27

(இந்த சாப்டர்ல வர பாதுகாப்பு கட்டங்கள் அதை ஆதிராவும் மத்த ரெண்டு பெரும் சேர்ந்து தாண்ட யூஸ் பண்ற techniques எல்லாமே purely பண்டை காலத்துல அரசர்கள் தங்களோட ராஜ்யத்தை காப்பாத்துறதுக்காக வச்சிருந்த பாதுகாப்பு techniquesum அதை உடைக்கிற வழிகளும் தான் சோ இதை எங்கயோ படிச்சா மாறி இருக்கேனு யோசிக்காதீங்க கண்டிப்பா ஹிஸ்டரிலே படுச்சுருப்பீங்க )

அடுத்த நாள் காலை அழகாய் விடிய அங்கே அந்த சிவலிங்கத்தின் முன் கை கூப்பி கண் மூடி பிரார்தித்தவாறு பயணத்திற்கு ஆயத்தமாய் அருள்மொழியும்,ஆதேஷும் ஆதிராவும் நிற்க மற்ற ஊர்மக்களும் கீழே நின்று சிவனை வணங்கிக்கொண்டிருந்தனர் .பின் மூவரும் வணங்கிமுடிக்க வந்தியத்தேவரோ சிவனின் பாதத்தில் இருந்து ஒரு சிகப்பு கயிறை எடுத்து ஆதிராவின் கையில் கட்டியவர் ஆதிராவிடம் "ஆதிரா இந்த கயிறு உன்னிடம் இருக்கும் வரை உன்னை எந்த கார்மேக வம்சத்தவனாலும் சம்ஹித்த வம்சத்தவனாலும் நெருங்க இயலாது இது உன் கையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள் "என்று கூறியவர் பின் மூவரின் நெற்றியிலும் திருநீறை பூசியவர் வெற்றியுடன் திரும்பி வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார் .

ஆதேஷும் ஆதிராவும் ஒரு புரவியில் ஏறிக்கொள்ள அருள் மொழி வேறொரு புரவியில் ஏறிக்கொண்டான் .பின் மூவரும் தங்கள் இலட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர் அந்த அடர்ந்த கானகத்தினுள் .

இங்கே இவர்கள் பயணம் செய்து கொண்டிருக்க அங்கே யாககுண்டத்தின் முன் ரத்த சிகப்பான கண்களுடன் யாகத்தீயில் நெய்யை வார்த்தவாறு மந்திரங்கள் உச்சரித்தபடி அமர்ந்திருந்தான் நீலகாந்தன் .அவனின் முன்னே வழக்கம் போன்ற திமிர் பார்வையுடன் அவனிற்கு சளைக்காமல் அமர்ந்திருந்தாள் ஆராதனா .யாகம் முடியும் தருவாயில் அவளின் கையை பிடித்திழுத்தவன் அவள் கையில் அங்கங்கே இருக்கும் வெட்டுக்காயத்திற்கு மத்தியில் மேலும் ஒரு கீறலை தன் கத்தியால் கீறியவன் அவளின் கையிலிருந்த வடியும் உதிரத்தை யாககுண்டத்தில் விட்டு யாகத்தை முடிக்க அவளோ தன்னை கத்தியால் கீறிய சுரனையே இல்லாது அதே அலட்சிய சிரிப்புடன் எழுந்து நின்றாள்.

நீலகாந்தனோ கடுமை நிறைந்த குரலில் "உன் கையை கிழித்து ரத்தம் வடியும் நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டி உள்ளதுனக்கு ?"என்க

அவளோ அதே அலட்சியத்தோடு சிரித்தவள் "தன் அழிவிற்கு தானே ஒருவன் யாகம் வளர்த்து பூஜை செய்யும் அபூர்வ காட்சியை இங்கு தான் காண்கிறேன் .என்னவன் என் மேல் சிறு கீறல் விழுந்தாலே அவர் தலையை கொய்துவிடுவான் நீயோ மாதம் ஒரு முறை என் கையை கீறி அதிலிருந்து உதிரத்தை ஆகுதியாய் வழங்குகிறாய் இக்கோலத்தை என்னவன் காண்கையில் உன் கோலம் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் சிரித்தேன் "என்க

