29

யோசனையில் சுருங்கிய முகத்துடன் திரும்பிய அருள்மொழியின் கண்ணில் பட்டது அவர்களுக்கு எதிரே அப்புறம் இருந்த விருவல் மரம் நிறைந்த பகுதி (இப்டி ஒரு மரமே இல்ல ஜஸ்ட் என்னோட கற்பனை தான் ).விருவல் மரம் எத்தனை வளைத்தாலும் வளையக்கூடிய தன்மையை உடையது .மிகச்சாதாரணமாகவே முற்பது அடிக்கு மேல் வளரக்கூடியது .ஒரு யானையின் எடையையும் தாங்கக்கூடிய உறுதியை பெற்றது .கனமான கடினமான தரையிலேயே ஆழமாய் வேர்விட்டு வளரக்கூடிய மரம் அது.எனில் சாதாரண நாட்களில் யார் கண்ணிற்கும் தெரியாமல் கொடியினை போல் சுருங்கி வேற்று மரங்களில் ஒட்டிக்கொண்டுவிடும் அம்மாய மரம் .பௌர்ணமிக்கு சரியாய் ஏழு நாட்களுக்கு முன் மட்டுமே நெடிந்துயர்ந்து மாற்றோர் கண்ணிற்கு புலப்படும்.

அதை கண்டவன் கண்கள் ஒளியேற்ற ஒரு அர்த்தப்புன்னகை புரிந்தவன் ஆதேஷிடம் திரும்பி "இளவனே "என்று அம்மரத்தை நோக்கி கண்ஜாடை காட்ட அம்மரத்தை பார்த்தவன் கண்களும் ஒளியில் மின்னியது .பின் அங்கிருந்த ஒரு கோடியை பிடித்து இழுத்து அதை அம்பின் கூர்முனையுடன் கோர்த்தவர்கள் ஒரு கல்லையும் அதன் முனையில் கட்டி அம்மரத்தின் நுனியில் எய்து விட அந்த கல்லின் எடையால் அந்த கொடி அம்மரத்தை சுற்றி முடிச்சு போட்டது போல் விழுந்து விட இருவரும் கோடியை பிடித்திழுக்க மரமும் எளிதாய் வளைந்து அவர்கள் பாதத்தை தொடுமாறு ஒரு பாலம் போல் மந்த அகழியின் மேல் விழுந்தது .பின் அந்த இன்னொரு முனையை ஒரு கனமான பாறையில் கட்டியவர்கள் ஆதிராவை நோக்கி வர இதுவரை பார்வையாளராக மாறி இருந்த ஆதிரா "ஆது என்ன மரம் ?இது இதுவரைக்கும் நா பார்த்ததே இல்லையே இப்டி ரப்பர் மாறி வளையுது இவ்ளோ நீளமா வேற இருக்கு "என்க

ஆதேஷோ அவள் புறம் திரும்பியவன் "இது விருவல் மரம் இந்த காட்டு பகுதில மட்டுமே பார்க்க முடியுற ஒரு அபூர்வமான மரம் சிலது தான் இருக்கும் அதுவும் பௌர்ணமிக்கு சரியா ஏழு நாள் முன்னாடி தான் இப்டி நெடு நெடுனு இருக்கும் மத்த நாட்களில் எல்லாம் கொடி மாதிரி சுருங்கி மத்த மரத்துல படர்ந்து இருக்கும் .ஒரே நேரத்துல ரெண்டு யானையை தங்குற அளவுக்கு பலமானது. ஆனா ஈஸியா சின்ன பையனாள கூட இதை வளைக்க முடியும் "என்க அவளிற்கு ஆச்சர்யமாய் இருந்தது இப்படியெல்லாமா மரங்கள் இருக்கிறதென்று (ஹீஹீ இருக்கும் இருக்கும் ).

பின் மூவரும் அந்த அகழியை கடந்து அப்புறம் சென்றிட சிறிது தூரம் நடைபிரயாணத்திலேயே அவர்கள் எதிர்பார்த்த அந்த குகையின் வாசலை அடைந்து விட்டனர் .ஒரு திமிங்கலம் தன் வாயை பிளந்தவாறு இருப்பதை போல் அமைந்திருந்த அந்த குகையின் நுழைவாயிலை கொடிகளும் மூலிகைச் செடிகளும் படர்ந்து கிட்டத்தட்ட அவ்வாயிலையே முழுதாய் ஆக்ரமித்திருக்க அதன் வெளியே இருந்த கரையான் புற்றும் அந்த குகையிலிருந்து வெளியே கசியும் ஓவென்ற சத்தமும் சிறிது கிலியை கிளப்பியது .

