26

ஆராதனாவை கவர்ந்து சென்று விட்டனர் என்று வந்தியத்தேவன் கூறியதில் அதிர்ந்து நின்ற ஆதிரா "என்ன ?"என்று கத்த

ஆதேஷோ அவள் தோளில் கையை வைத்து அமரவைத்தவன் "ஆதி அண்ணியை கடத்திட்டு போனதென்னவோ உண்மை தான் ஆனா அவனுங்க கண்டிப்பா அண்ணிய எதுவும் பண்ணிருக்க மாட்டானுங்க .உங்க ரெண்டு பேரையும் சேர்த்து இந்த பௌர்ணமி அப்போ பலி குடுக்குறதால தான் அவங்களோட சக்திகள் அவங்களுக்கு திரும்ப கிடைக்கும்.ஆனா அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கேல உங்க சக்திகள் அந்த பௌர்ணமி உச்ச வேளைல ரொம்ப அதிகமா இருக்கும் .அதுனால அண்ணியை காப்பாத்துறதுக்கும் அவங்கள அழிக்குறதுக்கும் உன்னால தான் முடியும் "என்க

அவளோ அனைத்தையும் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டவள் "சரி என் அக்காவை காப்பாத்த நான் அவுங்க இடத்துக்கே போறேன் அவுங்க எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா ?"என்க

அருள்மொழிவேந்தனோ "நன்றாக தெரியும் எனில் அங்கு செல்வதற்கு சம்ஹித்த வம்சத்தை சேர்ந்தவரும் உடன் இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல இயலும் .நீ ஆதவகுலத்தின் பாதியும் சம்ஹித்த வம்சத்தின் மீதியும் ஆவாய் ஆதலால் அவர்களின் எல்லைக்குள்ளே செல்ல நீ எம்முடன் இருக்க வேண்டும்."என்க

அவளோ ஆமோதிப்பாய் தலை அசைத்தவள் "சரி என்று நம் பயணத்தை தொடங்க போகிறோம் அருள் அத்தான் ?"என்க

அவனோ அவள் தன்னை உரிமையாய் அழைத்ததில் சிரித்தவன் "நாளை மறுநாள் துவங்கலாம் ஆதிரா. எனில் கவனத்தில் கொள் அது மிகவும் ஆபத்தான பாதை கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் "என்க

அவளோ சிரித்தவள் "என் உடன் பிறந்தவளை காக்க மரணத்தின் வாசற்படியையும் தொட்டு விட்டு வருவேன் "என்றவள் எழுந்து நின்று வந்தியத்தேவரின் தாழ் பணிந்தவள் அங்கிருந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு நிற்க

வந்தியத்தேவன் "நேரமாகிவிட்டதம்மா நீ உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குடிலிற்கு சென்று இளைப்பாறிக்கொள் "என்க

அவளோ "சரி மாமா "என்றுவிட்டு ஆதேஷை நோக்கி ஓர் கடைக்கண் பார்வையை வீசியவள் யாரும் அறியாதவாறு ஒற்றை கண்ணை சிமிட்டிவிட்டு செல்ல அவள் செய்கையில் வெட்கம் வந்து ஆட்கொள்ள உதட்டில் ஓர் மந்தகாசப்புன்னகையுடன் தன் தலை முடியை அழுந்த கோதினான் ஆதேஷ் .

இவர்களின் இந்த நாடகத்தை பார்த்து மௌனமாய் சிரித்துக்கொண்டிருந்த அருள் மொழிவேந்தனின் இதழ்கள் புன்னகையில் விரிய ஆதேஷின் தோளைப் பிடித்தவன் "இளவனே சென்று சற்று இளைப்பாறு நாளை நம் பயணத்தை துவங்கவேண்டும் செல் "என்க

அவனோ "சரி தமையனே" என்றவன் பின் எழுந்து தன் அறைக்கு சென்றுவிட வந்தியத்தேவரும் உறங்க சென்று விட மேகம் திரண்டு வந்து மழையை மண்ணில் பொழிய துவங்க ஜன்னலின் அருகே சாய்ந்தபடியே மழையை பார்த்துக்கொண்டிருந்தான் அருள் மொழி வேந்தன் .

