24
நடந்தது கனவா நனவா என்று புரியாத மனநிலையில் விஷாகன் எதிரே தன்னை நோக்கி மந்தகாசப்புன்னகை செய்தவாறு வந்துகொண்டிருந்த மனைவியையே கண்கொட்டாது பார்க்க அவளோ சிரித்தவாறே அவன் அருகில் வந்தமர்ந்து அவன் தலையை கலைத்தவள் "என்ன சார் உங்க சீமந்திர புத்திரிகளை தேடிட்டு இப்போ தான் வந்து சேருறீங்களா ?"என்க
அவள் எதற்காக கூறுகிறாள் என்று புரியாது குத்துமதிப்பாக அவன் ஆம் என்பது போல் தலை ஆட்ட அவளோ அவன் நெற்றியில் தன் கை வைத்து தட்டியவள் "பாவம் ங்க நீங்க .எல்லாரும் இதுங்க நாலையும் எங்க எங்கன்னு பதட்டமா தேடுனா இதுங்க நாலும் நல்லா ஊரு சுத்திட்டு நம்ம அரண்மனைக்கு பின்னாடி இருக்குற ஆட்டு தொழுவத்துலயே ஒன்னு மேல ஒன்னு படுத்து தூங்கிட்டு இருந்துருக்குங்க ."
இதை கேட்ட விஷாகன் முழுவதுமாய் குழப்பத்தில் ஆழ்ந்தான் ஏனெனில் அவன் ஆராதனாவையும் ஆதிராவையும் அவர்கள் அறையில் மெத்தையில் கை கால்களை குறுக்கிக்கொண்டு படுத்து தூங்கிக் கொண்டிருக்கையிலேயே எடுத்துக்கொண்டு சென்றான் .இப்பொழுது இவர்களுடன் ஆதேஷும் அருளும் இருந்தனர் என்றும் நால்வரும் ஆட்டு தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர் என்றும் சொல்ல விஷாகன் நன்கு குழம்பி போனான் .
எனில் அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக ஆராதனாவோ அவனின் முகத்தை தன் பிஞ்சு கரங்கள் கொண்டு திரும்பியவள் "அப்பு நேத்து அருள் அத்தான் இல்ல சூப்பராஹ் மேஜிக் பண்ணான் .
"என்க
ஆதிராவோ "ஆமா அப்பு ஜாலியா இருந்துச்சு ரெண்டு ஆட்டுக்குட்டி வச்சு நாங்க விளையாண்டுட்டு இருந்தோமா அருள் அத்தான் அது ரெண்டையும் எங்கள மாதிரியே மாத்திட்டான் "என்க
விஷாகனிற்கு புரிந்தும் புரியாமலும் இருக்க அவன் ஆருத்ராவை பார்க்க அவளோ சிரிப்புடன் "என்னங்க புரியலையா நேத்து ......
நேற்று ......
ஆதேஷயும் அருளையும் ஆராதனாவும் ஆதிராவும் துரத்திக்கொண்டே வர இருவரும் அரண்மனையின் பின்னே இருக்கும் ஆட்டு தொழுவத்தின் புறம் ஓடி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர் .
ஓடியதில் மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர் .ஆதிரா "அக்கா ரெண்டு பேரும் எங்க போனாங்க "என்க
ஆராதனாவோ "தெரியல ஆதி இந்த பக்கமா தான் வந்தாங்க "என்று சுற்றி முற்றி பார்க்க இருவரின் முன்னும் அப்பொழுதே பிறந்து பத்து நாட்கள் ஆகி இருந்த குட்டி குட்டி செம்மறி ஆட்டுக்குட்டிகளுடன் வந்து நின்றனர் ஆதேஷும் அருளும் .கண்களை பிரித்து பிரித்து மிரண்டபடி பார்த்துக்கொண்டிருந்த அந்த குட்டி ஆடுகளை பார்த்ததும் ஆராதனாவிற்கும் ஆதிராவிற்கும் மற்றது மறந்து போக அவர்கள் இருவரின் அருகிலும் ஓடி வந்தவர்கள் விழி விரிய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் தடவி பார்த்துக்கொண்டிருந்தனர் .
