17
அவனை கண்டு மார்த்தாண்டன் திகைத்ததென்னவோ ஒரு நொடி தான். பின் வானத்தை நோக்க வெண்மதி முழுதாய் கருமையின் ஆதிக்கத்தினுள் இருக்க அதை கண்டு ஓர் கர்வச்சிரிப்பு சிரித்தவன் அவனை நோக்கி "ஓஒ அருள்மொழிவேந்தனுக்கு தன் இளவனை விட்டு மரணிக்க ஆசை இல்லையோ அவனோடு சேர்ந்து மரணத்தை தழுவ வந்தீரோ இன்று சந்திரகிரஹணம் என்பதை சிந்தையினின்று அகற்றி ?"என்க
அருள்மொழிவேந்தனோ அவனை துச்சமென மதித்தவன் "எம் மரணம் உமது கையிலா நல்ல நகைச்சுவை "என்க சினம் கொண்ட மார்த்தாண்டன் தனது கூட்டத்தவரிடம் கண்ணசைத்தவன் அப்புறவியில் வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்க அருள்மொழிவேந்தனோ தன் கையிலிருந்த இரண்டு வாள்களில் ஒரு வாளை ஆதேஷின் புறம் தூக்கி .எரிந்தவன் அந்த கூட்டத்தாருடன் சண்டை இட துவங்க ஆதேஷும் தன் பின்னே தனது பாதுகாப்பில் அஜய்,வேதித்யா மற்றும் ஆதிராவை நிறுத்தியவன் தாக்க வந்தவர்களை துவம்சம் செய்ய துவங்கினான் .
சண்டை நீண்டு கொண்டே செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் கிரஹணம் அகல துவங்க நிலவின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் பரவத்துவங்கியது .எனில் அதை கவனிக்கும் நிலையில் மார்தாண்டனோ அவன் கூட்டத்தினரோ இல்லாது போனது அவர்கள் துர்பாக்கியமே.
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிய கருமை மொத்தமாய் விலகி வெண்மதியின் வென்னிரக்கதிர்கள் பூமியை குளிர்விக்க மார்த்தாண்டனின் கூட்டதவர் அனைவரும் மண்ணில் சாய்ந்திருந்தனர் .அவன் மட்டுமே எஞ்சி இருந்து அருள்மொழிவேந்தனோடு சண்டையிட்டுக்கொண்டிருக்க அவனிற்கு சிறிது நேரம் போக்கு காட்டியவன் ஒரு முறை வாளை சுழற்றி அவன் வாளிலேயே ஓங்கி அடிக்க மார்த்தாண்டன் கையிலிருந்த வாள் பத்தடி தூரம் தள்ளி போய் விழுந்தது.
மார்த்தாண்டன் கையிலிருந்த வாள் பறந்து விழுந்ததை பார்த்து திகைத்து வேறு புறம் திரும்பும்முன் அவன் கழுத்தில் வாளின் கூர்முனையை வைத்திருந்தனர் அருள்மொழிவேந்தனும் ஆதேஸ்வரனும் .
இச்செயலில் மார்த்தாண்டன் கோபமும் இயலாமையும் போட்டிப்போடும் விழிகளோடு அவர்களை நோக்க அவ்விருவருமோ ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டவர்கள் இவன் புறம் திரும்பி "செல் மார்த்தாண்டா உமது தலைவனிடம் சென்று கூறு எமது இளவரசி எம் கை சேர்ந்து விட்டாள் இனி ஆதவக்குலத்தினர் சிந்திய செங்குருதியின் பதில் ஆட்டத்தை பார்க்க காத்திருக்க சொல்"என்று கூறி அவன் கழுத்திலிருந்து வாளை அகற்ற இருவரையும் தீயாய் முறைத்த மார்த்தாண்டன் ஏதும் கூறாது அவ்விடத்திலிருந்து மறைந்தான் .
அது வரை அமைதியாய் இருந்த அருள்மொழிவேந்தன் ஆதிராவிடம் திரும்பியவன் ஒரு குறுநகையோடு "வா ஆதிரா உனது வரவையே நம் குலத்தவர்கள் இருபது வருடங்களாய் எதிர்நோக்கி காத்திருந்தனர் .உன்னை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ."என்க
அவளோ ஒரு குழப்பமான புன்னகையை சிந்த அதை கண்டுகொண்ட ஆதேஷ் "இது என்னோட அண்ணன் ஆரா அருள்மொழிவேந்தன் "என்க அவள் அவனை தீயாய் முறைத்தாள் இன்னும் எத்தனை விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறாய் என்னிடமிருந்தென்று .
பின் அவன் கையில் அவள் பார்வை பட இன்னுமே அவன் கையிலிருந்து ரத்தம் கசிந்துக்கொண்டிருந்தது .
