32
பாசப்போராட்டத்தில் நனைந்திருந்த நால்வரையும் கலைத்தது ஓர் கைதட்டும் சத்தம் .நால்வரும் வாசல் பக்கம் திரும்பி பார்க்க அங்கே தனக்கு பின் இருபது காவலர்களுடன் தன் கொடூரமான முகம் தெரிய ஏளனமாய் புன்னகைத்தவாறு ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர் நீலகாந்தனும் மார்த்தாண்டனும் .
நீலகாந்தன் " சபாஷ் சபாஷ் நான் எழுப்பி இருந்த தடைகளை தாண்டி, எனது காவலர்களை வீழ்த்தி, அவர்களின் உடையை தரித்து ,எனது அரண்மனைக்குள் புகுந்து சிறைச்சாலையில் உனது உடன்பிறந்தாளுடன் உறவாடிக் கொண்டிருக்கிறாய் .
இளப்பமாய் கூறக்கூடாது உனது மதியை எண்ணி வியக்கிறேன்."என்க
மார்தாண்டனோ இளக்காரமாக தோணியில்" எனில் என்ன செய்ய உனது உடையினின்று வெளித்தெரிந்த வைக்கோலும் உனது முகம் விலகிய திரையில் உன் பெண்முகத்தை காட்டிக்கொடுத்த நீரும் உனக்கு வஞ்சகம் இழைத்துவிட்டதே சு சு சு சு ."என்க
ஆராதனாவின் புறம் திரும்பிய நீலகாந்தனோ அவன் தலையை தட்டி யோசிக்கும் பாவனை செய்தவன் "என்ன கூறினாய் என்ன கூறினாய் எனது இளவளும் என்னவனும் இவ்வரண்மனையை அடைந்தால் உன் தலை உன் உடலிலிருந்து கொய்யப்படும் என்று தானே கூறினாய் ?"என்று அருள்மொழி மற்றும் ஆதேஷின் புறம் காவலர்களை அனுப்ப அவர்களை இருபது காவலர்களும் அமுக்கி பிடித்துக்கொள்ள ஆராதனாவையும் ஆதிராவையும் இரு காவலர்கள் திமிர திமிர பிடித்துக்கொள்ள அருள்மொழியையும் ஆதேஷையும் மார்த்தாண்டனும் நீலகாந்தனும் ஒரே நேரத்தில் குத்த இருவர் வாயிலிருந்தும் ரத்தம் தெளித்தது.
அவர்கள் அடிவாங்குவதை பார்த்து இருவரும் துடிக்க ஏளனமாய் சிரித்த நீலகாந்தன் அவர்களை முறைக்கும் இருவரையும் கண்டு "என்ன ஏதேனும் மாயாஜாலம் புரிந்து வெளியேறலாம் என்று நினைத்தாயோ நேரம் தாழ்த்திவிட்டாயாடா இங்கு சிறை வாசலுக்கு நான் வந்த நொடியே மாயப்பொடியை இவ்வறையின் வாசலில் தூவி உனது மந்திர சக்திகள் அனைத்தையும் கட்டிவிட்டேன் இனி உன்னால் எந்த மாந்திரீகத்தையும் இவ்வறையிலிருந்து உபயோகிக்க முடியாது "என்று கூறியபடி மற்றொரு அரையை அவன் முகத்தில் வைத்தான் .
அவர்கள் அடிவாங்குவதை பார்த்து துடித்த இருவரும் "ஹே எதற்காக அவர்களை அடிக்கிறாய் ஏதும் செய்யாதே அவர்களை.நீ என்ன சொன்னாலும் செய்கிறோம் விடு அவர்களை விடு " என்க
அவர்களை நோக்கி ஏளனமாய் திரும்பியவர்கள் "எனில் உயிரை துறக்க தயாராய் உள்ளீர்களா ?"என்க கண்ணீருடன் தலை ஆட்டினார்கள் இருவரும்.
ஆதேஷையும் அருளையும் இச்சிறையில் விட்டவர்கள் ஆதிராவையும் ஆராதனாவையும் வேறொரு சிறைக்கு இழுத்துச்சென்றான் .இழுத்து செல்லும்முன் நால்வரின் கண்களும் ஒருமுறை உறவாடிக்கொள்ள அதில் என்ன மொழிப்பறிமாற்றம் நடந்ததோ அது அவர்களுக்கே தெரியும் .
