21

அடுத்த நாள் காலை அழகாய் விடிய அங்கே அந்த தலைவனுடன் கலந்தாலோசனை செய்த மேகதூதன் அவற்றை எல்லாம் மறைத்து அடுத்த நாள் தனது ராஜ்ஜியம் வந்து சேர்ந்தான் .தனது ராஜ்ஜியம் வந்து சேர்ந்தவன் தனது நடத்தைக்காக தனது அன்னை தன் தாயிடம் மன்னிப்பு வேண்டுவதை போல் நடித்தவன் அடுத்து மங்கலாபுரிக்கு விரைந்தான் .

அங்கே அவன் வருவதை தூரத்தில் இருந்தே தனது தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த வந்தியத்தேவன் கண்டுவிட அவன் எதற்கு இங்கே வருகிறான் என்று கனல் கக்கும் கண்களோடு அவன் புரவியின் முன் அவர் வந்து நிற்க அவனோ குழப்ப பார்வையோடு தன் புரவியில் இருந்து கீழிறங்கினான் .

கீழிறங்கியவனை கண்களால் எரித்தவர் "என்ன தைரியத்தில் இங்கே வந்தாயடா உன்னை நேற்று யான் உயிருடன் தப்ப விட்டதே எமது தங்கையின் கூற்றிற்காக மட்டும் தான் இப்பொழுது எதற்காக எமது ராஜ்ஜியத்திற்குள் வந்திருக்கிறாய் ?"என்று கத்த அப்பொழுதே தமது வாள் பயிற்சியை முடித்துக்கொண்டு தன் புரவியில் வாசலை வந்தடைந்தான் ஆருத்ரா .

தன் தமயன் மேகதூதனிடம் கத்திக்கொண்டிருப்பதை பார்த்து பதறியபடி கீழே இறங்கியவள் அவர்களின் அருகில் வேகவேகமாய் வந்து நின்றவள் "என்னவாயிற்று தமையனே "என்றவள் மேகதூதனிடம் திரும்பி "ஏன் தாம் வாசலிலேயே நிற்கிறீர் உள்ளே வாருங்கள் "என்க

வந்தியத்தேவரோ ஆருத்ராவின் புறம் திரும்பியவர் "உனக்கு பித்து பிடித்துவிட்டதா ஆருத்ரா ?இவன் செய்த காரியத்திற்கு இவன் சிரசை துண்டிக்கும் சினத்தில் இருக்கிறேன் நீ என்னவென்றால் உள்ளே வந்து விருந்தோம்பிவிட்டு செல்ல சொல்கிறாய் "என்க

மேகதூதனோ "மாமா அவர்களே நான் செய்தது மாபெரும் பிழை தான் எனில் அது நான் ஆருத்ரா எனக்கு கிடைக்க மாட்டாள் என்ற விரக்தியில் புத்தி பேதலித்து செய்த காரியமாகும்.மன்னித்தருளுங்கள் மாமா அவர்களே "என்க

அவள் "தாம் செய்த தவறை உணர்ந்ததே எமக்கு பரமானந்தம் உள்ளே செல்லுங்கள் "என்க

அவள் முன் கைகூப்பியவன் "உனது நல்ல மனதை புன்படுத்திவிட்டேன் மன்னித்துவிடு ஆருத்ரா "என்றுவிட்டு வந்தியத்தேவனிடமும் திரும்பி கை கூப்பிட்டு உள்ளே செல்ல வந்தியத்தேவரின் பார்வை அவனையே சந்தேகத்துடன் துளைத்தது .

அவர்கள் முன் அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தவன் அப்புறம் திரும்பியதும் ஒரு வில்லச்சிரிப்புடன் அவள் புறம் திரும்பியவன் "எனதாட்டத்தை இனி பார் ஆருத்ரா "என்று வேர்வையில் நனைந்து இருந்தவளை வக்கிரப்பார்வையுடன் பார்த்தவன் அவளை நோக்கி சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

அவன் முன்னே செல்லும் நேரம் அங்கே தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த விஷாகன் அவனை நோக்கி நடந்து வர ஆருத்ராவை திருமணம் செய்ய போகிறவன் இவன் தான் என்று அறிந்தவனின் கண்களில் அப்பட்டமாய் எரிச்சல் தெரிந்தது .