அவன் பார்வை வெளியே மழையில் பதிந்திருக்க அவனின் நினைவுகளோ ஆராதனாவின் புறம் சாய்ந்தது .

அன்று இருபது வருடங்களுக்கு முன் தன் அன்னையையும் தந்தையையும் உடன் பிறந்தவளையும் மொத்தமாய் ஒரே நாளில் இழந்தவளின் ஒற்றை ஆறுதல் என்றுமே அருள்  தான் .

ஆருத்ராவின் பிணத்தை பார்த்ததிலிருந்து விழிவெட்டாது அப்படியே அதிர்ச்சியில் இருந்தவள் இடை விடாது பற்றி இருந்தது அருளின் கரங்களை தான் .இறுதி சடங்குகள் முடித்து அவளை எடுக்க போக அப்பொழுதாவது அழுவாள் என்று எதிர்பார்க்க அவளோ சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாளே ஒழிய அழவும் இல்லை எதையும் உணரவும் இல்லை .

இப்படியே அன்றைய நாள் முழுதும் கரைய இரவு வரை உண்ணாமலேயே ஓர் குடிலில் சுவற்றை விரித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே தட்டுடன் வந்து அமர்ந்தான் பத்து வயது சிறுவனான அருள் .அவள் தலை முடியை வருடியவன்"கண்ணம்மா"என்றழைக்க

அது வரை சிலை போல் அமர்ந்திருந்தவள் அவனின் குரலில் உயிர்ப்பு பெற்று முகத்தை எழுந்தவள் கண்ணீர் திரையிட "அம்..... அம்மா ,அப்பு ஆதி எங்க அத்து?"எங்க போனாங்க மூணு பெரும் நா....... நா வேணாமா அவுங்களுக்கு என்ன.... என்ன அவுங்ககிட்ட கூட்டிட்டு போ அத்து அம்மா வேணும் எனக்கு அம்மா வேணும் "என்று அவனின் சட்டையை பிடித்தவாறு அவள் அழத்துவங்க

அவனும் என்ன செய்வான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவா முடியும் ?கண்ணில் திரண்ட கண்ணீரை அவள் அறியாது துடைத்தவன் "கண்ணம்மா அப்பா அம்மா மற்றும் ஆதிரா ஒரு முக்கியமான வேலைக்காக வெளியே சென்றுள்ளனர் விரைவில் உன்னை வந்து சேர்ந்து விடுவர் சரியா அது வரை அழாமல் என் கண்ணம்மா சமத்தாய் உண்டுவிட்டு இயல்பாய் இருக்கவேண்டும் "என்க

அவளோ ஏனோ சிறுவயது முதலே அவன் கூறுவதனைத்தையும் அப்படியே வேத வாக்காய் கடைபிடிப்பதால் கண்ணீரை துடைத்துவிட்டு "அம்மா அப்பு வருவாங்களா என்ன கூட்டிட்டு போவாங்களா ?"என்க

அவனோ ஆம் என்பதை போல் தலை அசைத்தவாறே அவளிற்கு உணவை ஊட்ட உணவை வாங்கிக்கொண்டவள் "அத்து நீ சாப்டியா ?"என்க

அவனோ தனக்கு தினம் உணவூட்டும் அன்னை தீக்கிரையானதன் நினைவில் கண்ணீர் உகுத்தவாறே இல்லை என்று தலை அசைக்க அவளோ "அச்சோ அத்து இன்னும் சாப்பிடாம என்ன பண்ற "என்று கேட்டவாறே தன் தளிர் கரங்களில் உணவை எடுத்து அவனிற்கு ஊட்ட அவன் கண்ணிற்கு அவள் தன் அத்தை மகளாய் இல்லாது அவனின் அன்னையாகவே தெரிந்தால் .பின் அவள் உறங்க கொஞ்ச நேரத்திலேயே அழுதபடி உறக்கத்திலேயே அரற்ற துவங்க அவளை தன் மடியில் எடுத்து போட்டபடி தட்டி கொடுக்க அரற்றல் யாவும் அடங்கி சுகமாய் உறங்கி போனால் ஆராதனா .