ஆராதனா "ஐய் அத்து சூப்பரா இருக்கு ஆட்டுக்குட்டி cuteaah குட்டியா"என்று அதன் தலையை அவள் வாஞ்சையாய் தடவி கொடுக்க அங்கே ஆதிராவோ ஆதேஷிடமிருந்து அதை பதமாய் தன் கையில் வாங்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஆட்டுக்குட்டியை பார்த்ததில் தங்கள் கோபத்தை மறந்திருக்க ஆதேஷும் அருளும் தப்பிச்சோம் டா என்று பெருமூச்சு விட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டனர் .பின் அங்கே இருந்த புல் வெளியில் அமர்ந்த ஆதிரா "அருள் அத்து நீங்க ஆது அத்து மாதிரி மேஜிக் பண்ணுவீங்களா ?ஆது அத்தான் வீட்ல இருக்கேல குட்டி குட்டி மேஜிக் பண்ணி காட்டுவான் "என்க
ஆதேஷோ சிரித்தவன் "ஐயோ ஆரா நான்லாம் ஜுஜுபி அண்ணன் சூப்பரா பண்ணுவாரு "என்க
ஆராதனா "ஐய் அப்போ ஏதாச்சும் பண்ணி காட்டுங்க அத்து "என்க
அருள் "நீ என்ன செய்ய வேண்டுமென்று கூறு கண்ணம்மா நான் அப்படியே செய்கிறேன்"என்க இருவரும் நாடியில் விரலை வைத்து யோசிக்க
ஆராதனா "ஆங் அத்து இந்த ஆட்டுகுட்டிய வேற உருவத்துக்கு மாத்த முடியுமா ?"என்க
அருளோ சிரித்தவன் "வேறு உருவம் என்ன உங்கள் உருவத்திற்கே மாற்ற முடியும் எனில் அதற்கு வெளிச்சம் இல்லாத இடமாய் இருக்க வேண்டும் "என்க தங்கள் உருவத்தில் ஆட்டுக்குட்டிகளை மாற்றமுடியும் என்று கூறியதில் குஷியான வாண்டுகள் தங்கள் அறைக்கு அந்த குட்டி ஆடுகளை கையில் கொண்டு சென்று கட்டிலில் கிடத்திவிட்டு ஜன்னல் கதவு வாயிற் கதவு அனைத்தையும் அடைத்து அந்த இடத்தை இருள் நிறைந்ததாய் மாற்ற அந்த கட்டிலின் முன்னே நின்ற அருள் மொழிவேந்தன் தன் கையை மடித்து நெஞ்சிற்க்கருகில் வைத்தவன் ஏதேதோ மந்திரங்களை ஐந்து நிமிடமாய் உச்சரித்தான்.
பின் தன் கண்களை திறந்து அந்த ஆட்டுக்குட்டிகளை பார்த்தவாறு கையை விரிக்க அவன் கையிலிருந்து வந்த ஒளி அந்த இரு ஆட்டுக்குட்டிகள் மேலும் பட்டு அவ்வறை முழுவதும் அந்த ஒளி பரவ மற்ற மூவரும் அதன் தாக்கத்தால் தனது கண்களை மூடிக்கொண்டனர்.
பின் சற்று நேரத்தில் அவ்வொளி மட்டுப்பட தன் கண்ணிலிருந்து கையை விளக்கி பார்த்த மூவரும் ஆனந்தமாய் திகைத்தனர் ஏனெனில் அங்கே அந்த குட்டி ஆடுகள் இரண்டும் அச்சு பிசகாமல் ஆராதனாவையும் ஆதிராவையும் போன்று இன்று அவர்கள் அணிந்திருந்த ராதை வேஷத்திலேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தன .