அவனை கடந்து செல்ல முயன்றவனை வழிமறைத்த விஷாகன் "என்ன சார் பார்த்தும் பார்க்காம போறீங்க ?"என்க

அவனோ "உன்னிடம் பேச எனக்கென்ன இருக்கிறது வழியை விட்டு அகன்றுவிடு "என்க

விஷாகனோ அவனை கேலியாய் பார்த்தவன் "இப்பொழுது வழிவிடுகிறேன் எனில் நீ என் வழியில் ஒருநாளும் வந்துவிடாதே "என்க

அவன் ஆருத்ராவை தான் கூறுகிறான் என்று நினைத்து சிரித்தவன் "பார்க்கலாம் "என்றுவிட்டு அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட செல்லும் அவனையே ஏளனப்பார்வையுடன் நோக்கினான் விஷாகன் .

அவன் சென்றதும் அவள் அருகில் வந்த வந்தியத்தேவன் "நீ செய்தது உனக்கே நன்றாக தெரிகிறதா ஆருத்ரா? அடிபட்ட பாம்பு அவன் .அவனை அருகில் வைத்தால் அப்பாம்பு ஒரு நாள் நம் காலையே கடித்துவிடும்."என்க

அவளோ வந்தியத்தேவரின் தோளில் சாய்ந்துகொண்டவள் "ஐயோ தமயனாரே

அனைவரையும் சந்தேகப்பார்வையோடு பார்க்காதீர்கள்.தன் தவறை உணர்ந்து மன்னிப்பை ஒருவர் வேண்டும்பொழுது மன்னிக்காது அலட்சியப்படுத்துவது நன்றன்று ."என்க

அவளின் தலையை ஆதூரமாய் வருடியவாறு "உண்மை தானம்மா எனில் அனைத்திலும் சிறந்து விளங்கும் நீ இப்படி அனைவரையும் நல்லவர்கள் என நம்புவது நல்லது இல்லை ஆருத்ரா "என்க

அவளோ சிரித்தவள் "நல்லதை செய்வோம் தமயனே நல்லதே நடக்கும் வேறேதும் குழப்பிக்கொள்ளாமல் உள்ளே வாருங்கள் "என்றுவிட்டு அவர் மீசையை பிடித்து இழுத்து விளையாடிவிட்டு உள்ளே ஓடிவிட

அவள் செல்வதையே ஏனோ சிந்தனையில் சுருங்கிய முகத்துடன் பார்த்தவர் அங்கே வாயிலில் அவர்கள் பிரதிஷ்டை செய்து வைத்திருந்த லிங்கத்தின் முன் கை கூப்பி நின்றவர் மனதில் "ஈசனே என் குழந்தையை எந்த பிரச்னையும் நெருங்காது பார்த்துக்கொள்ளுங்கள் இறைவா "என்று பிரார்த்திக்க இறைவனோ அது என்னால் முடியாதடா என்று வருந்த அந்த லிங்கத்தின் நெற்றிக்கண்ணில் இருந்து நீர் வடிந்தது .இவ்வாறே நாட்களும் செல்ல விஷாகன் ஆருத்ராவின் திருமணம் சிறந்த முறையில் முடிந்தது .

திருமணம் நடந்து முடிந்ததும் என்ன தான் தனது தங்கை தம்மை வந்து காண்பாள் எனினும் இனி அவள் இன்னொருவனின் சொந்தமாயிற்றே .ராஜ்ஜியத்தை ஆளும் அரசரவர் கண்களில் நீரோடு நிற்க அது வரை அமைதியாய் இருந்த வானமாதேவியும் அவள் ஊருக்கு கிளம்பும் தருவாயில் கதறிவிட்டார் .அவர்கள் அனைவரையும் சமாளித்து வந்தியத்தேவரிடமும் அந்த ராஜ்ய மக்களிடமும் பிரியாவிடை பெற்று தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு ஆருத்ரா தேவி விஷாகனாய் வந்திறங்கினாள் .

ஆதவக்குலத்தவர்களிடம் தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் அவர்களுடனான ஆருத்ராவின் உறவு கடிதத்தின் மூலமே தொடர்ந்தபடி இருந்தது.ஆதேஷிற்கும் பள்ளி செல்லும் வயது வந்துவிட அவனை ஆருத்ரா மற்றும் விஷாகனின் பாதுகாப்பிலேயே திருமணம் முடிந்த கையோடு படிக்க அனுப்பி வைத்தார் வந்தியத்தேவன்.

