10

ஆதிராவை பின்தொடர்ந்து ஆதேஷும் உள்ளே சென்றுவிட அவன் உள்ளே செல்வதைப்பார்த்த அஜய் வேகமாய் உள்ளே செல்ல போக அவன் கையை பிடித்து தடுத்தால் வேதித்யா "அஜய் வேணாம் கால உள்ள வைக்காத மறுபடி ஷாக் அடிக்கப்போவுது "என்க

அவனோ அதை எதையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அவளையும் இழுத்துக்கொண்டு கோவிலின் வாசலில் காலை வைக்க அப்பொழுதை போல் மீண்டும் மின்சார தாக்கத்தை அவன் கால்களில் உணர்ந்தான் .அதிர்ச்சியாய் அந்த வாசலை நோக்கியவன் மனதில் "ஆதேஷால் மட்டும் எப்படி உள்ளே செல்ல முடிந்தது?" என்ற வினா முளைத்தது .

இவர்கள் இங்கே உள்ளே நுழைய அங்கே ஆதிராவோ ஆதேஷின் கைகளை பிடித்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து உள்ளே சென்றுகொண்டிருந்தாள்.

காரணமின்றி அவள் கண்கள் கலங்கியது பின் கடைசியாய் அந்த கோவிலில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்பிற்கு வந்தவள் உள்ளே செல்ல அந்த மண்டபத்தின் தூண்களில் மூலைக்கொன்றாய் சிறு சிறு ஆபரணங்கள் சிதறிக்கிடந்தது .

பலவருடங்கள் ஆனதன் அடையாளமாய் அதன் மேல் அழுக்கு அளவிற்கதிகமாக படிந்திருக்க அதை எடுத்து வருடியவள் கண்களை அங்கிருந்த சிறு பை கவர அதை எடுத்து தன் கைபையிற்குள் போட்டுக்கொண்டாள் .

பின் அந்த மண்டபத்தை சுற்றி முற்றி பார்த்தவள் அங்கிருந்த ஓவியங்களை உற்று நோக்க அவளிற்கு லேசாய் தலை வலிப்பதை போல் உணர்ந்தாள் .அப்படியே பின்னோக்கி நகர்ந்து கொண்டே வந்தவளை அந்த மண்டபத்தின் மூலையில் அமைந்திருந்த சுவர் தடுக்க திரும்பி பார்த்தவள் கண்ணில் அகப்பட்டது அந்த சுவற்றில் அமைந்திருந்த ஓர் சிறுகதவு .

ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த அந்த கதவின் முன் வந்து நின்றாள் ஆதிரா .அந்த கதவு தரையிலிருந்து நான்கடி உயரமே இருந்தது .உடலை முழுதாய் வளைத்து குனிந்தாள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் .அந்த கதவின் முன்னே ஏதோ திரை விழுந்தார் போல் படிந்திருந்த ஒட்டடைகளை தன் துப்பட்ட்டா கொண்டு தட்டியவள் அந்த கதவை பார்க்க முழுவதுமாய் அதிர்ந்தாள் என்றே சொல்ல முடியும் .ஏனெனில் இந்த கதவும் அவள் அரண்மனையின் வாயிலில் கண்ட கதவும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் அமைந்திருந்தன .

அதை கண்டவள் கண்கள் வியப்பில் விரிய அவள் தொண்டை வரல.நெற்றியில் நீர்த்துளிகள் அரும்ப கண்ணில் வியப்புடன் நடுங்கும் கரத்தோடு அவள் அக்கதவை தொடப்போக திடீரென அவள் கையை ஆயிரம் ஊசிகளால் குத்துவதை போன்றதொரு வலியை உணர்ந்தாள் ஆதிரா .