மூன்று நாட்கள் நொடிப்பொழுதில் கரைய ஆராதனாவும் ஆதிராவும் வேறொரு சிறை அறையில் பலத்த காவலில் இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்க அன்றைய மகாபௌர்ணமி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அம்மாய பௌர்ணமியும் வந்தது .
வானில் விண்மீன்கள் நடக்கவிருக்கும் சம்பவத்தை ஆவலுடன் நோக்க தங்கள் ஒளியை மேலும் மெருகூட்டி வானத்தை ஜொலி ஜொலிக்க வைக்க நிலவவனோ என்றையும் விட இன்று அதீத ஆர்வத்தை தேக்கியபடி பூமியினை நோக்க அவனது பரப்பளவு சற்றே பெரிதாய் ஆகி அவனின் வெள்ளை ஒளி குளிர்ச்சிக்கு பதில் பலரின் இதயத்தில் வெப்பத்தை தகிக்கவிட்டுக் கொண்டிருந்தது .
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நடுஜாமத்தில் ஊர் உலகம் அனைத்தும் நித்திராதேவியின் பிடியில் இருக்க நீலாகாந்தன் பிடியில் இருந்த இரண்டு காதல் புறாக்களும் யாகத்திற்கு வேண்டி மிகப்பெரும் யாககுண்டத்திற்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மனையில் அமைக்கவைக்கப்பட்டிருந்தனர் .
ஆராதனாவும் ஆதிராவும் மஞ்சள் சேலை உடுத்தி அமரவைக்கப்பட்டிருக்க அருள்மொழியும் ஆதேஷும் அவர்களை பார்த்து அமரும் வண்ணம் சற்று தொலைவில் அவர்களுக்கெதிரே ரத்தம் உறைந்த காயங்களுடன் முட்டியிட்டு இரு காவலர்களின் பிடியில் அமர்த்திவைக்கப்பட்டிருந்தனர் .
நால்வரின் முகத்திலும் எதையும் அறியமுயலும் பாவனை இருக்கவில்லை .நால்வரின் முகமும் சுத்தமாய் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு பாறை போல் இறுகி இருந்தது .முதலில் ஆராதனாவையும் ஆதிராவையும் அமரவைத்த காவலர்கள் நீலகாந்தனின் வரவை நோக்கி காத்திருக்க இருபது வருடங்களாய் தனது உருவத்தை மொத்தமாய் மூடி இருட்டுக்குள் வாழ்ந்து வந்தவன் இன்று சிகப்பு நிற வேஷ்டியும் சிகப்பு நிற மேலங்கியும் உடுத்தி வரும் வழியில் அமைந்திருந்த குடுவையில் சேர்ந்திருந்த ரத்தத்தை தன் கைகளில் எடுத்தவன் கண்கள் விரிய அதை நோக்கி ஓர் அசுர சிரிப்பை சிந்தியவன் அதை தன் முகத்திலும் அகன்ற மார்பிலும் பூட்டிக்கொண்டவன் அருகிருந்த குங்குமத்தை கையில் எடுத்து திலகம் போல் நெற்றியில் தீட்டிக்கொண்டவன் வெறியுடன் ஆராதனாவையும் ஆதிராவையும் பார்த்து சிரித்தவாறே யாககுண்டத்தின் முன் வந்தமர்ந்தான் .
அவனின் முகத்தில் நினைத்ததை அடைந்துவிட்ட களிப்பு தாண்டவமாட அவன் முகத்தில் குரூர சிரிப்பு ஒன்று ஆளுகை செலுத்திக்கொண்டிருந்தது.
யாககுண்டத்தின் முன் அமர்ந்து எரியும் தீ ஜுவாலையில் மந்திரங்கள் பல உச்சரித்து நெய்யை வார்த்து வானளவு அத்தீயை உயருமளவு செய்தவன் அந்த யாகத்திலிருந்து இரு பானைகல் வெளியேற அவற்றை கையிலேந்தியவன் பின் மார்த்தாண்டா என்று இடி போன்ற குரலில் கத்த அவன் முன்னே வந்து நின்றான் மார்த்தாண்டன் .
