30

இன்னும் மூன்று நாட்களில் பௌர்ணமி என்றிருக்கும் வேளையில் அருள்மொழியும் ஆதேஷும் ஆதிராவும் அந்த அடர் காட்டிற்குள் மூன்று பெரும் தடைகளை தாண்டி ஆழி போன்ற அவ்வரண்மனையில் ஏந்திழையவளை மீட்க மீளா வேட்கையோடு வந்துகொண்டிருந்தனர் .காலை உதித்த ஆதவன் தன் ஒளியை வாரி வழங்கி ஓய்வு பெற்று தன் இளவனான சந்திரனை மேலெழும்பி விட அந்த ராத்திரி பொழுதில் அந்த அடர்ந்த காட்டில் நடந்து நடந்து ஓய்ந்து மூச்சிரைக்க ஆதிரா கீழே அமர்ந்துவிட்டாள் "எப்பா எம்மா இதுக்கு மேல என்னால முடியாதுடா நடக்க கால் வலி பின்னுது "என்க

ஆதேஷோ "ஆதிரா இப்போ ரெஸ்ட் எடுக்க நேரமில்லை இன்னும் கொஞ்ச தூரத்துல அந்த அரண்மனை வந்துரும் பௌர்ணமிக்கு இன்னும் மூணு நாள் தான் இருக்கு அதுக்குள்ள அண்ணியை எங்க வச்சுருக்காங்கனு கண்டுபிடிக்கனும் அந்த கூட்டத்தையே கூண்டோட அழிக்கனும் சேட்டை பண்ணாம எந்திரி "என்க

அவளோ உதட்டை பிதுக்கி "எனக்கு மட்டும் என்ன கவலை இல்லையா? என்னால சத்தியமா நடக்க முடிலடா கொஞ்ச நேரம் அடலீஸ்ட் உக்காந்துட்டாவது போலாமே"என்க

ஆதேஷ் ஏதோ கூற வர அவனை அமைதிப்படுத்திய அருள் "நாம் காடுமேடெங்கும் சுற்றி திரிந்து வளர்ந்தவர்கள் எனில் இவள் அப்படி அல்ல. ஓய்வே தராமல் அவளை நடக்க வைத்தது நம் பிழை தான் .சற்று நேரம் இளைப்பாறிவிட்டு செல்லலாம் அருகில் நெருங்கிவிட்டோம் "என்க அவர்கள் பின்னே இரு முகம் மறைத்த மூன்று வீரர்கள் தாக்க வருவதை பார்த்தவள் பதறி இருவரின் கையையும் பிடித்து பின்னே இழுத்துவிட்டு ஒருவன் நெஞ்சில் எட்டி மிதிக்க இன்னொருவனும் சேர்ந்து வீழ்ந்தான் பின் அருகில் வந்த இன்னொருவனை முழங்கையை வைத்து கழுத்தில் இடித்து கீழே தள்ளி விட்டாள்.

சட்டென்று நடந்து விட்ட விபரீதத்தில் இருவரும் சுதாரிக்குமுன்னே அந்த காவலர்களின் அருகில் சென்று வாள் ஏந்திய இருவரின் கையையும் ஒரு சேர ஒற்றை காலால் மிதித்தவள் இன்னொருவனின் குரல்வளையில் தன் கையிலிருந்த வாளை வைத்து"சிக்கி கொண்டீர்களா "என்றுவிட்டு சுற்றி முற்றி பார்க்க அங்கே மரத்தின் மறைவில் மூதாட்டி ஒருவர் சுணங்கியப்பாடி ஏதோ பிதற்றுவது தெரிய ஆதேஷிடமும் அருள்மொழியிடமும் சைகை காட்ட இருவரும் சென்று அந்த மூதாட்டியை பிடித்துக்கொண்டு வந்தனர்.

அந்த மூதாட்டியை எங்கோ பார்த்ததை போல் இருக்க அவரின் சோர்ந்த கண்களிலோ ஆதிராவை கண்டதும் முதலில் வியப்பில் விரிந்து பின் கனிவை தத்தெடுக்க அவளின் முக வடிவத்தை கண்ணீரோடு வருடியவாறு "நீ ஆதிரா தான "என்று தேய்ந்து நைந்த குரலில் கேட்க அவள் தயக்கமாய் ஆம் என்று தலை ஆட்ட

அவளை உணர்ச்சிமிகுதியில் அணைத்துக்கொண்டவர் "என் பேத்தி......... எப்படி அம்மா இருக்கிறாய் நீ "என்று அவளை அணைத்தபடி பிதற்ற அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை .

