16
அவளோ அவன் கூறிய செய்தியில் கைகளில் நடுக்கம் பரவ உதடு துடிக்க அவனையே வெறித்தபடி நின்றாள் அதிர்ச்சி அவளை சிலை ஆகி இருந்தது . "எ........ என்....... என்ன ...........இ.... இளவரசியா ந...... நா........ நானா எ......... எப்படி என....... எனக்கு ஏதும் புரியலையே அப்....... அப்போ பாப்ஸ்..... மீ......."என்க
அவனோ சற்று தன்னையே ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் அவள் இரு தோள்களிலும் கை போட்டு "ஆரா relaxda நா சொல்லப்போறது எல்லாமே உனக்கு ரொம்ப ரொம்ப shockingaaஹ் இருக்கும் அத விட நீ இதை எப்படி நம்புறதுனும் யோசிக்கலாம் பட் நா சொல்றது எல்லாமே உண்மை "எங்க
அவளோ "என்னங்க சொல்றீங்க நீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்ன நடந்துச்சுனு தயவு செஞ்சு விளக்கமா சொல்லுங்களேன் ப்ளீஸ் "என்க
அவன் ஏதோ கூற வர அவர்கள் தலைக்கு மேல் அங்கிருந்து பறவை கூட்டம் திடீரென சிதறி பறப்பதை உணர்ந்தவன் சுற்றி முற்றி பார்க்க ஏதோ தவறு நடக்கப்போவதாய் உள்ளுணர்வு உந்த "ஆரா இப்போ என்னால எதையும் உனக்கு விளக்கமா சொல்ல முடியாது அது உனக்கு பாதுகாப்பு இல்ல நாளைக்கு வரைக்கும் மட்டும் பொறுத்துக்கோ ப்ளீஸ் நா எல்லாத்தையும் தெளிவா சொல்றேன் .இப்போ என்கூட வா"என்று அவள் கையை பற்ற
அவளோ அவன் கையை தட்டிவிட்டவள் " உண்மை என்னனு தெருஞ்சுக்காம நா இங்க இருந்து வரதா இல்ல ஆதேஷ் "என்று பிடிவாதமாய் அங்கேயே நிற்க அவனோ பாடகற்றதுடன் சுற்றி முற்றி தன் கண்பார்வையை சுழல விட்டவன் மேலே நிலவை பார்க்க அதிலோ கொஞ்சம் கொஞ்சமாய் இருள் மறைக்க துவங்கி இருந்தது .
அதை கண்ட பின்பே இன்றைய நாளை நினைவு கூர்ந்தவன் தன் தலையில் கை வைத்து "ஓஹ் ஷிட் .என்றவன் அவள் புறம் திரும்பி ஆரா சொன்னா கேளு இங்க இருக்குறது safe இல்ல .இன்னைக்கு சந்திரகிரஹணம் ஸ்டார்ட் ஆயிருச்சு சொன்னா கேளு என்னோட வா "என்க
அவள் மீண்டும் மீண்டும் அவன் கரங்களை உதற அவள் பின்னே எதையோ கண்டவன் திடீரென கண்கள் விரிய ஆரா என்று கத்தியவன் அவளை பிடித்து வேறுப்புறம் தள்ளி விட அங்கே தரையில் இரண்டடி தள்ளி விழுந்தவள் சுதாரித்து திரும்பிய நிமிடம் ஆதேஷின் கையை ஒரு கூறிய அம்பு பதம் பார்த்திருக்க அவன் கரத்திலிருந்து ரத்தம் ஆறாய் வழிந்துகொண்டிருந்தது .