அவனின் புறம் திரும்பியவன் "அவ்விரு பேடிகளின் மீதும் இங்கே இந்த பானையில் இருக்கும் நீரை தலை முதல் கால்வரை ஊற்றி அங்கே இருக்கும் இரு மாலைகளை அவள்களின் கழுத்தில் போட்டுவிடு "என்க அவனும் இன்னொரு காவலனுக்கு அந்த இரு பணிகளையும் வாங்கியவர்கள் உணர்ச்சித்துடைத்த முகத்தோடு இருந்த ஆராதனா மற்றும் ஆதிராவின் இருபுறமும் நின்றவர்கள் அவர்களின் தலை முதல் கால்வரை அந்த சிகப்பு நிற துர்நாற்றம் வீசும் நீரை ஊற்ற அவர்கள் புறத்திலிருந்து எதிர்ப்பும் இல்லை இருவரும் கண்களையும் சிமிட்டாது அந்த யாககுண்டத்தையே வெரித்தவாறு அமர்ந்திருந்தனர் .
அவர்கள் அவ்வாறு அமர்ந்திருப்பதை பார்த்து ஏளனமாய் சிரித்த மார்த்தாண்டன் "என்ன ஓயாது பேசும் இருவருக்கும் மரணத்தின் வாசலை பார்த்ததும் பேச்சு வரவில்லையோ ?ஏதோ கூறுவாயே அதர்மம் என்றும் வெல்லாதென்று இன்று வென்று முடிசூடி விட்டது பார்த்தாயா "என்று சிரிக்க அவ்விருவரும் அவனின் பேச்சு காதில் விழுந்ததை போலவும் காட்டிக்கொள்ளவில்லை .
அவர்கள் அப்படி இருப்பது அவனிற்கு கோபத்தை தர இருவரையும் "என்ன திமிரடி உங்களிற்கு இப்பொழுதும் "என்று அடிக்க போக
அவனை தடுத்தான் நீலகாந்தன் "மார்த்தாண்டா விடு இன்னும் சற்று நேரத்தில் யாககுண்டத்தில் பலியாகப்போகும் ஜடங்கள் இவை. இவற்றை அடித்து உன் சக்திகளை வீணாக்காதே "என்று சிரிக்க அதை கேட்ட ஆதேஷ் மற்றும் அருள்மொழியின் முகத்தில் இன்னதென சொல்லமுடியாத ஒரு பாவனை குடியேறியது கண்களில் சிறிது அலட்சியமும் தெரிந்தது .
பின் இவ்வாறே மந்திரங்களை நீலகாந்தன் உச்சரிக்க அவனை சூழ்ந்தமர்ந்திருந்த அகோரிகள் சிறு சிறு யாககுண்டங்களில் யாகம் வளர்க்க ஒரு நாழிகைக்குப்பின் நிலவு உச்சத்திற்கு வந்திருக்க யாகம் முடிந்ததாக ஒரு திருப்தி பாவனை செலுத்தியவன் ஆதிரா மற்றும் ஆராதனாவின் புறம் திரும்பி "ஹஹஹஹ இதே போல் இருபது வருடங்களுக்கு முன் உங்களை காக்க உன் அன்னையும் தந்தையும் உயிர் துறந்தனர் இன்று ,"என்று
ஆதேஷ் மற்றும் அருளின் புறம் திரும்பியவன் "கவலை கொள்ளாதீர்கள் உன் அன்னைக்கு துணையாய் உன் தந்தை சென்றதை போல் உம் இருவரின் பிணத்திற்கு துணையாய் உமது மன்னவர்களையும் பின் அனுப்பி விடுகிறேன் "என்றவன் மார்த்தாண்டன் மற்றும் இன்னொருவரிடம் கண்காட்ட ஆராதனாவையும் ஆதிராவையும் இழுத்து வந்தவர்கள் யாககுண்டத்தில் தள்ளிவிட்டனர் ,
இருவரின் உடலும் கருகுவதை ஆனந்தமாய் கண்டுகளிக்க நினைத்த நீலகாந்தனின் எண்ணத்தில் கடவுள் ஒரு லாரி மண்ணை போட்டுவிட்டார் போல அவர்களை உள்ளே தள்ளியதும் உடல் மறைந்து கரும் புகைகள் வெளி வந்தது .என்ன இது என்று புரியாமல் நீலகாந்தன் அதிர்ச்சியாய் விழிக்க யாககுண்டத்தில் இருந்து கிளம்பிய அக்கரும்புகை உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் அவ்விடம் விட்டு நகர்ந்து குகையின் வாசலிற்கு செல்ல அந்த வாசலில் இரு கோடு வடிவம் போன்று இரு உருவங்கள் தெரிந்தன .