ஆராதனா ஓடி சென்று அருள் மொழியை அவள் உயரத்திற்கு இருந்த அவன் இடையோடு கட்டிக்கொண்டவள் "ஐய் அத்து சூப்பராக இருக்கு அப்போ எங்களோட எந்திருச்சு விளையாடுமா ஆட்டுக்குட்டி "என்க
அருளோ"இல்லை கண்ணம்மா ஆட்டுக்குட்டிகள் இரண்டும் இன்னும் ஆறுமணி நேரத்திற்கு உங்கள் உருவில் இருக்கும் அவை உங்கள் உருவில் இருக்கும் நேரம் முழுதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உனக்கு பிடித்திருந்ததா ?"என்க அவளோ மண்டையை மண்டையை ஆட்டியவள் அவனை குனியவைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அங்கே தன் உருவில் மாறியிருந்த ஆட்டுக்குட்டியை தடவிப்பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுடன் தன்னையும் இணைத்துக்கொண்டாள் .
பின் அவர்கள் அறைக்கு வெளியே யாரோ வரும் சத்தம் கேட்க அருளிற்கு அப்பொழுதே மாந்திரீகத்தை தேவை இன்றி உபயோகிக்க கூடாது என்று தன் அன்னை கூறிய விஷயமே நினைவில் வந்தது .ஐயோ என்று தலையில் அடித்தவன் ஆதேஷிடம் "இளவனே இந்த விஷயம் மட்டும் நம் அன்னைக்கு தெரிந்ததென்றால் என் தோலை உரித்துவிடுவார்கள் எனவே இருவரையும் இங்கிருந்து அகற்றிவிட்டு இவ்வறையில் இருந்து நாம் அகல வேண்டும் ."என்க பின் ஏதோ சொல்லி இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த அறையில் இருந்து அவர்கள் வெளியேறி விட்டனர் .பின் தோட்டத்திற்கு சென்றவர்கள் அங்கேயே ஆடி ஆடி களைத்து ஆடு தொழுவதிலேயே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிவிட்டனர் .
இவற்றை எல்லாம் காலையில் அருளும் ஆதேஷும் தனது நம்பிக்கைக்குரிய அத்தையிடம் கூறிவிட்டு செல்ல தனக்கு தெரிந்த அனைத்தையும் தன் கணவனிடம் ஆருத்ரா கூறி முடித்தால் .இதை கேட்ட விஷாகனிற்கோ ஆனந்தம் தாங்க வில்லை .தான் கடவுளிடம் வேண்டியது வீண் போக வில்லை என்று நினைத்தவன் தனது புதல்விகள் தன் கையில் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் வரவேற்பறை என்பதையும் மறந்து ஆருத்ராவை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட்டவன் "ஆரு ஆரு ஆரு என் வேண்டுதல் வீண் போகவில்லை ஆரு "என்று அவளை தூக்கி சுற்ற
ஆருத்ராவோ அவனின் தோள்களை பற்றிக்கொண்டவள் "என்னங்க கீழ இறக்கி விடுங்க என்னாச்சு என்னாச்சு ?"என்க
அவனோ அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் "நம்ம பொண்ணுங்க திரும்ப நமக்கே கெடச்சுட்டாங்கடி பொண்டாட்டி "என்று அவள் நெற்றியில் முட்ட
அவள் இரவிலிருந்து வெளியே சென்று இருவரையும் தேடி விட்டு வந்திருக்கிறான் இருவரும் திருப்பி கிடைத்ததில் அதீத ஆனந்தத்தில் இருக்கிறான் என்று நினைத்து "சரி சரி அதுக்கு நட்ட நாடு ஹால்ல வச்சு சுத்துவீங்களா விடுங்கங்க என்னை"என்று அவனிடம் இருந்து தமிழினி விடுபட்டவள் அடுப்பங்கரையை நோக்கி ஓட அங்கே வானமாதேவியோ கேலிப்புன்னகையோடு நின்றிருந்தார்.
அவரை கண்டு நெளிந்தவள் "ஈஈஈ அண்ணியாரே தாம் ......"என்றிழுக்க
அவரோ "நான் எதையும் பார்க்கவில்லை ஆருத்ரா "என்க வெட்கம் பிடிங்கி திங்க உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள் அவள் .
இவர்கள் இங்கே இப்படி இருக்க அங்கே காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரோகிதர்களை வைத்து மகாயாகங்கள் வளர்த்துக்கொண்டிருந்தார் வந்தியத்தேவன் .
