11
அஜயின் கையில் தனது bracelette டை பார்த்த ஆதேஷ் அதன் அருகில் வேகமாய் செல்ல அஜயோ தன் கையை தூர விலக்கியவன் "ஆனா இதை குடுக்குறதுக்கு முன்னாடி என்னோட கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லணும் "என்க
ஆதேஷோ அவனை முறைத்தவன் "என்னோட பொருளை எடுத்துக்க எவன்கிட்டயும் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை "என்க
அவனோ நக்கலாய் சிரித்தவன் "எனக்கு விளக்கம் குடுக்க வேணாம் ஆனா நா எனக்கு தெரிஞ்சதை எல்லாம் ஆதிரா கிட்ட சொன்னா அவளுக்கு நீ விளக்கம் குடுக்க வேண்டி வரும்ல லாயர் சார் "என்க
அவன் லாயர் சார் என்று கூறியதில் ஆதேஷின் கண்கள் ஒரு நொடி திகைக்க அஜயோ விஷமமாய் சிரித்தவன் "என்ன லாயர் சார் இருபத்தி எட்டு வயசுல இது வரைக்கும் ஐம்பது கேஸுக்கு மேல வாதாடி ஜெயிச்சுருக்கீங்க ,இந்தியாவோட பெஸ்ட் கிரிமினல் லாயர் னு வாதாட ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே பேர் வாங்கிருக்கீங்க 2 multinational கம்பனிஸ்க்கு லீகல் advisoraah இருக்கீங்க இந்த சின்ன கேள்விக்கு போய் தடுமாறுறீங்க ?"என்க
ஆதேஷோ கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவன் அவனை உறுத்து நோக்கினான் "நீ முதல் தடவ என்ன பாக்குற பார்வையிலேயே நெனச்சேன்டா என்ன பத்தி ஏதோ தெரிஞ்சவன் தான் நீ னு ஆனா இவ்ளோ தெரிஞ்சு வச்சுருப்பனு நினைக்கல ."என்றவன் பின் சற்று நிதானித்துவிட்டு "இனியும் மறச்சு வைக்க ஒன்னும் இல்ல இப்போ என்ன கேக்கணும் கேளு அதுக்கு முன்ன இதெல்லாம் எப்படி தெருஞ்சுகிட்டன்னு சொல்லு" என்க
அஜயோ "இப்போ நா ஒரு பேமஸ் wildlife photographer ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நா famouslaam இல்ல என்னோட போட்டோவை என்னோட அனுமதி இல்லாம ஒரு wildlife journal வெளியிட்டுச்சு கிட்ட தட்ட மயக்கம் என்ன தனுஷ் மாறினு வச்சுக்கோயேன் .என் lifeh போச்சுன்னு நா நெனச்சுட்டு இருக்கேல தான் என்ன மாறியே இன்னும் சில wildlife photographersoda போடோஸும் அவுங்க அனுமதியே இல்லாம வெளியிட்டருக்காங்கனு தெரிஞ்சது .அப்போ எங்கள்லயே கொஞ்சம் well off familyla இருந்த ஒருத்தன் எங்க எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு கேஸ் file பண்ணான் .அந்த caseah handle பண்ணவன் நீ தான்.கண்டிப்பா தோத்துரும்னு நெனச்ச caseah நாலே hearingla முடுச்சு எங்களுக்கு சாதகமா தீர்ப்பு வாங்கி தந்த .அதுல இருந்து தான் என்னோட careereh ஸ்டார்ட் ஆச்சு சோ என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத முகங்கள்ல நீயும் ஒன்னு.
எத்தனையோ தடவ உன்ன ஒரு தடவ பாத்தா நல்லாருக்கும்னு யோசிச்சுருக்கேன் பாக்கவும் செஞ்சேன் மூணு வருஷத்துக்கு அப்பறோம் என் தங்கச்சி ஆதிராவோட காலேஜ்ல ஒரு ஜௌர்னலிசம் ஸ்டுடென்ட்டாஹ் .பேமஸ் கிரிமினல் லாயர் ஒருமணி நேரம் வாதாடுறதுக்கு ஒரு லட்சம் சார்ஜ் பண்ணுற நீ எதுக்கு சம்மந்தமே இல்லாம ஜௌர்னலிசம் படிக்கணும்? ஏதோ இடிக்குதேன்னு நா உன்ன கவனிக்க ஆரம்பிச்சப்போ தான் ஆதிராவ நீ follow பண்றத தெரிஞ்சுகிட்டேன் .