அதை கண்டு பதறியவள் தன் பான்ட் பாக்கெட்டிலிருந்து தன் கைக்குட்டையை எடுத்தவள் அவன் கையின் காயத்தை சுத்தி கட்டிவிட அதை ஒரு புன்சிரிப்போடு ஆதேஷ் நோக்க கட்டி முடித்தவள் தயக்கமாய் அவன் விழியை நோக்கி அதில் சற்று நேரம் அவள் தன்னை தொலைக்க அவர்கள் நிலையை கண்டு சிரித்தவாறே தன் தொண்டையை செறுமிய அருள்மொழிவேந்தன் "ஆதேஷ் "என்க
திடுக்கிட்டு பிரிந்த இருவரையும் சிரிப்போடு நோக்கியவன் "இரவு தாமதமாகிவிட்டது கிளம்பலாமா ?"என்று இருவரையும் பார்த்து கேட்க அப்பொழுதே அவர்கள் பின் இருந்த அஜயையும் வேதித்யாவையும் கண்டான் .
அவர்களின் புறம் அவன் பார்வை போவதை உணர்ந்த ஆதேஷ் "அண்ணா அது அஜய் அது வேதித்யா இருவரும் எமது தோழமைகள் ஆவர் "என்க
அவர்களை நோக்கி ஒரு புன்னகை சிந்தியவன் "இருவரையும் எமது இருப்பிடத்திற்கு வரவேற்கிறேன் "என்றவன் ஆதேஷிடம் கண்ஜாடை காட்டிவிட்டு தனது புரவியை திருப்பிக்கொண்டு செல்ல அவர்களின் முன் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது .
அதில் முதலில் ஏறிக்கொண்டவன் மீதி மூவரையும் "என்ன பாத்துட்டே இருக்கீங்க ஏறுங்க "என்க அதுவரை நடந்த சண்டைக்காட்சிகளையும் மாயாஜாலங்களையும் கண்டதில் சிலை ஆகி இருந்த அஜய் அவனை தீயாய் முறைத்தவன் ஏறி அமர வேதித்யாவோ அதிர்ச்சி மீளாமல் ஏறி அமர்ந்தாள் .
அவர்கள் இருவரும் ஏறிய பின்னும் ஆதிரா ஏறாதிருக்க அவள் புறம் ஒரு குழப்பமான பார்வையை வீசியவன் ஏரு என்று சைகை செய்ய அவள் அப்படியே நிற்க இது சரி வராது என்று நினைத்து தலையை சிலுப்பியவனோ கீழே இறங்கி தன் இருகைகளால் அவள் இடையை பற்றியவன் அவள் சுதாரிக்குமுன்னே அவளை தூக்கி வண்டியிள் ஏற்றிவிட .அவன் தன் இடைப்பற்றி ஏற்றிவிட்டதில் முதலில் திகைத்தவள் பின் முறைக்க அவனோ அவளை நோக்கி கண்ணடித்தவன்" முறைப்பொண்ணே ரொம்ப முறைக்காதடி அப்பறோம் மாமாக்கு மூட் மாறிடும் "என்க
அதுவரை அமைதியாய் இருந்த அஜய் அந்த மாட்டுவண்டியிலிருந்த ஒரு குச்சியை எடுத்து அவன் மேல் அடித்தவன் "நன்னாரிப்பயலே நா நொந்து போய் உக்காந்துருக்கேன் ஒன்னும் புரியாம இந்த நேரத்துல உனக்கு ரொமான்ஸ் கேக்குதா.மூடிட்டு வாடா என்ன கொலைகாரனாக்காம "என்க
அஜயை நோக்கி முறைத்த ஆதேஷ் மூடு என்பதை போல் சைகை செய்துவிட்டு ஆதிராவின் அருகில் அமர்ந்தவன் மாட்டுவண்டியில் முன்னே அமர்ந்திருந்தவரிடம் வண்டியை செலுத்துங்கள் அண்ணா எங்க அந்த வண்டியும் புறப்பட்டது .
அந்த பயணம் அமைதியாகவே செல்ல ஆதேஷ் அங்கிருந்த மௌனத்தை கலைக்கும் விதமாய் ஆதிராவின் புறம் திரும்பியவன் " ஆமா ஆரா நேத்து நைட் வரைக்கும் நல்லா தான இருந்த எப்ப என்னோட கைல இருந்த bracelettayum அந்த அடையாளத்தையும் பார்த்த ?"என்று அதிமுக்கிய கெவியை எழுப்ப ஆதிராவின் நினைவுகளோ நேற்று இரவை நோக்கி பயணித்தது .
நேற்று இரவு சிந்தனைகளில் சுழன்றவாறே நாளை அருவிக்கரைக்கு சென்றாக வேண்டும் என்று முடிவெடுத்தவள் தன் கப்போர்டை திறந்து இரவு உடையை எடுக்க அவள் எடுத்த வேகத்தில் ஆதேஷின் பர்ஸ் கீழே விழுந்து அதிலிருந்த அனைத்தும் கீழே சிதறியது .