அவன் நிலையை கண்டவள் "ஆது ...."என்ற கூவலுடன் அவன் அருகில் வர எதிர் திசையில் கண்டவள் உடலோ மொத்தமாய் அதிர்ந்து நெற்றி உடல் எங்கிலும் வியர்வை அரும்ப துவங்கி இருந்தது .அவர்களின் எதிரே ஐம்பது அடித்தொலைவில் ஒரு ஐம்பது தலை முதல் கால் வரை கருப்பு ஆடையால் தம்மை மூடி இருந்தவர்கள் கையில் அரிவாள்,கோடாரி ,வில் போன்ற ஆயுதங்களோடு நிற்க அவள் கண்முன் கனவில் கண்ட அதே காட்சிகள் விரிந்தன .அவள் அதிர்ச்சியிலேயே இருக்க அவர்களோ கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தனர் .
பயத்தில் அனைத்தும் மறந்து போக அவள் அருகில் இருந்த ஆதேஷோ கையையும் தூக்க முடியாமல் தட்டி தடுமாறி எழ அக்கூட்டத்தில் திடீரென சலசலப்பு எழ அவர்களை விலக்கிக்கொண்டு முன்னே வழமையாய் தனது உரமேறிய கரத்தில் ஏந்திய கோடாரியுடன் அவர்களின் முன்னே வந்து நின்று தன் கோரமுகம் ஏளனப்புன்னகையால் மேலும் கோரமடைய வந்து நின்றான் மார்த்தாண்டன் .
மார்த்தாண்டன்"என்ன எழ முடியவில்லையோ ?இத்தனை காலமாய் எங்கள் கண்களிலிருந்து மறைத்து வைத்தவளை உன் மூலமாகவே சந்திர கிரஹணத்தின் பொழுதில் எம் கையில் சேர்க்க வைத்தோம் பார்த்தாயா ?இனி இவளை யாம் கவர்ந்து செல்வதை உன்னால் அல்ல நீ வணங்கும் அந்த ஈசனாலும் தடுக்க இயலாது "என்க
அவர்களை நோக்கி ஓர் ஏளனப்பார்வையை வீசிய ஆதேஷ் "என் உயிர் இவ்வுடலில் இருக்கும் வரை எம் இளவரசியை உம் கை சேர விடேனடா "என்க
அதில் சிரித்தவன் "உன் உயிர் யான் இவ்வாக்கியதை உரைத்த அடுத்த நொடி உன் உடலில் இராதடா "என்று தன் கையிலிருந்த கோடாரியை அவன் புறம் எரிய அதுவரை சிற்பமாய் சமைந்திருந்த ஆதிரா அக்கோடாரி அவனை தாக்கும் முன் தன் கையால் லாவகமாய் பிடித்திருந்தாள்.
அக்கோடாரி தன்னை தாக்க உள்ளது என்பதை உணர்ந்தவன் விலகும்முன் ஆதிரா அதை பச்சை குத்தப்பட்டிருந்த தன் வலக்கையால் லாவகமாய் பிடித்திருக்க அவனோ அவளை ஆச்சர்யம் நிறைந்த கண்களோடு நோக்க அவளோ எதையுமே உணரவில்லை குனிந்த தலை குனிந்தவாறே இருக்க அவள் கை மட்டுமே நீண்டு கோடாரியை பற்றி இருந்தது
அதை கண்ட மார்த்தாண்டன் சற்று தடுமாறியவன் பின் "ஓஓ யான் எறிந்த ஆயுதத்திலிருந்து உம் மனம்கவர்ந்தவனை காக்கின்றாயோ? ஹாஹாஹா பார்ப்போமடி இனி வரும் தாக்குதல்களை எங்கனம் நீ தாக்குபிடிக்கிறாய் என்று "என்றவன் தன் அருகிலிருந்தவற்கு கண் காட்ட அவன் தனது கையிலிருந்த வில்லில் அம்பை வைத்த அடுத்த நொடி தரையில் தலை தனி உடல் தனியாய் விழுந்திருந்தான்.தன் கையிலிருந்த கோடாரியை கொண்டு அவன் தலையை துண்டாக்கி இருந்தாள் ஆதிரா .