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அருள்மொழி பேசினான் "இது வரை நாம் கடந்து வந்த இரு தடைகளும் மிகவும் சுலபமானவை மதியை ப்ரோயோகித்தால் வென்றுவிடலாம். எனில் இம்மாயகுகை அப்படி பட்டதல்ல .உள்ளே செல்லவும் வெளியேறவும் ஒற்றை வழியை கொண்ட இதனுள் தப்பித்தவறி நாம் சிக்கிக்கொண்டாலும் வெளியேறுவதென்பது இயலாத காரியம் .இன்னொரு முக்கியமான விஷயம் இந்த குகையில் ஒரு கதவை திறந்து மற்றோர் பகுதிக்கு சென்றுவிட்டால் அந்த இடத்தில இருந்த கதவுகள் நான்கும் மறைந்து சுவர் தான் மீதமிருக்கும் தவறான கதவை திறந்தோமெனில் நாம் மடிவது உறுதி ."என்க

இருவரும் அதை கேட்டுக்கொண்டாலும் ஆதிராவின் மூலையில் அந்த பெரியவர் கூறிய வார்த்தைகளே ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது ."முதலை அறிந்து கொண்டாய் முடிவை அறிந்து கொண்டாய் இடையில் உள்ள ரகசியத்தை அறியாது உள்ளாய். அப்டினா நடுவுல எந்த விஷயம் எனக்கு தெரியலன்னு சொல்றாரு ?அருள் அத்தானும் மாமாவும் தனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டாங்க அப்போ அது அவுங்களுக்கு தெருஞ்சுருக்க வாய்ப்பில்லையே .எந்த ரகசியமா இருக்கும் ?"என்று யோசித்தபடி உள்ளே அந்த குகையினுள் காலை வைத்தாள் .

பின் மூவரும் அவர்கள் பற்றவைத்திருந்த கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்தின் உதவியோடு முன்னேறி செல்ல வெளிச்சம் பரவியிருந்த அந்த சிறு பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் அப்பி இருந்து கரும் இருளும் ஆங்காங்கே கேட்ட வௌவால்களின் சலசலப்பும் அவ்விடத்தில் தோன்றிய துர்நாற்றமும் குடலை பிரட்ட முகத்தை சுழித்தவாறே அவர்களின் பின் சென்றாள் ஆதிரா .அங்கே ஓர் பகுதிக்கு வந்த பின் நான்கு கதவுகள் இருக்க அந்த கதவுகளின் அருகில் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தை வைத்து மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தனர் மூவரும். எனில் அதில் சிறு எழுத்தோ ,சிற்பங்களோ எதுவுமே பொறிக்கப்படவில்லை வெறும் செம்மண் சுவற்றில் பதிந்திருந்த கற்கலாகவே இருந்தது.அதை சுற்றி இருக்கும் சுவற்றில் வெறும் ஒரு சுவற்றில் மட்டும் இருபுறமும் இரு மங்கைகள் ஆடுவதை போன்ற சிற்பம் மட்டுமே இருந்தது .

எனில் அந்த கதவில் லேசாய் தள்ளி பார்த்தாலே திறக்கும் சத்தம் கேட்க அதுவே சொல்லாமல் சொன்னது நான்கு கதவும் திறந்து தான் இருக்கிறதென்று .ஆதிராவிற்கோ ஆயாசமாய் இருந்தது பத்து பிரிவிலும் நான்கு நான்கு கதவுகள் இருந்தால் வெளியே செல்ல ஆயிரம் வழிகள் ஊகிக்கலாம் எனில் வெளியே செல்ல ஒற்றை வழி மட்டுமே இருக்க எந்த கதவை திறக்க என்று முதல் கட்டமே மண்டையை உடைப்பதை போன்ற புதிரை கொடுத்தது .

