4
அடுத்த நாள் காலை புதுப்பொலிவுடன் விடிய தன் அறையில் குளித்து முடித்து தனது உடமைகள் நிறைந்த பையுடன் வெளியே வந்தால் ஆதிரா .பெட்டியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தவள் அதை ஹாலில் நடுவில் வைத்து விட்டு"பாப்ஸ் மீ ஊருக்கு கிளம்புறேன் வந்து வழி அனுப்புங்க "என்று விட்டு பூஜை அறைக்கு சென்று நிற்க அவர்களிடமிருந்தோ எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை .
சற்று நேரம் அப்படியே நின்றவள் "பாப்ஸ் மீ காதுல விழலையா ?,வாங்க ரெண்டு பேரும் "என்று வெளியே வர அவள் கண்டதோ டைனிங் tableலில் சோகமே உருவாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த தன் பெற்றோரை தான் .
அவர்களிடம் சென்று நின்றவள் இருவரின் தோளிலும் கை வைக்க அவர்களோ அந்த சொரணையும் இன்றி அப்படியே அமர்ந்திருந்தனர் . .
அவள் வந்து நின்றது கூட தெரியாமல் ஏதோ யோசினையில் சிக்கி இருந்த இருவரையும் இடையில் கை வைத்து முறைத்தவள் பின் அவர்கள் தோளில் கை வைத்து உலுக்கிக்கொண்டே"பாப்ஸ் மீ "என்று கத்த ஏதோ கனவில் இருந்து விழிப்பவர்கள் போல் விழித்தனர் இருவரும் .
அவர்கள் இருவரையும் கண்டு முறைத்தவள் "இங்க ஒருத்தி ஊருக்கு போறேன்னு காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன் அங்க என்ன ரெண்டு பேரும் இந்த வயசுல கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? "என்க
அவளின் தந்தையோ "ஒன்னும் இல்லடா குட்டிமா ஏதோ யோசனைல இருந்துட்டோம் சாரி டா"என்க
அவளோ விஷமமாய் சிரித்தவள் "அப்டி என்ன ஆழ்ந்த சிந்தனை ஓஓஒஹ் நா இல்லாத ஒரு மாசத்துல எனக்கு தம்பி பாப்பா கொண்டு வரலாம்னு யோசிச்சீங்களா"என்று கூறி கண்ணடிக்க
அவளின் அன்னையோ சகஜமாய் மாறியவர் கையில் அருகில் இருந்த பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு "கழுதை அப்பா அம்மாட்ட பேசுற பேச்சாடி இது? "என்று கேட்டுக்கொண்டே துரத்த
அவளோ போக்கு காட்டிக்கொண்டே ஓடியவள்"அம்மா அம்மா விட்டுருமா உன் புள்ள பாவம் மா ஏதோ அறியா புள்ள தெரியாம கேட்டுட்டேன் மன்னிச்சூ "என்று சரணடைய
அவரோ அவள் காதை வலிக்காமல் திருகியாவர் "வாய் வாய் வாய் வாயாடி "என்று அவள் காதை திருக
அவளோ வலிக்கவே இல்லையென்றாலும் "ஆஆ அம்மா விடுமா அட டாடி இங்க என்ன டுவெண்ட்டி டுவெண்ட்டி matchaa நடக்குது ?உக்காந்து ரசிச்சு பாத்துட்ருக்கீங்க வந்து காப்பாத்துப்பா "என்க
அவரோ அவள் அருகே வந்து மறுகாதையும் பிடித்து திருகியவர் "இந்த குரங்கு சேட்டையை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு போற இடத்துல ஒழுங்கா வேலைய முடுச்சுட்டு வர பாரு "என்று காதை விடுவிக்க
அவளோ காதை தேய்த்துக்கொண்டவள் "ஹலோ ஹலோ நான் முன்னோர்களை மறக்காம அவங்கள follow பண்ணிட்டு இருக்கேனாக்கும் ஹுக்கும் "என்று முகத்தை ஒரு வெட்டு வெட்ட
சிரித்த அன்னை தந்தையர் இருவரும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவர்கள் "பத்திரமா போயிட்டு வா குட்டி "என்று அவள் கையை நீட்ட சொல்ல
அவளோ "என்ன மம்மி பாக்கெட் money குடுக்க போறியா ?"என்க
அவரோ "அதான் உன் bageh நெரம்புர அளவுக்கு காசை எடுதுக்கிட்டேள அது போக உனக்கு பாக்கெட் money கேக்குதாகும் .இது தாயத்து கயறு இது உன் கைல இருந்தா உன்ன எந்த காத்து கருப்பும் அண்டாது "என்க
அவளோ தன் வாய்க்குள்ளேயே "ஆமாமா சும்மாவே கருப்பு அண்ட மாட்டேங்குது இதுல நீ வேற இதை கட்டிவிடு விளங்கிடும் "என்று முணுமுணுத்தவள் தன் கையை பார்க்க அதிலோ ஸ்வஸ்திக லட்சனை பதித்த ஒரு அழகிய லாக்கெட் கருப்பு கயிற்றில் சுற்றப்பட்டு அவள் வெண்ணிற கரங்களில் அழகாய் பொருந்தியிருந்தது .அதை ஒருமுறை பார்த்துக்கொண்டவள் தன் அன்னையின் கன்னத்திலும் தந்தையின் கன்னத்திலும் இதழ் பதித்தவள் லக்கேஜை தூக்கி வந்திருந்த கேப்பில் வைத்து விட்டு கை அசைத்தவள் ரயில் நிலையத்தை நோக்கி பயணித்தாள்.