தன் கையை விருட்டென பின்னே இழுத்தவள் கையை பிடித்துக்கொண்டு கீழே மண்டியிட்டு அமர்ந்து கத்த இது வரை வெறும் பார்வையாளனாக நின்றுகொண்டிருந்த ஆதேஷ் அவள் மண்டியிட்டு கத்தத்துவங்கவும் அவள் அருகில் பதட்டமாய் வந்தவன் "ஆரா" என்று அவள் தோளை தொட

அவளோ அவனின் சட்டை காலரை இறுக்கி பிடித்தவள் "ஆ ஆதேஷ் கை ரொம்ப எரியுது ஆதேஷ் ஆ..." என்று கையை அப்படியும் இப்படியும் விசுக்க அவள் கையில் சிறிது சிறிதாய் இரு பாம்புகள் பின்னிப்பிணைந்திருக்க அவற்றின் தலைக்குமேல் அரைவடிவ சூரியன் பிரகாசமாய் ஒளிவீசுவதைப்போன்ற வடிவத்தில் இருந்த பச்சை குத்தப்பட்ட இடம் ஒளிவீச துவங்க ,கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உடலும் அந்த ஒளி கூட கூட உஷ்ணமாகிக்கொண்டிருந்தது.

எரியும் நெருப்பில் உடலை இட்டது போன்றதொரு வலியை அவள் அனுபவிக்க அவள் நிலையை கண்டும் ஒன்றும் செய்ய இயலாது தன் முகத்தை வேறுப்புறம் திருப்பிய ஆதேஷின் கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் வெளியே அந்த மண்டபத்தின் தரையில் விழுந்தது.

அந்த கோவிலில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த மணிகள் காற்றில் ஆடி அந்த இடத்தையே மணிஓசையில் நிரப்ப அதன் சத்தத்தை மீறிய ஆதிராவின் கத்தல் கொஞ்சம் கொஞ்சமாய் சற்று நேரத்தில் மட்டுப்பட அவள் கையிலிருந்து வந்த ஒளியும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து தேய்ந்து போக அவள் கரத்தில் அவ்விடத்தில் இருந்து வழியும் ரதத்தோடு மூர்ச்சையாகி ஆதேஷின் கரத்திலேயே மயங்கி சரிந்தாள் ஆதிரா .

தன் சட்டையில் அவள் பிடி தளறுவதை உணர்ந்தவன் அவள் முகத்தை நோக்க முகம் முழுதும் வேர்த்து கண்களில் வலியின் பிரதிபலிப்பதை கண்ணீர் வழிந்திருக்க வேதனையில் சுருங்கிய கண்களோடு மூர்ச்சையாகி இருந்தால் ஆதிரா .

அவள் கன்னத்தை தன் ஒரு கையால் தட்டிய ஆதேஷ் அவள் முழிக்காது போக அவளை தன் இரு கைகளிலும் ஏந்தியவன் வெளியே தூக்கிக்கொண்டு போக அவள் கைகளிலிருந்து வழிந்த அந்த ரத்தத்துளிகள் அவன் தூக்கிய வேகத்தில் அந்த மண்டபத்தின் ஓரத்தில் அமைந்திருந்த கதவின் மீது பட்டு தெறிக்க அக்கதவில் கண்கள் மூடியவாறு தாழ்ப்பாளின் இருபுறமும் அமைந்திருந்த யாளியின் உருவங்கள் தம் கண்ணைத்திறந்து ஆதேஷ் சென்ற திசையை வெறித்தது.

அந்த மலைப்பகுதியில் அடர்ந்த காட்டிற்கு நடுவில் அமைந்திருந்த அதே கிராமம் .அங்கே மக்கள் பண்டைய காலத்து ஆடைகளை அணிந்துகொண்டு அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர் .ஆடவர்கள் விறகுக்கட்டைகளை இரண்டாய் பிளக்க பெண்டிர்கள் தண்ணீர் குடத்தை சுமந்து வர குழந்தைகள் தங்களால் முடிந்த அளவு சுள்ளிக்கட்டைகளை பொருக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் .

அது வரை தெளிவாய் இருந்த வானம் திடீரென செந்தணல் நிறத்தில் செக்க சிவந்து விட பளபளவென தன் வெப்பத்தை பறைசாற்றிக்கொண்டிருந்த ஆதவன் எங்கோ மேகக்கூட்டங்களின் நடுவே மறைந்துகொள்ள வானத்தை கிழித்துக்கொண்டு மழை பெய்ய துவங்கியது .