இந்த குகைக்குள் வெகுநேரமும் இருந்திட முடியாது ஸ்வாஸக்காற்றிற்காக சிறு ஓட்டைகள் இருக்க அருள் கூறியதை போல் இரண்டு மணி நேரத்திற்கு பின் ஆழ் கடலின் ஆழம் தொட்டு வருபவனால் கூட மூச்சை இழுத்துப்பிடிக்க முடியாது .மூவரும் யோசனையில் இருக்க அப்புறமும் அப்புறமும் நடந்து கொண்டிருந்த ஆதிரா கீழே இருந்த சிறு கல் தடுக்கி தடுமாற அவளின் பையிலிருந்து கீழே விழுந்தது அந்த முதியவர் கொடுத்த காந்தள் துணி .

ஏதோ ஓர் உந்துதலில் அதை எடுத்து பார்த்தவள் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் அதை பார்க்க அதிலோ ஒரு அழகிய ஓவியம் வரையப்பட்டிருந்தது .ஒற்றை காலில் நின்றபடி ஒற்றை கையை தூக்கியபடி ஏதோ பரதநாட்டியம் ஆடும் ஒரு மங்கை நிற்பதை போன்ற வரி உருவம் இருக்க அது என்னவென்றே அவளிற்கு விளங்கவில்லை .

பின் அந்த காந்தள் துணியை எடுத்துக்கொண்டு அங்கே ஓர் பாறையில் அமர்ந்து புருவம் சுருக்கி யோசித்துக்கொண்டிருந்த ஆதேஷிடமும் அருளிடமும் சென்றவள் "அத்தான் ஆது நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் "எங்க இருவரும் ஒருசேர அவளை பார்க்க அவளோ அந்த காந்தள் துணியை எடுத்து இருவர் முன்னும் விரித்தவள் அங்கே குளக்கரையை ஒட்டி அந்த முதியவரை கண்டது முதல் அனைத்தையும் கூறியவள் அந்த காந்தள் துணியை காட்ட சகோதரர் இருவருக்கும் அதில் ஏதோ ஒன்று இருப்பதாக தோன்ற வேக வேகமாய் அதை வாங்கி இருவரும் உன்னித்து பார்த்தனர் .அருள் மொழி அதை உற்று நோக்கினும் ஒன்றும் பிடிபடாது போக அதை கவனித்துக்கொண்டிருந்த ஆதேஷின் இதழ்களோ திடீரென விஸ்தாரமான புன்னகையில் விரிந்தது .

அவன் புன்னகைப்பதை பார்த்து குழம்பிய இருவரும் என்னவென்று பார்க்க

அருளோ "இளவா திடீரென என்னானது புன்னகைக்கிறாய் "என்க

அவனோ அந்த ஓவியத்தை சுட்டிக்காட்டியவன் "தமையனே இந்த ஓவியத்தை நன்கு ஊன்றிப்பாருங்கள் இந்த ஓவியத்தை பத்து பகுதிகளை பிரித்திருக்கின்றனர் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு சிறு புள்ளிகள் உள்ளது பாருங்கள் .அந்த மங்கையின் ஒற்றை காலும் தூக்கி இருக்கும் ஒற்றை கையும் ஒரே நேர்கோட்டில் உள்ளன அவற்றின் முனையிலும் இதை போன்ற புள்ளிகள் இருக்கின்றன பாருங்கள்.இதில் மற்ற கோடுகள் ஒரு சில இடங்களில் சேராமல் போக ஒற்றை பாதை போன்ற கோடு மாத்திரம் அந்த இரு புள்ளிகளையும் ஒவ்வொரு பகுதியில் ஒரு ஒரு புள்ளியையும் இணைத்து பாதையை போல் உள்ளது பாருங்கள் .அதை உற்று நோக்கினால் சம்ஹித்த என்று தலை கீழாய் எழுதி உள்ளது ."என்க இருவருக்கும் புரிந்தது இது இந்த குகையை விட்டு வெளியே செல்லும் வழி என்று .