தன் அவசர செயலுக்கு தன் தலையிலேயே அடித்துக்கொண்டவள் அதில் ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க அப்பொழுதே அவள் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு..
இது என்ன ஏதோ விசிடிங் கார்டு மாறி இருக்கு என்று திருப்ப அதில் ஆதேஷின் புகைப்படத்துடன் ஆதேஸ்வரன் ba .bl என்று இருந்த அவனது விசிட்டிங் கார்டு அவனது அடையாளத்தை அச்சு பிசகின்றி அவளிற்கு காட்டிக்கொடுத்தது .அதை பார்த்தவளிற்கு கண்கள் வியப்பில் விரிய அப்படியே அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டாள்.
கப்போர்டில் தனது முதுகை சாய்த்து அமர்ந்தவள் நினைவடுக்குகளில் அப்பொழுதே அவள் உதாசீனப்படுத்திய நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே வந்தது .
அன்று கோவிலில் அவளால் ஆதேஷாலும் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது ,அன்று அவள் மயங்கியபோதும் சலனமே இன்றி இவை நடக்கும் என்று நான் அறிவேன் என்பதை போல் அவன் நின்றிருந்த தோற்றம் ,என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் நினைவில் அப்பொழுதே அந்த bracelet ஞாபகம் வந்தது .
bracelet அதை எங்க வச்சேன் என்று அறை முழுவதும் தேடினால் எனில் அது கிடைக்க வில்லை .எங்கே சென்றது என்று யோசித்தவள் ஏதோ ஒரு குருட்டு சந்தேகத்தில் அன்று ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இந்த ஊருக்கு வரும் வழியில் அவளும் ஆதேஷும் எடுத்த selfieயில் ஆதேஷின் கைகளை zoom செய்து பார்க்க சந்தேகத்திற்கு இடமே இன்றி அந்த bracelet அவன் கைகளில் இருந்தது .
அதை பார்த்தவளிற்கு கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் மனதில் எரிமலையாய் வெடிக்க துவங்கியது .ஏமாந்த இயலாமையும் இவ்வளவு நடந்தும் எதையும் கருத்தில் பதியவைத்திராத தன் மடத்தனத்தையும் எண்ணி பார்த்தவளிற்கு தன் மீதே கட்டுக்கடங்காத கோபம் வந்தது .
அதே கோபத்தோடு அவன் அறைக்கு சென்றவள் கதவை திறந்து உள்ளே பார்க்க ஆதேஷோ கைகளை குறுக்கிக்கொண்டு குழந்தை போல் உறங்கிக்கொண்டிருக்க அவனை காணும் வரை இருந்த கோபம் அவன் உறங்கும் கோலத்தை கண்டு கானல் நீராய் மறைய துவங்கியது .
கொஞ்சம் கொஞ்சமாய் அவனை நெருங்கி அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தவள் அவன் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்தாள்.
அவன் முன்னிருமுடிகள் அவன் நெற்றியில் புரண்டோட அவன் தலைமுடியை அனிச்சையாய் கோதியவளின் கண்கள் கண்ணீரை நிறைத்தது ஏனடா என்னை ஏமாற்றினாய் என்று .
பின் அவன் முகத்திலிருந்து அவள் பார்வை தற்செயலாய் அவன் மார்புப்பகுதிக்கு செல்ல அங்கே இருந்த அடையாளத்தை பார்த்து முழுவதுமாய் அதிர்ந்தாள்.
நடுங்கும் தனது கரத்தால் அந்த பச்சை குத்திய இடத்தை தடவியவள் தனது வலக்கையை பார்க்க இரண்டும் ஒன்றாக இருந்தது .விருட்டென்று பெட்டிலிருந்து எழுந்தவள் வந்த தடயமே தெரியாதவாறு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டால்.
இதை அவள் நினைத்துக்கொண்டு மௌனமாய் வர வண்டி நின்றுவிட்ட உணர்ச்சியிலேயே தன் சிந்தனைகளிலிருந்து வெளியே வந்தாள்.
அவள் சுற்றி முற்றி பார்க்க அஜயும் வேதித்யாவும் அவளிற்கு முன்பே கீழே இறங்கி இருந்தனர் .அவள் முன்னே ஆதேஷ் இறங்கி நின்றுகொண்டிருக்க அவள் சிந்தனையின் பிடியில் இருப்பதை பார்த்து சிரித்தவன் "என்ன மேடம் மறுபடியும் ஹெல்ப் பண்ணனுமா "என்று கண்ணடிக்க அவளோ அவனை மூக்கு முட்ட முறைத்தவள் தானே குதித்து கீழே இறங்கினாள் .