யாகம் நெடு நேரமாய் தொடர கடைசியாய் "ஸ்வாகாகா"என்று பூஜையை முடித்த அந்த புரோகிதர் அவரிடம் திரும்பி "பிரபுவே தாம் கூறியபடியே இந்த இடத்தில் இருந்து 10 காத சுற்றளவிற்கு மாந்த்ரீக கட்டு போடப்பட்டுள்ளது. இவ்விடத்திற்குள் வர நம் குலத்தவர்கள் அனுமதி இன்றி எத்தனை சிறந்த மாந்த்ரீகனாலும் நுழைய முடியாது நேற்றைய மகாசக்தி நிறைந்த பௌர்ணமியின் ஷக்திகளையும் தமது குலத்தவர்கள் மொத்த ஷக்தியையும் சேர்த்து இத்தகைய வலையத்தை உருவாக்கி உள்ளதால் இதை உடைக்க எவராலும் முடியாது பிரபுவே .தமக்கு தமது சக்திகளில் பத்து சதவிகிதம் மட்டுமே இன்னும் ஒரு மாதத்தில் திரும்ப கிடைக்கும்.மொத்த சக்திகளும் திரும்ப பெற இன்னும் இருபது வருடங்கள் ஆகும் பிரபுவே ."என்க அவை அனைத்தையும் ஒரு சிறு தலை அசைப்புடன் கேட்டுக்கொண்டார் வந்தியத்தேவர். பின் அவர் எழுந்து செல்ல போக அவரை தடுத்தது அந்த ப்ரோகிதரின் குரல்" பிரபுவே எனில் நம் ராஜ்யத்தின் ஒரே பகுதியை இப்படி ஓர் இடமாய் மாற்ற வேண்டியதன் அவசியம் தான் என்ன பிரபுவே ?"என்க
வந்தியத்தேவரோ "ஏனோ தெரியவில்லை ப்ரோகிதரே மனம் மிகுந்த சஞ்சலத்தில் இந்த ஒரு மாத காலமாக ஆழ்ந்துள்ளது .எனது ராஜ்ய மக்களுக்கு ஏதோ பெரும் தீங்கு நேரப்போவதை போன்ற சொப்பனங்கள் எழுகின்றன .இந்த ஒரு மாதமாய் அது அதிகமாய் உள்ளது ஆதலால் தான் இந்த ஏற்பாடு "என்றவர் பின் தன் தளபதியிடம் திரும்பி "நம் ராஜ்யத்து மக்கள் அனைவரையும் இந்த திருவிழா முடியும் வரை இவ்விடத்தில் தங்க சொல் .அனைவரும் இன்று மாலைக்குள் இங்கே குடிபெயர்ந்திருக்க வேண்டும் ."என்று கூற
அவரின் தளபதியோ "தங்கள் சித்தபடியே பிரபு "என்றவன் தன் படைவீரர்கள் மூலம் செய்தியை பரப்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மக்களை இங்கே இடம்பெயர்ப்பிக்க ஆரம்பித்தான் .மாலைக்குள் ராஜ்யத்து மக்கள் அனைவரும் அவ்விடத்திற்குள் வந்து தஞ்சம் அடைந்திருந்தனர் அரசகுலத்தவரும் அதில் அடக்கம் .
இங்கே தனது கனவுகள் முழுதும் சிதைந்த வெறியில் ஆ
அக்காடே அதிருமளவு கத்திய நீலகாந்தன் பின் அங்கிருந்த ஒரே பாறையை தன் கையாலேயே உடைத்தான் "அடேய்ய்ய் விஷாகா உன்னை விடமாட்டேனடா பிறந்த குலத்திற்கே துரோகம் செய்தாயோ தந்தை பாசத்தால் .உன்னையும் உன் மனைவியின் குலத்தவர்களையும் என்னிரு கைகளாலேயே கொன்று தீர்ப்பேனடா "என்று கத்திக்கொண்டிருக்க
அவன் அருகில் வந்த நாகனேயனோ "அதெப்படி முடியும் நீலகாந்தா நாமோ சக்திகளை இழந்து நிற்கும் சாமான்ய மானுடர்களை ஒத்தவர்கள் அவர்களோ மாந்திரீகத்தில் தலை சிறந்து விளங்கும் கூட்டத்தவர் நமது மொத்த குலத்தவர்களும் சேர்ந்தெதிர்த்தாலும் அவர்கள் நம்மை கண்ட மாத்திரத்தில் பசுபமாக்கிவிடுவர்" என்க
வாயிலிலோ மேகதூதனின் குரல் கேட்டது "எனில் இப்பொழுதவர்களை வீழ்த்துவது மிகவும் சுலபமாகும் என்று ."