அது வரை அலட்சியமாய் இருந்த மார்த்தாண்டன் அடுத்த நொடி அவர்கள் புறம் திரும்ப அவர்கள் இருந்த இடம் வெறுமையாய் இருந்தது.அதில் அதிர்ந்தவன் எங்கே எங்கே என்று வானத்தை நோக்க நிலவு முக்கால்பாகம் கருமை நிறம் சூழ்ந்திருந்தது அதை பார்த்து ஓர் வெற்றிச்சிறப்பு செய்தவன் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தவாறே உரத்த குரலில் "அடேய் ஆதேஸ்வரா சந்திர கிரஹணம் துவங்கிவிட்டதடா உன் மாந்த்ரீக ஷக்தி எதுவும் இன்னும் அரை மணி நேரத்திற்கு வேலை செய்யாது நீயே சரணடைந்தால் உன் உயிர் தப்பும் இல்லையேல் அவளுடன் சேர்ந்து நீயும் எமது கையில் மடிந்து போவாயடா "என்று கத்தியபடி அருகே இருந்த மரத்தை அவன் எட்டி உதைக்க அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது .
அவர்கள் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் அந்த வனத்தில் அவர்களை தேடத்துவங்க ஆதேஷும் ஆதிராவுமோ அவர்கள் தலை மறைந்தபின் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆற்றிலிருந்து தங்கள் தலையை மேலே உயர்த்தினர்.
ஆதிரா "ஆதேஷ் அவனுங்க எல்லாம் உள்ள போறானுங்க ஆதேஷ் குகைள வேதித்யாவும் அஜயும் இருக்காங்க அவுங்கள ஏதாவது பண்ணிற போறானுங்க ஆதேஷ் "என்க
ஆதேஷோ அப்பொழுதே அவர்கள் நினைவு வர ஆதிராவின் கையை பற்றியபடி அந்த காட்டில் வேரொரு வழியாய் ஓடத்துவங்கினான் .சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் இருந்த குகைக்கு அருகில் மாற்று பாதையில் ஓடிவர அங்கே உள்ளே நோக்க அஜயும் வேதித்யாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் .சுற்றி முற்றி பார்க்க சற்று தூரத்தில் மரங்களின் சலசலப்பு தெரிய வேகவேகமாய் அங்கிருந்த தண்ணீர் குவளையிலிருந்த மொத்த தண்ணீரையும் அவர்கள் முகத்தில் ஊற்ற பதறி எழுந்தவர்களை பேசவும் அனுமதிக்காது அவர்கள் கையை பிடித்துக்கொண்டு தரதரவென இழுத்துக்கொண்டு ஓடினர் ஆதேஷும் ஆதிராவும் .
இவர்கள் இவற்றை செய்து முடிப்பதற்குள் அந்த கூட்டதவர்களின் கண்களில் இவர்கள் சிக்கிக்கொள்ள அடுத்த நொடியில் நூற்றுக்கணக்கான அம்புகள் இவர்கள் சென்ற திசையை நோக்கி பாயத்துவங்க அவற்றிலிருந்து முடிந்தளவு விலகியே ஓடினர் நால்வரும் .ஆதேஷ் வானில் வெண்ணிலவை பார்க்க அதில் நிலவை கொஞ்சம் கொஞ்சமாய் கருமை நிறம் மொத்தமாய் மூடிக் கொண்டிருந்தது .
எதிரில் மலைமுகடோ சற்று அருகில் தோன்றியது.இவர்கள் ஓட ஆரம்பித்த அடுத்த ஐந்து நிமிடத்தில் பின்புறத்திலிருந்து சத்தமே இல்லாது போக நால்வரும் அவ்விடத்திலேயே நின்றனர் .