வேகவேகமாய் அவரை தன்னிலிருந்து பிரித்தவள் "எ...... என்ன சொல்றீங்க ?"என்க

அவரோ ஒரு கசந்த புன்னகையை சிந்தித்தவர் "உன் தந்தையையும் அந்த அரக்கனையும் ஒரே வயிற்றில் பெற்ற பாவி தானம்மா நான் "என்க அப்பொழுதே அவளிற்கு ஏன் அவரை எங்கோ பார்த்ததை போல் இருந்ததென்று விளங்கியது .விஷாகனிற்கு பெண் வேடம் போட்டு வயோதிக வயதில் எப்படி இருந்திருப்பானோ அப்படியே இருந்தார் .அதே சாந்தமான கனிவான உண்மையான பாசம் மட்டுமே கண்களில் நிறைந்த முகம் .

அவர் கூறியதை கேட்டு திகைத்திருந்த ஆதேஷும் அருளும் சற்று நேரம் திகைக்க அதை பயன்படுத்திய அந்த காவலர்கள் அவர்கள் முதுகில் வாளை பாய்ச்சப்பார்க இப்படி நடக்கும் என்று தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் புறம் திரும்பாமலே தமது வாளை உருவியவர்கள் அவர்கல் மூவரின் தலையையும் துண்டாக்கினர் .

அவரை அதிர்ச்சி விலகாமல் பார்த்தவள் "ப... பாட்டி நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் உங்களை எதற்காக காவலர்கள் பிடிக்க வேண்டும் "என்க

அவரோ ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவர் ."நான் பெற்ற மூத்த மிருகத்தின் கைங்கரியம் தானம்மா இது " என்க

அவள் "புரியவில்லை" என்க

அவரோ அவளின் கையை பற்றியபடி கண்ணீர் சிந்தியவர் " விஷாகன் அந்த வம்சத்தில் ஏன் பிறந்தான் அந்த மூர்கர்களுக்கு மத்தியில் என்று நான் வருந்தாத நாட்களே இல்லை .உங்கள் தாயையும் உங்கள் இருவரையும் தன் உயிரிற்கு மேலாய் நேசித்தான் .நான் என்றால் அவனிற்கு அத்தனை இஷ்டம். அவர்கள் கூறிய பாவச்செயல்களையெல்லாம் அவன் செய்ததற்கு முழுமுதற்கரணமே என் உயிரை அவர்கள் பகடையாய் உபயோகித்ததால் மட்டுமே .அத்தனை அன்பானவன் விடுமுறைக்கு வந்தால் உனது அன்னைக்கு செய்யும் துரோகத்தை நினைத்து என் மடியில் தலை வைத்து கண்ணீர் விட்டு அவன் வெதும்பாத நாட்களே இல்லை .என் மூத்த மகனை இவை ஏதும் வேண்டாம் விட்டுவிடு என்று நான் கெஞ்சாத நாட்களே இல்லை எனில் இரக்கமற்றவன் மூர்க்கமாய் உடன் பிறந்தவனையே துடிக்க துடிக்க தலையை துண்டாக்கி கொன்றுவிட்டான் .என் செல்ல மகனை கொன்றுவிட்டான்"என்று

துக்கம் தாளாமல் சற்று கதறியவர் பின்

" உனது தந்தையை கொன்ற தினமே நான் அவனை மொத்தமாய் வெறுத்துவிட்டேன் ஆதிரா .எனில் அவனிடம் உங்கள் இருவரின் உயிரும் ஊசலாடிக்கொண்டிருந்ததே அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அவன் கூறிய அனைத்தையும் செய்துகொண்டும் அவனது அவ்வரண்மனையில் ஒரு உயிருள்ள பிணமாகவும் வாழ்ந்து வந்தேன். எனில் மூன்று வருடங்களுக்கு முன் உன் தமக்கையை சிறைபிடித்து வந்ததன் மூலம் அவனது அக்கிரமம் எல்லையை கடந்துவிட்டது .ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு நாளும் அச்சிறுபெண்ணை தன் தம்பியின் ரத்தமென்றும் பாராது அடித்தும் நினைக்கும் நேரமெல்லாம் அவள் உடலில் கத்தியை கொண்டு கீரியும் ஒரு நாளிற்கு ஒரு வேளை மட்டுமே கைநிறைய உணவை மட்டும் அளித்து என்று என்னென்ன கொடுமைகளை செய்ய கூடாதோ அனைத்தையும் செய்தானம்மா .எனில் அவள் ஒருநாளும் துவண்டு போனதே இல்லை அவன் அருகில் வந்து அவளை அடிக்கும் போதெல்லாம் அவள் தடுத்ததும் இல்லை பயந்தும் இல்லை ஒரு ஏளனச்சிரிப்போடு தான் அவனை எதிர்கொள்வாள்.