இதை கேட்ட மார்த்தாண்டன் "இத்தனை தூரம் சித்ரவதை செய்தும் உன் திமிர் அடங்கவில்லையல்லவா "என்று அவள் கன்னத்தில் அறைய

தன் கன்னத்தில் கை வைத்து அதே சிரிப்புடன் அவனை நோக்கியவள் "என்ன செய்ய மார்த்தாண்டா சம்ஹித்த வம்சத்தின் ரத்தமும் எண்ணில் சரி பாதியாய் ஓடுகிறதல்லவா. உனக்கிருக்கும் திமிர் எனக்கும் இருக்கும் தானே "என்றவள் சளைக்காமல் பார்த்தபடி நிற்க

மீண்டும் மார்த்தாண்டன் கையை ஒங்க அவன் கையை பிடித்து தடுத்த நீலகாந்தன் "மார்த்தாண்டா வேண்டாம் இன்னும் ஒரு வாரத்தில் உயிரை துறக்க போகிறாள் பகற்கனவு கண்டாவது சற்று ஆனந்தம் கொள்ளட்டும் .இவளை மீண்டும் சிறையில் அடையுங்கள் "என்று கூற காவலாளிகள் அவளை மீண்டும் சிறைக்கு இழுத்துக்கொண்டு சென்றனர் .

நெடு நேரம் பயணம் செய்தவர்கள் ஆதவன் மறைந்து இருள் சூழ துவங்கிய நேரம் நாளை காலை பயணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்து தத்தம் புரவியிலிருந்து இறங்கினார்கள்.ஆற்றங்கரை ஓரத்தில் இரவின் மடியில் அங்கே காய்ந்திருந்த சுள்ளிகளை பொருக்கி தீயை ஆதிரா மூட்ட அருள்மொழி அங்கே மூங்கில்களை வைத்தொரு குடில் போல் செய்ய ஆதேஷ் உள்ளே சென்று பழங்களை கொண்டு வந்தான்.பின் மூவரும் தீயை சுற்றி அமர ஆதிராவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது .தனக்கு எதிரே அமர்ந்திருந்த அருள் மொழியிடம் திரும்பியவள் "அத்தான் எனக்கொரு சந்தேகம் "என்க

அவனோ தீயின் ஜ்வாலையிலிருந்து பார்வையை அவள் புறம் திருப்பி "என்ன ஆதிரா ?"என்க

அவளோ "நம்மளோட ஒவ்வொரு அசைவும் அவங்களுக்கு தெரியும்னு சொல்றீங்க. இந்தா இவன் என்ன இங்க கூட்டிட்டு வரேல கூட பாதி வழில மறுச்சு நின்னு தாக்குதல் நடத்துனானுங்க அப்டி இருக்கேல இப்போ நாம அவங்க இடத்துக்கே போய்ட்டு இருக்கோம் அப்போ அவுங்களுக்கு இது தெரியாதா ?"என்க

அதற்கு ஆதேஷோ "வாய்ப்பில்லை ஏன்னா இன்னும் ஒரு வாரத்துல அவுங்க நெனச்சுட்டு இருக்குற அந்த மஹாப்பௌர்ணமி வர போகுது.ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவங்க ராஜ்ஜியத்தை சுத்தி பாதுகாப்பை ரொம்ப அதிகமா பலப்படுத்திட்டு யாகம் நடத்த ஆரம்பிச்சுருவாங்க சோ சக்திகள் குறையுறதால அவுங்களுக்கு சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாது .ஆனா அவுங்க போடுற பாதுகாப்பு வளையம் ரொம்ப ஆபத்தானதா இருக்கும்.சாதாரண நேரத்துல எங்களால அந்த ராஜ்ஜியத்தோட வாசலுக்கு அப்பறம் தான் உள்ள போக முடியாது ஆனா இந்த நேரத்துல அந்த ராஜ்ஜியத்தோட வழிலயே யாராலயும் சுலபமா உள்ள போக முடியாது "என்க