அஜய் "ஆ........"என்று ஏதோ கூற வர அவனை அமைதியாய் இருக்கும்படி கூறிய ஆதேஷ் நாலாபுறமும் கூர்ந்து கவனிக்க திடீரென மரக்கிளைகளிலிருந்து குதித்த அந்த கருப்பு ஆடை அணிந்த உருவங்கள் அவர்கள் நால்வரையும் சுற்றிவளைக்க பயத்தில் வேதித்யாவும் ஆதிராவும் தத்தம் துணையின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டனர் .
அதிலிருந்து முன்னே வந்த மார்த்தாண்டன் ஆதேஷின் முகத்திற்கு நேராய் வந்தவன் ஒரு ஏளனச்சிரிப்போடு "என்ன ஆதேஸ்வரா தோல்வியை தழுவி மரணத்தை மாலையாக்க தயாராக இருக்கிறாய் போல "என்றவன்
ஆதிராவின் புறம் திரும்பி "வாரும் இளவரசியாரே வாரும் இத்தனை வருடங்களாக எமது கண்ணில் மண்ணை தூவி உம்மை பாதுகாத்த காவலன் உனதம்மான் மகன் ஆதேஷின் கண் முன்னே அவன் மூலமாக உன்னை கவர்ந்து செல்லவே இத்தனை காலம் காத்திருந்தேனடி .என்று இடிஇடியென சிரித்தவன் அவள் கையை பற்ற வர ஆதேஷ் அவள் முன்னே வந்து நிற்க அவனின் கண்ணசைவில் அக்கூட்டத்தில் ஒருவன் ஆதேஷின் தலையை தாக்க வர ஆதிரா "ஆது ......"என்று கத்த தாக்க வந்தவனோ அடுத்த நொடி தரையில் வீழ்ந்திருக்க அவனின் பின்னே ஓர் அம்பு துளைக்கப்பட்டிருக்க முதுகுப்புறத்திலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது .
அதை பார்த்து திகைத்த மார்த்தாண்டன் ஒரு நொடி திகைத்து அம்பு வந்த திசையை நோக்க அங்கே பத்து பதினைந்து புரவிகள் அணிவகுத்து நிற்க கைகளில் கொள்ளிக்கட்டைகளை ஏந்தியவாறு அதன் மேல் பழங்கால முறையில் உடை அணிந்து தலையில் பாகை சூடி முகத்தையும் மூடி இருந்த கிராமத்து ஆடவர்கள் கையில் வில்லும் வேலும் ஏந்தியவாறு இருந்தனர். அவற்றில் முதன்மையாய் வெண்ணிற புரவியின் மேல் வீற்றிருந்தவனோ சுடர்விடும் கூர் கண்களுடன் ஆஜானுபாகுவான தேகம் மரக்கட்டை போல இறுகி இருக்க திராவிட நிறமான கருப்பிற்க்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்தவன் கையிலிருந்த வில்லை இறக்கிவிட்டு தன் முகத்தை மறைத்திருந்த துணியை அவிழ்க்க அங்கே ஆதேஷின் முகச்சாடையை ஒத்த ஓர் இளைஞன் வில்லேந்தி நிற்க அவனை கண்ட மார்த்தாண்டனின் இதழ்கள் தானாய் உச்சரித்து அவன் பெயரை "அருள்மொழிவேந்தன் "என்று ...............
அருள்மொழிவேந்தன் இந்த கொடூரர்களுக்கே சிம்மசொப்பனமாக விளங்கி தமது குலத்தவர்களை இன்று வரை காத்து வருபவன் .ஆதேஷின் சொந்த தமயன் .வீரத்திலும், மாந்த்ரீகத்திலும் தேர்ந்தவன்.அவனது காவலில் இருந்தமையால் மார்தாண்டனால் இன்றளவும் அவ்வூரில் மீதமிருக்கும் அம்மக்களை ஒன்றும் செய்ய இயலவில்லை .அவனை கண்டு மார்த்தாண்டன் திகைத்து நிற்க ஆதேஷின் இதழிலோ ஏளனச்சிரிப்பு குடிகொண்டது .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top