22

வருடாவருடம் அங்கே ஆதவகுலத்தில் அவர்கள் குலதெய்வமான சூரிய பகவானை துதித்து பத்து நாட்கள் காப்பு கட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்குகளுடனும் விழாக்களுடனும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பூஜை என வெகு விமரிசையாக நடைபெறும் அவர்களின் திருவிழா.

வானவேடிக்கைகள் விண்ணில் படர்ந்து இரவையும் பகலாக்க முயல சிறுவர்களின் சிரிப்பு சத்தத்திலும் ஒவ்வொரு வீட்டின் முன்னும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூவின் சுகந்தத்திலும் கோவிலை நிறைத்த விளக்கின் ஒளியின் ஜொலி ஜொலிப்பிலும் அந்த ஊரே மிகுந்த சௌந்தர்யத்தோடும் சந்தோஷத்தோடும் காணப்படும் .

தன் சொந்த ஊரிற்கு திருவிழாக்காக ஆதிரா தன் அரண்மனைக்கு வந்திறங்கிய அவள் சற்றும் அன்று எதிர்பார்த்திருக்கமாட்டாள் அழகோவியமாய் இருக்கும் இவ்வரண்மனை பாழடைந்து வௌவால்களுக்கும் இறையாகப்போவதை .அன்று காலையில் அவள் வந்திறங்கிய பின் அந்த இடமே கலை கட்டிட அவள் வந்திறங்கியதையே வன்மத்தோடு நோக்கிக்கொண்டிருந்தான் மேகதூதன் .

"வா ஆருத்ரா வா இந்த வருடத்திற்காக தானடி இத்தனை வருடங்களாக ஆவலாய் காத்துக்கொண்டிருந்தேன் .என்னை நிராகரித்த உனக்கு மரணத்தை அளிக்க நினைத்தேன் எனில் இம்முறை மரணத்தை காட்டிலும் கொடிய தண்டனையை நீயும் உன் குலத்தவரும் என்னால் அனுபவிப்பீர்களடி "என்று வன்மத்தோடு மனதில் கரித்து கொட்டிக்கொண்டிருந்தான் .

வந்தியத்தேவன் "வா ஆருத்ரா என்றவர் விஷாகனின் புறம் திரும்பி "வாருங்கள் மாப்பிளை "என்றவர் அப்பொழுதே கவனித்தார் அவனின் கண்களில் ஏதோ ஒரு வித பதட்டம் இருப்பதை என்ன என்று அவர் கேட்குமுன்னே ஆதிராவும் ஆராதனாவும் "மாமா "என்று அவரின் இரு புற காலையும் ஓடி வந்து கட்டிக்கொள்ள அவரின் கவனம் அதன் பின் ஆராதனா மற்றும் ஆதிராவின் புறம் சென்று விட இருவரையும் அள்ளி எடுத்துக்கொண்டவர் "வாருங்கள் என் மருமகச்செல்வங்களே "என்று இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்

தன் அண்ணியை பார்த்த மாத்திரத்தில் சென்று கட்டிக்கொண்டாள் ஆருத்ரா "அண்ணி அவர்களே" என்று

அவர் அவளை அணைத்து அவள் முகத்தை நெட்டி வழித்தவர் "எப்படி இருக்கிறாய் என் கண்ணே சரியாய் உண்ணுவதில்லையா நீ இ?ப்படி இளைத்துவிட்டாயே"என்று கன்னத்தில் முத்தமிட்டு விடுவிக்க

இருவரையும் இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்துக்கொண்டிருந்தான் ஆதேஷ் "அன்னையே இது சரி இல்லை நானும் இப்பொழுது தானே இல்லம் வந்திருக்கிறேன் என்னை பாராது இத்தனை பெரிதாய் வளர்ந்திருக்கும் அத்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் "என்க

வானமாதேவியோ சிரித்தவாறு "எனக்கு உன் அத்தை தானடா முதல் குழந்தை "என்றுவிட்டு அடுத்து அவனை அழைத்து அணைத்துவிடுவிக்க ஆதேஷின் கண்களோ அருள்மொழிவேந்தனை தேடியது .