அவற்றை நோக்கி சென்ற இரு கரும் உருவமும் அவற்றின் பாதத்தில் சேர்ந்து அவற்றின் நிழலாகிட கொஞ்சம் கொஞ்சமாய் அவ்விரு உருவங்களும் உள்ளே வர வர வெளிச்சத்தில் அவற்றை பார்த்த நீலகாந்தனும் மற்றவர்களும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்ல அது வரை சிரிப்பை அடக்க பெரும்பாடு போட்டுக்கொண்டிருந்த அருள்மொழியும் ஆதேஷும் அவர்களை பிடித்து வைத்திருந்த இரு காவலர்களையும் ஒரு தோள் குலுக்கலில் கீழே தள்ளியவர்கள் அவர்கள் இடையிலிருந்த வாளை உருவி இருவரின் மார்பிலும் பாய்ச்சியவர்கள் அதை அவர்களின் பிணத்திலிருந்து உருவிக்கொண்டு சுழற்றியபடியே நீலகாந்தனை நோக்கி வந்தனர் ஏளனச்சிரிப்புடன் .
என்ன நடக்கிறதென்று நீலகாந்தன் உணரவே சற்று நேரம் பிடிக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு சகோதரிகளோ நீலகாந்தனை நோக்கி திரும்ப ஆதிரா "என்னடா பெரியப்பா என் அக்கா சொன்ன மாதிரியே வச்சேனா உனக்கு பெரிய ஆப்பா "என்க
அவன் புரியாது நோக்க ஆராதனாவோ பலமாய் சிரித்தவள் "நீ பலியிட சென்றது சிறைபிடித்தது அனைத்தும் எமது நிழல் உருவங்களையாடா மடையா "என்க அவனிற்கோ பெரும் அதிர்ச்சி .
அருள் மொழி மாந்திரீகத்தில் சிறந்தவனென்று அறிவான் எனில் ஒருவரின் நிழலை அவர்களின் உருவமாய் வடிக்கும் வித்தை ஆயிரம் கோடியில் ஒருவனால் மட்டுமே அதுவும் கடும் தவத்தின் பலனாய் கிடைக்கும்.அந்த வித்தையினை பிரயோகிக்கையில் எந்த ஒரு மாந்த்ரீகனாலும் கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு கட்டையும் சேர்த்தே போடுவர் .ஆதலாலேயே மார்தாண்டனால் அது ஆதிரா ஆராதனாவின் உருவங்கள் அல்ல என்று கண்டுபிடிக்க இயலவில்லை .ராமாயணத்தில் சீதையை அக்னிதேவர் அக்னியில் உண்மையான சீதையை அழைத்துக்கொண்டு நிழல் உருவத்தை அனுப்பிவைக்க ஆயர்கலைகளில் சிறந்த ராவணனாலும் சீதையின் நிழல் உருவம் இது என்று அறிய முடியாது போவான் அதே வித்தை தான் இது .இதை செய்வதற்கு அதீத திறமையும் சக்தியும் ஆத்மபலமும் தேவை சிறு பிழை நேர்ந்தாலும் அது அந்த மாந்திரிகனின் உயிரையும் குடித்துவிடும்.இப்படிப்பட்ட வித்தையை இத்தனை கொடும் பூஜைகள் செய்த நீலகாந்தனாலே செய்ய முடியாதிருக்க அதை இத்தனை சிறு வயதில் அருள்மொழி அடைந்து அதை செயல்படுத்தி இருக்கிறானென்பதை அவனால் நம்ப முடியவில்லை .