எனில் நீரது நீல நிறத்தை துறந்து குருதியின் சிவப்பு நிறத்தை பூசிக்கொள்ள சிவப்பு நிறத்தில் மழைநீர் விழுவதை கண்டு பதறிய ஊர்மக்கள் அங்கே அமைந்திருந்த மேடையில் நடுநாயகமாக இருந்த சிவலிங்கத்தின் முன் த்யானித்திருந்த அக்கூட்டத்தின் தலைவரை கேள்வியுடனும் குழப்பத்துடனும் பார்க்க அவரோ தன் மேல் மழைநீர் விழும் உணர்ச்சியில் தன் கண்களை திறந்தவர் அதன் நிறத்தை பார்த்துவிட்டு சிவலிங்கத்தை நோக்கி சிறிதாய் புன்முறுவல் பூத்தவர் "நம் தாய் நம்மை சேரும் நாள் நெருங்கிவிட்டது அவளை அவளே உணரும் காலம் நெருங்கிவிட்டது "என்று கொக்களிக்க அக்கூட்டத்தவரின் அகத்தின் மலர்ச்சி முகத்தில் விஸ்தாரமான புன்னகையை அரும்ப விட்டது .

உள்ளே ஆதிரா சென்று இவ்வளவு நேரம் ஆகி இருக்க திடீரென கேட்ட அவளின் கதறல் சத்தம் வேதித்யா அஜய் இருவருக்கும் கிலியை கிளப்பியது .வேதித்யா "அஜய் எனக்கு ரொம்ப பயமா இருக்குடா ஏன்டா ஆதி இப்டி கத்துறா? உள்ளேயும் போக முடியலையே ஐயோ என்னாச்சோ தெரியலையே "என்று அவள் உள்ளே செல்ல முற்பட மீண்டும் மீண்டும் சுவற்றில் மோதிய பந்தாய் வெளியே வந்தாள்.

சிறிது நேரத்தில் ஆதேஷ் ஆதிராவை மயக்கமடைந்த நிலையில் வெளியே தூக்கிக்கொண்டு வர வேதித்யாவோ ஆதிராவின் நிலையை கண்டு பதறியவள் அவள் அருகில் ஓடி வந்தவள் "ஆதி ஆதி ஐயோ ஆதிக்கு என்னாச்சு ஆதேஷ் "என்க

அவனோ "ஒண்ணுமில்ல சாதாரண மயக்கம் தான் "என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அஜய் அவனை தீயாய் முறைத்தவன் அவன் கையிலிருந்து ஆதிராவை வாங்க போக அவளோ அவன் சட்டை காலரை உடும்புப்பிடி பிடித்திருந்தாள்.

அதற்கும் அவனை முறைத்தவன் வேகமாய் சென்று ஜீப்பை எடுத்துக்கொண்டு வர அதில் அவளை ஏற்றியவன் அவள் அருகிலேயே அமர்ந்துகொள்ள அஜயிற்கோ அவனின் அனைத்து நடவடிக்கைகளும் புதிராய் இருந்தது .வேதித்யா அங்கிருந்த தண்ணீர் bottleai எடுத்து ஆதிராவின் முகத்தில் தெளிக்க அவளோ எந்த சொரணையும் இன்றி ஆதேஷின் தோள்களில் தொய்ந்திருந்தாள்.

அதை கண்டு மேலும் கலவரமடைந்தவள் "ஆதேஷ் எவ்ளோ தண்ணி கொடுத்தும் எந்திரிக்க மாட்டேங்குறா ஆதேஷ் ஹாஸ்பிடல் எதுக்காச்சும் கூட்டிட்டு போகலாம் "என்க

அவனோ கண்களில் என்றையும் விட அதிக உறுதியுடன் "அவளுக்கு ஒண்ணுமில்ல வேதித்யா இன்னும் ஒரு மணி நேரத்துல அவளே எந்திருச்சுருவா நீ பயப்படாம உக்காரு "என்க அவன் கண்களில் தெரிந்த உறுதியை கண்டவள் அதன் பின் ஏதும் பேசாது அமர்ந்துகொண்டாள் .

பின் நால்வரும் வீட்டினை அடைய ஆதேஷ் ஆதிராவை சுமந்தபடி உள்ளே செல்ல ஜீப்பை விட்டு கீழிறங்கிய அஜய் ஆதிரா அமர்ந்திருந்த சீட்டில் ஏதோ விழுந்திருப்பதை பார்த்தவன் அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான் .

ஆதேஷ் அவள் அறைக்கு சென்றவன் அவளை படுக்க வைக்க அவள் இன்னும் அவன் சட்டையை இறுகப்பற்றி இருந்தால்.