எனினும் ஒரு சிறு ஐயம் எழ ஆதிரா "ஆனா மஞ்சக்காமாலைல இருக்குறவனுக்கு பாக்குறதுலாம் மஞ்சுளா தெரியுற மாறி இது வேற எதோட cluevaavo இருந்து நாம தப்பா புருஞ்சுகிட்ருந்தா "என்க

அருள்மொழியோ எதிரிருந்த சுவற்றை பார்த்தவன் அதற்கு அவசியமே இல்லை என்று எதிரில் இருந்த சுவற்றின் அருகில் சென்றவன் ஒரே ஒரு இடம் மட்டும் வித்யாசமான வழவழப்போடு இருக்க அப்பகுதியை தன் கையால் தள்ள அந்த கல் உள்ளே போய் வெளியே அந்த காந்தள் துணியில் இருந்த அதே மங்கையினை போன்ற சிற்பம் வெளிவந்தது .அந்த கல் சுவற்றோடு சுவராக அதே நிறத்தில் இருக்க அந்த பகுதியில் இருக்கும் சிறு வித்தியாசம் வெளிச்சம் படும்போதே தெரியும் .மிகவும் உன்னிப்பாய் கவனித்தால் ஒழிய இதை அறிய முடியாது .அதிலும் ஓர் வழி இந்த காந்தள் துணியில் இருப்பதை போன்றே ஸம்ஹித்த என்று பொறிக்கப்பட்டிருந்தது .

மூவருக்கும் அம்மாய குகையை கடக்கும் வழி கிடைத்துவிட விசாலமான புன்னகையோடு அந்த வழியை ப்ரோயோகித்து அக்குகையை கடந்தவர்கள் அரண்மனையை நோக்கிய தங்கள் பயணத்தை துவங்கினர் .

இங்கே இவர்கள் மூவரும் அக்குகையை கடந்து விட திடீரென சிறையில் இருந்த ஆராதனாவிற்கு மூன்று நெடிய வருடங்களுக்கு பின் ரணப்பட்ட மனதையும் உடலையும் மயிலிறகால் வருடுவதை போல் என்னென்று அறியாத நிம்மதி பிறக்க இதயத்தில் அருளின் முகமும் ஆதிராவின் குழந்தை முகமும் மாறி மாறி தோன்றிட மனம் தன்னவன் தன் உடன்பிறந்தவளுடன் தன்னை நெருங்கிவிட்டான் என்று கொக்காரமிட்டுக்கொண்டிருந்தது .

மூன்று நெடிய வருடங்களுக்கு பின் அவள் கண்களில் ஒரு தேடல் இதழில் ஒரு சிறு புன்னகை .வெளிச்சம் வரும் அச்சிறு ஜன்னலை வெறித்தவள் வானில் தெரிந்த அச்சூரியனை தன்னவனாய் நினைத்து பேசினால் "விரைவில் என்னை இவ்விடம் விட்டு அழைத்து செல்லுங்கள் அத்தான் ஓயாது கண்கள் இரண்டும் உங்கள் வதனத்தை காணவே தவம் கிடந்து சோர்ந்து போய் உள்ளன "என்க

இங்கே அவள் பேசிய வார்த்தை அவன் நெஞ்சை அடைந்ததோ என்னவோ அச்செஞ்சூரியனை பார்த்த அருள்மொழியும் மானசீகமாய் தன்னவளிடம் உறுதிகூறினான் "விரைவில் வந்துனை மீட்பேனடி கண்ணம்மா கவலையை களைந்துவிடு "என்று அவரவர் மனதில் ஒவ்வொன்றை நினைத்திருக்க இறைவன் நினைத்திருப்பது என்னவோ ?

இங்கே அவரவர் சிந்தனையில் உழன்றிருக்க அந்த அருவிக்கரையிலோ திடீரென ஓர் சிறு இடத்திலிருந்து ஆஆ என்ற ஒலி எழ அதை தொடர்ந்து அவ்விடத்திலிருந்த நீர் முழுதும் கருப்பு நிறமாய் உருமாற அந்த இடத்திலிருந்து தடதடவென ஏதோ ஒன்றை தட்டும் சத்தம் வெகுவாய் கேட்க அந்த சத்தம் நேரத்திற்கு நேரம் அதிகமாகி பின் ஓய்ந்து தேய்ந்து போனது கடைசியாய் அவ்விடத்திலிருந்து ரத்தம் போன்ற சிகப்பு நீரும் வெளியேறியது காதை கிழிக்கும் மரண ஓலத்துடன் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top