அவன் பாவனையை வைத்தே அவனின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்ட அருள்மொழி சிரித்தவாறே "என்ன இந்த சக்தி எப்படி எனக்கு கிடைத்ததென்று யோசிக்கிறாயா ?அதீத தெய்வ சக்தியுடன் பிறந்த எனது அத்தை ஆருத்ரா இறக்கும் தருவாயில் பரிசட்டளித்த சித்தமடா இது."என்க
மீண்டும் தனது கனவுக்கோட்டைகள் அனைத்தும் தகர்ந்ததை நினைத்து ஆத்திரத்தில் கொந்தளித்த நீலகாந்தனோ அவ்விடமே அதிர்ந்து அழியும் அளவிற்கு கத்தியவன் பின் நால்வரையும் நோக்கி வன்மமாய் பார்த்தவன் "எனக்கு சக்திகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை உங்கள் நால்வரையும் உயிரோடு விடமாட்டேனடா "என்று மந்திரங்களை உச்சரித்து அவர்களின் மேல் பாய்ச்சப்போகும் தருணம் திடீரென அதுவரை தென்றலாய் பாய்ந்துகொண்டிருந்த காற்றுய் புயலென மையம் கொள்ள அவ்விடத்திலிருந்து கொள்ளிக்கட்டைகள் யாககுண்டகள் என அனைத்தும் அணைந்து போக அங்கே கிளம்பிய புழுதியால் ஒருவராலும் கண்ணை திறக்கமுடியாமல் போனது .
வெண்ணிலவை மேகக்கூடங்கள் மூடிக்கொள்ள ஓநாய்களும் ஆந்தைகளும் ஒன்றாய் கூக்குரல் இட்டு கதறிட அவ்விடமே அதிரும் வண்ணம் காலடிச்சத்தங்கள் கேட்க அக்குகையின் வாசலில் வந்து நின்றதொரு உருவம் .
கொஞ்சம் கொஞ்சமாய் காற்றின் வேகம் குறைந்திட கண்களை திறந்த நீலகாந்தனின் கண்கள் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான் .அவனது காவலர்கள் அவனின் கை பாவைகளான அகோரிகள் என அனைவரும் ரத்தம் கக்கி இறந்திருக்க அதை கண்டு உறைந்திருந்தவனின் முகத்தில் ரத்த துளிகள் விழ நிமிர்ந்து பார்க்க அவனின் மகன் மார்தாண்டனோ அகோரமாய் முகம் சிதைந்திருக்க ரத்தம் வழிய அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான் உயிரற்ற ஜடமாய் .அதை கண்டு உயிரே போகும் அளவுக்கு கத்தியவனின் கைகளிலேயே அவனின் உயிரற்ற ஜடம் வந்து விழ அவனின் சடலத்தை மடியில் தாங்கியவாறு கண்ணீருடன் கதறினான் நீலகாந்தன் .
"மார்த்தாண்டா மார்த்தாண்டா என் மகனே கண் திருந்து பாரடா மார்த்தாண்டா "என்று கத்த
அவனின் கத்தலை பார்த்துக்கொண்டிருந்த நால்வரில் ஆதிராவோ ஏளனமாய் சிரித்தவள் அவன் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டவள் "இப்டி தான எங்கப்பாவுக்கும் வலிச்சுருக்கும் ?"என்று கேட்க
அவன் அனல் கக்கும் பார்வையோடு பார்க்க ஆராதனாவோ "கண்ணீரை மிச்சம் வை நீலகாந்தா தேவைப்படும் "என்க நீலகாந்தனோ வார்த்தைகள் எழாமல் குழப்பமாய் பார்க்க வாசலிலிருந்து அடி மேல் அடிவைத்து தன் முகத்தை மூடிய அவ்வுருவம் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது .
அவனிற்கு நேருக்கு நேராய் வந்து நின்ற அவ்வுருவம் முழுதாய் தன் உடலை மூடி இருக்க ஆதிராவும் ஆராதனாவும் அவனை நோக்கி இளக்காரமாக புன்னகைத்தவர்கள் "என்ன அடையாளம் தெரியவில்லையா ?"என்று அந்த உருவத்தின் முகத்தின் திரையை விளக்க அவ்வுருவத்தின் முகத்தை பார்த்த நீலகாந்தனோ அதிர்ச்சியின் உச்சிக்கே செல்ல இதுவரை அவன் கண்கள் அறியா ஒரு பாவம் அவனது கங்களில் குடியேறியது பயம் .....
யாராக இருக்கும் அவ்வுருவம்?
ஆராதனாவும் ஆதிராவும் எப்படி தப்பித்தனர்?
அருள்மொழிக்கு ஆருத்ரா எப்போது தனது சக்தியை வழங்கி இருப்பார் ?
நீலகாந்தனின் மரணத்தின் ரகசியம் உடைக்கப்பட்டதா ?எனில் அது என்ன ?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top