அது மட்டுமில்லாம ஒரு தடவ காலேஜ்க்கு அவளை கூப்பிட வந்துருந்தப்போ நீ deanta பேசறதை நா கேட்டேன் .மங்கலாபுரின்னு தமிழ்நாடு maplaye இல்லாத ஒரு இடத்துக்கு ஆதிராவையும் வேதித்யாவையும் உன்னையும் டீமாஹ் போட்டு ப்ராஜெக்ட் கொடுக்கணும்னு சொல்லிட்டு இருந்த .அது தான் எனக்கு உன் மேல அதிகப்படியான சந்தேகத்தை கொடுத்துச்சு .அதான் உன்ன follow பண்ணிட்டு இங்க வந்தேன் இங்க மங்கலாபுரிக்கு வந்த அன்னைக்கு ராத்திரில தூக்கம் வரலன்னு நா balconyla நின்னுட்டு இருந்தப்போ தான் நீ போர்வைய தலை முழுசும் பொத்திகிட்டு கைல விளக்கோடயும் ஒரு புறாவோடயும் காட்டு பாதைல நடக்குறத பார்த்தேன் உன்ன பின்தொடர்ந்து வந்தேன் .
அந்த பாறைல உக்காந்து நீ என்ன எழுதுனனு எனக்கு புரியல பட் நீ அதுல ஆதிராவோட போட்டோவையும் சேர்த்து அனுப்புனத வச்சு நீ ஆதிராவ பத்தி தான் எழுதுறன்னு புரிஞ்சுக்கிட்டேன் .
இங்க என்ன நடக்குது ?இன்னைக்கு காலைல கோவில்ல என்னால நெனச்சு கூட பாக்க முடில திடீர்னு மரம் பத்திகிட்டு எரியுது உள்ள அவ கத்துறா எங்களால கால உள்ள கூட வைக்க முடில ஆனா நீங்க ரெண்டு பேரும் எப்படி உள்ள போனீங்க ?யார் நீ உனக்கும் ஆதிராக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்?"என்க
ஆதேஷோ சிறு சிரிப்பை உதிர்த்தவன் "சொல்றேன் ஆனா அதற்கு முன்னாடி எனக்கு சத்தியம் செய்து கொடு இது எதையும் வெளிய சொல்ல மாட்டேன்னு"என்க அஜயோ சிறிது நேரம் தயங்கியவன் பின் தன் கரத்தை அவன் கரத்தின் மேல் வைத்தவன் அவன் கண்களை உறுதியாய் பார்க்க ஆதேஷ் ஆதிராவை பற்றியும் மங்கலாபுரியை பற்றியும் இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த துர்சம்பவத்தை பற்றியும் முழுதாய் கூற கூற அஜயின் உடல் மொத்தமாய் ஆட்டம் கண்டது.
அவன் கூறி முடித்ததும் ஆதேஷை கண்ட அஜயின் முகத்தில் பற்பல உணர்ச்சிகள் பிரதிபலித்தது ஆதேஷ் "என்ன ஆச்சு ?"என்க
அஜயோ "நீ சொல்றத எல்லாம் என்னால நம்பவும் முடில நம்பாம இருக்கவும் முடில இந்த 21st centuryla போய் .........இதெல்லாம் எப்படி நடக்கும் ?"என்க
ஆதேஷோ சிரித்தவன் "உலகத்துல அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கு அதை எடுக்குறது கஷ்டம் தான் "என்க
அஜயோ சற்று நேரம் மௌனமாய் இருந்தவன்" உனக்கு என்ன ஹெல்ப் வேணுனாலும் கேளு நா பண்றேன் ."என்க
ஆதேஷ் சிறிதாய் இளநகை புரிந்தான் .பின் அஜய் திரும்பி நடக்க துவங்கியவன் பத்து அடிக்கு பின் "ஆனா ஒன்னு என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உன்ன கொல்லவும் தயங்க மாட்டேன் "என்று விரல் நீட்டி எச்சரித்தவன் வீட்டிற்குள் சென்று மறைய ஆதேஷிற்கோ இத்தனை வருடங்களாய் மனதை அரித்த அழுத்திய பாரத்தை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ மனம் மிகவும் லேசாய் இருந்தது .
பின் உணவுண்ண வேண்டும் என்பதையும் மறந்தவன் ஆதிராவின் அறைக்கு சென்று அவள் உறங்குவதை உறுதிப்படுத்திவிட்டு தன் அறைக்கு சென்றவன் வழக்கம் போல் இன்று நடந்தவற்றை ஓலையில் எழுதி அதை புறாவின் காலில் கட்டியவன் ஜன்னல் வழி அதை பறக்கவிட்டான் .
இங்கே இவன் இப்படி இருக்க அங்கே அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஆதிராவின் மனக்கண்ணிலோ பற்பல காட்சிகள் விரிந்தது .பல காட்சிகள் தெளிவில்லாமல் இருக்க கடைசியாய் அவள் மனக்கண்ணில் ஓடியதென்னவோ மிகவும் பயங்கரமாய் இருந்தது .
