நிக்குது போதுமா" என்று பதில் அவளிடமும் பார்வை வேதித்யாவிடமும் இருக்க
வேதித்யாவோ உள்ளே அவன் வந்தது மகிழ்ச்சியாய் இருந்த போதும் வெளியே " இங்கயும் வந்துட்டியா உன்கிட்ட இருந்து ஒரு ஒரு மாசத்துக்கு நிம்மதியா இருக்கலாம்னு நெனச்சேன் முடியாது போலயே "
என்று போலியாய் சலித்துக்கொள்ள அவன் ஏதோ கூறவரும்முன் அங்கே ஆதேஷின் குரல் இடை வெட்டியது .
அந்த வண்டிக்காரரை தொடர்ந்து சென்றவன் அவரை அழைக்க அழைக்க அவர் செல்லாமல் போக "அட போங்கடா இனி நடராஜா சர்வீஸ் தான் "என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவன் மீண்டும் ரயில் நிலையத்திற்குள் வர அங்கே அஜயுடன் சிறிது பேசிக்கொண்டிருந்த ஆதிராவையே முதலில் கண்டான்.
யாரிந்த புதியவன் என்ற எண்ண ஓட்டத்துடனே அவர்களை நெருங்கியவன் கண்களில் ஏதோ திடீர் மாற்றம் .அவனை முறைத்துக்கொண்டு நெருங்கியவன் அவர்கள் அருகில் நின்று "ஆரா "என்றழைக்க அவனின் அழைப்பில் மூவரும் அவன் புறம் திரும்பினர்.
அவன் வரவை உணர்ந்த வேதித்யா "ஹான் ஆதேஷ் வாங்க வண்டி ஏதும் கிடைத்தா ?"என்க
அவனோ "இல்ல வேதித்யா எதுவும் கிடைக்கல "என்றவன் கண்கள் மீண்டும் அஜயின் மேல் விழ
அவன் பார்வையின் பொருள் உணர்ந்த ஆதிரா "ஆது இது வேதித்யாவோட fiancee அஜய் எனக்கு சொந்த அண்ணன் மாறி "என்றவள் அஜயின் புறம் திரும்பி "அண்ணா இது ஆதேஷ் எங்களோட friend "என்று அறிமுகப்படுத்தி வைக்க அந்த ஆடவர்களின் கண்களில் ஏனோ மருந்திற்கு ஸ்நேஹத்துவம் இல்லை .
அஜய் தன் கரத்தை நீட்ட ஆதேஷும் தன் கரத்தை நீட்டி அவனிடம் கை குலுக்கி கொண்டான் .கைகள் நட்பின் அடையாளமாய் குலுக்கிக்கொள்ள கண்களோ ஆராயும் பார்வையுடன் சேர்த்து சிறிது வஞ்சத்தையும் உமிழ்ந்தது .இங்கே இவர்கள் இருவரின் கைகளும் குலுங்கிக்கொள்ள பின்னணியில் மேகத்தை கிழித்த மின்னல் ஒன்று வானிலிருந்து தரை வரை இறங்கியது.
பின் அவர்களிடம் திரும்பிய ஆதேஷ் "வண்டி எதுவும் கிடைக்கல சோ நடந்து தான் போனும் "என்க
அஜயோ "அதுக்கு அவசியமில்லை என்னோட ஜீப்ல போலாம் "என்க ஆதேஷிற்கு அதில் சற்றும் விருப்பமில்லை எனினும் சரி என்று தலை ஆட்டியவன் அடுத்து அஜய் ஆதிராவின் லக்கேஜை எடுக்க போக வேகமாய் அவன் கையை பிடித்தவன் "நானே எடுத்துட்டு வரேன் நீங்க போங்க "என்க
அஜய் அவனை விசித்திரமாய் பார்த்தவன் "ஏன் ஆதேஷ் உங்களுக்கு சொந்தமானதையும் சேர்த்து எடுத்துடுவேனோனு பயமா இருக்கா ?"என்க
ஆதேஷோ அவனிடம் ஏளனப்பார்வை வீசியவன் ஆதிராவின் luggageayum தனது luggageayum ஒரு சேர எடுத்தவன் பின் என்ன நினைத்தானோ ஆதிராவின் கையையும் தன் கையோடு இணைத்துக்கொண்டு நடந்தான் .
ஆதேஷ் என்ன நினைத்து அவள் கையை பற்றினானோ எனில் ஆதிராவிற்கோ இன்று பற்றிய கையை என்றும் விடாது பற்றிட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்தித்தவள் அவர்களுடன் நடந்தாள்.
பின் அந்த ஊரிற்குள் சென்றவர்கள் அஜயின் வற்புறுத்தலால் அவன் பதிவு செய்திருந்த கெஸ்ட் ஹௌசிற்கு சென்று தத்தம் அறைக்குள் அடைந்து கொண்டனர் நாளை ஊரிற்குள் சென்று விசாரிக்க வேண்டுமென்ற முடிவுடன் .
இங்கே இவர்கள் கெஸ்ட் ஹௌஸில் நிம்மதியாய் தூங்க
மீண்டும் இருளில் அதே உருவம் கையில் ஒரு விளக்குடன் தலையை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சால்வையுடன் காட்டின் வழியே நடந்துகொண்டிருந்தது .
காட்டில் சிறிது தூரத்தை கடந்த அவ்வுருவம் சுற்றி முற்றி ஆள் நடமாட்டத்தை கவனித்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டது.பின் அங்கிருந்த ஓர் பாறையில் அமர்ந்து அச் சிறு விளக்கொளியில் வெளிச்சத்தில் மீண்டுமொரு ஓலையை எழுதிக்கொண்டிருந்தது.
அதை எழுதி முடித்த அவ்வுருவம் புறாவின் காலில் அந்த ஓலையை கட்டிவிட்டு .புறாவை தடவிக்கொடுத்தவாறே வானத்தை நோக்கி தன் பார்வையை பதிக்க அதன் இதழ்களோ "வந்த அலுவலில் முதல் படி இனிதே நிறைவடைந்தது "என்று முணுமுணுக்க அடுத்த நொடி அப்புறாவை வானில் பறக்க விட்டது .அங்கே இரவில் அடித்த காற்றில் அது போர்த்தியிருந்த சால்வை விலக அது ஓர் ஆணின் உருவம் என்பதை தெளிவாய் வெளிச்சம் போட்டு காட்டியது நிலவொளி
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top