அவன் செயலை தட்டி கேட்ட என்னையும் சிறையில் அடைத்துவிட்டான். நான் அவளிடம் இங்கிருந்து தப்பி செல்ல மார்க்கம் கூறுகிறேன் சென்றுவிடு ஆராதனா என்று கூறும்போதெல்லாம் அவள் உதிர்க்கும் ஒற்றை பதில் "என்னுடன் பிறந்தவளும் என்னவனும் என்னை தேடி வருவார்கள். அவனின் மரணசாசனத்தை எழுதி என்னை மீட்டு செல்வர் அதுவரை நான் காத்திருப்பேன் என்று கூறி முடித்துவிடுவாள்." என்று கூற ஆதிராவிற்கும் ஆதேஷிற்கும் கோபத்தில் கண்கள் சிவந்ததென்றால் அருள்மொழிக்கோ உடலில் ஒவ்வொரு பாகமும் தீயிலிட்டதை போல் தகித்தது.

கோபத்தில் அவன் அருகிலிருந்த மரத்தில் குத்த அம்மரம் அவ்விடத்தே முறிந்து கீழே வீழ்ந்தது மனது அவனின் கண்ணம்மாவை நினைத்து வெதும்ப துவங்கியது .ஆதிராவோ தன்னை கட்டுப்படுத்த வெகுவாய் சிரமப்பட்டவள் பின் கை முஷ்டியை மடக்கி கட்டுப்படுத்தியவள் அவர் கூறுவதை மேலும் கேட்க ஆரம்பித்தாள் "இத்தனைக்கு பின்னும் அவன் என்னை விட்டுவைத்திருக்கும் ஒற்றை காரணம் அவனின் மரணத்தின் ரகசியத்தை நான் அறிந்த காரணத்தினால் மட்டுமே .பௌர்ணமிக்கு இன்னும் மூன்று நாட்களே மீதம் இருக்க அவள் நம்பிக்கை வைத்ததை போல் தாம் மூவரும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது போல் தெரியவில்லை .இனியும் தாமதித்தால் என் மகனையும் அவன் மனைவியையும் பலி கொடுத்ததை போல் உம் இருவரையும் பலி கொடுக்க நேரிடும் என்பதாலேயே என்ன ஆனாலும் சரி என்று நான் அவனின் மரண ரகசியத்தை உம் ராஜ்யத்திற்கு வந்து கூறலாம் என்று அவன் சக்தியை இழந்திருந்த நேரம் சிறையிலிருந்து தப்பித்து வந்துகொண்டிருந்தேன் .அதை அந்த பாவி எப்படி கண்டுகொண்டானோ என் பின்னே காவலர்களை என்னை பிடிக்க அனுப்பி விட்டான் ."என்க

மரணத்தின் ரகசியம் என்ற சொல்லில் அவளுள் ஏதோ துணுக்குற "என்ன ரகசியம் ?"என்க

அவர் கூறியதை கேட்டவளிற்கு உடல் விறைத்து வெளிறியது அடுத்த நிமிடமே வெற்றிச்சிரிப்பை முகத்தில் சூடிக்கொண்டவள் மனதிலேயே "நான் சந்தேகித்து வீண் போகவில்லை .நீலகாந்தா உன் மரணத்தை பரிசளிக்க நான் வருகிறேனடா " என்று நினைத்தவள் பின் அவர் புறம் திரும்பி "பாட்டி தாங்கள் கவலையை கலைந்துவிடுங்கள் நாங்கள் வெற்றியுடன் திரும்பி வருகிறோம்."என்க

அவர் அருகில் வந்த ஆதேஷும் அருள்மொழியும் அதுவரை தங்கள் பாதுகாப்பிற்காக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு உடைவாளையும் ஒரு கையில் ஒரு ரட்சை கயிரையும் கட்டிவிட்டனர் .பின் மூவரும் அவரின் பாதம் பணிந்து பின் அவரை அங்கேயே விட்டுவிட்டு செல்ல அவரோ மூவரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தவர் ஆதிராவின் கையில் அந்த அரண்மனையின் வரைபடத்தை கொடுத்து சிறைச்சாலைக்கு செல்லும் வழியையும் கூறி அனுப்பினார் .