ஆதேஷ் "அன்னையே தமயன் எங்கே ?"என்க

அப்பொழுதே அவனின் நினைவு வந்த ஆருத்ரா "ஆம் அண்ணி எங்கே அவன் ?"என்க

வானமாதேவியோ "அவன் வேத பாடசாலைக்கு சென்றுள்ளான் ஆருத்ரா இந்த வயதிலேயே மாந்திரீகத்தில் சிறந்து விளங்குகிறானென்று அவனின் குருநாதர் மெச்சிவிட்டு செல்கிறார் .வாள் பயிற்சியிலும் சிறந்த வீரனாக திகழ்கிறான் "என்று பெருமை பொங்கும் கண்களோடு சொல்ல ஆருத்ராவின் கண்களும் பெருமையில் திளைத்தது.பின் அவள் அவர்களிடம் தன் தோழியையும் அவளின் கணவனையும் அறிமுகப்படுத்தியவள் பின் உள்ளே சென்று மற்றவர்களுடன் அளவளாவ விஷாகனின் பார்வையை ஆருத்ராவையே துளைத்துக்கொண்டிருந்தது .

இத்தனை நேரமாய் விஷாகான் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அப்பொழுதே கவனித்தவள் சைகையாலேயே அவனிடம் என்ன என்று கேட்க அவனோ அப்பொழுதே தெளிந்தவன் ஒன்றுமில்லை என்பதை போல் தலை அசைக்க ஏதோ அவனை பாதிப்பதை உணர்ந்தவள் அங்கிருந்து பிரிந்து வந்து அவனிடம் பேச போக எங்கிருந்தோ ஓடி வந்த அருள் மொழி அத்தை என்று அவளை கட்டிக்கொள்ள அவளின் கவனம் அவனின் புறம் சாய விஷாகனும் அவ்விடம் விட்டு அகன்றான் இங்கிருந்தால் தன் மனைவி தன்னை கண்டுகொள்வாள் என்று .

இப்படியே அன்றைய நாள் முழுதாய் கரைய அன்று மாலை அவர்களை ராஜ்யத்தில் இருக்கும் அந்த ஓங்கி உயர்ந்த அழகிய அருவிக்கு அந்த திருவிழாவின் முதல் ஸம்ப்ரதாயமாய் சுமங்கலிப்பெண்கள் அனைவரும் தத்தம் கணவனின் நீண்ட ஆயுளிற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் அன்று முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டில் இருந்து சாமி அறையில் விளக்கை ஏற்றி அவ்விளக்கை அணையாமல் அருவிக்கரை வரை எடுத்து செல்ல வேண்டும் .

பின் அந்த விளக்குகளை அருவியின் கீழே அமைந்திருக்கும் அம்மன் சிலையின் முன் காட்டிவிட்டு அவற்றை ஆற்றில் விட்டுவிட்டு அவ்வருவியில் குளித்துவிட்டு வரவேண்டும் .அது கேட்கையில் சுலபமாக இருந்தாலும் அந்த ராஜ்யத்தில் காற்றின் வரத்து எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கும் எனவே அது மிகவும் சிரம்மத்திற்குரிய சம்ப்ரதாயம் தான் எனில் இதை அனைத்து பெண்களும் ஆர்வத்தோடு செய்வர் .அன்று மாலை மஞ்சள் நிரப்பட்டில் அவள் அறையில் அம்மன் சிலையை போல் தயாராகிக்கொண்டிருந்தால் ஆருத்ரா .

அனைவரும் தயாராகிவிட அவளை அழைப்பதற்காக அறைக்குள் வந்த விஷாகன் அவளின் தோற்றம் கண்டு சிலை ஆக அவன் வருகையை கண்ணாடியின் மூலம் உணர்ந்தவள் ஒரு சிறு சிரிப்புடன் "ஒரு நிமிஷம்ங்க வந்துருறேன் "என்றுவிட்டு தலையில் மல்லிகையை சூடிவிட்டு நெற்றிவகிட்டில் குங்குமம் வைக்கப்போக அவள் அருகில் வேகமாய் வந்தவன் அவள் கையை பிடித்து தடுத்துவிட்டு தானே குங்குமச்சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்துவிட்டான் .

அவள் கண்மூடி அதை ஏற்றவள் பின் சிரிப்புடன் காதல் பொங்கும் கண்களோடு அவனை பார்த்தவள் "என்ன சார் ரொம்ப காதல் வழிஞ்சோடுது ?"என்று புருவம் உயர்த்தி கேட்க

அவளை கண்டு ஒரு குறுநகை புரிந்தவன் அவள் முகத்தை தன் கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டவன் "ரொம்ப அழகா இருக்கடா போலாமா ?"என்க அவளோ அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் போலாமே என்றுவிட்டு முன்னே செல்ல செல்லும் அவளையே வருத்தம் பொங்க பார்த்தான் விஷாகான் .