அடுத்த நாள் எழுந்தவள் சோகத்தின் மறுஉருவாய் அமர்ந்திருந்த வந்தியத்தேவரிடமும் ஆதேஷிடமும் வந்தவள்

"மாமா அத்து ஏன் இப்டி உக்காந்ததுருக்கீங்க ?சோகமா இருக்க கூடாதுனு அம்மா சொல்லிருக்காங்கல்ல அப்போ நீங்க இப்டி அழுதுட்டு இருந்தா அம்மாக்கு புடிக்குமா ?"என்று அவரின் கண்ணீரை துடைத்துவிட்டவள் அதுவரை பச்சை தண்ணீர் கூட அருந்தாது இருந்தவரிற்கு உணவை ஊட்டிவிட அந்த நாளில் இருந்து அந்த கிராமத்திற்கே செல்ல பிள்ளையாகவும் ஆதேஷிற்கு தன்னை விட சிறியவள் என்பது போய் அவனை தலைக்கு அவன் குளித்திருந்தால் அதட்டி உருட்டி அவனிற்கு தலை துவட்டிவிடுவது ,காய்ச்சல் அடித்தால் இரவு முழுவதுமென்றாலும் முழித்து முழித்து அவனிற்கு பத்துபோட்டு விடுவது அவன் ஊரிற்கு செல்கையில் அவளின் மழலை மொழியில் வானமாதேவி ஒவ்வொரு முறை அவன் ஊரிற்கு செல்லும் போதும் சொல்லும் அறிவுரைகளை அப்படியே அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ சொல்லி அனுப்புவது என்று ஆழ்மனதில் அவனின் அன்னையாகவே பதிந்து போனாள்.

ஆராதனாவின் விடியல் துவங்குவதும் அருள் மொழியின் முகத்தில் தான் நாள் முடிகையில் அவள் உறங்குவதும் அவனின் மடியில் தலை வைத்து தான் .அவனின் ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செய்பவள் வேத பாடசாலைக்கும் வாள் பயிற்சி கூட்டத்திற்கும் அவன் செல்கையில் அவனோடே சென்று மாந்திரீகத்தையும் வாள் பயிற்சியையும் மேற்கொள்ள ஆரம்பித்தாள் .

இப்படியே நாட்கள் அதன் போக்கில் செல்ல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆராதனாவும் அருள்மொழிவேந்தனும் வளரத்துவங்கினர்.சிறுவயதில் இருந்தே அவளை பார்த்தும் வளர்த்தும் இருந்தவனிற்கு அவள் வளர்வதோ அவள் இளம் கன்னியாய் மாறுவதோ எந்த ஒரு வேறுபாடும் தெரியவில்லை அவளிற்கும் அவ்விதமே எனில் இருவருக்குள்ளும் பாசம் என்னும் போர்வைக்குள் நேசமும் துளிர் விட துவங்கியது .

அன்றொரு நாள் இப்படி தான் இருவரும் காட்டிற்குள் வேட்டையாட சென்றிருந்தனர் . அப்படி ராஜ்யத்தை விட்டு வெளியே செல்கையில் சிவபெருமானின் பாதத்தில் வைத்து நாற்பத்தி எட்டு நாட்கள் பூஜை செய்து கட்ட பட்ட ரட்சை கயிறுடன் தான் எவரும் வெளியே செல்வர் .அருள் மொழி வேந்தன் வேக வேக எட்டுக்களுடன் முன்னே நடந்துகொண்டிருக்க உச்சி வெயிலின் தாக்குதலில் முதுகில் அணிந்திருந்த அம்புகள் நிறைந்த குவளையும் தோளில் தொங்கிய பெரிய தண்ணீர் குடுவையும் சோர்வை கொடுக்க மூச்சு வாங்கியபடி அருளை நோக்கி கத்தியபடி வந்துகொண்டிருந்தாள் ஆராதனா.