அவள் முன்னே எளிமையான மணல் வழி நடுவில் இருக்க அதன் இருபுறமும் கொள்ளிக்கட்டைகள் வெளிச்சத்திற்கு ஏற்றப்பட்டிருக்க எளிமையான களிமண் குடிசைகள் அமைந்திருக்க வாசலில் சானி தெளித்து மெழுகி இருந்தனர் .
தன் பார்வையை இருபுறமும் சுழலவிட்டவள் எதிரே நோக்க அவளது முகத்தை பார்த்தவாறு அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒருவித நெகிழ்ச்சியில் அமிழ்ந்திருந்தனர் .ஒரு வயதான மூதாட்டி ஒருவர் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து அவளை நெட்டி முறித்தவர் "அப்படியே எங்க ஆத்தாவாட்டம் இருக்க தாயீ "என்க அவளிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை
குழப்பமான பார்வையுடன் ஆதேஷின் புறம் திரும்ப அவனோ அவள் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தவன் பிறகு கூறுகிறேன் என்று கண்களால் சைகை செய்ய இவளோ சோர்ந்து போனவள் பெயரளவில் ஒரு புன்னகையை சிதறவிட்டவாறு உள்ளே அந்த கிராமத்திற்குள் நுழைந்தாள்.
சற்று தூரம் நடந்தபின் அங்கே ஒய்யாரமாய் அமைந்திருந்த மேடையில் இருந்த லிங்கத்தின் கீழ் கண்மூடி அமர்ந்திருந்த குலத்தலைவர் அவளின் வரவை உணர்ந்து தனது கண்களை திறந்தவர் அவளை நோக்கி ஓர் கனிவான பார்வையை சிந்திவிட்டு "வாரும் தாயே வாரும் .யாம் தொலைத்த எம் குலைப்பொக்கிஷம் எமை தேடி வந்துள்ளீர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேனம்மா .இனி உம் கடமையை ஆற்ற ஆண்டவனவன் துணை புரிவான் ."என்று அவள் நெற்றியில் திருநீறை இட்டவர் "சென்று உறங்கம்மா ."என்று அங்கிருந்த இரு பெண்களிற்கு கண்ணை காட்ட அவர்கள் இருவரும் வந்து அவளை ஓர் குடிலிற்கு அழைத்துச்சென்றனர் .
செல்லுமுன் அவள் கண்கள் ஒருமுறை ஆதேஷை தீர்க்கமாய் பார்த்துவிட்டு செல்ல அக்குடிலில் வேதித்யாவும் அவளும் தங்கவைக்கப்பட்டனர் .மனம் முழுக்க கேள்விகளும் குழப்பங்களும் இருந்தாலும் ஏனோ பலநாள் அலைந்து திரிந்து கூடு சேர்ந்த நிம்மதியை அவள் மனம் அடைவதை அவள் உணராமல் இல்லை .
அவள் சென்றபின் அக்குலத்தலைவரின் தாழ்பணிந்து எழுந்த ஆதேஸ்வரன் தனது தமயனை தேடி தங்கள் குடிலுக்குள் நுழைய குடிலில் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த அருள்மொழிவேந்தனோ வெண்மதியை வெரித்தவாறு கண்களில் ஒரு வெறுமையோடு நின்றிருந்தான் .
அவன் எதிரே வந்து நின்ற ஆதேஸ்வரனோ அவன் தோளில் கை வைத்தவன் அவன் திடுக்கிட்டு திரும்பவும் ஒரு புன்முறுவல் பூத்தவன் "தமயனே கவலை வேண்டாம் உடைந்த பொக்கிஷத்தை ஒரு பாதியை மீட்டுவிட்டோம் மற்றொரு பாதியை இப்பொக்கிஷமே நம்மிடம் அழைத்துவரும் கவலையை களைந்தெறி "என்க சற்று ஆறுதலாய் உணர்ந்த அருள்மொழிவேந்தன் தனது இளவனை நோக்கி ஒரு இளநகை புரிந்தான் .
இங்கே இவர்கள் இப்படி இருக்க அங்கே இருண்ட அறையில் கொஞ்சம் கொஞ்சமாய் வெண்மதியின் கதிர்கள் மேலே அமைந்திருந்த ஜன்னல் வழி கசிய விரிந்து நீண்ட கூந்தல் தரையை தொட முகத்தை முழந்தாளில் புதைத்து அணிந்திருந்த ஆடை ஆங்காங்கே கிழிந்திருக்க உடலிலோ ஆங்காங்கே சிராய்ப்புகளும் சாட்டையால் அடிவாங்கிய தடயமும் இருக்க முழங்காலை கட்டிக்கொண்டு தன் விழியை மட்டும் உயர்த்தி அவ்வெண்மதியையே வெறித்துக்கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி ...................
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top