அவளின் பெற்றோர்கள் அவளை வழி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அங்கே சிறிது நேரத்திற்கு மௌனமே ஆட்சி புரிந்தது பின் "நாம செஞ்சது சரி தான மீனாட்சி?" என்று
அவர் கேட்க அவரின் கரத்தை பிடித்தவர் "தெரியலைங்க நாம செய்றத செஞ்சாச்சு இனி கடவுள் சித்தம் "என்றவர் கண்களை மூடி கணவனின் தோளில் சாய்ந்து கொண்டார் இருவரின் மனத்திலும் இறக்கி வைக்க முடியா பெரும் பாரம் குடிகொண்டிருந்தது .
Trafficகில் மாட்டி நேரமாகி விட அவதி அவதியாய் லக்கேஜை எடுத்தவள் train கெளம்பிற கூடாது கூடாது என்று வேண்டிக்கொண்டே வர அவள் வேண்டுதல் கடவுளிற்கே கேட்டதோ என்னவோ ரயில் அரை மணி நேரம் தாமதமானது .
platformai தேடி பெட்டியை தூக்கி கொண்டு வந்தவள் வேதித்யாவும் அதேஷும் அங்கே நிற்பதை கண்டு அங்கே பெரிய சிரிப்புடன் சென்று நின்றவள் "ஹாய் வேதி ஹாய் ஆதேஷ் "என்று நிற்க
வேதித்யாவோ அவளை மூக்கு முட்ட முறைத்தாள் .அவள் முறைப்பதை பார்த்து இளித்த ஆதிரா "ஏன்டா வேதும்மா என்ன இப்டி சைட் அடிக்கிற "என்க
அவளோ அவள் தலையிலேயே நான்கு கொட்டு கொட்டியவள்"எப்போ வர சொன்னா எப்போ டி வர? எரும train லேட் ஆகலேனா உன்னோட சேர்ந்து நாங்களும் உக்கார வேண்டி தான்" என்க
அவளோ அவளது ட்ரேட்மார்க் அப்பாவி முகத்தை வைத்தவள் அவளை ஒரு பார்வை பார்க்க அவளது அந்த முகத்தை பார்த்த வேதித்யாவிற்கோ சிரிப்பு தான் வந்தது "எல்லாத்தையும் பண்ணிட்டு இப்டி ஒரு அப்பாவி மூஞ்ச வச்சே ஏமாத்தீடு "என்று அவள் சொல்லிக்கொண்டே இருக்கையில் ரயில் வந்துவிட முதலில் வேதித்யா
ஏறிவிட ஆதிராவோ தான் கொண்டு வந்த பெட்டியை தூக்கி வைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தால் .