"ஹே அத்தான் கொஞ்சம் வேகத்தை குறைத்து சென்றால் என்ன ?ஏன் இப்படி ஓடுகிறீர்கள் கால் நோவுகிறதத்தான். நடக்க முடியவில்லை நில்லுங்கள் "என்று கத்திக்கொண்டே வர

அருளோ சிரிப்புடன் திரும்பியவன் "ஹ்ம்ம் ராஜ்ஜியத்தில் கேட்டால் வீராதி வீரி சூராதி சூரி என்று உன்னை நீயே சொல்லிக்கொள்வது எனில் காட்டில் கொஞ்ச தூரம் நடக்கவும் முடியவில்லை இத்தனை தானா கண்ணம்மா உனது பலம் ?"என்க

அவளோ அவனை மூச்சு முட்ட முறைத்தவள் "போதும் போதும் உங்கள் பரிகாசம் மெய்யாகவே எனக்கு கால் நோவுகிறதத்தான்.  சற்று இளைப்பாறலாமே "என்க அவனோ சிரிப்புடன் சரி என்று அவள் அருகில் செல்ல அவன் எட்டெடுத்து வைக்க இத்தனை நேரமாய் சுல்லலேன்று நடித்துக்கொண்டிருந்த வெயில் மறைந்து ஆதவனை கருமேகங்கள் சூழ்ந்து கொள்ள அவ்விடத்தில் சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது .

ஆராதனாவிற்கு சிறுவயதிலிருந்தே மழையில் நனைந்தால் சற்று நேரத்திலேயே காய்ச்சல் அடிக்க துவங்கிவிடும் உடனே உடலும் நடுங்க துவங்கிவிடும் இதற்காகவே அவளை மழை காலங்களில் அவன் வெளியே அழைத்து செல்வது இல்லை எனில் இன்று ஏனோ எதிர்பாரா விதமாய் மழை பெய்ய துவங்க ஐயோ என்று பதரியவன் மழையில் நனைந்ததில் சற்றே நடுங்க துவங்கி இருந்தவளை தன் தோளோடு அணைத்தபடி சுற்றி முற்றி பார்க்க அங்கே ஒரே சிறு குகை போன்ற அமைப்பிருந்தது .

வேகவேகமாய் அங்கே அவளை அழைத்து சென்றவன் அவளை அங்கே தரையில் அமரவைத்துவிட்டு அங்கே நெருப்பினை மூட நினைக்க அனைத்து சுள்ளிகளும் நனைந்து இருக்க அவளோ கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் அதிகரித்து அவ்விடத்தையே பனிக்குள் உறைவதை போல் குளிர்வித்த மழையால் மொத்தமாய் நடுங்க துவங்கி இருந்தாள்.இதற்கு மேல் நெருப்பு மூட்ட நினைப்பது வீண் வேலை என்று நினைத்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் கை கால்களை தேய்த்து விட துவங்கினான் .

எனில் அவளிற்கு நடுக்கம் குறைந்தபாடாய் இல்லாமல் மேலும் மேலும் உடல் நடுங்க துவங்க ஒரு நிமிடம் தயங்கி பின் அவளை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டான் அருள் மொழி வேந்தன் .குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவளிற்கு அவனின் அணைப்பு இதமாய் இருந்தாலும் குமரியென சமைந்தபின் அவனிடம் இருந்து கிடைக்கும் முதல் அணைப்பு உடலில் ஒவ்வொரு செல்களையும் கூசச் செய்து உடலில் ஓர் குறுகுறுப்பை ஏற்படுத்த இருவரின் உடலும் வெப்பமாக துவங்கியது .