அத்தை என்றாலே முகம் பிரகாசிக்கும் ஆதேஷ் தன் அத்தையின் அணைப்பிலேயே வளரத்துவங்கினான் .திருமணம் முடிந்த மூன்றாவது மாதமே ஆருத்ரா கருத்தரிக்க அதை கேள்வியுற்ற வந்தியத்தேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

மங்கலாபுரியின் ராஜ்ஜியத்தில் அச்செய்தியை ஒரு வாரம் முழுவதும் காலகாலமாய் திருவிழா போல் கொண்டாடினர்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆருத்ராவின் வயிற்றில் இருந்த சிசு வளர மூன்றாம் மாதமே அவள் மருத்துவராதலால் அவை ரெட்டை பெண் குழந்தைகள் என்று தெரியவந்தது .அது வரை அவள் முந்தானையை பிடித்து சுற்றிக்கொண்டிருந்த ஆதேஷ் அவளின் வயிற்றில் குழந்தை வளர்கிறதென்று சொல்ல பள்ளி முடித்து வந்ததிலிருந்து அவள் வயிற்றின் மேல் தன் பிஞ்சு கையை வைப்பவன் தன் மழலை மொழியில் ஏதேதோ பேசுவான் .

அவளை பேறுகாலத்தில் பார்த்துக்கொள்வதற்காக வானமாதேவியுடன் வந்தியத்தேவரும் அருள்மொழி வேந்தனும் வந்துவிட அருள்மொழி வேந்தனும் ஆதேஷும் அவள் வயிற்றின் இருபுறமும் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பர்.அவர்கள் இருவரும் பேச பேச இருபுறமும் குழந்தையின் அசைவு மற்ற நேரங்களை விட அதிகமாய் தெரியும் .

அதை கண்டு மகிழ்ச்சியில் பூரிக்கும் ஆருத்ரா தன் தமயனிடம் "தமயனாரே எமது மருமகன்கள் இருவரும் இப்பொழுதே அவர்களின் மனைவிமாரிடம் பேச துவங்கிவிட்டனர் .இவர்களும் உள்ளிருந்து என் குரலிற்கு அசையாதவர்கள் அவர்களின் குரல் கேட்டால் இப்பொழுதே வெளியே வந்து விடுவேன் போல துள்ளுகிறார்கள் "என்க அதை நிறைவுடன் கண்டுகொண்டிருப்பார் வந்தியத்தேவன் .

எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தாலும் வந்தியத்தேவருக்கு ஏனோ விஷாகனை கண்டாலே மனம் பதறுவதும் ஒரு சிறு நெருடல் உதிப்பதும் நிற்பதே இல்லை.அடுத்த ஒரு மாதத்தில் ஆருத்ரா இரு பெண் மகவுகளை பெற்றெடுக்க அவள் வலியில் உள்ளே துடிப்பதை கேட்டு வந்தியத்தேவன் வெளியே உடைந்து அழுதே விட்டார் .அவளிற்கு பிரசவம் பார்த்தது விஷாகன் தான் அவள் வலியில் துடிக்க துடிக்க அவன் கண்களிலும் அவ்வலி தெரிந்தது .சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியவன் இரு குழந்தைகளையும் வெளியே எடுக்க தன்னை உரித்து பிறந்திருக்கும் தன் புதல்விகளை பார்த்து சிரித்தவாறே மயக்கநிலைக்கு சென்றால் ஆருத்ரா .

குழந்தைகளை கண்டு விஷாகனும் ஒரு சிறு புன்னகை உதிர்த்தவன் மயக்கத்தில் இருக்கும் ஆருத்ராவின் தலையை சென்று வருடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் பின் ஏனோ கண்ணில் துளிர்ந்த நீருடன் வெளியே சென்றுவிட்டான் .பிரசவம் நல்லபடியாய் முடிய அடுத்த அரைமணி நேரத்தில் மயக்கம் தெளிந்தவளின் அருகே இருபுறமும் அமர்ந்தவாறு வந்தியத்தேவரும் வானமாதேவியும் அவள் தலையை வருட வந்தியத்தேவரின் கலங்கிய கண்ணை துடைத்த ஆருத்ரா அவரின் மீசையை முறுக்கிவிட்டவாறு சிரித்தவள் இருவரின் உதவியோடும் கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள்.