மேகதூதனின் குரலில் அலட்சியமாய் திரும்பிய அக்குலத்தலைவன் "எப்படி எப்படி முடியும் என்கிறாய் புத்தி பேதலித்து விட்டதா உனக்கு ?"என்க
அவனோ சிரித்தவன் இன்று வந்தியத்தேவன் நியமனம் செய்திருக்கும் அந்த இடத்தை பற்றியும் அதற்காக ஆதவக்குலத்தவர் அனைவரும் தமது ஆத்மபலத்தை துறந்ததையும் சொல்ல
நாகனேயனோ"போனதா இருந்த ஒரு வழியும் போனதா இனி என்ன செய்ய முடியும் நம்மால் ?"என்க
நீலகந்தனோ "தந்தையே தமது வாயை மூடுங்கள் "என்றவன் கோரமாய் சிரித்து "வந்தியத்தேவன் தம் மக்களை காப்பதற்கு நினைத்து நாம் அவர்களை வீழ்த்த சாலச்சிறந்த வழியை உருவாக்கி வைத்திருக்கிறான் "என்க
நாகனேயன் புரியாது பார்க்க மேகதூதனோ ஏளனமாய் சிரித்தவன் "அவர்கள் நாளை அவர்களின் குலதெய்வக்கோவிலான சூரியனின் கோயிலிற்கு செல்வதற்காக நிச்சயம் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.ராஜ்யத்து மக்கள் அனைவரும் வரவில்லை எனினும் ஆருத்ராவின் குடும்பமான அரசகுடும்பம் வந்தே தீரும் .அவர்கள் கூட்டத்தோடு தமது படைவீரர்களை கலக்கவிட்டு ஆதவக்குலத்தவர் அனைவரையும் பூஜை நடக்கும் தருவாயில் வெட்டி சாய்த்து விட முடியும்.அதன் பின் ஆராதனாவையும் ஆதிராவையும் குழந்தையில் பலிகொடுப்பதிலேயே அத்தனை சக்திகள் கிட்டுமெனில் இன்னும் இருபது வருடங்கள் கழித்தது வரும் பௌர்ணமியில் அவர்களின் கன்னிப்பருவதில் அம்மனின் அருள் மொத்தமாய் நிறைந்திருக்கும் தருணத்தில் அவர்களை பலியிட்டால் ?"என்றவன் கேலியாய் புருவம் உயர்த்தி நிறுத்த
நீலகாந்தனோ கனவுகள் மிதக்கும் கண்களோடு "அது வரை அவ்விரு பேடிகளையும் சிறை வைத்து இத்தனை காலம் நாம் கண்ட துன்பத்திற்கு அணு அணுவாய் சித்ரவதை செய்து நம் பழியையும் தீர்த்துக்கொள்ளலாம் "என்க
நாகநேயனிற்கு அப்பொழுதே அவர்களின் திட்டம் முழுதாய் புரிய ஆதவக்குலத்தவர்களின் மரண ஓலத்தை காதார கேட்கும் தருணத்தை தன் மனக்கண்ணில் ஆழ்ந்து அனுபவித்தவன் கண்ணை திறந்து "எனில் நாளை ஆதவக்குலம் அஸ்தமனத்தை சந்திக்கப்போகிறது" என்று கூறி மூவரும் கோரமாய் சிரிக்க இவை எதையும் அறியாத ஆருத்ராவும் விஷாகனுமோ தத்தம் துணையை இருகக்கட்டிக்கொண்டு துயில் கொண்டிருந்தனர்.
நாளை நடக்கவிருக்கும் கோரசம்பவத்தை முன்னே அறிந்திருந்தால் இந்த நிம்மதி நீடித்திருக்குமா ?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top