கையில் கூர் வாள் ஏந்திய முகம் மறைத்த பலர் ஓட ஓட மக்களை வெட்டுவதை போல் காட்சிகள் அவள் மனக்கண்ணில் ஓட கடைசியாய் அதில் தலையில் அடிபட்டு பாவாடை சட்டை போட்டு ரத்தம் முகத்தை மறைத்த ஒரு ஐந்து வயது பெண்குழந்தையை ஒருவர் காட்டுப்பாதையில் ஆற்றின் ஓரத்தில் தூக்கிக்கொண்டு ஓட அவரை துரத்தியபடி வந்த முகத்தை கரும் துணியால் மறைத்த நீண்ட முடியையும் கண்களில் ரத்த சிவப்பையும் கூர்வாள் ரத்தம் சொட்ட சொட்ட கையில் ஏந்திய உருவங்கள் அவரை துரத்த ஓடிக்கொண்டிருக்கும் போதே அவை அவர் கழுத்தை அறுக்க அவர் தலை துண்டாய் போய் அருவியில் விழ அவர் கையிலிருந்த குழந்தையும் அருவியில் கீழே விழுந்தது.
அக்காட்சியில் அலறி அடித்துக்கொண்டு எழுந்தவள் முகம் வியர்வையால் நனைந்திருக்க பயத்தில் உதடுகள் தந்தி அடிக்க மேஜையில் தண்ணீர் அருந்துவதற்காக சென்றவள் தண்ணீர் bottelai திறக்க அவளின் கவனத்தை ஈர்த்தது அவளது கைப்பை .தண்ணீரை குடித்து முடித்தவளிற்கு கோவிலில் ஒரு சிறு பையை எடுத்தது ஞாபகம் வர வேகவேகமாய் தன் கைப்பையை திறந்தவள் அந்த பையை எடுக்க அதிலோ ஒரு புத்தகம் இருந்தது .அந்த புத்தகத்தை வெளியே எடுத்தவள் என்ன இது என்று தூசியை தட்ட அதில் கோட்டை எழுத்தில் "ஆதவக்குல ரகசியங்கள் " என்று எழுதி இருக்க அதை எடுத்துக்கொண்டு தன் அறையோடு அமைந்திருந்த பால்கணிக்கு சென்று அமர்ந்து அதை படிக்க ஆரம்பித்தாள் ஆதிரா .
"இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்களும் குலங்களும் இருப்பினும் அவற்றில் சில குலத்தவர்கள் இறைவனிற்காகவே தம்மை முழுமனதாக அர்பணித்திருப்பர். அதை போல் இறைவனிற்கு எதிராக இருக்கும் துர்சக்திகளுக்கும் தங்களை அர்பணித்திருக்கும் குலத்தவர்களும் உண்டு .அவற்றில் இறைவனிற்காய் தம்மை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டவர்களில் ஆதவக்குலத்தவர்கள் இன்றிமையாதவர்கள்.சிவனின் அருளையும் சக்தியின் அருளையும் சரிக்கு சமமாய் பெற்றவர்கள் .இவர்களை போல் தீயசக்திகளை ஆராதிக்கும் குலங்களில் முக்கிய குலம் சம்ஹித்த வம்சத்தவர்கள் தீய சக்திகளையும் ஏவல்களையும் கொண்டு உலகத்தை ஆள நினைப்பவர்கள்.
அனைத்து வம்சத்தவருக்கும் அவரவர் வம்சத்தை அடையாளம் காட்டுவதை போல் உடலில் ஒரு அடையாளம் பிறப்பிலேயே பொறிக்கப்பட்டிருக்கும் அவை ஆண்களுக்கு மார்புப்பகுதியிலும் பெண்களிற்கு கைகளிலும் இருக்கும்
என்று இருக்க அடுத்த பக்கத்தை அவள் திருப்ப அதில் ஆதவகுலத்தவரின் அடையாள லட்சினையை அவள் பார்க்குமுன் திடீரென ஜன்னல் படபடவென அடிக்க இது வரை வீசிய தென்றல் காற்று சூறாவளிக்காற்றாய் சுழன்றடிக்க அவள் என்ன நடக்கின்றது என்று கிரஹிக்கும்முன்னே அவள் கையிலிருந்த புத்தகம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது .
திடீரென புத்தகம் தீப்பிடிக்கவும் அதை கீழேபோட்டவள் ஏதேனும் பெட்ஷீட்டை கொண்டு அதை அணைக்க முயல அதற்குள்ளாகவே புத்தகம் முழுதும் எரிந்து சாம்பலாகி இருந்தது . அவள் எறிந்த சாம்பல் துகள்களையே வெறிக்க அவளை பின்னிருந்து பார்த்து சிரித்தன கரும்புகை உருவங்கள் ................
konjam ini update vara late aagum guys adhaan inniku double update
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top