பின் தொட்டிலை தேட அவளின் அலைப்புறும் கண்களை பார்த்து சிரித்த வானமாதேவி அங்கே பார் என்று அருகில் இருந்த சிறு தொட்டிலை காட்ட அதில் இருபுறமும் நின்றவாறு ஏதோ பெரும் அதிசயத்தை பார்ப்பதை போல் ஆதேஷும் அருள் மொழி வேந்தனும் இரு குழந்தைகளையும் கண்டுகொண்டிருந்தனர்.

திடீரென வீறிட்டு இரு குழந்தைகளும் அழ அதுவரை அவர்களை ஆச்சர்யமாய் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் பயப்பட அருள் மொழி வேந்தனோ ஒரு படி மேலே சென்று "அத்தை அத்தை ஏன் இவள் அழுகிறாள் ஐயோ அத்தை ஏதாவது செய்யுங்கள் அத்தை "என்று அவனும் அழ துவங்கிவிட்டான் .

இருவரின் செயல்களையும் சிரிப்புடன் பார்த்த ஆருத்ரா தன் அண்ணியிடம் கண்ஜாடை காட்ட இரு குழந்தைகளையும் எடுத்து வந்து அவளிடம் அவர் கொடுக்க இருவரையும் பசி ஆற்றினாள் ஆருத்ரா .பின் இருவரும் அமைதியாகிவிட ஆதேஷ் தெளிந்து விட்டு ஆதிராவுடன் விளையாட துவங்க அருள்மொழிவேந்தனோ இன்னும் அரண்ட தோற்றத்திலேயேஇருக்க அவனை தன் அருகில் அழைத்தவள் அவனின் தலையை வருடி "ஏன் இத்தனை தூரம் பயப்படுகிறாய் அருள் அவள் அழ தானே செய்தால் .குழந்தைகளுக்கு பேச முடியாதல்லவா ஆதலால் அவள் தேவையை நாம் அறிய வேண்டி அவள் அழுகிறாள் "என்க

அருள்மொழிவேந்தனோ அவளின் பிஞ்சு கையை வருடியவன் "இல்லை அத்தை இவள் அழுவதை என்னால் பார்க்க இயலவில்லை.இனி இவள் அழுமுன்பே இவள் தேவையை அறிந்து நான் செய்துவிடுகிறேன்"என்று கூற

பெரிதாய் சிரித்த ஆருத்ரா "சரி இனி இவள் உன் பொறுப்பு "என்க ஆராதனா என்ன நினைத்தாளோ அருள்மொழிவேந்தனின் விரலை தன் குட்டி கையால் இறுகப் பற்றிக்கொண்டாள் .

பின் நாட்களும் ஓட இருவருக்கும் ஆராதனா ஆதிரா என்று பெயர் சூட்டினர்.வருடங்கள் உருண்டோட ஆதிரா பொழுதிற்கும் அன்னை என்பதற்கு பதில் தேவை அனைத்திற்கும் ஆதேஷ் என்றழைக்க விடுமுறையின் போது அருள் வந்துவிட்டாலோ ஆராதனா அவன் கழுத்தை கட்டி தொங்கிக்கொண்டே திரிவாள்.ஆருத்ராவின் பிள்ளைகள் இருவரும் அவளை மிஞ்சும் தெய்வீக அம்சத்துடன் பிறந்திருந்தனர் .ஆராதனாவின் கையில் சூல ரேகை இருக்க ஆதிராவின் கையில் வில்வ ரேகை இருக்கும் .

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் ஐந்து வருடங்கள் உருண்டோட அந்த வருடம் சம்ஹித்த வம்சத்தார் வன்மத்துடன் காத்திருந்த பௌர்ணமியும் அருகில் வர வருடாவருடம் அங்கே நடக்கும் திருவிழாவிற்கு வந்து தவறாது கலந்து கொள்ளும் ஆருத்ரா இவ்வருடமும் தன் குடும்பத்தோடும் பிள்ளை பேறில்லாது இருந்த தனது தோழி மீனாட்சியையும் அவள் கணவனையும் அழைத்துக்கொண்டு மங்கலாபுரிக்கு புறப்பட்டாள் அங்கே நடக்க போகும் விபரீதத்தை பற்றி அறியாமல் ...........

தாமதத்திற்கு மன்னிக்கவும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ரெண்டு நாள் ஊருல இருந்துட்டேன் eeeeeeeeeee  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top