பின் அனைவரும் அருவிக்கரைக்கு செல்ல காலனி அணிந்து செல்லகூடாதென்பதால் அங்கே வழியில் இருந்த முள்ளும் கல்லும் அனைத்து பெண்களின் காலையும் பதம் பார்த்தது.ஆதிராவையும் ஆராதனாவையும் தன் இருக்கைகளில் தூக்கிக்கொண்டு விஷாகன் எப்பொழுதையும் விட அதிகமாய் தன் மகள்களை கொஞ்சிக்கொண்டும் அவர்களை முத்தமிட்டுக்கொண்டும் அடிக்கடி கண்கள் கலங்கியபடி பார்த்துக்கொண்டும் வர அதை யாரும் கவனிக்காது துடைத்தபடியும் வந்துகொண்டிருந்தான் .

பின் அரைமணி நேர நடை பயணத்திற்கு பின் அந்த ஓங்கி உயர்ந்த நீர்வீழ்ச்சி ஆற்றின் ப்ரவாகத்தோடு இணைந்து ஓடிட அன்றைய நிலவின் ஒளியில் அங்கே சிதறிடும் நீர்த்துளியும் வைரமாய் மின்னிட அவற்றிற்கு மேலும் அழகு சேர்க்கும்படி வண்ணவண்ண பட்டில் நெற்றியில் மின்னிய குங்குமமும் கையில் மின்னிய விளக்குடனும் தனது மணாளர்களுடன் சிரித்து பேசியபடி அங்கே வந்து சேர்ந்தனர் அந்த ராஜ்ஜியத்து பெண்கள் .

அங்கே அருவியின் நீர் நேராய் தலையில் விழுமாறு அமைந்திருந்த குகையின் உள்ளே சாந்தமே உருவாய் அம்மனவள் வீற்றிருக்க அவ்வம்மனை மனதார துதித்த பெண்கள் தாங்கள் வைத்திருந்த விளக்குகளை கொண்டு அவளிற்கு ஆராதனை காட்டிவிட்டு அவற்றை சற்று தள்ளி வந்து ஆற்று பிரவாகத்தில் மிதக்கவிட அந்த இருட்டையும் மிஞ்சி அவ்விடத்தையே ஒளிமயமாக்கியது அவ்விளக்கின் சுடர் .

அந்த சம்பிரதாயங்கள் முடிந்ததும் அனைவரும் அங்கே குளித்துவிட்டு ஈர உடையுடன் ராஜ்ஜியத்திற்கு திரும்ப நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்த ஆருத்ராவை தன் இரு கைகளிலும் ஏந்தியபடியே வழி நெடுகிலும் நடந்து வந்தான் விஷாகன்.அவன் செய்கையில் வெட்கம் கொண்டவள் அவன் மார்பிலே புதைந்து கொள்ள அவளை சிறு புன்னகையோடு பார்த்தவன் எதையும் கண்டு கொள்ளாது அவள் நெற்றியில் முதாதமிட்டவன் முன்னேறி நடக்க இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மேகதூதனின் நவதுவாரங்களிலிருந்தும் புகை வந்தது .

அரண்மனைக்கு வந்த பின் அனைவரும் உண்டுவிட்டு தத்தம் அறைக்கு செல்ல விஷாகனோ உண்டுவிட்டு தோட்டத்திற்கு சென்றவன் அந்த நிலவை வெறித்தவாறே கொட்டும் மழையையும் உணராது அப்படியே நின்றான் கண்ணில் வழிந்த கண்ணீரை மறைக்கவேண்டி நின்றானோ ? .

உண்டபின் உறங்க அடம்பிடித்த மகள்களை படாத பாடுபட்டு படுக்கவைத்து ஆருத்ரா தான் கணவனை தேடியவள் வெளியே தோட்டத்திற்கு வர அவன் கொட்டும் மழையில் அசையாது நிற்பதை கண்டு பதறியவள் அவன் அருகில் ஓடி சென்றவள் "என்னங்க மழை இப்டி கொட்டுது அசையாம நிக்கிறீங்க வாங்கங்க உள்ள "என்று அவனை கை பிடித்து தன் அறைக்கு அழைத்துவந்தவள் மகள்களை கட்டிலின் ஓரமாய் படுக்கவைத்துவிட்டு அவனை கட்டிலில் அமர்த்தி தலையை தன் முந்தானையால் துவட்டிவிட துவங்கினாள் .