அவள் குழப்பமாய் பார்க்க அருள் மொழி விளக்கினான் "அந்த ராஜ்ஜியத்திற்கு செல்லும் வழிகளை நான்காய் பிரித்து நான்கு கட்ட பாதுகாப்பினை வகுத்திருப்பர் .முதல் ஆபத்து புதைகுழிகள் .எந்த இடத்தில் இருக்கின்றதென்றே நம்மால் கண்டறிய இயலாதவாறு புதை குழிகள் பாதை நெடுகிலும் அமைந்திருக்கும் அவற்றை தாண்ட வேண்டும் .அடுத்த கட்ட பாதுகாப்பு அமைப்பு மூங்கில்களால் மறைக்கப்பட்ட கண்ணிற்கு தெரியாத முதலைகள் நிறைந்த நாற்பது அடி அகலமும் இருபது அடி ஆழமும் நிறைந்த அகழி .எங்கே இருக்கிறதென்று தெரியாது எனில் காலை வைத்து நடக்க ஆரம்பித்தாள் அடுத்தநிமிடம் மூங்கில்கள் முறிந்து அகழிக்குள் விழுந்து பரலோகத்தை அடையவேண்டியது தான் .அடுத்த கட்ட பாதுகாப்பு வளையம் மாயகுகை ,உள்ளே நுழைய வழியும் ஒன்று தான் வெளியே வர வழியும் ஒன்று தான் எனில் அதற்கு உள்ளே பத்து நுழைவாயில்களும் அந்த பத்து நுழைவாயில்களில் நான்கு கதவுகளும் இருக்கும் அந்த குகைக்குள் ஸ்வாசக்காற்று,சூரிய ஒளி இரண்டும் மிக மிக சன்னமாகவே இருக்கும் . ஒரு சாதாரண மனிதனால் இரண்டு மணி நேரமே தாக்கு பிடிக்க முடியும்.அந்த பத்து வாயில்களில் மாட்டிக்கொள்ளாமல் சரியான கதவை திறந்து வெளியே வந்தாக வேண்டும் .இவை மூன்றையும் தாண்டிவிட்டால் அடுத்த கட்ட பாதுகாப்பு மிகவும் கொடுமையானது .நான்கு பக்க சுவர்களில் மூன்று பக்கம் சுவர்களிலும் இருபத்தி நான்குமணி நேரமும் காவலர்கள் வில்லேந்தியபடி நின்றுகொண்டிருப்பர் நான்காவது பக்கமோ அசுரவேகத்தில் பாய்ந்திடும் செயற்கை நீர்வீழ்ச்சி .அவற்றை எப்படியாவது வென்று உள்ளே சென்றாலும் அந்த அரண்மனையின் உள்ளே சம்ஹித்த வம்சத்தவரின் உதவி அல்லது அவரின் துணை அல்லாது வந்த எந்த ஆதவகுலத்தவனும் நொடியில் பஸ்பமாகிப்போவான் .என்று கூற இதை கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவிற்கோ கோபம் கோபமாய் வந்தது .

பின் மீண்டும் ஒரு சந்தேகம் "அத்தான் எல்லாரும் ரட்சை கயிறு கட்டிட்டு வெளிய போனா அவங்கள எதுவும் செய்ய முடியாதுனு சொல்றீங்களா அப்பறோம் எப்படி அவனுங்க அக்காவை கடத்திட்டு போனானுங்க ?"என்க அருள்மொழியின் உடல் இருக்க தாடை கோபத்தில் கல்லென சமைத்தது .

அவனின் தோற்றத்தையம் ஆதேஷின் கண்டிக்கும் பார்வையையும் கண்ட பின்னே தான் அவனை மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்தி கோபப்படுத்திவிட்டோம் என்று உணர்ந்தவள் "அது சா..... சாரி அத்தான் "என்க

அவனோ கண்ணில் துளிர்ந்திருந்த நீரை துடைத்தவன் "சே மன்னிப்பெல்லாம் கேட்காதே நீ எதுவும் தவறாக கேட்கவில்லையே "என்றவன் மூன்று வருடங்களுக்கு முன் நடந்ததை கூற துவங்கினான்

மூன்று வருடங்களுக்கு முன் ........