அவள் தூக்குவதற்கு மிகவும் சிரமப்படுவதை கண்டு அவள் அருகில் வந்து அவள் பின்னே நின்ற ஆதேஷ் அவள் கேட்கும்முன்னே அவளது பெட்டியை எடுத்து உள்ளே கொண்டு சென்றவன் அவளை நோக்கி ஒரு இளநகையை சிந்தி விட்டு செல்ல ஆதிராவோ அவனை நோக்கி ஒரு சிறு சிரிப்பை சிந்தியவள் உள்ளே ஏறிக்கொண்டாள்.உள்ளே சென்று சற்று நேரத்தில் ரயில் புறப்பட்டு விட வேதித்யாவும் ஆதிராவும் ஒரு புறம் அமர்ந்திருக்க அவர்களின் எதிரே ஆதேஷ் அமர்ந்திருந்தான்
ஆதேஷ் "சோ guys மங்கலாபுரி அப்படின்ற ஊருக்கு தான் நாம research பண்ண போக போறோம் ரைட் சோ நாம first எங்க இருந்து ஆரம்பிச்சா கரெக்டாக இருக்கும்னு நீங்க நெனைக்குறீங்க ?"என்க
வேதித்யாவோ "எனக்கு அதை பத்தி சுத்தமா ஐடியா இல்ல ஆதேஷ் இந்தா இருக்கா பாரு இவள் கிட்டயே கேட்டுக்கோ எனக்கும் researchkum சுத்தமா செட் ஆவாது வேணுனா நீங்க பண்ற researchah detailed ரிப்போர்ட் ஆக்குற வேலைய நா பாக்குறேன் "என்க
ஆதிராவோ "விடு மச்சி ஆதிரா இருக்க பயமேன்?" என்றவள் ஆதேஷிடம் திரும்பி "அந்த இடத்தை பத்தி கொஞ்சம் லைப்ரரில பழைய நியூஸ்பேப்பர் ஆர்டிகள்ஸ்ல இருந்த கொஞ்சம் நியூஸ்ல இருந்து gather பண்ணலாம்னு நெனச்சு போனேன் ஆதேஷ் பட் நோ யூஸ்.எதுவுமே ஒரு clear picture தர மாட்டேங்குது .அந்த இடத்துல 40 பெர்ஸன்ட் தான் மக்கள் வாழுற இடம் மிச்ச 60 பெர்ஸன்ட் இடம் காட்டுப்பகுதி.இந்த கடந்த மூணு வருஷத்துல மட்டும் அந்த ஊருக்கு போன wildlife photographers ஜௌர்னலிஸ்ட்னு நெறய பேர் மிஸ்ஸிங்.இதுக்கு மேல எதுவும் தெரில அங்க போய் தான் information கலெக்ட் பண்ணனும் .சோ முதல்ல மக்கள் வாழுற பகுதில அவுங்கட்ட விசாரிச்சுட்டு அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்"என்க
அவளை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்த ஆதேஷ் தனது மடிக்கணினியை எடுத்து அவள் கூறிய அதே செய்திகளை நியூஸ்பேப்பர் கிளிப்பிங்குகளுடனும் வரைபடத்துடனும் விளக்கி வைத்திருந்தான்.பின் சற்று நேரம் இருவரும் ப்ராஜெக்ட் பற்றி பேசி விட்டு அவரவர் சிந்தனையில் ஒன்றி விட வேதித்யாவோ எனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் வெளியே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு அப்படியே உறங்கியும் விட்டாள்.
சற்று நேரமாய் வேதித்யாவின் குரலே வராமல் இருக்க அவள் புறம் திரும்பிய ஆதிரா அவள் உறங்குவதை கண்டு தலையில் அடித்தவள் "என்னடா train move ஆகி இவ்ளோ நேரமாச்சே இன்னும் இந்த குரங்கு தூங்கலையேன்னு பார்த்தேன் தூங்கிருச்சு .என்று அவள் காதில் இருந்த headphoneai கழட்டி அவள் போனிற்கு ஆப் செய்து பையில் வைத்தவள் அவளை வசதியாய் படுக்க வைத்துவிட்டு நிமிர ஆதேஷ் அமர்ந்திருந்த இடம் காலியாய் இருந்தது .எங்கே சென்றான் இவன் என்று நினைத்துக்கொண்டு தங்கள் சீட்டிலிருந்து வெளிவந்தவள் அந்த கம்பார்ட்மென்ட்டின் முடிவில் இருந்த ஒரு புறக்கதவில் சாய்ந்துகொண்டு வெளியே ஒரு வெறித்த பார்வையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவதை கண்டவள் அவனிற்கு எதிரே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று வெளிய பார்க்க அப்பொழுதே அவளது வரவை உணர்ந்தவன் "வா ஆதிரா வேதித்யா எங்க ?"என்க
அவளோ "தூங்குறா ஆதேஷ்"எங்க
அவனோ "என்ன அதுக்குள்ள தூங்குறாங்களா ?"என்க
அவளோ சிரித்தவள் "அவளுக்கு travel பண்ணேல trainoh பஸ்ஸோஹ் move ஆனா கொஞ்ச நேரத்துலயே தூங்கிருவா எப்போ முழிப்பு வருதோ அப்போ தான் எந்திரிப்பா "என்க