பின் "என்னாச்சுங்க திடீர்னு நானும் காலைல இருந்து பாக்குறேன் பாப்பாவை விட்டு நகர மாட்டேங்குறீங்க என்ன பாத்துட்டே இருக்கீங்க இப்போ என்னனா மழை வந்தாலே உள்ள ஓடுறவரு கொட்டுற மழைல நிக்குறீங்க என்னாச்சு ?"என்க

அவனோ முகத்தை சாதாரணமாய் சிரமப்பட்டு வைத்தவன் சிரிப்பை சிதறவிட்டவாறு அவள் முன் நெற்றியில் புரளும் முடியை ஒதுக்கியவன் "ஒண்ணுமில்லடா சும்மா தான் "என்க

அவளோ இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு முறைத்தவள் "பொய் சொல்லாதீங்க நானும் ஒரு பத்து நாளா பாத்துட்டு தான் இருக்கேன் ஏதோ பயந்துட்டே இருக்குற மாதிரி இருக்கு. நீங்க பாப்பா ரெண்டு பேரையும் பாத்துட்டே இருக்கீங்க அடிக்கடி உங்க கண்ணுல தண்ணி வருது அவுங்கள பாக்கேல என்னாச்சுங்க ?"என்று அவன் கையை தன் கையில் பிடித்து பேச அதற்குமேல் ஏனோ தாங்க முடியாதவனாய் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன் அவள் கழுத்துவலைவில் முகம் புதைத்து கண்ணீர் விட துவங்க ஆருத்ராவோ பதறிப்போனால் .

ஆருத்ரா "என்னங்க என்னாச்சுங்க என் திடீர்னு அழுறீங்க ஏங்க "என்று அவனை விளக்க பார்க்க

அவனோ "ஷ்ஷ் எதுவும் பேசாத ஆரு ப்ளீஸ் கொஞ்ச நேரம் விடு "என்று அவளை தன்னோடு மேலும் புதைத்துக்கொள்ள அவனின் விசித்திர நடவடிக்கை புரியாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தவள் பின் ஏதும் சொல்லாமல் அவன் தலை முடியை வருடிவிடு துவங்க கொஞ்ச நேரத்தில் சமணப்பட்டு அவளிடம் இருந்து பிரிந்தமர்ந்தான் விஷாகன் .

அவளின் பார்வை அவனையே கேள்வியாய் துளைக்க அவனோ "ஒ...... ஒன்னுமில்ல ஆரு இங்க நெறய சொந்தம்னுலாம் இருக்காங்க உனக்கு அவுங்க உன்மேல காட்டுற பாசம் அன்பை எல்லாம் பாக்கேல அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சு அவ்ளோ தான் .வேற ஒன்னும் இல்ல "என்று அவள் நம்பும் படியாய் ஒரு பொய்யை சொல்ல

அவளோ சிரித்தவள் "அட லூசு புருஷா என் சொந்தம் உன் சொந்தம் இல்லையா உங்க மேலயும் தான் எல்லாரும் பாசமா இருகாங்க நீங்க தான் ஒதுங்கி ஒதுங்கி போயிருறீங்க ."என்று அவன் தலையை கோதியவள் "நா இருக்கேங்க "என்று அவன் நெற்றியில் முத்தமிட

அவள் கையை பிடித்தவன் அவளையே பார்க்க கனிந்த முகத்தோடு அவள் "என்னங்க ?"என்க அவள் கையை பிடித்து சாய்ந்தவாறு கட்டிலில் அமர்ந்தவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுகொண்டு அணைத்துக்கொண்டு கண்மூட அவனிற்கு தன் ஆறுதல் தேவைப்படுகிறந்தென்று உணர்ந்தவள் அவனை அணைத்துக்கண்டு அவன் மார்பில் தலை வைத்தவாறு படுத்துக்கொண்டாள் .

அவள் மதி முகத்தையும் அருகில் சலனமே இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தவாறு படுத்திருந்த தன் பெண்களையும் கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் ஊற்றியது .

இப்படியே மனைவியையும் மகள்களையும் பார்த்துக்கொண்டிருந்தவனின் கவனத்தை அங்கே அவள் அறையிலிருந்து பால்க்கனிக்கு செல்லும் கதவிற்கு பின்னே இருந்த உருவம் ஈர்க்க பதறியவன் பின் ஆருத்ராவை பார்க்க அவளோ நிர்ச்சலனமாய் உறங்கிக்கொண்டிருந்தால் .