தன் மேல் மொத்தமாய் கொடியென படர்ந்திருந்தவளை இடையோடு கட்டி இருந்தவன் அங்கே குகையின் உள்ளிருந்து வெளியேறி கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் இருந்த இடத்தையும் தன் ஒளியால் நிரப்ப துவங்கி இருந்த மின் மினிப்பூச்சியின் ஒளியில் அவளின் மதிமுகத்தை காண இதுவரை அவள் மேல் தோன்றாத உணர்வுகள் அனைத்தும் ஊற்றெடுத்து அவன் மதி முழுவதும் நிறைய கண்களோ அவளின் கயல் விழியிலே கட்டுண்டு கிடந்தது .

தன் ஒற்றை கையால் அவளை மேலும் தன்னோடு இறுக்கியவன் மற்றொரு கையால் ரோஜாவின் மேல் பனித்துளியென துளிர்ந்திருந்த மழைத்துளிகளை வருட அவளோ தன் மன்னவனின் ஸ்பரிசத்தில் உதடு துடிக்க கண்களை இறுக மூடிக்கொண்டாள் .கண்கள் மூடி இருந்தவளின் முகவடிவை தன் ஒற்றை விறல் தூரிகையால் அளவெடுக்க துவங்கிய அருள் மொழி அவளின் காதிர்கருகில் குனிந்தவன் தன் மீசை முடி அவள் காதில் உரசி அவள் மயிரிழைகளை கூசச்செய்தவாரே தாழ்ந்த குரலில்

"பிறையின் ஒரு பகுதியை பிரித்தெடுத்து

மின்னலை தூரிகையாகி

நட்சத்திரத்தை கண்களாக்கி

பிரம்மன் படைத்த காரிகையோ

ஒற்றை விழிஅசைவில்

உலகாளும் வீரனையும்

உன் பாதம் சேர வைக்கிறாயாடி

சிப்பியென மூடி இருக்கும் உன் இரு

இதழ் கதவை என்

இரு விழிகள் களவாட

இமையதை பிரித்து என்னை தடுத்திடடி

என் இதழ்கள் இரண்டும்

அதன் இணை சேர்ந்திட சொல்லி

என்னை கொல்லாமல் கொல்ல

பாசம் மட்டுமே நிறைத்த நெஞ்சம்

முதல் முறையாய் நேசத்தை உணருதடி

இதுவும் காதலா?

பதில் சொல்லடி என் கண்ணம்மா"

என்க அவளோ அவனை நோக்கி ஓர் வெட்கப்புன்னகை செய்தவள் அவனுள் ஆழப்புதைந்து கொண்டாள்.

வெளியே பெய்த மழையில் இடித்த இடி சத்தத்திலேயே கடந்த காலத்தில் திளைத்திருந்த அருள் மொழி வெளிவந்தான் .மனதில் " உன்னை மீட்க விரைவில் வருவேனடி .காலம் கனியும் வரை காத்திரு கண்ணம்மா உன்னவன் உன்னை சேரும் நாள் தொலைவில் இல்லை "என்று மானசீகமாய் தன்னவளுடன் உரையாட வாய்மொழிக்கு தானே தடைகள் உண்டு மனதின் மொழிகளுக்கு அல்லவே தன் மன்னவனின் ஆறுதல் சிறையில் இருந்தவளை அடைந்ததோ என்னவோ அதுவரை முகத்தில் ஒரு வித சோகமான பாவத்துடன் சிறையின் தரையில் கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தவள் முகத்தில் நிம்மதியின் சாயல்கள் நிறைய உதட்டில் ஒரு சிறு புன்னகையுடன் உறங்க துவங்கினால் ஆராதனா .

nalla illanu enake theryudhu just a filler episode guys naalila irundhu journey start pannalaam

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top