சற்று தூரம் நடந்தவர்கள் பின் ஏதோ தோன்றிட ஆதிரா அந்த இறந்த காவலர்களின் உடையை களைந்து தம்முடன் எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு முன்னே நடக்க இருவரும் எதற்கென்று புரிந்துகொண்டு அவள் கூறியபபடியே அவ்விருவரின் உடையையும் களைந்து தம்முடைய பையில் வைத்துக்கொண்டு நகர்ந்தனர் .அரை மணி நேர பிரயாணத்திற்கு பின் அந்த ஓங்கி உயர்ந்து பல ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாய் இப்படி ஒன்றுள்ளதென்று அடித்து சொன்னாலும் நம்ப முடியாத ஒரு அடர் வனத்திற்குள் நிலவின் ஒளியில் பளிங்காய் மின்னியத்தந்த அழகு நிறைந்த அரண்மனை .எனில் அதீத அழகு ஆபத்து என்பதை போல் அதனை அழகினையும் தாண்டி ஓர் அச்சத்தை அதன் தோற்றம் விதைக்கவே செய்தது .ஏற்கனவே முடிவெடுத்ததை போல் பதுங்கி பதுங்கி அந்த அரண்மனையின் நீர்வீழ்ச்சியின் புறம் வந்து சேர்ந்தனர் நமது நாயகியும் நாயகர்களும் .

அதீத வேகம் இல்லாதிருந்தாளும் நீர்வீழ்ச்சியின் தாக்கத்தால் அங்கிருந்த பாறைகள்,சுவர்கள் அனைத்தும் பாசிபடிந்து அதிக வழுவழுப்போடிருக்க ஏற்கனவே முடிவு செய்திருந்ததை போல் அருள்மொழி கண்ஜாடை காட்ட இருவரும் தாங்கள் பையில் கொண்டுவந்திருந்த இருபது அடி கயிறை எடுத்து வயிற்றில் கட்டிக்கொள்ள அருள்மொழி ஏதோ வாய்க்குள்ளேயே முணுமுணுக்க அந்த கயிறின் முனையில் வந்து தோன்றியது உடும்பு.

(உடும்பை பற்றி தெரியாதவர்களுக்கொரு குறிப்பு உடும்பு ஒருவகை விலங்கு அதை அந்த காலத்தில் கொள்ளையர்கள் கோட்டை சுவர்களை தாண்ட அதை பற்றிக்கொள்ள ஒரு கருவியாய் உபயோகப்படுத்துவர் .ஒற்றை முனிக்கயிறை அதனோடு சேர்த்துக்கட்டிவிட்டு அதை மதிலின் மேல் தூக்கி எறிந்த அது பற்றிக்கொள்ளும் இடத்தை தலையை வெட்டி எடுத்தாலும் விடாது ,அத்தனை வலிமையாய் இருக்கும் அதன் பிடி .இறுகிய பிடியினை உடும்பு பிடி என்று அதற்காகவே கூறுவர்.)

பின் மூவரும் அந்த கயிறை மதில் சுவற்றின் மேல் தூக்கி எரிய மதில் சுவற்றின் விளிம்பை அந்த உடும்புகள் கெட்டியாய் பிடித்துக்கொண்டன .பின் அந்த கயிற்றை பிடித்து வழுக்கும் பாறைகளில் காலை லேசாய் வைத்து வைத்து கஷ்டப்பட்டு சிலமுறை வழுக்கி ,சிராய்த்து கஷ்டப்பட்டு ஏறி வந்தவர்கள் அந்த அரண்மனை மதிலின் விளிம்பில் நின்றுகொண்டு சுற்றி முற்றி பார்க்க வீரர்கள் யாரும் வருவதை போல் இல்லை பின் இருவரின் கையையும் இருபுறமும் கோர்த்தவாறு அவளின் அனுமதியோடு மூவரும் அந்த அரண்மனையில் கால் பதிக்க உடலில் மின்சாரம் தாக்கியதை போன்றதொரு அனுபவத்தை சிறையிலிருந்து பெற்றாள் ஆராதனா .

சுற்றி முற்றி பார்க்க யாரும் இல்லாது போக அங்கே ஓர் மறைவான இடத்தில சென்று தமது உடைகளுக்கு மேலேயே அந்த காவலர்களிடமிருந்து களவாடிய உடைகளை போட்டுக்கொள்ள ஆதிரா சற்றே ஒடிசலான தேகத்தை கொண்டதால் அது தொள தொளவென்றிருக்க கீழே கிடந்த வைக்கோலை மிச்ச இடத்திற்கு உள்ளே திணித்துக்கொண்டாள் .பின் முகத்தை மூடிய மூவரும் ஒரு முடிவுடன் உள்ளே செல்வதற்கான அவ்விருண்ட பாதைக்குள் சென்றனர் .

உள்ளே சென்ற மூவரும் வெற்றியுடன் திரும்புவரா ?

நீலகாந்தனின் மரண ரகசியம் தான் என்ன ?

.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top