அவனோ மெலிதாய் சிரித்தவன் அவள் வெளிய இருக்கும் காட்சிகளை சிரிக்கும் கண்களோடு ரசித்து காண்பதை நோக்கியவன் "வெடிக்க பார்க்க ரொம்ப புடிக்குமோ "என்க
அவளோ ஆமோதிப்பதாய் தலை அசைத்தவள் "ஆமாம் ஆதேஷ் எனக்கு இந்த ஓடுற ரயில்ல இந்த கதவு கிட்ட நின்னுகிட்டு ஏதோ ஒரு படம் பாக்குற மாறி நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுற இந்த இடங்கள் , ஒரு நிமிஷம் சிட்டில கணப்பொருளா மாறிட்ட வயல் வெளிகள்,அடுத்த நிமிஷம் எதையோ தேடி ஓடிபரபரப்பா நாளெல்லாம் ஓடிட்ருக்க ஜனங்கள்னு மாறி மாறி வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களையும் காட்சிகளா இந்த சில்லுனு வீசுற அந்த காத்தோட பாக்குறதுன்றது ஒரு தனி feel .ஐ லவ் train journeys "என்க
அவனோ அவளை நோக்கி ஒரு ஆராயும் பார்வை வீசியவன் "இன்டெரெஸ்ட்டிங் ஒரு சின்ன வேடிக்கை பாக்குறத கூட இவ்ளோ ரசிச்சு பண்ற பொழுதுபோகலேன்னு வெடிக்க பாக்குறேனு சொல்லி தான் கேட்ருக்கேன் இப்டி ஒரு பதிலை நா இது வர கேட்டதில்லை "என்க
அவளோ அவன் கண்ணை பார்த்தவள் "வாழ்க்கையே ரசிக்க தான ஆதேஷ் .இருக்குறது ஒரு வாழ்க்கை அதுல ஒவ்வொரு விஷயத்தையும் ரசிச்சு புடுச்சு பண்ணா lifeh அழகா இருக்கும்."என்க
அவளை நோக்கி ஒரு புன்னகையை வீசியவன் அவள் வேடிக்கை பார்க்கும் ஆவலில் இன்னும் கொஞ்சம் முன்னே செல்வதை பார்த்தவன் தன் கையை வைத்து சுவற்றிற்கும் கதவிற்கு நடுவில் தடுப்பை போல் வைத்துக்கொள்ள ஆதிராவோ தான் விழுந்து விடுவோமோ என்று அவன் செய்யும் இச்செயலை நினைத்து உள்ளே சிரித்துக்கொண்டவள் தனது இயற்கையை (ஆதேஷையும்) வேடிக்கை பார்க்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு வந்தாள்.
பின் பொழுதும் சாய இரவு நேரமும் வந்தது .வேதித்யா மிடில் birthil படுத்துக்கொள்ள ஆதேஷும் ஆதிராவும் எதிரெதிர் upper birthil படுத்துக்கொண்டனர்.இருவர் கண்களும் ஒரு முறை சந்தித்துக்கொள்ள அவனை நோக்கி புன்னகை சிந்திய ஆதிரா "குட் நைட் ஆது "என்க
அவனோ மெலிதாய் புன்னகைத்தவன் "குட் நைட் ஆதிரா "என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டான் .
ராத்திரி நேரம் அனைத்து பயணிகளும் நித்திரா தேவியின் அணைப்பில் கட்டுண்டு இருக்க உறங்கும் ஆதிராவின் அருகே சட்டென்று தோன்றின நான்கு கருப்பு உருவங்கள் .
அவள் நிர்ச்சலனமாய் உறங்கிக்கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவளை நெருங்கிய அவ்வுருவங்கள் அவளை சூழ்ந்து கொள்ள இவை எதையும் அறியாத பெண்ணவளோ உறக்கத்தில் புரண்டு கொண்டிருந்தாள்.அதில் ஓருருவம் அவளை நெருங்கி தீண்டப்போக அங்கேயே எரிந்து புகையோடு புகையாய் கலந்தது .
அந்த உருவம் எரிந்ததில் திகைத்த மற்ற உருவங்கள் அவளை நெருங்க தயங்க அதில் ஓருருவமோ அவள் கையில் இருந்த ஸ்வஸ்திக் டாலரை பார்த்து மற்ற உருவங்களிடம் ஜாடை காட்டியது இனி தாம் இங்கிருந்தால் தமது அழிவும் உறுதி என்று நினைத்த அவை அங்கிருந்து அகல தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளும் தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயவலையையும் அறியாத மங்கையவள் மங்கலாபுரியை நோக்கி பயணித்தாள் தன் வாழ்வையே புரட்டி போடப்போகும் தருணத்தை எதிர்கொள்ள .
indha chapterla horror content illa guys konjam mokkayaa dhaan irukunu enake theryudhu adjust karo mangala puriku poi nalla vachu senjuralaam ok .and sorry for the delay.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top