வெளியே மழை பெய்து ஓய்ந்த பின்னும் தன் கை அணைவில் மௌனமாய் தன் கேள்விக்கு பதில் கூறாமல் தன் மார்பில் புதைந்து இருந்த ஆராதனாவின் காதிர்கருகில் மேலும் குனிந்தவன் "என்ன கண்ணம்மா விடை கூற மாட்டாயா ?"என்று கேட்டவாறே தன் மீசை முடியால் குறுகுறுப்பை ஏற்படுத்த

அவளோ அவனின் மீசை முடி தந்த குறுகுறுப்பில் நெளிந்தவள் காற்றிற்கும் நோகாத குரலில் "நான் உங்கள் மீது கிடக்கும் நிலையே தமக்கு என் பதிலை உரைக்கவில்லையா அத்தான் "என்க

அவனோ ஒற்றை விறல் கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்ணோடு தன் கண்ணை உறவாடவிட்டவாறு "எனில் அது வாய்மொழியால் கூறுவதை போல் உண்டோ கண்ணம்மா "என்க

அவளோ விழிதாழ்த்தி வெட்கப்புன்னகை செய்தவள் பின் அவனின் கண்ணை நோக்கியவாறு "நானும் தம்மை நேசிக்கிறேன் அத்தான் "என்க

அவளை மேலும் தன்னோடு சேர்த்தணைத்தவன் பின் அவளின் கழுத்துவளைவில் தன் இதழ்கள் கொண்டு ஓவியம் தீட்ட துவங்க அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டவள் சட்டென்று எழுந்து "என்ன செய்கிறீர்கள் அத்தான் நீங்கள் "என்று சிணுங்கியவாறே வெளியே ஓடிவிட அவளை துரத்தியவாறே பின்னே ஓடியவன் கவனிக்கவில்லை அவளின் கையில் கட்டி இருந்த கயிறு அவள் எழுந்த வேகத்தில் அவ்விடத்திலேயே அறுந்து விழுந்துவிட்டதென்பதை .

அவனிடம் போக்கு காட்டிக்கொண்டே ஓடியவள் ஒரு மரத்தின் மறைவில் மறைந்துக்கொள்ள அவளை தேடிக்கொண்டே வந்த அருள்மொழி எங்கே சென்றாள் என்று தெரியாமல் சிரிப்பு நிறைந்த குரலில் "கண்ணம்மா என்னிடம் விளையாடாதே வந்துவிடு இல்லையேல் தண்டனைகள் மோசமாய் இருக்கும் "என்க

அவளோ மரத்தின் மறைவிலிருந்து "முடிந்தால் கண்டுபிடியுங்கள் அத்தான் "என்றவள் பின் இப்படியே அவனிற்கு போக்கு காட்ட ஒரு இடத்தில அவளிற்கு சற்று தொலைவில் ஒரு அழகிய கவரிமான் நிற்க அதன் அழகில் மயங்கியவள் அதை பிடிக்க துரத்திக்கொண்டு ஓட .

அவள் மானை துரத்திக்கொண்டு ஓடுவதை தூரத்திலிருந்து கவனித்தவன் ஒரு கள்ளச்சிரிப்போடு "இதோ வருகிறேன் கண்ணம்மா "என்றவாறு அவளை நெருங்க கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கண்முன்னே தோன்றிய கரும்புகை உருவங்கள் அவளை கவர்ந்து சென்றுவிட்டனர் .

நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தில் சிலையென சமைந்தவன் பின் தன்னை மீட்டெடுத்துக்கொண்டு அவள் இருந்த இடம் நோக்கி விரைய அங்கே அவன் கண்டதென்னவோ ஆராதனா தன் விரலில் போட்டிருந்த ஒரு மோதிரத்தை தான் .அதை கண்ணீர் திரை இட எடுத்து தன் உதட்டில் ஒற்றி எடுத்தவன் மடங்கி அமர்ந்து "கண்ணம்மா......"என்று கத்திய கத்தல் எட்டு திசையிலும் எதிரொலித்தது .

நிகழ்காலம் .......

இதை சொல்லி முடித்து ஆதேஷும் அருள்மொழியும் இறுகி பொய் அமர்ந்து விட அவர்களின் மனநிலையை மாற்ற நினைத்த ஆதிரா அருள் மொழியின் புறம் திரும்பியவள் "விடுங்கத்தான் அந்த பீலான்கரடி தலையன மிதி மிதின்னு மிதிச்சி ,டொங்கு டொங்கு னு கொட்டி ,பொங்கு பொங்கு னு குத்தி
சங்கு சங்கு னு மிதிச்சி ,ஏத்து ஏத்து னு ஏத்தி ,வெளு வெளு னு வெளுத்து ,குத்து குத்து னு குத்தி ,கிழி கிழி னு கிழிச்சு தொங்க விட்டுர்லாம் ."என்று முகபாவனையோடு ஷின் சான் போலவே செய்து காட்ட சற்று இறுக்கம் தளர்ந்து அவளின் முகபாவங்களை கண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர் இருவரும் .