அவளின் உறக்கம் கலையாமல் அவளை படுக்கையில் கிடத்தியவன் மெல்ல எழுந்து வந்து balcony கதவை திறந்து வந்து அதை பூட்டியவன் அங்கே நின்றிருந்த உருவத்தை பார்த்து அடிக்குரலில் சீறினான் "நான் எத்தனை முறை கூறி இருக்கிறேன் என்னை காண வராதீர்கள் நானே சந்திக்கும் வேளையை கூறுகிறேன் என்று இப்போழுது இதற்கு இங்கு வந்தீர் ?"என்க

தன் முகத்தில் இருந்த துணியை அவ்வுருவம் விளக்க அதுவோ சம்ஹரித்த வம்சத்தாரின் தலைவன் "என்ன விஷாகா வேலையும் லட்சியமும் மறந்து மனைவியின் மேல் காதல் பொங்குகிறதோ ?நாளை உயிரை துறக்க போகிறவளை எண்ணி வருந்துகிறாயோ ?லட்சியம் மறந்ததா? இல்லை நீ சம்ஹித்த வம்சத்தவன் என்று அவள் அறியாதிருக்க வேண்டி என் சக்திகள் முழுதையும் துறந்து மஹாயாகம் புரிந்தேனே அதை மறந்தாயா ?இல்லை உன் அண்ணனவனிற்கு நீ செய்த சத்தியத்தையும் மறந்தாயா"என்க

அவனோ "தந்தையே தேவை இல்லாத பேச்சுக்கள் வேண்டாம் நான் என்றும் கூறுவதை தான் இன்றும் கூறுகிறேன் நான் சம்ஹித்த வம்சத்தவன் தான் எனில் என் ஆருத்ராவை நான் என் உயிரினும் மேலாய் காதலிக்கிறேன் .எனது புதல்விகள் உயிர் தானே தமது சக்திகள் கிடைப்பதற்கு தமக்கு வேண்டும் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள் என் மனைவியை விட்டு விடுங்கள் "என்று அவன் கண்ணீர் மல்க கை எடுத்து கும்பிட

அவனை அலட்சிய பார்வை பார்த்தவர் "அது நீ நடந்து கொள்வதில் தான் உள்ளது உன் புதல்விகளை சரியாய் பௌர்ணமி இரவில் எம்மிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டு இல்லையேல் நீ உயிரையே வைத்திருக்கும் உன் மனைவி உன் கண்முன்னே இறந்து போவாள்.உனக்கே நன்றாக தெரியுமல்லவா இப்பொழுதவள் தெய்வ சக்திகள் மொத்தத்தையும் இழந்த சாதாரண அற்ப மானுடயப்பிறவி தான் என்று? புரிந்து நடந்துகொள் "என்றுவிட்டு மறைய

அவ்விடத்திலேயே மண்டியிட்டு அழத்துவங்கினான் விஷாகன் "கடவுளே எனக்கு ஏன் இந்த சோதனை சம்ஹித்த வம்சத்தில் பிறந்ததென் தவறா. எமது எதிரிக்குலத்தவளை காதலிப்பதாக நடிக்க வந்த நான் உண்மையிலேயே அவள் மேல் காதல் வயப்பட்டதென் தவறா?எம் குலத்தை சேர்ந்தவனோடு அவளிற்கு குழந்தை பிறந்து அவற்றை பலி கொடுத்தால் இந்த பிரபஞ்சத்தையே ஆளும் சக்தியை அவர்கள் பெறுவார்கள் என்று நான் பெற்ற மகள்களை என் கையாலேயே காவு தர சொல்கிறார்களே இறைவா " என்று தம் மனதிற்குள்ளேயே புழுங்கியவன் உள்ளே சென்று உறங்கும் தன் மகள்களையே கண்ணீர் மல்க பார்த்தவன் இருவரின் முகத்தையும் வருடி நெற்றியில் முத்தம் கொடுத்தவன் உறக்கத்தையே மறந்து இருவரையும் தன் கண்களில் நிரப்ப துவங்கினான் மனதில் "இவ்வுலகத்திலேயே மிகவும் மோசமான தந்தை நான் தானடா ஏன் உதிரத்தில் உதித்த உங்களையே என் குலத்தவர்களிற்காக பலியிடப்ப்போகிறேனடா என்னை மன்னித்துவிடுங்களடா என் செல்வங்களே என்னை மன்னித்துவிடுங்களடா "என்று அவர்களிடம் இடைவிடாது மன்னிப்பை வேண்டிக்கொண்டிருந்தான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top