அதை கண்டு சிரித்தவன் மென்மையாய் அவள் கையை விலக்கிவிட எத்தனிக்க அவள் பிடி மிகவும் இறுகிப்போய் இருக்க அவனால் அவள் சுண்டு விரலையும் அசைக்க முடியவில்லை .

சிரித்துக்கொண்டவன் பின் அவள் அருகிலேயே கட்டிலில் அமர்ந்தவாறு அவள் வதனத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் .அவன் மனதில் ஏதேதோ எண்ண அலைகள் போட்டிபோட்டுக் கொண்டு மோத எதையோ சொல்ல அவன் உதடுகள் துடித்தது எனில் வார்த்தைகள் வர மறுத்தது .அவள் கழுத்தில் இருந்த அந்த லாக்கெட்டை ஏந்தியவன் அப்பொழுதே தன் கையை கவனித்தான் .தன் கையை பார்த்தவன் திடுக்கிட "எங்கே அது?"என்று யோசிக்க அவன் யோசனையை கலைத்தது ஆதிராவின் "ஆது "என்ற முனங்கல்.

அவளின் குரலில் யோசனையில் இருந்து வெளிவந்தவன் அவள் புறம் திரும்ப அவளோ அவனை குழப்பம் நிறைந்த பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவளை நோக்கி குனிந்தவன் "என்ன ஆரா "என்று கேட்க

அவளோ அவன் கையை பற்றி எழுந்து அமர்ந்தவள் "எனக்கு என்னாச்சு ஆது கோவில்ல....கதவு ........ என் கை "என்று அவள் கையை தூக்கி பார்க்க அதிலோ காய்ந்த ரத்தத்தடங்கள் இருக்க இன்னுமே அவ்விடம் வின் விண்ணென்று தெறித்தது .அதை உறுத்து நோக்கியவளின் தலை பயங்கரமாய் வலி எடுக்க தன் கையை கொண்டு தலையை தாங்கியவாறு அமர்ந்துட்டுக்கொண்டாள் ஆதிரா"எனக்கு எனக்கு என்னாச்சு ஆது ?கோவில்ல என்ன நடந்துச்சு எப்படி வீட்டுக்கு வந்தேன் இங்க இங்க நடக்குற எதுவுமே எனக்கு புரிய மாட்டேங்குது ஆது"என்க

அவனோ அவள் தோளை ஆதரவாய் பற்றியவன் "ஒண்ணுமில்ல ஆரா நீ கோபிவில்லை திடீர்னு மயன்கிட்ட சோ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம் அவ்ளோ தான் "என்க

அவள் ஏதோ கூற வர அவனோ அவளை இடை வெட்டியவன் "ஷு......."ஒன்னும் பேசாத ரெஸ்ட் எடு "என்று அவளை படுக்க வைத்தவன் அவள் தலையை வருடிவிட்டு சற்று நேரத்தில் உறங்கி போனால் ஆதிரா .அவள் உறங்கியதை உறுதி படுத்திக்கொண்டவன் அவள் அறையிலிருந்து வேக வேகமாய் வெளியேறியவன் அவன் அறைக்கு வந்து அவன் உடமைகள் அனைத்தையும் ஆராய துவங்கினான் .

அங்கே அவன் தேடிய பொருள் கிடைக்காமல் போக பின் அந்த தோட்டத்தில் அமைந்திருந்த குளக்கரைக்கு வந்தவன் அங்கே தேடத்துவங்க அவன் பின்னே அஜயின் குரல் கேட்டது "நீ தேடுறது இதையா மிஸ்டர் ஆதேஷ் ?"என்று அவன் குரலில் பின்னே அலட்சியமாய் திரும்பியவன் அவன் கையில் இருந்த பொருளைக் கண்டு திடுக்கிட்டான் .

அவன் கைகளில் இருந்தது அந்த சூரிய லட்சனை பொருந்திய bracelet ஆதேஷிற்கு சொந்தமான bracelet ............

சோ வாட் யு கைஸ் திங்க் ஆதேஷுக்கும் ஆதிராவுக்கும் என்ன சம்மந்தம்?

ஆதிரா யாரு ?

அந்த கூட்டத்துக்கும் ஆதிராவுக்கும் என்ன சம்மந்தம் ?

எனி guess ?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top