ஆதேஷோ சிரித்துக்கொண்டே "வயசு இருபத்தி அஞ்சாச்சு இன்னுமாடி ஷின் சான் பாத்துட்டு திரியுற?"என்க

அவளோ முகத்தை ஒரு வெட்டு வெட்டியவள் "ஷின் சான் பார்க்க எல்லாம் வயசு தேவை இல்ல நா பொக்கு கெழவி ஆனாலும் பார்ப்பேன் உனக்கென்னடா ?"என்க

அவனோ "எது டாவா ஒரு ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் வாங்க போங்கன்னு மூச்சுக்கு முன்னூறு என்னங்க போடுவியேடி இப்போ என்னனா டாங்குற?"என்க

அவளோ அவனை மூச்சு முட்ட முறைத்தவள் "என்னதான் காரணமா இருந்தாலும் மூணு வருஷமா நான் உன் பின்னாடி சுத்தி சுத்தி வரேன்னு தெரிஞ்சே என்ன அலையவிட்டது , நீ என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்து இந்த ஊருல மூணு நாளா பைத்தியக்காரி மாதிரி ஒன்னும் புரியாம வச்சுருந்ததுக்கு உன்ன நா பீப்ல திட்டினாலும் தப்பில்லடா"என்க

அவன் பதிலிற்கு எகிற அருள்மொழிக்கோ இருவரும் தன் மனநிலையை மாற்ற வேண்டி இப்படி சிறுபிள்ளை போல் அடித்துக்கொள்கிறார்கள் என்று புரிய சிறு சிரிப்புடன் அவர்களின் நடுவில் வந்து நின்றவன் "அய்யய்யய்ய தாங்கள் என்ன சிறு குழந்தைகளா ?இப்பொழுது அமைதியாய் அமரவில்லையெனில் இருவரையும் பிடித்து ஆற்றில் தள்ளி விடுவேன் "என்க இருவரும் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டனர் .

பின் சற்று நேரம் அமைதியாய் கழிய ஆதிராவிற்கு அடுத்த சந்தேகம் வந்தது "அத்தான் இன்னொரு சந்தேகம் .ஊருக்குள்ள இருக்குறவங்க ஏதோ ஒரு அருவி இருக்குறதாவும் அது கிட்ட போற எல்லாரும் இறந்து போரதாவும் சொல்றாங்கள்ல அது ஏன்?இருபது வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்ம குலத்தை சேர்ந்தவங்க எல்லாரும் அங்க விழாவே கொண்டாடிருக்கோமே இப்போ ஏன் போறதில்ல ?எங்க இருக்கு அது ?"என்க

அருள் "இங்கிருந்து மூன்று காத தூரம் கிழக்கு திசையில் அந்த அருவி அமைந்துள்ளது. அந்த அருவிக்கரையில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்திருந்தோம் எனில் இப்பொழுதோ அந்த சம்ஹித்த வம்சத்தவர்கள் அந்த அருவிக்கரையை மொத்தமாய் ஏவல்களின் ஆளுகைக்குள் வைத்துள்ளனர்."என்க

ஆதேஷோ"அதையே தான் நானும் யோசிக்கிறேன் தமயனே அங்கே செல்லும் எவரிற்கும் மரணமே பரிசாய் கிடைக்கிறது. எனில் அது ஏன் என்று தான் எனக்கும் தெரியவில்லை "என்க ஆதிராவிற்கோ ஏதோ ஒரு ரகசியம் அங்கே புதைந்திருப்பதாய் தோன்றியது .

பின் சமயமானதால் மூவரும் குடிலிற்குள் சென்று உறங்க நாளைய விடியலிலிருந்து இவர்களின் வாழ்வு எத்தகையதாக இருக்கும் என்பதை அவ்விறைவனை அன்றி எவரும் அறியார் .

sorry லேட் updateku .இன்னிக்கு ரெண்டு அப்டேட் தர நெனச்சேன் பட் நெட் சொதப்பிருச்சு .    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top